Skip to the text
‹ Divya Desams

திருவேங்கடம்

Thiruvengadam (Tirupati) · Tirupati, Vada Nadu

Perumal
ஸ்ரீநிவாசன்
Thaayar
பத்மாவதி
Mangalasasanam
221 pasurams

Verses sung here

56

சுற்றும்‌ ஒளிவட்டம்‌ சூழ்ந்து சோதி பரந்தெங்கும்‌ எத்தனை செய்யினும்‌ என்‌ மகன்‌ முகம்‌ நேரொவ்வாய்‌ வித்தகன்‌ வேங்கடவாணன்‌ உன்னை விளிக்கின்ற கைத்தலம்‌ நோவாமே அம்புலீ கடிதோடி வா

பெரியாழ்வார் திருமொழி · 1-4. தன் முகத்து

66

நம்முடை நாயகனே நான்மறையின்‌ பொருளே நாவியுள்‌ நற்கமல நான்முகனுக்கொருகால்‌ தம்மனை ஆனவனே தரணி தல முழுதும்‌ தாரகை இன்னுலகும்‌ தடவி அதன்‌ புறமும்‌ விம்ம வளர்ந்தவனே வேழமும்‌ ஏழ்விடையும்‌ விரவிய வேலைதனுள்‌ வென்று வருமவனே அம்ம எனக்கு ஒருகால்‌ ஆடுக செங்கீரை ஆயர்கள்‌ போரேறே ஆடுக ஆடுகவே

பெரியாழ்வார் திருமொழி · 1-5. உய்ய உலகு

104

என்னிது மாயம்‌ என்னப்பன்‌ அறிந்திலன்‌ முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன மன்னு நமுசியை வானில்‌ சுழற்றிய மின்னு முடியனே அச்சோவச்சோ வேங்கடவாணனே அச்சோவச்சோ

பெரியாழ்வார் திருமொழி · 1-8. பொன்னியல்

115

மூத்தவை காண முதுமணற்‌ குன்றேறி கூத்து உவந்தாடிக்‌ குழலால்‌ இசை பாடி வாய்த்த மறையோர்‌ வணங்க இமையவர்‌ ஏத்த வந்து என்னைப்‌ புறம்‌ புல்குவான்‌ எம்பிரான்‌ என்னைப்‌ புறம்‌ புல்குவான்‌

பெரியாழ்வார் திருமொழி · 1-9. வட்டூநடுவே

180

தென்னிலங்கை மன்னன்‌ சிரம்‌ தோள்‌ துணி செய்து மின்னிலங்கு பூண்‌ விபீடண நம்பிக்கு என்னிலங்கு நாமத்தளவும்‌ அரசென்ற மின்னிலங்காரற்கு ஓர்‌ கோல்‌ கொண்டு வா வேங்கட வாணர்க்கு ஓர்‌ கோல்‌ கொண்டு வா

பெரியாழ்வார் திருமொழி · 2-6. வேலிக்கோல்

184

மச்சொடு மாளிகையேறி மாதர்கள்‌ தம்மிடம்‌ புக்கு கச்சொடு பட்டைக்‌ கிழித்துக்‌ காம்பு துகிலவை கீறி நிச்சலும்‌ தீமைகள்‌ செய்வாய்‌ நீள்‌ திருவேங்கடத்து எந்தாய்‌ பச்சைத்‌ தமனகத்தோடு பாதிரிப்‌ பூச்சூட்ட வாராய்‌

பெரியாழ்வார் திருமொழி · 2-7. ஆனிரை

207

போதர்‌ கண்டாய்‌ இங்கே போதர்‌ கண்டாய்‌ போதரேன்‌ என்னாதே போதர்‌ கண்டாய்‌ ஏதேனும்‌ சொல்லி அசலகத்தார்‌ ஏதேனும்‌ பேச நான்‌ கேட்க மட்டேன்‌ கோதுகலமுடைக்‌ குட்டனேயோ குன்றெடூத்தாய்‌ குடமாடு கூத்தா வேதப்‌ பொருளே என்‌ வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே

பெரியாழ்வார் திருமொழி · 2-9. வெண்ணெய்விழுங்கி

247

கடியார்‌ பொழிலணி வேங்கடவா கரும்‌ போரேறே நீ உகக்கும்‌ குடையும்‌ செருப்பும்‌ குழலும்‌ தருவிக்கக்‌ கொள்ளாதே போனாய்‌ மாலே கடிய வெங்கானிடைக்‌ கன்றின்‌ பின்‌ போன சிறுக்‌ குட்டச்‌ செங்கமல அடியும்‌ வெதும்பி உன்‌ கண்கள்‌ சிவந்தாய்‌ அசைந்திட்டாய்‌ நீ எம்பிரான்‌

பெரியாழ்வார் திருமொழி · 3-3. சீலைக்குதம்பை

463॥

சென்னியோங்கு தண்‌ திருவேங்கடம்‌ உடையாய்‌ உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா என்னையும்‌ என்‌ உடைமையையும்‌ உன்‌ சக்கரப்‌ பொறி ஒற்றிக்‌ கொண்டு நின்‌ அருளே புரிந்திருந்தேன்‌ இனி என்‌ திருக்‌ குறிப்பே ()

பெரியாழ்வார் திருமொழி · 5-4. சென்னியோங்கு

504॥

தையொரு திங்களும்‌ தரை விளக்கித்‌ தண்‌ மண்டலமிட்டு மாசி முன்னாள்‌ ஐய நுண்மணற்‌ கொண்டு தெருவணிந்து அழகினுக்கலங்கரித்து அனங்க தேவா உய்யவுமாங்கொலோ என்று சொல்லி உன்னையும்‌ உம்பியையும்‌ தொழுதேன்‌ வெய்யதோர்‌ தழலுமிழ்‌ சக்கரக்‌ கை வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே

நாச்சியார் திருமொழி · 1. தையொரு திங்களும்

506

மத்தநன்னறுமலர்‌ முருக்கமலர்‌ கொண்டு முப்போதும்‌ உன்னடி வணங்கி தத்துவமிலியென்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து உன்னை வைதிடாமே கொத்தலர்‌ பூங்கணை தொடுத்துக்‌ கொண்டு கோவிந்தன்‌ என்பதோர்‌ பேரேழுதி வித்தகன்‌ வேங்கடவாணன்‌ என்னும்‌ விளக்கினில்‌ புக என்னை விதிக்கிற்றியே

நாச்சியார் திருமொழி · 1. தையொரு திங்களும்

535॥

காட்டில்‌ வேங்கடம்‌ கண்ணபுர நகர்‌ வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்‌ ஓட்டரா வந்து என்‌ கைப்பற்றி தன்னோடும்‌ கூட்டுமாகில்‌ நீ கூடிடு கூடலே

நாச்சியார் திருமொழி · 4. தெள்ளியார் பலர்

546

வெள்ளை விளிசங்கு இடங்கையில்‌ கொண்ட விமலன்‌ எனக்கு உருக்காட்டான்‌ உள்ளம்‌ புகுந்து என்னை நைவித்து நாளும்‌ உயிர்பெய்து கூத்தாட்டுக்‌ காணும்‌ கள்ளவிழ்‌ செண்பகப்‌ பூமலர்‌ கோதிக்‌ களித்திசை பாடும்‌ குயிலே மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என்‌ வேங்கடவன்‌ வரக கூவாய்‌

நாச்சியார் திருமொழி · 5. மன்னு பெரும்புகழ்

577॥

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல்‌ மேகங்காள்‌ தெண்ணீர்‌ பாய்‌ வேங்கடத்து என்‌ திருமாலும்‌ போந்தானே கண்ணீர்கள்‌ முலைக்‌ குவட்டில்‌ துளி சோரச்‌ சோர்வேனை பெண்ணீர்மை ஈடழிக்கும்‌ இது தமக்கோர்‌ பெருமையே

நாச்சியார் திருமொழி · 8. விண்ணீல மேலாப்பு

578

மாமுத்த நிதி சொரியும்‌ மாமுகில்காள்‌ வேங்கடத்துச்‌ சாமத்தின்‌ நிறம்‌ கொண்ட தாடாளன்‌ வார்த்தை என்னே காமத்‌ தீயுள்‌ புகுந்து கதுவப்பட்டு இடைக்‌ கங்குல்‌ ஏமத்தோர்‌ தென்றலுக்கு இங்கிலக்காய்‌ நான்‌ இருப்பேனே

நாச்சியார் திருமொழி · 8. விண்ணீல மேலாப்பு

579

ஒளிவண்ணம்‌ வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்‌ எளிமையால்‌ இட்டு என்னை ஈடழியப்‌ போயினவால்‌ குளிரருவி வேங்கடத்து என்‌ கோவிந்தன்‌ குணம்‌ பாடி அளியத்த மேகங்காள்‌ ஆவி காத்திருப்பேனே

நாச்சியார் திருமொழி · 8. விண்ணீல மேலாப்பு

580

மின்னாகத்தெழுகின்ற மேகங்காள்‌ வேங்கடத்துத்‌ தன்னாகத்‌ திருமங்கை தங்கிய சீர்‌ மார்வர்க்கு என்னாகத்திளம்‌ கொங்கை விரும்பித்‌ தாம்‌ நாள்‌ தோறும்‌ பொன்னாகம்‌ புல்குதற்கு என்‌ புரிவுடைமை செப்புமினே

நாச்சியார் திருமொழி · 8. விண்ணீல மேலாப்பு

581

வான்‌ கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள்‌ வேங்கடத்துத்‌ தேன்‌ கொண்ட மலர்‌ சிதறத்‌ திரண்டேறிப்‌ பொழிவீர்காள்‌ ஊன்‌ கொண்ட வள்ளுகிரால்‌ இரணியனை உடல்‌ இடந்தான்‌ தான்‌ கொண்ட சரிவளைகள்‌ தருமாகில்‌ சாற்றுமினே

நாச்சியார் திருமொழி · 8. விண்ணீல மேலாப்பு

582

சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்‌ முகில்காள்‌ மாவலியை நிலங்கொண்டான்‌ வேங்கடத்தே நிரந்தேறிப்‌ பொழிவீர்காள்‌ உலங்குண்ட விளங்கனி போல்‌ உள்‌ மெலியப்‌ புகுந்து என்னை நலங்கொண்ட நாரணற்கு என்‌ நடலை நோய்‌ செப்புமினே

நாச்சியார் திருமொழி · 8. விண்ணீல மேலாப்பு

583॥

சங்கமா கடல்‌ கடைந்தான்‌ தண்‌ முகில்காள்‌ வேங்கடத்துச்‌ செங்கண்மால்‌ சேவடிக்‌ கீழ்‌ அடி வீழ்ச்சி விண்ணப்பம்‌ கொங்கை மேல்‌ குங்குமத்தின்‌ குழம்பழியப்‌ புகுந்து ஒரு நாள்‌ தங்கு மேல்‌ என்னாவி தங்குமென்று உரையீரே

நாச்சியார் திருமொழி · 8. விண்ணீல மேலாப்பு

584

கார்‌ காலத்தெழுகின்ற கார்‌ முகில்காள்‌ வேங்கடத்துப்‌ போர்‌ காலத்தெழுந்தருளிப்‌ பொருதவனார்‌ பேர்‌ சொல்லி நீர்‌ காலத்து எருக்கி நம்‌ பழவிலை போல்‌ வீழ்வேனை வார்‌ காலத்து ஒரு நாள்‌ தம்‌ வாசகம்‌ தந்தருளாரே

நாச்சியார் திருமொழி · 8. விண்ணீல மேலாப்பு

585॥

மத யானை போல்‌ எழுந்த மாமுகில்காள்‌ வேங்கடத்தைப்‌ பதியாக வாழ்வீர்காள்‌ பாம்பணையான்‌ வார்த்தை என்னே கதி என்றும்‌ தானாவான்‌ கருதாது ஓர்‌ பெண்‌ கொடியை வதை செய்தான்‌ என்னும்‌ சொல்‌ வையகத்தார்‌ மதியாரே

நாச்சியார் திருமொழி · 8. விண்ணீல மேலாப்பு

586॥

நாகத்தின்‌ அணையானை நன்னுதலாள்‌ நயந்து உரை செய்‌ மேகத்தை வேங்கடக்‌ கோன்‌ விடு தூதில்‌ விண்ணப்பம்‌ போகத்தில்‌ வழுவாத புதுவையர்‌ கோன்‌ கோதை தமிழ்‌ ஆகத்து வைத்துரைப்பார்‌ அவரடியார்‌ ஆகுவரே

நாச்சியார் திருமொழி · 8. விண்ணீல மேலாப்பு

601

பாடும்‌ குயில்காள்‌ ஈதென்ன பாடல்‌ நல்‌ வேங்கட நாடர்‌ நமக்கு ஒரு வாழ்வு தந்தால்‌ வந்து பாடுமின்‌ ஆடும்‌ கருளக்‌ கொடுயுடையார்‌ வந்து அருள்‌ செய்து கூடுவராயிடில்‌ கூவி நும்‌ பாட்டுகள்‌ கேட்டூமே

நாச்சியார் திருமொழி · 10. கார்க்கோடல் பூக்காள்

604॥

மழையே மழையே மண்புறம்‌ பூசி உள்ளாய்‌ நின்ற மெழுகூற்றினாற்‌ போல்‌ ஊற்றுநல்‌ வேங்கடத்துள்‌ நின்ற அழகப்‌ பிரானார்‌ தம்மை என்‌ நெஞ்சத்தகப்படத்‌ தழுவ நின்று என்னைத்‌ ததர்த்திக்‌ கொண்டு ஊற்றவும்‌ வல்லையே

நாச்சியார் திருமொழி · 10. கார்க்கோடல் பூக்காள்

677॥

ஊனேறு செல்வத்து உடற்‌ பிறவி யான்‌ வேண்டேன்‌ ஆனேறேழ்‌ வென்றான்‌ அடிமைத்‌ திறம்‌ அல்லால்‌ ர கூனேறு சங்கமிடத்தான்‌ தன்‌ வேங்கடத்து கோனேரி வாழும்‌ குருகாய்ப்‌ பிறப்பேனே

பெருமாள் திருமொழி · 4. ஊனேறு செல்வத்து

678

ஆனாத செல்வத்து அரம்பையர்கள்‌ தற்சூழ வானாளும்‌ செல்வமும்‌ மண்ணரசும்‌ யான்‌ வேண்டேன்‌ தேனார்‌ பூஞ்சோலைத்‌ திருவேங்கடச்‌ சுனையில்‌ மீனாய்ப்‌ பிறக்கும்‌ விதியுடையேன்‌ ஆவேனே

பெருமாள் திருமொழி · 4. ஊனேறு செல்வத்து

679

பின்னிட்ட சடையானும்‌ பிரமனும்‌ இந்திரனும்‌ துன்னிட்டூப்‌ புகலரிய வைகுந்த நீள்‌ வாசல்‌ மின்வட்டச்‌ சுடராழி வேங்கடக்கோன்‌ தானுமிழும்‌ பொன்வட்டில்‌ பிடித்துடனே புகப்‌ பெறுவேன்‌ ஆவேனே

பெருமாள் திருமொழி · 4. ஊனேறு செல்வத்து

680

ஒண்பவள வேலை உலவு தண்‌ பாற்கடலுள்‌ கண்‌ துயிலும்‌ மாயோன்‌ கழலிணைகள்‌ காண்பதற்கு பண்பகரும்‌ வண்டினங்கள்‌ பண்‌ பாடும்‌ வேங்கடத்து செண்பகமாய்‌ நிற்கும்‌ திருவுடையேன்‌ ஆவேனே

பெருமாள் திருமொழி · 4. ஊனேறு செல்வத்து

681

கம்பமத யானை கழுத்தகத்தின்‌ மேல்‌ இருந்து இன்பமரும்‌ செல்வமும்‌ இவ்வரசும்‌ யான்‌ வேண்டேன்‌ எம்பெருமான்‌ ஈசன்‌ எழில்‌ வேங்கட மலை மேல்‌ தம்பகமாய்‌ நிற்கும்‌ தவமுடையேன்‌ ஆவேனே

பெருமாள் திருமொழி · 4. ஊனேறு செல்வத்து

682

மின்னனைய நுண்ணிடையார்‌ உருப்பசியும்‌ மேனகையும்‌ அன்னவர்‌ தம்‌ பாடலொடும்‌ ஆடலவை ஆதரியேன்‌ தென்னவென வண்டினங்கள்‌ பண்‌ பாடும்‌ வேங்கடத்துள்‌ அன்னனைய பொற்குடவராம்‌ அருந்தவத்தன்‌ ஆவனே

பெருமாள் திருமொழி · 4. ஊனேறு செல்வத்து

683

வானாளும்‌ மாமதி போல்‌ வெண்குடைக்‌ கீழ்‌ மன்னவர்‌ தம்‌ கோனாகி விற்றிருந்து கொண்டாடும்‌ செல்வறியேன்‌ தேனார்‌ பூஞ்சோலைத்‌ திருவேங்கட மலை மேல்‌ கானாறாய்ப்‌ பாயும்‌ கருத்துடையேன்‌ ஆவேனே

பெருமாள் திருமொழி · 4. ஊனேறு செல்வத்து

684

பிறையேறு சடையானும்‌ பிரமனும்‌ இந்திரனும்‌ முறையாய பெரு வேள்விக்‌ குறை முடிப்பான்‌ மறையானான்‌ வெறியார்‌ தண்‌ சோலைத்‌ திருவேங்கட மலை மேல்‌ நெறியாய்க்‌ கிடக்கும்‌ நிலை உடையேன்‌ ஆவேனே

பெருமாள் திருமொழி · 4. ஊனேறு செல்வத்து

685॥

செடியாய வல்வினைகள்‌ தீர்க்கும்‌ திருமாலே நெடியானே வேங்கடவா நின்‌ கோயிலின்‌ வாசல்‌ ர்‌ அடியாரும்‌ வானவரும்‌ அரம்பையரும்‌ கிடந்தியங்கும்‌ படியாய்க்‌ கிடந்து உன்‌ பவள வாய்‌ காண்பேனே

பெருமாள் திருமொழி · 4. ஊனேறு செல்வத்து

686

உம்பர்‌ உலகாண்டு ஒரு குடைக்‌ கீழ்‌ உருப்பசி தன்‌ அம்பொற்கலையல்குல்‌ பெற்றாலும்‌ ஆதரியேன்‌ செம்பவள வாயான்‌ திருவேங்கடம்‌ என்னும்‌ எம்பெருமான்‌ பொன்‌ மலை மேல்‌ ஏதேனும்‌ ஆவேனே

பெருமாள் திருமொழி · 4. ஊனேறு செல்வத்து

687॥

மன்னிய தண்‌ சாரல்‌ வட வேங்கடத்தான்‌ தன்‌ பொன்னியலும்‌ சேவடிகள்‌ காண்பான்‌ புரிந்திறைஞ்சி கொன்னவிலும்‌ கூர்வேல்‌ குலசேகரன்‌ சொன்ன பன்னிய நூல்‌ தமிழ்‌ வல்லார்‌ பாங்காய பத்தர்களே

பெருமாள் திருமொழி · 4. ஊனேறு செல்வத்து

799

குன்றில்‌ நின்று வான்‌ இருந்து நீள்‌ கடல்‌ கிடந்து மண்‌ ஒன்று சென்றதொன்றை உண்டு அதொன்றிடந்து பன்றியாய்‌ நன்று சென்ற நாள்‌ அவற்றுள்‌ நல்லுயிர்‌ படைத்து அவர்க்கு அன்று தேவமைத்தளித்த ஆதி தேவன்‌ அல்லையே

திருச்சந்த விருத்தம் · திருச்சந்த விருத்தம்

811॥

செழுங்கொழும்‌ பெரும்‌ பனி பொழிந்திட உயர்ந்த வேய்‌ விழுந்துலர்ந்தெழுந்து விண்‌ புடைக்கும்‌ வேங்கடத்துள்‌ நின்று எழுந்திருந்து தேன்‌ பொருந்து பூம்பொழில்‌ தழைக்‌ கொழும்‌ செழுந்தடங்‌ குடந்தையுள்‌ கிடந்த மாலுமல்லையே

திருச்சந்த விருத்தம் · திருச்சந்த விருத்தம்

832

கடைந்து பாற்கடல்‌ கிடந்து கால நேமியைக்‌ கடிந்து உடைந்த வாலி தன்‌ தனக்கு உதவ வந்த இராமனாய்‌ ர மிடைந்த ஏழ்‌ மரங்களும்‌ அடங்க எய்து வேங்கடம்‌ அடைந்த மால பாதமே அடைந்து நாளும்‌ உய்ம்மினோ

திருச்சந்த விருத்தம் · திருச்சந்த விருத்தம்

927॥

அமலனாதிபிரான்‌ அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்‌ விண்ணவர்‌ கோன்‌ விரையார்‌ பொழில்‌ வேங்கடவன்‌ நிமலன்‌ நின்மலன்‌ நீதி வானவன்‌ நீள்‌ மதிள்‌ அரங்கத்தம்மான்‌ திருக்‌ கமல பாதம்‌ வந்து என்‌ கண்ணினுள்ளன ஒக்கின்றதே

அமலனாதிபிரான் · அமலனாதிபிரான்

929॥

மந்தி பாய்‌ வட வேங்கட மாமலை ர வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றான்‌ அரங்கத்து அரவினணையான்‌ அந்தி போல்‌ நிறத்தாடையும்‌ அதன்‌ மேல்‌ அயனைப்‌ படைத்ததோர்‌ எழில்‌ உந்தி மேல்‌ அதன்றோ அடியேன்‌ உள்ளத்து இன்னுமிரே

அமலனாதிபிரான் · அமலனாதிபிரான்

1018॥

கொங்கலர்ந்த மலர்க்‌ குருந்தம்‌ ஒசித்த ர்‌ கோவலன்‌ எம்பிரான்‌ சங்கு தங்கு தடங்கடல்‌ துயில்‌ கொண்ட தாமரைக்‌ கண்ணினன்‌ பொங்கு புள்ளினை வாய்‌ பிளந்த புராணர்‌ தம்மிடம்‌ பொங்கு நீர்ச்‌ செங்கயல்‌ திளைக்கும்‌ சுனைத்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

பெரிய திருமொழி · 1-8. கொங்கலர்ந்த

1019॥

பள்ளியாவது பாற்கடல்‌ அரங்கம்‌ இரங்கவன்‌ பேய்முலை பிள்ளையாய்‌ உயிருண்ட எந்தை பிரான்‌ அவன்‌ பெருகுமிடம்‌ வெள்ளியான்‌ கரியான்‌ மணிநிற வண்ணன்‌ என்றெண்ணி நாள்‌ தொறும்‌ தெள்ளியார்‌ வணங்கும்‌ மலைத்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

பெரிய திருமொழி · 1-8. கொங்கலர்ந்த

1020

நின்ற மாமருது இற்று வீழ நடந்த நின்மலன்‌ நேமியான்‌ என்றும்‌ வானவர்‌ கை தொழும்‌ இணைத்‌ தாமரை அடி எம்பிரான்‌ கன்றி மாரி பொழிந்திடக்‌ கடிது ஆறிரைக்கு இடர்‌ நீக்குவான்‌ சென்று குன்றம்‌ எடுத்தவன்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

பெரிய திருமொழி · 1-8. கொங்கலர்ந்த

1021॥

பார்த்தற்காய்‌ அன்று பாரதம்‌ கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்‌ கோத்து அங்கு ஆயர்‌ தம்‌ பாடியில்‌ குரவை பிணைந்த எம்‌ கோவலன்‌ ஏத்துவார்‌ தம்‌ மனத்துள்ளான்‌ இடவெந்தை மேவிய எம்பிரான்‌ தீர்த்த நீர்த்‌ தடஞ்சோலை சூழ்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

பெரிய திருமொழி · 1-8. கொங்கலர்ந்த

1022

வண்கையான்‌ அவுணர்க்கு நாயகன்‌ வேள்வியில்‌ சென்று மாணியாய்‌ மண்‌ கையால்‌ இரந்தான்‌ மராமரம்‌ ஏழும்‌ எய்த வலத்தினான்‌ எண்‌ கையான்‌ இமயத்துள்ளான்‌ இருஞ்சோலை மேவிய எம்பிரான்‌ திண்‌ கைம்மா துயர்‌ தீர்த்தவன்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

பெரிய திருமொழி · 1-8. கொங்கலர்ந்த

1023

எண்திசைகளும்‌ ஏழுலகமும்‌ வாங்கிப்‌ பொன்‌ வயிற்றில்‌ பெய்து பண்டு ஓர்‌ ஆலிலைப்‌ பள்ளி கொண்டவன்‌ பால்மதிக்கு இடர்‌ தீர்த்தவன்‌ ஒண்திறல்‌ அவுணன்‌ உரத்து உகிர்‌ வைத்தவன்‌ ஒள்‌ எயிற்றொடு திண்திறல்‌ அரி ஆயவன்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

பெரிய திருமொழி · 1-8. கொங்கலர்ந்த

1024

பாரும்‌ நீர்‌ எரி காற்றினோடு ஆகாசமும்‌ இவை ஆயினான்‌ பேரும்‌ ஆயிரம்‌ பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்‌ காரும்‌ வார்பனி நீள்விசும்பிடைச்‌ சோரு! மாழுகில்‌ தோய்‌ தர சேரும்‌ வார்பொழில்‌ சூழ்‌ எழில்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

பெரிய திருமொழி · 1-8. கொங்கலர்ந்த

1025

அம்பரம்‌ அனல்‌ கால்‌ நிலம்‌ சலமாகி நின்ற அமரர்‌ கோன்‌ வம்புலாம்‌ அலர்‌ மேல்‌ மலிமட மங்கை தன்‌ கொழுனன்‌ அவன்‌ கொம்பின்‌ அன்ன இடை மடக்‌ குறமாதர்‌ நீளிதணந்தொறும்‌ செம்புனம்மவை காவல்‌ கொள்‌ திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

பெரிய திருமொழி · 1-8. கொங்கலர்ந்த

1026॥

பேசுமின்‌ திருநாமம்‌ எட்டெழுத்தும்‌ சொல்லி நின்று பின்னரும்‌ பேசுவார்‌ தமை உய்ய வாங்கிப்‌ பிறப்பு அறுக்கும்‌ பிரானிடம்‌ வாச மாமலர்‌ நாறுவார்‌ பொழில்சூழ்‌ தரும்‌ உலகுக்கெல்லாம்‌ தேசமாய்த்‌ திகழும்‌ மலை திருவேங்கடம்‌ அடை நெஞ்சமே!

பெரிய திருமொழி · 1-8. கொங்கலர்ந்த

1027॥

செங்கயல்‌ திளைக்கும்‌ சுனைத்‌ திருவேங்கடத்து உறை செல்வனை மங்கையர்‌ தலைவன்‌ கலிகன்றி வண்தமிழ்ச்‌ செஞ்சொல்‌ மாலைகள்‌ சங்கை இன்றித்‌ தரித்து உரைக்க வல்லார்கள்‌ தஞ்சமதாகவே வங்க மாகடல்‌ வையம்‌ காவலராகி வானுலகு ஆள்வரே

பெரிய திருமொழி · 1-8. கொங்கலர்ந்த

1028॥

தாயே தந்தை என்றும்‌ தாரமே கிளை மக்கள்‌ என்றும்‌ நோயே பட்டொழிந்தேன்‌ உன்னைக்‌ காண்பதோர்‌ ஆசையினால்‌ வேயேய்‌ பூம்பொழில்‌ சூழ்‌ விரையார்‌ திருவேங்கடவா! நாயேன்‌ வந்தடைந்தேன்‌ நல்கி ஆளென்னைக்‌ கொண்டருளே

பெரிய திருமொழி · 1-9. தாயே தந்தை

1029

மானேய்‌ கண்‌ மடவார்‌ மயக்கில்‌ பட்டு மாநிலத்து நானே நானாவித நரகம்‌ புகும்‌ பாவம்‌ செய்தேன்‌ ர்‌ தேனேய்‌ பூம்பொழில்‌ சூழ்‌ திருவேங்கட மாமலை என்‌ ஆனாய்‌! வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே

பெரிய திருமொழி · 1-9. தாயே தந்தை

1030

கொன்றேன்‌ பல்லுயிரைக்‌ குறிக்கோள்‌ ஒன்றிலாமையினால்‌ என்றேனும்‌ இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்‌ குன்றேய்‌ மேகமதிர்‌ குளிர்‌ மாமலை வேங்கடவா! அன்றே வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே

பெரிய திருமொழி · 1-9. தாயே தந்தை

1031

குலந்தான்‌ எத்தனையும்‌ பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்‌ நலந்தான்‌ ஒன்றுமிலேன்‌ நல்லதோர்‌ அறம்‌ செய்துமிலேன்‌ நிலம்‌ தோய்‌ நீள்முகில்‌ சேர்‌ நெறியார்‌ திருவேங்கடவா! அலந்தேன்‌ வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே 4 இது கோவில்‌ திருமொழி நுன்னைக்‌

பெரிய திருமொழி · 1-9. தாயே தந்தை

1032

எப்பாவம்‌ பலவும்‌ இவையே செய்து இளைத்தொழிந்தேன்‌ துப்பா! நின்னடியே தொடர்ந்தேத்தவும்‌ கிற்கின்றிலேன்‌ செப்பார்‌ திண்‌ வரை சூழ்‌ திருவேங்கட மாமலை என்‌ அப்பா! வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே

பெரிய திருமொழி · 1-9. தாயே தந்தை

1033

மண்ணாய்‌ நீர்‌ எரி கால்‌ மஞ்சுலாவும்‌ ஆகாசமுமாம்‌ புண்ணார்‌ ஆக்கை தன்னுள்‌ புலம்பித்‌ தளர்ந்து எய்த்தொழிந்தேன்‌ விண்ணார்‌ நீள்‌ சிகர விரையார்‌ திருவேங்கடவா! அண்ணா! வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே

பெரிய திருமொழி · 1-9. தாயே தந்தை

1034

தெரியேன்‌ பாலகனாய்ப்‌ பல தீமைகள்‌ செய்துமிட்டேன்‌ பெரியேன்‌ ஆயின பின்‌ பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்‌ கரி சேர்‌ பூம்பொழில்‌ சூழ்‌ கனமாமலை வேங்கடவா! அரியே! வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே

பெரிய திருமொழி · 1-9. தாயே தந்தை

1035

நோற்றேன்‌ பல்பிறவி நுன்னைக்‌ காண்பதோர்‌ ஆசையினால்‌ ஏற்றேன்‌ இப்பிறப்பே இடர்‌ உற்றனன்‌ எம்பெருமான்‌! கோல்தேன்‌ பாய்ந்தொழுகும்‌ குளிர்சோலை சூழ்‌ வேங்கடவா! ஆற்றேன்‌ வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே

பெரிய திருமொழி · 1-9. தாயே தந்தை

1036

பற்றேல்‌ ஒன்றுமிலேன்‌ பாவமே செய்து பாவி ஆனேன்‌ மற்றேல்‌ ஒன்றறியேன்‌ மாயனே! எங்கள்‌ மாதவனே! கல்தேன்‌ பாய்ந்தொழுகும்‌ கமலச்‌ சுனை வேங்கடவா! அற்றேன்‌ வந்தடைந்தேன்‌ அடியேனை ஆட்கொண்டருளே

பெரிய திருமொழி · 1-9. தாயே தந்தை

1037॥

கண்ணாய்‌ ஏழுலகுக்கு உயிராய எங்கார்‌ வண்ணனை விண்ணோர்‌ தாம்‌ பரவும்‌ பொழில்‌ வேங்கட வேதியனை திண்ணார்‌ மாடங்கள்‌ சூழ்‌ திருமங்கையர்‌ கோன்‌ கலியன்‌ பண்ணார்‌ பாடல்‌ பத்தும்‌ பயில்வார்க்கு இல்லை பாவங்களே

பெரிய திருமொழி · 1-9. தாயே தந்தை

1038॥

கண்ணார்‌ கடல்‌ சூழ்‌ இலங்கைக்கு இறைவன்‌ தன்‌ திண்ணாகம்‌ பிளக்கச்‌ சரம்‌ செல உய்த்தாய்‌! விண்ணோர்‌ தொழும்‌ வேங்கட மாமலை மேய அண்ணா! அடியேன்‌ இடரைக்‌ களையாயே

பெரிய திருமொழி · 1-10. கண்ணார் கடல் சூழ்

1039

இலங்கைப்‌ பதிக்கு அன்று இறையாய அரக்கர்‌ குலம்‌ கெட்டு அவர்‌ மாளக்‌ கொழுப்புள்‌ திரித்தாய்‌! விலங்கல்‌ குடுமித்‌ திருவேங்கடம்‌ மேய அலங்கல்‌ துளப முடியாய்‌! அருளாயே

பெரிய திருமொழி · 1-10. கண்ணார் கடல் சூழ்

1040

நீரார்‌ கடலும்‌ நிலனும்‌ முழுதுண்டு ஏர்‌ ஆலம்‌ இளந்தளிர்‌ மேல்‌ துயில்‌ எந்தாய்‌! சீரார்‌ திருவேங்கட மாமலை மேய ஆராவமழுதே! அடியேற்கு அருளாயே

பெரிய திருமொழி · 1-10. கண்ணார் கடல் சூழ்

1041

உண்டாய்‌ உறி மேல்‌ நறுநெய்‌ அழுதாக கொண்டாய்‌ குறளாய்‌ நிலம்‌ ஈரடியாலே விண்தோய்‌ சிகரத்‌ திருவேங்கடம்‌ மேய அண்டா! அடியேனுக்கு அருள்‌ புரியாயே

பெரிய திருமொழி · 1-10. கண்ணார் கடல் சூழ்

1042

தூணாய்‌ அதனூடு அரியாய்‌ வந்து தோன்றி பேணா அவுணன்‌ உடலம்‌ பிளந்திட்டாய்‌! சேணார்‌ திருவேங்கட மாமலை மேய கோணாகணையாய்‌! குறிக்கொள்‌ எனை நீயே

பெரிய திருமொழி · 1-10. கண்ணார் கடல் சூழ்

1043

மன்னா இம்மனிசப்‌ பிறவியை நீக்கி தன்னாகித்‌ தன்‌ இன்னருள்‌ செய்யும்‌ தலைவன்‌ மின்னார்‌ முகில்‌ சேர்‌ திருவேங்கடம்‌ மேய என்னானை என்னப்பன்‌ என்‌ நெஞ்சில்‌ உளானே

பெரிய திருமொழி · 1-10. கண்ணார் கடல் சூழ்

1044

மானேய்‌ மடநோக்கி திறத்து எதிர்‌ வந்த ஆனேழ்‌ விடை செற்ற அணிவரைத்‌ தோளா! ர்‌ தேனே! திருவேங்கட மாமலை மேய கோனே! என்‌ மனம்‌ குடி கொண்டு இருந்தாயே

பெரிய திருமொழி · 1-10. கண்ணார் கடல் சூழ்

1045

சேயன்‌ அணியன்‌ என சிந்தையுள்‌ நின்ற மாயன்‌ மணிவாள்‌ ஒளி வெண்தரளங்கள்‌ ர வேய்‌ விண்டு உதிர்‌ வேங்கட மாமலை மேய ஆயன்‌ அடி அல்லது மற்று அறியேனே

பெரிய திருமொழி · 1-10. கண்ணார் கடல் சூழ்

1046

வந்தாய்‌ என்‌ மனம்‌ புகுந்தாய்‌ மன்னி நின்றாய்‌! நந்தாத கொழுஞ்சுடரே! எங்கள்‌ நம்பீ! சிந்தாமணியே! திருவேங்கடம்‌ மேய எந்தாய்‌! இனி யான்‌ உன்னை என்றும்‌ விடேனே

பெரிய திருமொழி · 1-10. கண்ணார் கடல் சூழ்

1047॥

வில்லார்‌ மலி வேங்கட மாமலை மேய என்று இறை மல்லார்‌ திரள்‌ தோள்‌ மணிவண்ணன்‌ அம்மானை கல்லார்‌ திரள்‌ தோள்‌ கலியன்‌ சொன்ன மாலை வல்லார்‌ அவர்‌ வானவர்‌ ஆகுவர்‌ தாமே

பெரிய திருமொழி · 1-10. கண்ணார் கடல் சூழ்

1048॥

வானவர்‌ தங்கள்‌ சிந்தை போல என்‌ நெஞ்சமே! இனிது வந்து மாதவ மானவர்‌ தங்கள்‌ சிந்தை அமர்ந்துறைகின்ற எந்தை கானவரிடு காரகில்‌ புகை ஓங்கு வேங்கடம்‌ மேவி மாண்‌ குறள்‌ ஆன அந்தணற்கு இன்று அடிமைத்‌ தொழில்‌ பூண்டாயே

பெரிய திருமொழி · 2-1. வானவர்

1049

உறவு சுற்றம்‌ என்று ஒன்றிலா ஒருவன்‌ உகந்தவர்‌ தம்மை மண்மிசைப்‌ பிறவியே கெடுப்பான்‌ அது கண்டு என்‌ நெஞ்சம்‌ என்பாய்‌! குறவர்‌ மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள்‌ இசை பாடும்‌ வேங்கடத்து அறவ நாயகற்கு இன்று அடிமைத்‌ தொழில்‌ பூண்டாயே

பெரிய திருமொழி · 2-1. வானவர்

1050

இண்டையாயின கொண்டு தொண்டர்கள்‌ ஏத்துவார்‌ உறவோடும்‌ - வானிடைக்‌ கொண்டு போயிடவும்‌ அது கண்டு என்‌ நெஞ்சம்‌ என்பாய்‌! ர வண்டு வாழ்‌ வட வேங்கட மலை கோயில்‌ கொண்டு அதனோடும்‌ மீமிசை அண்டம்‌ ஆண்டிருப்பாற்கு அடிமைத்‌ தொழில்‌ பூண்டாயே

பெரிய திருமொழி · 2-1. வானவர்

1051

பாவியாது செய்தாய்‌ என்‌ நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை - மண்மிசை மேவி ஆட்கொண்டு போய்‌ விசும்பேற வைக்கும்‌ எந்தை கோவி நாயகன்‌ கொண்டலுந்துயர்‌ வேங்கட மலை ஆண்டு வானவர்‌ ஆவியாய்‌ இருப்பாற்கு அடிமைத்‌ தொழில்‌ பூண்டாயே

பெரிய திருமொழி · 2-1. வானவர்

1052

பொங்கு போதியும்‌ பிண்டியுமுடைப்‌ புத்தர்‌ நோன்பியர்‌ பள்ளியுள்ளுறை தங்கள்‌ தேவரும்‌ தாங்களுமேயாக என்‌ நெஞ்சம்‌ என்பாய்‌! எங்கும்‌ வானவர்‌ தானவர்‌ நிறைந்தேத்தும்‌ வேங்கடம்‌ மேவி நின்றருள்‌ அங்கணாயகற்கு இன்று அடிமைத்‌ தொழில்‌ பூண்டாயே

பெரிய திருமொழி · 2-1. வானவர்

1053

துவரியாடையர்‌ மட்டையர்‌ சமண்‌ தொண்டர்கள்‌ மண்டியுண்டு பின்னரும்‌ கோவல்‌ தமரும்‌ தாங்களுமே தடிக்க என்‌ நெஞ்சம்‌ என்பாய்‌! கவரி மாக்கணம்‌ சேரும்‌ வேங்கடம்‌ கோயில்‌ கொண்ட கண்ணார்‌ - விசும்பிடை அமர நாயகற்கு இன்று அடிமைத்‌ தொழில்‌ பூண்டாயே

பெரிய திருமொழி · 2-1. வானவர்

1054

தருக்கினால்‌ சமண்‌ செய்து சோறு தண்‌ தயிரினால்‌ திரளை மிடற்றிடை நெருக்குவார்‌ அலக்கண்‌ அது கண்டு என்‌ நெஞ்சம்‌ என்பாய்‌! மருட்கள்‌ வண்டுகள்‌ பாடும்‌ வேங்கடம்‌ கோயில்‌ கொண்டு அதனோடும்‌ - வானிடை அருக்கன்‌ மேவி நிற்பாற்கு அடிமைத்‌ தொழில்‌ பூண்டாயே

பெரிய திருமொழி · 2-1. வானவர்

1055

சேயன்‌ அணியன்‌ சிறியன்‌ பெரியன்‌ என்பதும்‌ சிலர்‌ பேசக்‌ கேட்டிருந்‌ தே என்‌ நெஞ்சம்‌ என்பாய்‌! எனக்கு ஒன்று சொல்லாதே வேய்கள்‌ நின்று வெண்முத்தமே சொரி வேங்கட மலை கோயில்‌ மேவிய ஆய! நாயகற்கு இன்று அடிமைத்‌ தொழில்‌ பூண்டாயே

பெரிய திருமொழி · 2-1. வானவர்

1056

கூடி ஆடி உரைத்ததே உரைத்தாய்‌ என்‌ நெஞ்சம்‌ என்பாய்‌! துணிந்து - கேள்‌ பாடி ஆடிப்‌ பலரும்‌ பணிந்தேத்திக்‌ காண்கிலா 5 ஆடு தாமரையோனும்‌ ஈசனும்‌ அமரர்‌ கோனும்‌ நின்றேத்தும்‌ வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத்‌ தொழில்‌ பூண்டாயே

பெரிய திருமொழி · 2-1. வானவர்

1057॥

மின்னு மாமுகில்‌ மேவு தண்‌ திருவேங்கட மலை கோயில்‌ மேவிய அன்னமாய்‌ நிகழ்ந்த அமரர்‌ பெருமானை கன்னி மாமதிள்‌ மங்கையர்‌ கலிகன்றி இன்தமிழால்‌ உரைத்த இம்‌ மன்னு பாடல்‌ வல்லார்க்கு இடமாகும்‌ வானுலகே

பெரிய திருமொழி · 2-1. வானவர்

1196

ஓதி ஆயிர நாமமும்‌ பணிந்தேத்தி நின்‌ அடைந்தேற்கு ஒரு பொருள்‌ வேதியா! அரையா! உரையாய்‌ ஒரு மாற்றம்‌ எந்தாய்‌! நீதியாகிய வேத மாமுனியாளர்‌ தோற்றம்‌ உரைத்து மற்றவர்க்கு ஆதியாய்‌ இருந்தாய்‌! அணியாலி அம்மானே!

பெரிய திருமொழி · 3-5. வந்துனது

1275॥

அன்றிய வாணன்‌ ஆயிரம்‌ தோளும்‌ துணிய அன்று ஆழி தொட்டானை மின்திகழ்‌ குடுமி வேங்கட மலைமேல்‌ மேவிய வேத நல்விளக்கை தென்திசைத்‌ திலதம்‌ அனையவர்‌ நாங்கைச்‌ செம்பொன்செய்‌ கோயிலின்‌ உள்ளே மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான்‌ வாழ்ந்தொழிந்தேனே

பெரிய திருமொழி · 4-3. பேரணிந்து

1312॥

வேடார்‌ திருவேங்கடம்‌ மேய விளக்கே! நாடார்‌ புகழ்‌ வேதியர்‌ மன்னிய நாங்கூர்‌ சேடார்‌ பொழில்‌ சூழ்‌ திருவெள்ளக்குளத்தாய்‌! பாடா வருவேன்‌ வினை ஆயின பாற்றே

பெரிய திருமொழி · 4-7. கண்ணார் கடல்

1371

வாம்பரியுக மன்னர்‌ தம்‌ உயிர்‌ செக ஐவர்கட்கு அரசளித்த காம்பினார்‌ திருவேங்கடப்‌ பொருப்ப! நின்‌ காதலை அருள்‌ எனக்கு ர மாம்பொழில்‌ தளிர்‌ கோதிய மடக்குயில்‌ வாயது துவர்ப்பெய்த தீம்பலங்கனித்‌ தேனது நுகர்‌ திருவெள்ளறை நின்றானே

பெரிய திருமொழி · 5-3. வென்றி

1388॥

வெருவாதாள்‌ வாய்‌ வெருவி வேங்கடமே! வேங்கடமே! என்கின்றாளால்‌ மருவாளால்‌ என்‌ குடங்கால்‌ வாள்‌ நெடுங்கண்‌ துயில்‌ மறந்தாள்‌ வண்டார்‌ கொண்டல்‌ உருவாளன்‌ வானவர்‌ தம்‌ உயிராளன்‌ ஒலி திரை நீர்ப்‌ பெளவம்‌ கொண்ட திருவாளன்‌ என்‌ மகளைச்‌ செய்தனகள்‌ எங்ஙனம்‌ நான்‌ சிந்திக்கேனே?

பெரிய திருமொழி · 5-5. வெருவாதாள்

1404॥

சிந்தனையைத்‌ தவ நெறியைத்‌ திருமாலை ர பிரியாது வந்து எனது! மனத்து இருந்த வடமலையை வரிவண்டார்‌ கொந்தணைந்த பொழில்‌ கோவல்‌ உலகளப்பான்‌ அடு நிமிர்த்த அந்தணனை யான்‌ கண்டது அணிநீர்த்‌ தென்னரங்கத்தே

பெரிய திருமொழி · 5-6. கைம்மானம்

1518॥

மான்‌ கொண்ட தோல்‌ மார்வின்‌ மாணியாய்‌ மாவலி மண்‌ தான்‌ கொண்டு தாளால்‌ அளந்த பெருமானை தேன்‌ கொண்ட சாரல்‌ திருவேங்கடத்தானை நான்‌ சென்று நாடி நறையூரில்‌ கண்டேனே

பெரிய திருமொழி · 6-8. மான்கொண்ட

1550

தாரேன்‌ பிறர்க்கு உன்‌ அருள்‌ என்னிடை வைத்தாய்‌ ஆரேன்‌ அதுவே பருகிக்‌ களிக்கின்றேன்‌ காரேய்‌ கடலே மலையே திருக்கோட்டி யூரே உகந்தாயை உகந்து அடியேனே

பெரிய திருமொழி · 7-1. கறவா மடநாகு

1572

ஆங்கு வெந்நரகத்து அழுந்தும்‌ போது அஞ்சேல்‌ என்று அடியேனை அங்கே வந்து தாங்கு தாமரை அன்ன பொன்னார்‌ அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய்‌ நின்ற வேங்கடத்து அரியைப்‌ பரிகீறியை வெண்ணெய்‌ உண்டு உரலினிடை ஆப்புண்ட தீங்கரும்பினை தேனை நன்பாலினை அன்றி என்‌ மனம்‌ சிந்தை செய்யாதே

பெரிய திருமொழி · 7-3. சினவில்

1640

எங்களுக்கு அருள்‌ செய்கின்ற ஈசனை வாசவார்‌ குழலாள்‌ மலை மங்கை தன்‌ பங்கனை பங்கில்‌ வைத்து உகந்தான்‌ தன்னைப்‌ பான்மையைப்‌ பனி மாமதியம்‌ தவழ்‌ மங்குலைச்‌ சுடரை வட மாமலை உச்சியை நச்சி நாம்‌ வணங்கப்படும்‌ கங்குலை பகலைச்‌ சென்று நாடிக்‌ கண்ணமங்கையுள்‌ கண்டு கொண்டேனே

பெரிய திருமொழி · 7-10. பெரும்புறக்கடல்

1660॥

அருவி சோர்‌ வேங்கடம்‌ நீர்மலை என்று வாய்‌ வெருவினாள்‌ மெய்யம்‌ வினவி இருக்கின்றாள்‌ பெருகு சீர்க்‌ கண்ணபுரம்‌ என்று பேசினாள்‌ உருகினாள்‌ உள்‌ மெலிந்தாள்‌ இது என்‌ கொலோ?

பெரிய திருமொழி · 8-2. தெள்ளியீர்

1811

பண்ணுலா மென்மொழிப்‌ பாவைமார்‌ பணைமுலை அணைதும்‌ நாம்‌ என்று எண்ணுவார்‌ எண்ணம்‌ அதொழித்து நீ பிழைத்துய்யக்‌ கருதினாயேல்‌ விண்ணுளார்‌ விண்ணின்‌ மீதியன்ற வேங்கடத்துளார்‌ வளங்கொள்‌ முந்நீர்‌ வண்ணனார்‌ வல்லவாழ்‌ சொல்லுமா வல்லையாய்‌ மருவு நெஞ்சே!

பெரிய திருமொழி · 9-7. தந்தைதாய்

1836॥

வலம்புரி ஆழியனை வரையார்‌ திரள்‌ தோளன்‌ தன்னை புலம்புரி நூலவனைப்‌ பொழில்‌ வேங்கட வேதியனை சிலம்பியல்‌ ஆறுடைய திருமாலிருஞ்சோலை நின்ற நலந்திகழ்‌ நாரணனை நணுகுங்கொல்‌? என்‌ நன்னுதலே

பெரிய திருமொழி · 9-9. மூவரில்!

1849॥

பொன்னை மாமணியை அணி ஆர்ந்ததோர்‌ மின்னை வேங்கடத்து உச்சியில்‌ கண்டு போய்‌ என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்‌ தன்னை யாம்‌ சென்று காண்டும்‌ தண்காவிலே

பெரிய திருமொழி · 10-1. ஒருநல்சுற்றம்

1933

மன்றில்‌ மலிந்து கூத்து வந்தாடி மால்விடை ஏழும்‌ அடர்த்து ஆயர்‌ அன்று நடூங்க ஆநிரை காத்த ஆண்மை கொலோ? அறியேன்‌ நான்‌ நின்ற பிரானே! நீள்கடல்‌ வண்ணா! நீ இவள்‌ தன்னை நின்‌ கோயில்‌ முன்றில்‌ எழுந்த முருங்கையில்‌ தேனா முன்‌ கைவளை கவர்ந்தாயே

பெரிய திருமொழி · 10-9. புள்ளுருவாகி

1946॥

சொல்லாய்‌ பைங்கிளியே! சுடராழி வலனுயர்த்த மல்லார்‌ தோள்‌ வட வேங்கடவனை வர சொல்லாய்‌ பைங்கிளியே!

பெரிய திருமொழி · 10-10. திருத்தாய்

1978

கண்ணன்‌ மனத்துள்ளே நிற்கவும்‌ கைவளைகள்‌ என்னோ கழன்ற? இவை என்ன மாயங்கள்‌? பெண்ணானோம்‌ பெண்மையோம்‌ நிற்க அவன்‌ மேய அண்ணல்‌ மலையும்‌ அரங்கமும்‌ பாடோமே

பெரிய திருமொழி · 11-3. மன்னிலங்கு

2001॥

கள்ளத்தால்‌ மாவலியை மூவடி மண்‌ கொண்டளந்தான்‌ வெள்ளத்தான்‌ வேங்கடத்தான்‌ என்பரால்‌ காணேடீ! வெள்ளத்தான்‌ வேங்கடத்தானேலும்‌ கலிகன்றி உள்ளத்தின்‌ உள்ளே உளன்‌ கண்டாய்‌ சாழலே!

பெரிய திருமொழி · 11-5. மானமரும்

2038

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மையை விரிந்த சோலை வியன்‌ திருவரங்கம்‌ மேய செம்மையைக்‌ கருமை தன்னைத்‌ திருமலை ஒருமையானை தன்மையை நினைவார்‌ என்தன்‌ தலை மிசை மன்னுவாரே

திருக்குறுந்தாண்டகம் · திருக்குறுந்தாண்டகம்

2067॥

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்‌! என்றும்‌ கடிபொழில்‌ சூழ்‌ கணபுரத்து என்‌ கனியே! என்றும்‌ மன்றமரக்‌ கூத்தாடி மகிழ்ந்தாய்‌! என்றும்‌ வடதிருவேங்கடம்‌ மேய மைந்தா! என்றும்‌ வென்றசுரர்‌ குலம்‌ களைந்த வேந்தே! என்றும்‌ விரிபொழில்‌ சூழ்‌ திருநறையூர்‌ நின்றாய்‌! என்றும்‌ துன்று குழல்‌ கருநிறத்து என்‌ துணையே! என்றும்‌ துணை முலை மேல்‌ துளி சோரச்‌ சோர்கின்றாளே!

திருநெடுந்தாண்டகம் · திருநெடுந்தாண்டகம்

2086

அரன்‌ நாரணன்‌ நாமம்‌ ஆன்விடை புள்ளூர்தி உரை நூல்‌ மறை உறையும்‌ கோயில்‌ - வரை நீர்‌ கருமம்‌ அழிப்பு அளிப்புக்‌ கையது வேல்‌ நேமி உருவம்‌ எரி கார்‌ மேனி ஒன்று

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2107

எழுவார்‌ விடை கொள்வார்‌ ஈன்‌ துழாயானை வழுவா வகை நினைந்து வைகல்‌ - தொழுவார்‌ வினைச்‌ சுடரை நந்துவிக்கும்‌ வேங்கடமே வானோர்‌ மனச்‌ சுடரைத்‌ தூண்டும்‌ மலை

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2109

கைய வலம்புரியும்‌ நேமியும்‌ கார்வண்ணத்து ஐய! மலர்மகள்‌ நின்‌ ஆகத்தாள்‌ - செய்ய மறையான்‌ நின்‌ உந்தியான்‌ மாமதிள்‌ மூன்றெய்த இறையான்‌ நின்‌ ஆகத்து இறை

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2118

வகையறு நுண்கேள்வி வாய்வார்கள்‌ நாளும்‌ புகை விளக்கும்‌ பூம்புனலும்‌ ஏந்தி - திசை திசையின்‌ வேதியர்கள்‌ சென்று இறைஞ்சும்‌ வேங்கடமே வெண்சங்கம்‌ ஊதிய வாய்‌ மால்‌ உகந்த ஊர்‌

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2119

ஊரும்‌ வரி அரவம்‌ ஒண்‌ குறவர்‌ மால்‌ யானை அடியே ்‌ முரண பேர எறிந்த பெருமணியை - கார்‌ உடைய மின்‌ என்று புற்றடையும்‌ வேங்கடமே மேல சுரர்‌ எம்மெனு'' மாலதிடம்‌

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2120

இடந்தது பூமி எடுத்தது குன்றம்‌ கடந்தது கஞ்சனை முன்‌ அஞ்ச - கிடந்ததுவும்‌ நீரோத மாகடலே நின்றதுவும்‌ வேங்கடமே பேரோத வண்ணர்‌ பெரிது

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2121

பெருவில்‌ பகழிக்‌ குறவர்‌ கைச்‌ செந்தீ வெருவிப்‌ புனம்‌ துறந்த வேழம்‌ - இருவிசும்பில்‌ மீன்‌ வீழக்‌ கண்டஞ்சும்‌ வேங்கடமே மேல்‌ அசுரர்‌ கோன்‌ வீழக்‌ கண்டு உகந்தான்‌ குன்று

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2134॥

சென்றால்‌ குடையாம்‌ இருந்தால்‌ சிங்காசனமாம்‌ நின்றால்‌ மரவடியாம்‌ நீள்‌ கடலுள்‌ - என்றும்‌ புணையாம்‌ மணிவிளக்காம்‌ பூம்பட்டாம்‌ புல்கும்‌ அணையாம்‌ திருமாற்கு அரவு

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2139

தொழுது மலர்‌ கொண்டூ தூபம்‌ கை ஏந்தி எழுதும்‌ எழுவாழி நெஞ்சே! - பழுதின்றி மந்திரங்கள்‌ கற்பனவும்‌ மால்‌ அடியே கை தொழுவான்‌ அந்தரம்‌ ஒன்றில்லை அடை

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2145

நயவேன்‌ பிறர்‌ பொருளை நள்ளேன்‌ கீழாரோடு உயவேன்‌ உயர்ந்தவரோடு அல்லால்‌ - வியவேன்‌ திருமாலை அல்லது தெய்வம்‌ என்று ஏத்தேன்‌ வருமாறு என்‌ நம்‌'' மேல்‌ வினை?

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2146

வினையால்‌ அடர்ப்படார்‌ வெந்நரகில்‌ சேரார்‌ தினையேனும்‌ தீக்கதிக்கண்‌ செல்லார்‌ - நினைதற்கு அரியானைச்‌ சேயானை ஆயிரம்‌ பேர்ச்‌ செங்கண்‌ கரியானைக்‌ கை தொழுதக்கால்‌

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2149

உணர்வாரார்‌ உன்‌ பெருமை? ஊழி தோறூழி உணர்வாரார்‌ உன்‌ உருவம்‌ தன்னை? - உணர்வாரார்‌ விண்ணகத்தாய்‌! மண்ணகத்தாய்‌! வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ பண்ணகத்தாய்‌! நீ கிடந்த பால்‌?

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2155

ஏற்றான்‌ புள்‌ ஊர்ந்தான்‌ எயில்‌ எரித்தான்‌ மார்விடந்தான்‌ நீற்றான்‌ நிழல்‌ மணிவண்ணத்தான்‌ - கூற்றொரு பால்‌ மங்கையான்‌ பூமகளான்‌ வார்சடையான்‌ நீள்முடியான்‌ கங்கையான்‌ நீள்கழலான்‌ காப்பு

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2157

வழி நின்று நின்னைத்‌ தொழுவார்‌ வழுவா மொழி நின்ற மூர்த்தியரே ஆவர்‌ - பழுதொன்றும்‌ வாராத வண்ணமே விண்‌ கொடுக்கும்‌ மண்‌ அளந்த சீரான்‌ திருவேங்கடம்‌

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2158

வேங்கடமும்‌ விண்ணகரும்‌ வெஃகாவும்‌ அஃகாத பூங்கிடங்கின்‌ நீள்கோவல்‌ பொன்னகரும்‌ - நான்கு இடத்தும்‌ நின்றான்‌ இருந்தான்‌ கிடந்தான்‌ நடந்தானே என்றால்‌ கெடுமாம்‌ இடர்‌

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2163

படையாரும்‌ வாட்கண்ணார்‌ பாரசி நாள்‌ பைம்பூந்‌ தொடையலோடுூ ஏந்திய தூபம்‌ - இடை இடையில்‌ மீன்‌ மாய மாசுணும்‌ வேங்கடமே மேலொரு நாள்‌ மான்‌ மாய எய்தான்‌ வரை

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2180॥

உளன்‌ கண்டாய்‌ நன்னெஞ்சே! உத்தமன்‌ என்றும்‌ உளன்‌ கண்டாய்‌ உள்ளுவார்‌ உள்ளத்து - உளன்‌ கண்டாய்‌ வெள்ளத்தின்‌ உள்ளானும்‌ வேங்கடத்து மேயானும்‌ உள்ளத்தின்‌ உள்ளான்‌ என்று ஓர்‌

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2206

சென்றது இலங்கை மேல்‌ செவ்வே தன்‌ சீற்றத்தால்‌ கொன்றது இராவணனைக்‌ கூறுங்கால்‌ - நின்றதுவும்‌ வேயோங்கு தண்சாரல்‌ வேங்கடமே விண்ணவர்‌ தம்‌ வாயோங்கு தொல்புகழான்‌ வந்து

இரண்டாம் திருவந்தாதி · இரண்டாம் திருவந்தாதி

2209

மனத்துள்ளான்‌ வேங்கடத்தான்‌ மாகடலான்‌ மற்றும்‌ நினைப்பரிய நீள்‌ அரங்கத்து உள்ளான்‌ - எனைப்பலரும்‌ தேவாதி தேவன்‌ எனப்படுவான்‌ முன்னொரு நாள்‌ மாவாய்‌ பிளந்த மகன்‌

இரண்டாம் திருவந்தாதி · இரண்டாம் திருவந்தாதி

2214

துணிந்தது சிந்தை துழாய்‌ அலங்கல்‌ அங்கம்‌ அணிந்தவன்‌ பேர்‌ உள்ளத்துப்‌ பல்கால்‌ - பணிந்ததுவும்‌ வேய்பிறங்கு சாரல்‌ விறல்‌ வேங்கடவனையே வாய்திறங்கள்‌ சொல்லும்‌ வகை

இரண்டாம் திருவந்தாதி · இரண்டாம் திருவந்தாதி

2226

உளதென்று இறுமாவார்‌ உண்டில்லை என்று தளர்தல்‌ அதன்‌ அருகும்‌ சாரார்‌ - அளவரிய வேதத்தான்‌ வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடி தோயும்‌ பாதத்தான்‌ பாதம்‌ பயின்று

இரண்டாம் திருவந்தாதி · இரண்டாம் திருவந்தாதி

2227

பயின்றது அரங்கம்‌ திருக்கோட்டி பன்னாள்‌ பயின்றதுவும்‌ வேங்கடமே பன்னாள்‌ - பயின்றது அணிதிகழும்‌ சோலை அணிநீர்மலையே மணி திகழும்‌ வண்தடக்கை மால்‌

இரண்டாம் திருவந்தாதி · இரண்டாம் திருவந்தாதி

2234

நெறியார்‌ குழற்கற்றை முன்‌ நின்று பின்‌ தாழ்ந்து அறியாது இளங்கிரி என்றெண்ணி - பிறியாது பூங்கொடிக்கள்‌ வைகும்‌ பொருபுனல்‌ குன்று என்றும்‌ வேங்கடமே யாம்‌ விரும்பும்‌ வெற்பு

இரண்டாம் திருவந்தாதி · இரண்டாம் திருவந்தாதி

2235

வெற்பென்று இருஞ்சோலை வேங்கடம்‌ என்று இவ்விரண்டும்‌ நிற்பென்று நீ மதிக்கும்‌ நீர்மை போல்‌ - நிற்பென்று உளங்கோயில்‌ உள்ளம்‌ வைத்து உள்ளினேன்‌ வெள்ளத்து இளங்கோயில்‌ கைவிடேல்‌ என்று

இரண்டாம் திருவந்தாதி · இரண்டாம் திருவந்தாதி

2251

தமர்‌ உள்ளம்‌ தஞ்சை தலை அரங்கம்‌ தண்கால்‌ தமர்‌ உள்ளும்‌ தண்பொருப்பு வேலை - தமர்‌ உள்ளும்‌ மாமல்லை கோவல்‌ மதிள்‌ குடந்தை என்பரே ஏவல்ல எந்தைக்கு இடம்‌

இரண்டாம் திருவந்தாதி · இரண்டாம் திருவந்தாதி

2253

போதறிந்து வானரங்கள்‌ பூஞ்சுனை புக்கு ஆங்கலர்ந்த போதரிந்து கொண்டு ஏத்தும்‌ போது உள்ளம்‌! - போது மணி வேங்கடவன்‌ மலர்‌ அடிக்கே செல்ல அணி வேங்கடவன்‌ பேராய்ந்து

இரண்டாம் திருவந்தாதி · இரண்டாம் திருவந்தாதி

2256

பெருகு மத வேழம்‌ மாப்பிடிக்கி முன்‌ நின்று இருகண்‌ இளமூங்கில்‌ வாங்கி - அருகிருந்த தேன்‌ கலந்து நீட்டும்‌ திருவேங்கடம்‌ கண்டீர்‌ வான்‌ கலந்த வண்ணன்‌ வரை

இரண்டாம் திருவந்தாதி · இரண்டாம் திருவந்தாதி

2295

மாற்பால்‌ மனம்‌ சுழிப்ப மங்கையர்‌ தோள்‌ கை விட்டூ நூற்பால்‌ மனம்‌ வைக்க நொய்விதாம்‌ - நாற்பால வேதத்தான்‌ வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடி தோயும்‌ பாதத்தான்‌ பாதம்‌ பணிந்து

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2307

சிறந்த என்‌ சிந்தையும்‌ செங்கண்‌ அரவும்‌ நிறைந்த சீர்‌ நீள்‌ கச்சி உள்ளும்‌ - உறைந்ததுவும்‌ வேங்கடமும்‌ வெஃகாவும்‌ வேளுக்கைப்‌ பாடியுமே தாம்‌ கடவார்‌ தண்துழாயார்‌

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2311

சேர்ந்த திருமால்‌ கடல்‌ குடந்தை வேங்கடம்‌ நேர்ந்த என்‌ சிந்தை நிறை விசும்பும்‌ - வாய்ந்த மறை பாடகம்‌ அனந்தன்‌ வண்துழாய்க்‌ கண்ணி இறை பாடியாய இவை

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2313

பாற்கடலும்‌ வேங்கடமும்‌ பாம்பும்‌ பனிவிசும்பும்‌ நூற்கடலும்‌ நுண்ணூல தாமரை மேல்‌ - பாற்பட்டூ இருந்தார்‌ மனமும்‌ இடமாகக்‌ கொண்டான்‌ குருந்தொசித்த கோபாலகன்‌

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2320

இறையாய்‌ நிலனாகி எண்திசையும்‌ தானாய்‌ மறையாய்‌ மறைப்‌ பொருளாய்‌ வானாய்‌ - பிறை வாய்ந்த வெள்ளத்தருவி விளங்கொலி நீர்‌ வேங்கடத்தான்‌ உள்ளத்தின்‌ உள்ளே உளன்‌

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2321

உளன்‌ கண்டாய்‌ நல்நெஞ்சே! உத்தமன்‌ என்றும்‌ உளன்‌ கண்டாய்‌ உள்ளுவார்‌ உள்ளத்து - உளன்‌ கண்டாய்‌ விண்ணொடூங்கக்‌ கோடுூயரும்‌ வீங்கருவி வேங்கடத்தான்‌ மண்ணொடுங்கத்‌ தான்‌ அளந்த மன்‌

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2326

புரிந்து மத வேழம்‌ மாப்பிடியோடூ ஊடி திரிந்து சினத்தால்‌ பொருது - விரிந்த சீர்‌ வெண்கோட்டு முத்துதிர்க்கும்‌ வேங்கடமே மேலொரு நாள்‌ மண்கோட்டுக்‌ கொண்டான்‌ மலை

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2339

தெளிந்த சிலாதலத்தின்‌ மேல்‌ இருந்த மந்தி அளிந்த கடுவனையே னோக்கி - விளங்கிய வெண்மதியம்‌ தாவென்னும்‌ வேங்கடமே மேலொரு நாள்‌ மண்மதியில்‌ கொண்டூகந்தான்‌ வாழ்வு

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2342॥

பண்டெல்லாம்‌ வேங்கடம்‌ பாற்கடல்‌ வைகுந்தம்‌ கொன்டங்கு உறைவார்க்குக்‌ கோயில்‌ போல்‌ - வண்டு வளங்கிளரும்‌ நீள்சோலை வண்பூங்கடிகை இளங்குமரன்‌ தன்‌ விண்ணகர்‌

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2343

விண்ணகரம்‌ வெஃகா விரிதிரைநீர்‌ வேங்கடம்‌ மண்ணகரம்‌ மாமாட வேளுக்கை - மண்ணகத்த தென்‌ குடந்தை தேனார்‌ திருவரங்கம்‌ தென்கோட்டி தன்‌ குடங்கை நீர்‌ ஏற்றான்‌ தாழ்வு

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2344

தாழ்‌ சடையும்‌ நீள்முடியும்‌ ஒண்மழுவும்‌ சக்கரமும்‌ சூழரவும்‌ பொன்னாணும்‌ தோன்றுமால்‌ - சூழும்‌ திரண்டருவி பாயும்‌ திருமலை மேல்‌ எந்தைக்கு இரண்டூருவும்‌ ஒன்றாய்‌ இசைந்து

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2349

பார்த்த கடுவன்‌ சுனை நீர்‌ நிழல்‌ கண்டு பேர்த்தோர்‌ கடுவன்‌ எனப்‌ பேர்ந்து - கார்த்த களங்கனிக்குக்‌ கை நீட்டும்‌ வேங்கடமே மேல்‌ நாள்‌ விளங்கனிக்குக்‌ கன்றெறிந்தான்‌ வெற்பு

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2350

வெற்பென்று வேங்கடம்‌ பாடும்‌ வியந்துழாய்‌ கற்பென்று சூடும்‌ கருங்குழல்‌ மேல்‌ - மல்‌ பொன்ற நீண்ட தோள்‌ மால்‌ கிடந்த நீள்‌ கடல்‌ நீராடுவான்‌ பூண்ட நாள்‌ எல்லாம்‌ புகும்‌

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2351

புகுமதத்தால்‌ வாய்‌ பூசிக்‌ கீழ்‌ தாழ்ந்து அருவி உகு மதத்தால்‌ கால்‌ கழுவிக்‌ கையால்‌ - மிகு மதத்‌ தேன்‌ விண்ட மலர்‌ கொண்டு விறல்‌ வேங்கடவனையே கண்டு வணங்கும்‌ களிறு

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2352

களிறு முகில்‌ குத்தக்‌ கை எடூத்தோடி ஒளிறு மருப்பொசிகை யாளி - பிளிறி விழ கொன்று நின்றதிரும்‌ வேங்கடமே மேல்‌ நாள்‌ குழக்கன்று கொண்டெறிந்தான்‌ குன்று

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2353

குன்று ஒன்றினாய குறமகளிர்‌ கோல்வளைக்‌ கை சென்று விளையாடும்‌ தீங்கழை போய்‌ - வென்று விளங்கு மதி கோள்‌ விடுக்கும்‌ வேங்கடமே மேலை இளங்குமரர்‌ கோமான்‌ இடம்‌

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2354

இடம்‌ வலம்‌ ஏழ்‌ பூண்ட இரவித்‌ தேர்‌ ஓட்டி வடமுக வேங்கடத்து மன்னும்‌ - குடம்‌ நயந்த கூத்தனாய்‌ நின்றான்‌ குரைகழலே கூறுவதே நாத்தன்னால்‌ உள்ள நலம்‌

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2356

சார்ந்தகடூ தேய்ப்பத்‌ தடாவிய கோட்டூச்சி வாய்‌ ஊர்ந்தியங்கும்‌ வெண்மதியின்‌ ஒண்முயலை - சேர்ந்து சினவேங்கை பார்க்கும்‌ திருமலையே ஆயன்‌ புனவேங்கை நாறும்‌ பொருப்பு

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2370

முடிந்த பொழுதில்‌ குறவாணர்‌ ஏனம்‌ படிந்துழுசால்‌ பைந்தினைகள்வித்த - தடிந்தெழுந்த வேய்ங்கழை போய்‌ விண்‌ திறக்கும்‌ வேங்கடமே மேலொரு நாள்‌ தீங்குழல்‌ வாய்‌ வைத்தான்‌ சிலம்பு

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2371

சிலம்பும்‌ செறிகழலும்‌ சென்றிசைப்ப விண்ணாறு அலம்பிய சேவடி போய்‌ அண்டம்‌ - புலம்பிய தோள்‌ எண்திசையும்‌ சூழ இடம்‌ போதாது என்‌ கொலோ? வண்டுமாய்‌ மால்‌ அளந்த மண்‌

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2372

மண்‌ உண்டும்‌ பேய்ச்சி முலை உண்டும்‌ ஆற்றாதாய்‌ வெண்ணெய்‌ விழுங்க வெகுண்டு ஆய்ச்சி - கண்ணிக்‌ கயிற்றினால்‌ கட்டத்‌ தான்‌ கட்டுண்டு இருந்தான்‌ வயிற்றினோடு ஆற்றா மகன்‌

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2373

மகன்‌ ஒருவர்க்கு அல்லாத மாமேனி மாயன்‌ மகனாம்‌ அவன்‌ மகன்‌ தன்‌ காதல்‌ - மகனை சிறை செய்த வாணன்‌ தோள்‌ செற்றான்‌ கழலே நிறை செய்து என்‌ நெஞ்சே! நினை

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2374

நினைத்து உலகில்‌ ஆர்‌ தெளிவார்‌? நீண்ட திருமால்‌ அனைத்துலகும்‌ உள்‌ ஒடுக்கி ஆல்‌ மேல்‌ - கனைத்துலவு வெள்ளத்தோர்‌ பிள்ளையாய்‌ மெள்ளத்‌ துயின்றானை உள்ளத்தே வை நெஞ்சே! உய்த்து

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2375

உய்த்து உணர்வென்னும்‌ ஒளி கொள்‌ விளக்கேற்றி வைத்து அவனை நாடி வலைப்படூத்தேன்‌ - மெத்தெனவே நின்றான்‌ இருந்தான்‌ கிடந்தான்‌ என்‌ நெஞ்சத்து பொன்றாமை மாயன்‌ புகுந்து

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2412

மேல்‌ நான்முகன்‌ அரனை இட்ட விடூ சாபம்‌ தான்‌ நாரணன்‌ ஒழித்தான்‌ தாரகையுள்‌ - வானோர்‌ பெருமானை ஏத்தாத பேய்காள்‌! பிறக்கும்‌ கருமாயம்‌ பேசின்‌ கதை

நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி

2415

குறிப்பு எனக்குக்‌ கோட்டியூர்‌ மேயானை ஏத்த குறிப்பு எனக்கு நன்மை பயக்க - வெறுப்பனோ? வேங்கடத்து மேயானை மெய்வினை நோய்‌ எய்தாமல்‌ தான்‌ கடத்தும்‌ தன்மையான்‌ தாள்‌

நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி

2420

அழைப்பன்‌ திருவேங்கடத்தானைக்‌ காண இழைப்பன்‌ திருக்கூடல்‌ கூட - மழைப்பேர்‌ அருவி மணி வரன்றி வந்திழிய யானை வெருவி அரவொடுங்கும்‌ வெற்பு

நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி

2421

வெற்பென்று வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி நிற்கின்றேன்‌ நின்று நினைக்கின்றேன்‌ - கற்கின்ற நூல்‌ வலையில்‌ பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‌ கால்‌ வலையில்‌ பட்டிருந்தேன்‌ காண்‌

நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி

2422

காணலுறுகின்றேன்‌ கல்லருவி முத்துதிர ஓண விழவில்‌ ஒலி அதிர - பேணி வருவேங்கடவா! என்‌ உள்ளம்‌ புகுந்தாய்‌ திருவேங்கடம்‌ அதனைச்‌ சென்று

நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி

2423

சென்று வணங்குமினோ சேணுயர்‌ வேங்கடத்தை நின்று வினை கெடுக்கும்‌ நீர்மையால்‌ - என்றும்‌ கடிக்கமல நான்முகனும்‌ கண்‌ மூன்றத்தானும்‌ அடிக்கமலம்‌ இட்டூ ஏத்தும்‌ அங்கு

நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி

2424

மங்குல்‌ தோய்‌ சென்னி வடவேங்கடத்தானை கங்குல்‌ புகுந்தார்கள்‌ காப்பணிவான்‌ - திங்கள்‌ சுடையேற வைத்தானும்‌ தாமரை மேலானும்‌ 70. வரண்டி குடையேறத்‌ தாம்‌ குவித்துக்‌ கொண்டு

நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி

2425

கொண்டூ குடங்கால்‌ மேல்‌ வைத்த குழவியாய்‌ தண்ட அரக்கன்‌ தலை தாளால்‌ - பண்டெண்ணி போம்‌ குமரன்‌ நிற்கும்‌ பொழில்‌ வேங்கட மலைக்கே போம்‌ குமரருள்ளீர்‌! புரிந்து

நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி

2426

புரிந்து மலர்‌ இட்டுப்‌ புண்டரீகப்‌ பாதம்‌ பரிந்து படூகாடூ நிற்ப - தெரிந்தெங்கும்‌ தான்‌ ஓங்கி நிற்கின்றான்‌ தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ வைப்பு

நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி

2427

வைப்பன்‌ மணி விளக்கா மாமதியை மாலுக்கென்று எப்பொழுதும்‌ கை நீட்டும்‌ யானையை - எப்பாடூம்‌ வேடு வளைக்கக்‌ குறவர்‌ வில்‌ எடுக்கும்‌ வேங்கடமே நாடூ வளைத்தாடூது'' மேல்‌ நன்று

நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி

2428

நன்மணி வண்ணஞூர்‌ ஆளியும்‌ கோளரியும்‌ பொன்மணியும்‌ முத்தமும்‌ பூமரமும்‌ - பன்மணி நீ ரோடு பொருதுருளும்‌ கானமும்‌ வானரமும்‌ வேடுமுடை வேங்கடம்‌

நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி

2429

வேங்கடமே விண்ணோர்‌ தொழுவதுவும்‌ மெய்ம்மையால்‌ வேங்கடமே மெய்வினை நோய்‌ தீர்ப்பதுவும்‌ - வேங்கடமே தானவரை வீழத்‌ தன்‌ ஆழிப்‌ படை தொட்டூ வானவரைக்‌ காப்பான்‌ மலை

நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி

2471

வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார்‌ வேங்கடத்தான்‌ பால்திருந்த வைத்தாரே பல்மலர்கள்‌ - மேல்‌ திருந்த வாழ்வார்‌ வருமதி பார்த்து அன்பினராய்‌ மற்றவர்க்கே தாழ்வாய்‌ இருப்பார்‌ தமர்‌

நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி

2485

காண்கின்றனகளும்‌ கேட்கின்றனகளும்‌ காணில்‌ இந்நாள்‌ பாண்குன்ற நாடர்‌ பயில்கின்றன இதெல்லாம்‌ அறிந்தோம்‌ மாண்குன்றம்‌ ஏந்தித்‌ தண்‌ மாமலை வேங்கடத்து உம்பர்‌ நம்பும்‌ சேண்குன்றம்‌ சென்று பொருள்‌ படைப்பான்‌ கற்றதிண்ணனவே

திருவிருத்தம் · திருவிருத்தம்

2487

மாயோன்‌ வட திருவேங்கட நாட வல்லிக்‌ கொடிகாள்‌! நோயோ உரைக்கிலும்‌ கேட்கின்றிலீர்‌ உரையீர்‌ நுமது வாயோ? அது அன்றி வல்வினையேனும்‌ கிளியும்‌ எள்கும்‌ ஆயோ? அடும்‌ தொண்டையோ? அறையோ! இது அறிவரிதே

திருவிருத்தம் · திருவிருத்தம்

2492

கயலோ நும்‌ கண்கள்‌? என்று களிறு வினவி நிற்றீர்‌ அயலோர்‌ அறியிலும்‌ ஈதென்ன வார்த்தை? கடல்‌ கவர்ந்த புயலோடூ உலாம்‌ கொண்டல்‌ வண்ணன்‌ புன வேங்கடத்து எம்மொடும்‌ பயலோவிலீர்‌ கொல்லை காக்கின்ற நாளும்‌ பல பலவே

திருவிருத்தம் · திருவிருத்தம்

2508

இசைமின்கள்‌ தூது என்று இசைத்தால்‌ இசையிலம்‌ என்‌ தலை மேல்‌ அசைமின்கள்‌ என்றால்‌ அசையுங்கொலாம்‌? அம்பொன்‌ மாமணிகள்‌ திசைமின்‌ மிளிரும்‌ திருவேங்கடத்துவன்‌ தாள்‌ சிமய மிசை மின்‌ மிளிரிய போவான்‌ வழிக்‌ கொண்ட மேகங்களே !

திருவிருத்தம் · திருவிருத்தம்

2527

ஒண்ணுதல்‌ மாமை ஒளி பயவாமை விரைந்து நந்தேர்‌ நண்ணுதல்‌ வேண்டும்‌ வலவ! கடாகின்று தேன்‌ நவின்ற விண்‌ முதல்‌ நாயகன்‌ நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்‌ மண்‌ முதல்‌ சேர்வுற்று அருவி செய்யா நிற்கும்‌ மாமலைக்கே

திருவிருத்தம் · திருவிருத்தம்

2537॥

முலையோ முழு முற்றும்‌ போந்தில மொய்பூம்‌ குழல்‌ குறிய கலையோ அரையில்லை நாவோ குழறும்‌ கடல்‌ மண்ணெல்லாம்‌ விலையோ என மிளிரும்‌ கண்‌ இவள்‌ பரமே? பெருமான்‌ மலையோ திருவேங்கடம்‌ என்று கற்கின்ற வாசகமே

திருவிருத்தம் · திருவிருத்தம்

2544

காவியும்‌ நீலமும்‌ வேலும்‌ கயலும்‌ பல பல என்று ஆவியின்‌ தன்மை அளவல்ல பாரிப்பு அசுரைச்‌ செற்ற மாவியம்‌ புள்‌ வல்ல மாதவன்‌ கோவிந்தன்‌ வேங்கடம்‌ சேர்‌ தூவியம்‌ பேடை அந்நாள்‌ கண்களாய துணை மலரே

திருவிருத்தம் · திருவிருத்தம்

2558

உருகின்ற கன்மங்கள்‌ மேலன ஓர்ப்பிலராய்‌ இவளைப்‌ பெருகின்ற தாயர்‌ மெய்‌ நொந்து பெறார்‌ கொல்‌? துழாய்‌ குழல்‌ வாய்த்‌ துறுகின்றிலர்‌ தொல்லை வேங்கடமாட்டவும்‌ சூழ்கின்றிலர்‌ இருகின்றதால்‌ இவள்‌ ஆகம்‌ மெல்லாவி எரி கொள்ளவே

திருவிருத்தம் · திருவிருத்தம்

2652

கல்லும்‌ கனைகடலும்‌ வைகுந்த வானாடூம்‌ புல்லென்று ஒழிந்தன கொல்‌? ஏபாவம்‌! - வெல்ல நெடியான்‌ நிறம்‌ கரியான்‌ உள்புகுந்து நீங்கான்‌ அடியேனது உள்ளத்தகம்‌

பெரிய திருவந்தாதி · பெரிய திருவந்தாதி

2754

கண்ணாவான்‌ என்றும்‌ மண்ணோர்‌ விண்ணோர்க்கு தண்ணார்‌ வேங்கட விண்ணோர்‌ வெற்பனே

திருவாய்மொழி · 1-8. ஓ௫ும்புள்‌

2848

எந்தாய்‌! தண்திருவேங்கடத்துள்‌ நின்றாய்‌! இலங்கை செற்றாய்‌! மராமரம்‌ பைந்தாள்‌ ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா! கொந்தார்‌ தண்ணண்துழாயினாய்‌! அமுதே! உன்னை என்னுள்ளே குழைத்த - மைந்தா! வானேறே! இனி எங்குப்‌ போகின்றதே?

திருவாய்மொழி · 2-6. வைகுந்தா

2849

போகின்ற காலங்கள்‌ போய காலங்கள்‌ போகு காலங்கள்‌ தாய்‌ தந்தை - ஆகின்றாய்‌! உன்னை நான்‌ அடைந்தேன்‌ விடுவேனோ? பாகின்ற தொல்புகழ்‌ மூவுலகுக்கும்‌ நாதனே! பரமா! தண்வேங்கடம்‌ மேகின்றாய்‌! தண்துழாய்‌ விரைநாறு கண்ணியனே!

திருவாய்மொழி · 2-6. வைகுந்தா

2861

பற்பநாபன்‌ உயர்வற உயரும்‌ பெருந்திறலோன்‌ எற்பரன்‌ என்னையாக்கிக்‌ கொண்டு எனக்கே தன்னைத்‌ தந்த கற்பகம்‌ என்‌ அமுதம்‌ கார்முகில்‌ போலும்‌ வேங்கட நல்‌ வெற்பன்‌ விசும்போர்‌ பிரான்‌ எந்தை தாமோதரனே

திருவாய்மொழி · 2-7. கேசவன்தமர்‌

2919॥

ஒழிவில்‌ காலம்‌ எல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌ தெழிகுரல்‌ அருவித்‌ திருவேங்கடத்து எழில்‌ கொள்‌ சோதி எந்தை தந்தை தந்தைக்கே

திருவாய்மொழி · 3-3. ஒழிவில்‌ காலம்‌

2920

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்‌ முந்தை வானவர்‌ வானவர்‌ கோனொடும்‌ சிந்து பூ மகிழும்‌ திருவேங்கடத்து அந்தமில்‌ புகழ்க்‌ கார்‌ எழில்‌ அண்ணலே

திருவாய்மொழி · 3-3. ஒழிவில்‌ காலம்‌

2921

அண்ணல்‌ மாயன்‌ அணிகொள்‌ செந்தாமரைக்‌ கண்ணன்‌ செங்கனி வாய்க்‌ கருமாணிக்கம்‌ தெண்ணிறைச்‌ சுனை நீர்த்‌ திருவேங்கடத்து எண்ணில்‌ தொல்‌ புகழ்‌ வானவர்‌ ஈசனே

திருவாய்மொழி · 3-3. ஒழிவில்‌ காலம்‌

2922

ஈசன்‌ வானவர்க்கு என்பன்‌ என்றால்‌ அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு நீசனேன்‌ நிறை ஒன்றுமிலேன்‌ என்‌ கண்‌ பாசம்‌ வைத்த பரஞ்சுடர்ச்‌ சோதிக்கே

திருவாய்மொழி · 3-3. ஒழிவில்‌ காலம்‌

2923

சோதியாகி எல்லா உலகும்‌ தொழும்‌ ஆதி மூர்த்தி என்றால்‌ அளவாகுமோ? வேதியர்‌ முழு வேதத்தமுதத்தை தீதில்‌ சீர்த்‌ திருவேங்கடத்தானையே

திருவாய்மொழி · 3-3. ஒழிவில்‌ காலம்‌

2924

வேங்கடங்கள்‌ மெய்ம்மேல்‌ வினை முற்றவும்‌ தாங்கள்‌ தங்கட்கு நல்லனவே செய்வார்‌ ர வேங்கடத்துறைவார்க்கு நம என்ன லாம்‌ கடமை அது சுமந்தார்கட்கே

திருவாய்மொழி · 3-3. ஒழிவில்‌ காலம்‌

2925

சுமந்து மாமலர்‌ நீர்‌ சுடர்‌ தூபம்‌ கொண்டு அமர்ந்து வானவர்‌ வானவர்‌ கோனொடும்‌ நமன்றெழும்‌ திருவேங்கடம்‌ நங்கட்கு சமன்‌ கொள்‌ வீடு தரும்‌ தடங்‌ குன்றமே

திருவாய்மொழி · 3-3. ஒழிவில்‌ காலம்‌

2926॥

குன்றம்‌ ஏந்திக்‌ குளிர்‌ மழை காத்தவன்‌ அன்று ஞாலம்‌ அளந்த பிரான்‌ ர பரன்‌ சென்று சேர்‌ திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம்‌ வினை ஓயுமே

திருவாய்மொழி · 3-3. ஒழிவில்‌ காலம்‌

2927

ஓயும்‌ மூப்புப்‌ பிறப்பு இறப்புப்‌ பிணி வியுமாறு செய்வான்‌ திருவேங்கடத்து ஆயன்‌ நாள்‌ மலராம்‌ அடித்‌ தாமரை வாயுள்ளும்‌ மனத்துள்ளும்‌ வைப்பார்கட்கே

திருவாய்மொழி · 3-3. ஒழிவில்‌ காலம்‌

2928

வைத்த நாள்‌ வரை எல்லை குறுகிச்‌ சென்று எய்த்திளைப்பதன்‌ முன்னம்‌ அடைமினோ பைத்த பாம்பணையான்‌ திருவேங்கடம்‌ மொய்த்த சோலை மொய்பூந்தடம்‌ தாழ்வரே

திருவாய்மொழி · 3-3. ஒழிவில்‌ காலம்‌

2929॥

தாள்‌ பரப்பி மண்‌ தாவிய ஈசனை நீள்‌ பொழில்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்‌ ர கேழில்‌ ஆயிரத்து இப்பத்தும்‌ வல்லவர்‌ வாழ்வர்‌ வாழ்வெய்தி ஞாலம்‌ புகழவே

திருவாய்மொழி · 3-3. ஒழிவில்‌ காலம்‌

2948

வார்புனல்‌ அந்தணருவி வடதிருவேங்கடத்து எந்தை பேர்‌ பல சொல்லிப்‌ பிதற்றிப்‌ பித்தர்‌ என்றே பிறர்‌ கூற ஊர்‌ பல புக்கும்‌ புகாதும்‌ உலோகர்‌ சிரிக்க நின்றாடி ஆர்வம்‌ பெருகிக்‌ குனிப்பார்‌ அமரர்‌ தொழப்படுவாரே

திருவாய்மொழி · 3-5. மொய்ம்மாம்‌

2985॥

சொன்னால்‌ விரோதமிது ஆகிலும்‌ சொல்லுவன்‌ கேண்மினோ என்னாவில்‌ இன்கவி யான்‌ ஒருவர்க்கும்‌ கொடுக்கிலேன்‌ தென்னாதெனாவென்று வண்டு முரல்‌ திருவேங்கடத்து என்னானை என்னப்பன்‌ எம்பெருமான்‌ உளனாகவே

திருவாய்மொழி · 3-9. சொன்னால்‌

3061॥

மாரி மாறாத தண்ணம்மலை வேங்கடத்து அண்ணலை வாரி வாறாத பைம்பூம்பொழில்‌ சூழ்‌ குருகூர்‌ நகர்‌ காரி மாறன்‌ சடகோபன்‌ சொல்‌ ஆயிரத்து இப்பத்தால்‌ வேரி மாறாத பூமேல்‌ இருப்பாள்‌ வினை தீர்க்குமே

திருவாய்மொழி · 4-5. வீற்றிருந்து

3282॥

மாலுக்கு வையம்‌ அளந்த மணாளற்கு நீலக்‌ கரு நிற மேக நியாயற்கு கோலச்‌ செந்தாமரைக்‌ கண்ணற்கு என்‌ கொங்கலர்‌ ஏலக்‌ குழலி இழந்தது சங்கே

திருவாய்மொழி · 6-6. மாலுக்கு

3283

சங்கு வில்‌ வாள்‌ தண்டு சக்கரக்‌ கையற்கு செங்கனிவாய்ச்‌ செய்ய தாமரைக்‌ கண்ணற்கு கொங்கலர்‌ தண்ணந்துழாய்‌ முடியானுக்கு என்‌ மங்கை இழந்தது மாமை நிறமே

திருவாய்மொழி · 6-6. மாலுக்கு

3284

நிறம்‌ கரியானுக்கு நீடூலகு உண்ட திறம்‌ கிளர்‌ வாய்ச்‌ சிறு கள்வன்‌ அவற்கு! கறங்கிய சக்கரக்‌ கையவனுக்கு என்‌ பிறங்கிரும்‌ கூந்தல்‌ இழந்தது பீடே

திருவாய்மொழி · 6-6. மாலுக்கு

3285

பீடுடை நான்முகனைப்‌ படைத்தானுக்கு மாடூடை வையம்‌ அளந்த மணாளற்கு நாடுடை மன்னர்க்குத்‌ தூது செல்‌ நம்பிக்கு என்‌ பாடுடை அல்குல்‌ இழந்தது பண்பே

திருவாய்மொழி · 6-6. மாலுக்கு

3286

பண்புடை வேதம்‌ பயந்த பரனுக்கு மண்‌ புரை வையம்‌ இடந்த வராகற்கு தெண்புனல்‌ பள்ளி எம்‌ தேவ பிரானுக்கு என்‌ கண்புனை கோதை இழந்தது கற்பே

திருவாய்மொழி · 6-6. மாலுக்கு

3287

கற்பகக்‌ காவன நற்பல தோளற்கு பொற்‌ சுடர்க்‌ குன்றன்ன பூந்தண்‌ முடியற்கு நற்பல தாமரை நாள்‌ மலர்க்‌ கையற்கு என்‌ விற்புருவக்‌ கொடு தோற்றது மெய்யே

திருவாய்மொழி · 6-6. மாலுக்கு

3288

மெய்யமர்‌ பல்கலன்‌ நன்கு அணிந்தானுக்கு பையரவின்‌ அணைப்‌ பள்ளியினானுக்கு ர கையொடு கால்‌ செய்ய கண்ண பிரானுக்கு என்‌ தையல்‌ இழந்தது தன்னுடைச்‌ சாயே

திருவாய்மொழி · 6-6. மாலுக்கு

3289

சாயக்‌ குருந்தம்‌ ஒசித்த தமியற்கு மாயச்‌ சகடம்‌ உதைத்த மணாளற்கு பேயைப்‌ பிணம்‌ படப்‌ பாலுண்‌ பிரானுக்கு என்‌ வாசக்‌ குழலி இழந்தது மாண்பே

திருவாய்மொழி · 6-6. மாலுக்கு

3290

மாண்பமை கோலத்து எம்‌ மாயக்‌ குறளற்கு சேண்‌ சுடர்க்‌ குன்றன்ன செஞ்சுடர்‌ மூர்த்திக்கு காண்‌ பெரும்‌ தோற்றத்து எம்‌ காகுத்த நம்பிக்கு என்‌ பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே

திருவாய்மொழி · 6-6. மாலுக்கு

3291

பொற்பமை நீள்‌ முடிப்‌ பூந்தண்‌ துழாயற்கு மற்பொரு தோளுடை மாயப்‌ பிரானுக்கு நிற்பன பல்லுருவாய்‌ நிற்குமாயற்கு என்‌ கற்புடையாட்டி இழந்தது கட்டே

திருவாய்மொழி · 6-6. மாலுக்கு

3292॥

கட்டெழில்‌ சோலை நல்‌ வேங்கடவாணனை செய்‌ கட்டெழில்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்‌ கட்டெழில்‌ ஆயிரத்து இப்பத்தும்‌ வல்லவர்‌ கட்டெழில்‌ வானவர்‌ போகம்‌ உண்பாரே

திருவாய்மொழி · 6-6. மாலுக்கு

3319

விண்மீது இருப்பாய்‌! மலைமேல்‌ நிற்பாய்‌! கடல்‌ சேர்ப்பாய்‌! மண்மீது உழல்வாய்‌! இவற்றுள்‌ எங்கும்‌ மறைந்து உறைவாய்‌! ர எண்மீது இயன்ற புறவண்டத்தாய்‌! எனதாவி உள்மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ?

திருவாய்மொழி · 6-9. நீராய்‌

3326॥

உலகமுண்ட பெருவாயா! உலப்பில்‌ கீர்த்தி அம்மானே! நிலவும்‌ சுடர்‌ சூழொளி மூர்த்தி! நெடியாய்‌! அடியேன்‌ ஆருயிரே! திலதம்‌ உலகுக்காய்‌ நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே! குலதொல்‌ அடியேன்‌ உன பாதம்‌ கூடுமாறு கூறாயே

திருவாய்மொழி · 6-10. உலகமுண்ட

3327

கூறாய்‌ நீறாய்‌ நிலனாகிக்‌ கொடு வல்லசுரர்‌ குலம்‌ எல்லாம்‌ சீறா எறியும்‌ திருநேமி வலவா! தெய்வக்‌ கோமானே! சேறார்‌ சுனைத்‌ தாமரை செந்தீ மலரும்‌ திருவேங்கடத்தானே! ஆறா அன்பில்‌ அடியேன்‌ உன்‌ அடி சேர்‌ வண்ணம்‌ அருளாயே

திருவாய்மொழி · 6-10. உலகமுண்ட

3328

வண்ணம்‌ அருள்‌ கொள்‌ அணிமேக வண்ணா! மாய அம்மானே! எண்ணம்‌ புகுந்து தித்திக்கும்‌ அமுதே! இமையோர்‌ அதிபதியே! ர தெண்ணல்‌ அருவி மணி பொன்‌ முத்தலைக்கும்‌ திருவேங்கடத்தானே! அண்ணலே! உன்‌ அடி சேர அடியேற்கு ஆவா என்னாயே

திருவாய்மொழி · 6-10. உலகமுண்ட

3329

ஆவா! என்னாது உலகத்தை அலைக்கும்‌ அசுரர்‌ வாணாள்‌ மேல்‌ தீவாய்‌ வாளி மழை பொழிந்த சிலையா! திருமாமகள்‌ கேள்வா! தேவா! சுரர்கள்‌ முனிக்‌ கணங்கள்‌ விரும்பும்‌ திருவேங்கடத்தானே! பூவார்‌ கழல்கள்‌ அருவினையேன்‌ பொருந்துமாறு புணராயே

திருவாய்மொழி · 6-10. உலகமுண்ட

3330

புணரா நின்ற மரம்‌ ஏழ்‌ அன்றெய்த ஒரு வில்‌ வலவாவோ! புணரேய்‌ நின்ற மரம்‌ இரண்டின்‌ நடுவே போன முதல்வாவோ! திணரார்‌ மேகம்‌ எனக்‌ களிறு சேரும்‌ திருவேங்கடத்தானே! திணரார்‌ சார்ங்கத்து உன பாதம்‌ சேர்வதடியேன்‌ எந்நாளே?

திருவாய்மொழி · 6-10. உலகமுண்ட

3331

எந்நாளே? நாம்‌ மண்‌ அளந்த இணைத்‌ தாமரைகள்‌ காண்பதற்க்கென்று எந்நாளும்‌ நின்று இமையோர்கள்‌ ஏத்தி இறைஞ்சி இனம்‌ இனமாய்‌ மெய்‌ நா மனத்தால்‌ வழிபாடு செய்யும்‌ திருவேங்கடத்தானே! மெய்‌ நான்‌ எய்தி எந்நாள்‌ உன்‌ அடிக்கண்‌! அடியேன்‌ மேவுவதே?

திருவாய்மொழி · 6-10. உலகமுண்ட

3332

அடியேன்‌ மேவி அமர்கின்ற அமுதே! இமையோர்‌ அதிபதியே! கொடுயாவடு புள்ளுடையானே! கோலக்‌ கனிவாய்ப்‌ பெருமானே! செடியார்‌ வினைகள்‌ தீர்‌ மருந்தே! திருவேங்கடத்து எம்பெருமானே! நொடுயார்‌ பொழுதும்‌ உன பாதம்‌ காண நோலாதாற்றேனே

திருவாய்மொழி · 6-10. உலகமுண்ட

3333

நோலாதாற்றேன்‌ உன பாதம்‌ காண என்று நுண்ணுணர்வின்‌ நீலார்‌ கண்டத்து அம்மானும்‌ நிறை நான்முகனும்‌ இந்திரனும்‌ சேலேய்‌ கண்ணார்‌ பலர்‌ சூழ விரும்பும்‌ திருவேங்கடத்தானே! மாலாய்‌ மயக்கி அடியேன்‌ பால்‌ வந்தாய்‌ போலே வாராயே

திருவாய்மொழி · 6-10. உலகமுண்ட

3334

வந்தாய்‌ போலே வாராதாய்‌ வாராதாய்‌ போல்‌ வருவானே! 7? அடியோர்க்கு செந்தாமரைக்கண்‌ செங்கனிவாய்‌ நால்தோள்‌ அமுதே! எனதுயிரே சிந்தாமணிகள்‌ பகர்‌ அல்லைப்‌ பகல்‌ செய்‌ திருவேங்கடத்தானே! அந்தோ! அடியேன்‌ உன பாதம்‌ அகலகில்லேன்‌ இறையுமே

திருவாய்மொழி · 6-10. உலகமுண்ட

3335॥

அகலகில்லேன்‌ இறையும்‌ என்று அலர்மேல்‌ மங்கை உறை மார்பா! நிகரில்‌ புகழாய்‌! உலகம்‌ மூன்றுடையாய்‌! என்னை ஆள்வானே! ர நிகரில்‌ அமரர்‌ முனிக்‌ கணங்கள்‌ விரும்பும்‌ திருவேங்கடத்தானே! புகல்‌ ஒன்றில்லா அடியேன்‌ உன்‌ அடிக்‌ கீழ்‌ அமர்ந்து புகுந்தேனே

திருவாய்மொழி · 6-10. உலகமுண்ட

3336॥

அடிக்‌ கீழ்‌ அமர்ந்து புகுந்து அடியீர்‌! வாழ்மின்‌ என்றென்றருள்‌ கொடுக்கும்‌ படிக்‌ கேழில்லாப்‌ பெருமானைப்‌ பழனக்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ முடிப்பான்‌ சொன்ன ஆயிரத்துத்‌ திருவேங்கடத்துக்கு இவை பத்தும்‌ பிடித்தார்‌ பிடித்தார்‌ வீற்றிருந்து பெரிய வானுள்‌ நிலாவுவரே

திருவாய்மொழி · 6-10. உலகமுண்ட

3458॥

நங்கள்‌ வரிவளையாயங்காளோ! நம்முடை ஏதலர்‌ முன்பு நாணி நுங்கட்கு யான்‌ ஒன்று உரைக்கும்‌ மாற்றம்‌ நோக்குகின்றேன்‌ எங்கும்‌ காண மாட்டேன்‌ சங்கம்‌ சரிந்தன சாயிழந்தேன்‌ தடமுலை பொன்னிறமாய்த்‌ தளர்ந்தேன்‌ வெங்கண்‌ பறவையின்‌ பாகன்‌ எங்கோன்‌ வேங்கடவாணணை வேண்டிச்‌ சென்றே

திருவாய்மொழி · 8-2. நங்கள்‌ வரிவளை

3586

இன்றிப்‌ போக இருவினையும்‌ கெடுத்து ஒன்றி ஆக்கை புகாமை உய்யக்‌ கொள்வான்‌ நின்ற வேங்கடம்‌ நீள்நிலத்து உள்ளது சென்று தேவர்கள்‌ கைதொழுவார்களே

திருவாய்மொழி · 9-3. ஓராயிரம்‌

3716॥

மேயான்‌ வேங்கடம்‌ காயாமலர்‌ வண்ணன்‌ பேயார்‌ முலையுண்ட வாயான்‌ மாதவனே

திருவாய்மொழி · 10-5. கண்ணன்‌ கழலிணை

3740॥

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என்தலையே திருமால்‌ வைகுந்தமே தண்‌ திருவேங்கடமே எனதுடலே அருமா மாயத்து எனதுயிரே மனமே வாக்கே கருமமே ஒருமா நொடுயும்‌ பிரியான்‌ என்‌ ஊழி முதல்வன்‌ ஒருவனே

திருவாய்மொழி · 10-7. செஞ்சொற்‌ கவிகாள்‌"

2673.36

மற்றெனக்கிங்கு ஆரானும்‌ கற்பிப்பார்‌ நாயகரே? - நான்‌ அவனைக்‌ காரார்‌ திருமேனி காணும்‌ அளவும்‌ போய்‌ சீரார்‌ திருவேங்கடமே திருக்கோவ லூரே - மதிட்கச்சி ஊரகமே பேரகமே பேரா மறுதிறுத்தான்‌ வெள்ளறையே வெஃகாவே பேராலி தண்கால்‌ நறையூர்‌ திருப்புலியூர்‌ ஆராமம்‌ சூழ்ந்த அரங்கம்‌ -

சிறிய திருமடல் · சிறிய திருமடல்

2674.68

மின்னி மழை தவழும்‌ வேங்கடத்து எம்‌ வித்தகனை மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை கொல்நவிலும்‌ ஆழிப்‌ படையானை -

பெரிய திருமடல் · பெரிய திருமடல்