சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றமும் - தோற்றமுமாய் நல்லரன் நாரணன் நான்முகனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய - கச்சி பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் - அதுவே
2-9. சொல்லு
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்" — சொல்லும் பொருளும், சுவை, ஊறு, ஒலி, நாற்றம், தோற்றம் என ஐம்புலன்களின் விஷயங்களும் அவனேயாக இருப்பதைச் சொல்லும் பதிகம். உலகில் நாம் அறியும் அனைத்தும் அவனுடைய வெளிப்பாடே என்னும் காட்சி இங்கே விரிகிறது. அறிதலுக்கு அப்பாற்பட்டவன் அறியப்படும் ஒவ்வொன்றிலும் இருக்கிறான்.
பெரிய திருமொழி 2-9 - சொல்லு (திருப்பரமேச்சுர விண்ணகரம்)
கார்மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித் தார்மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மாமதிள் சூழ்ந்து அழகாய கச்சி ர் தேர்மன்னு தென்னவனை முனையில் செருவில் திறல் வாட்டிய திண் - சிலையோன் பார்மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே
உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மா - உருவாய்க் கடலுள் வரந்தரு மாமணி வண்ணனிடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல் நெடூவாயில் உ௧கச் செருவில் - முன நாள் பரந்தவன் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே
அண்டமும் எண்திசையும் நிலனும் மலை நீரொடு வான் எரிகால் முதலா உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய - கச்சி விண்டவர் இண்டைக் குழாமுடனே விரைந்தார் இரியச் செருவில் முனிந்து பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் - அதுவே
தூம்புடைத் திண்கை வன்தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ - முன நாள் பூம்புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய - கச்சி தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப்பச் செரு மேல் வியந்து - அன்று சென்ற பாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே
திண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன - நாள் புண் படப் போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகாய - கச்சி வெண்குடை நீழல் செங்கோல் நடப்ப விடை வெல்கொடி வேற்படை - நான்முகன் நாரணனுக்கு திகைப்ப முன் உயர்த்த பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே
இலகிய நீள்முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன - நாள் சலமொடு மாநிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய - கச்சி உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மாமதிள் சூழ் கருவூர் வெருவ பல படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே
குடைத் திறல் மன்னவனாய் ஒருகால் குரங்கைப் படையா மலையால் - கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய - கச்சி விடைத் திறல் வில்லவன் நென்மெலியில் வெருவச் செருவேல் வலங்கைப் - பிடித்த படைத் திறல் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் - அதுவே
பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னே ஒருகால் செருவில் - உருமின் மறையுடை மால்விடை ஏழ் அடர்த்தாற்கு இடந்தான் தடம் சூழ்ந்து - அழகாய கச்சி ர கறையுடை வாள் மற மன்னர் கெடக் கடல் போல் முழங்கும் குரல் - கடுவாய் பறையுடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் - அதுவே
பார்மன்னு தொல் புகழ்ப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர - விண்ணகர் மேல் கார்மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது - உரைத்த ர் சீர்மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திருமாமகள் தன் அருளால் - உலகில் தேர் மன்னராய் ஒலி மாகடல் சூழ் செழுநீர் உலகாண்டு - திகழ்வர்களே
அடிவரவு: சொல்லு கார் உரம் அண்டமும் தூம்பு திண் இலகிய குடை பிறை பார் மஞ்சாடு ஜிட / விறல்