பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லானை மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல் பல்லாயிரம் பெருந்தேவிமாரொடு பெளவம் ஏறிதுவரை எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்
திருத்துவாரகை
Thuvarai (Dwaraka) · Gujarat, Vada Nadu
- Perumal
- கல்யாண நாராயணன்
- Thaayar
- கல்யாண நாச்சியார்
- Mangalasasanam
- 15 pasurams
Verses sung here
பெரியாழ்வார் திருமொழி · 4-1. கதிராயிரம்
திரை பொருகடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன்மார்க்காய் அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு 9 நிரை நிரையாக நெடியனயூபம் நிரந்தரம் ஒழுக்கு விட்டு இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டமென்னும் கடிநகரே
பெரியாழ்வார் திருமொழி · 4-7. தங்கையை மூக்கும்
வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை தடவரை அதிரத் தரணி விண்டிடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடிநகரே
பெரியாழ்வார் திருமொழி · 4-7. தங்கையை மூக்கும்
பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் புது நாண்மலர்க் கமலம் எம்பெருமான் பொன்வயிற்றில் பூவே போல்வான் பொது நாயகம் பாவித்து இருமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே
பெரியாழ்வார் திருமொழி · 4-9. மரவடியை
தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல் சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பி வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இஇடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே
பெரியாழ்வார் திருமொழி · 5-4. சென்னியோங்கு
சுவரில் புராண நின் பேரேழுதிச் சுறவநற்கொடுக்களும் துரங்கங்களும் கவரிப்பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்தெழுந்த என் தடமுலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே
நாச்சியார் திருமொழி · 1. தையொரு திங்களும்
ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி மேவலன் விரை சூழ் துவராபதிக் காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலன் வரில் கூடிடு கூடலே
நாச்சியார் திருமொழி · 4. தெள்ளியார் பலர்
காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே
நாச்சியார் திருமொழி · 9. சிந்துரச் செம்பொடி
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும் ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும் நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே சூட்டூயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடூமின்
நாச்சியார் திருமொழி · 12. மற்றிருந்தீர்
மன்னு மதுரை தொடக்கமாக வண்துவராபதி தன்னளவும் தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கிடம் வைகுந்தமே
நாச்சியார் திருமொழி · 12. மற்றிருந்தீர்
முலைத் தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முதுது வரைக் குலபதியாக் காலிப் பின்னே இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்தகிற்பீர்! ர மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனலம் பொன்னி நாடன் சிலைத் தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
பெரிய திருமொழி · 6-6. அம்பரமும்
கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை நட்டானை நாடி நறையூரில் கண்டேனே
பெரிய திருமொழி · 6-8. மான்கொண்ட
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற - மாயன் அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராம் மெய்ஞ்ஞானமில்
நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்! மன்னப்படு மறை வாணனை வண்துவராபதி பொழுதின்றி ? துணங்கை மன்னனை ஏத்துமின் ஏத்துதலும் தொழுதாடுமே
திருவாய்மொழி · 4-6. தீர்ப்பாரை
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்! என்னை இனி உமக்காசை இல்லை அகப்பட்டேன் முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே
திருவாய்மொழி · 5-3. மாசறுசோதி