Skip to the text
‹ Divya Desams

திருவெஃகா

Thiruvekka · Kanchipuram, Thondai Nadu

Perumal
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
Thaayar
கோமளவல்லி
Mangalasasanam
16 pasurams

Verses sung here

814

நன்றிருந்து யோக நீதி நண்ணுவார்கள்‌ சிந்தையுள்‌ சென்றிருந்து தீவினைகள்‌ தீர்த்த தேவ தேவனே குன்றிருந்த மாட நீடு பாடகத்தும்‌ ஊரகத்தும்‌ நின்றிருந்து வெஃகணைக்‌ கிடந்தது என்ன நீர்மையே

திருச்சந்த விருத்தம் · திருச்சந்த விருத்தம்

815

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெஃகணைக்‌ கிடந்தது என்னிலாத முன்னெலாம்‌ அன்று நான்‌ பிறந்திலேன்‌ பிறந்த பின்‌ மறந்திலேன்‌ நின்றதும்‌ இருந்ததும்‌ கிடந்ததும்‌ என்‌ நெஞ்சுளே

திருச்சந்த விருத்தம் · திருச்சந்த விருத்தம்

1102

பிச்சச்‌ சிறு பீலிச்‌ சமண்‌ குண்டர்‌ முதலாயோர்‌ விச்சைக்கிறை என்னும்‌ அவ்விறையைப்‌ பணியாதே கச்சிக்‌ கிடந்தவனூர்‌ கடல்மல்லைத்‌ தலசயனம்‌ நச்சித்‌ தொழுவாரை நச்சு என்தன்‌ நல்நெஞ்சே!

பெரிய திருமொழி · 2-6. நண்ணாத

1854

கூந்தலார்‌ மகிழ்‌ கோவலனாய்‌ வெண்ணெய்‌ மாந்தழுந்தையில்‌ கண்டு மகிழ்ந்து போய்‌ பாந்தள்‌ பாழியில்‌ பள்ளி விரும்பிய வேந்தனைச்‌ சென்று காண்டும்‌ வெஃகாவுளே

பெரிய திருமொழி · 10-1. ஒருநல்சுற்றம்

2059॥

நீரகத்தாய்‌! நெடுவரையின்‌ உச்சி மேலாய்‌! நிலாத்திங்கள்‌ துண்டத்தாய்‌! நிறைந்த கச்சி ஊரகத்தாய்‌ ஒண்துறை நீர்‌ வெஃகா உள்ளாய்‌! உள்ளுவார்‌ உள்ளத்தாய்‌! உலகம்‌ ஏத்தும்‌ காரகத்தாய்‌! கார்வானத்துள்ளாய்‌! கள்வா! காமரு பூங்காவிரியின்‌ தென்பால்‌ மன்னு பேரகத்தாய்‌! பேராது என்‌ நெஞ்சின்‌ உள்ளாய்‌! பெருமான்‌! உன்‌ திருவடியே பேணினேனே

திருநெடுந்தாண்டகம் · திருநெடுந்தாண்டகம்

2064

கல்‌ எடுத்துக்‌ கல்மாரி காத்தாய்‌! என்றும்‌ காமரு பூங்கச்சி ஊரகத்தாய்‌! என்றும்‌ வில்‌ இறுத்து மெல்லியல்‌ தோள்‌ தோய்ந்தாய்‌! என்றும்‌ வெஃகாவில்‌ துயில்‌ அமர்ந்த வேந்தே! என்றும்‌ மல்‌ அடர்த்து மல்லரை அன்று அட்டாய்‌! என்றும்‌ மா கீண்ட கைத்தலத்து என்‌ மைந்தா! என்றும்‌ சொல்‌ எடுத்துத்‌ தன்‌ கிளியைச்‌ சொல்லே என்று துணை முலை மேல்‌ துளி சோரச்‌ சோர்கின்றாளே!

திருநெடுந்தாண்டகம் · திருநெடுந்தாண்டகம்

2065

முளைக்‌ கதிரைக்‌ குறுங்குடியுள்‌ முகிலை மூவா மூவுலகும்‌ கடந்து அப்பால்‌ முதலாய்‌ நின்ற ப அளப்பரிய ஆரமுதை அரங்கம்‌ மேய அந்தணனை அந்தணர்‌ தம்‌ சிந்தையானை விளக்கொளியை மரதகத்தைத்‌ திருத்தண்காவில்‌ வெஃகாவில்‌ திருமாலைப்‌ பாடக்‌ கேட்டு வளர்த்ததனால்‌ பயன்‌ பெற்றேன்‌ வருக என்று மடக்‌ கிளியைக்‌ கை கூப்பி வணங்கினாளே

திருநெடுந்தாண்டகம் · திருநெடுந்தாண்டகம்

2158

வேங்கடமும்‌ விண்ணகரும்‌ வெஃகாவும்‌ அஃகாத பூங்கிடங்கின்‌ நீள்கோவல்‌ பொன்னகரும்‌ - நான்கு இடத்தும்‌ நின்றான்‌ இருந்தான்‌ கிடந்தான்‌ நடந்தானே என்றால்‌ கெடுமாம்‌ இடர்‌

முதல் திருவந்தாதி · முதல் திருவந்தாதி

2307

சிறந்த என்‌ சிந்தையும்‌ செங்கண்‌ அரவும்‌ நிறைந்த சீர்‌ நீள்‌ கச்சி உள்ளும்‌ - உறைந்ததுவும்‌ வேங்கடமும்‌ வெஃகாவும்‌ வேளுக்கைப்‌ பாடியுமே தாம்‌ கடவார்‌ தண்துழாயார்‌

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2343

விண்ணகரம்‌ வெஃகா விரிதிரைநீர்‌ வேங்கடம்‌ மண்ணகரம்‌ மாமாட வேளுக்கை - மண்ணகத்த தென்‌ குடந்தை தேனார்‌ திருவரங்கம்‌ தென்கோட்டி தன்‌ குடங்கை நீர்‌ ஏற்றான்‌ தாழ்வு

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2345

இசைந்த அரவமும்‌ வெற்பும்‌ கடலும்‌ பசைந்தங்கமுது படூப்ப - அசைந்து கடைந்த வருத்தமோ? கச்சி வெஃகாவில்‌ கிடந்து இருந்து நின்றதுவும்‌ அங்கு?

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2357

பொருப்பிடையே நின்றும்‌ புனல்‌ குளித்தும்‌ ஐந்து நெருப்பிடையே நிற்கவும்‌ நீர்‌ வேண்டா - விருப்புடைய வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்‌ தூய்க்‌ கை தொழுதால்‌ அஃகாவே தீவினைகள்‌ ஆய்ந்து

மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி

2417

நாகத்தணைக்‌ குடந்தை வெஃகா திருவெவ்வுள்‌ நாகத்தணை அரங்கம்‌ பேரன்பில்‌ - நாகத்‌ தணைப்‌ பாற்கடல்‌ கிடக்கும்‌ ஆதி நெடுமால்‌ அணைப்பார்‌ கருத்தனாவான்‌

நான்முகன் திருவந்தாதி · நான்முகன் திருவந்தாதி

2503

நானிலம்‌ வாய்க்‌ கொண்டூ நன்னீர்‌ அறம்‌ என்று கோது கொண்ட வேேனிலம்‌ செல்வன்‌ சுவைத்துமிழ்‌ பாலை கடந்த பொன்னே! கால்நிலம்‌ தோய்ந்து விண்ணோர்‌ தொழும்‌ கண்ணன்‌ வெஃகாவுது அம்பூந்‌ தேனிளம்‌ சோலை அப்பாலது எப்பாலைக்கும்‌ சேமத்ததே

திருவிருத்தம் · திருவிருத்தம்

2673.36

மற்றெனக்கிங்கு ஆரானும்‌ கற்பிப்பார்‌ நாயகரே? - நான்‌ அவனைக்‌ காரார்‌ திருமேனி காணும்‌ அளவும்‌ போய்‌ சீரார்‌ திருவேங்கடமே திருக்கோவ லூரே - மதிட்கச்சி ஊரகமே பேரகமே பேரா மறுதிறுத்தான்‌ வெள்ளறையே வெஃகாவே பேராலி தண்கால்‌ நறையூர்‌ திருப்புலியூர்‌ ஆராமம்‌ சூழ்ந்த அரங்கம்‌ -

சிறிய திருமடல் · சிறிய திருமடல்

2674.70

வெஃகாவில்‌ உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்‌ அன்னவனை அட்டபுயகரத்து எம்மானேற்றை என்னை மனம்‌ கவர்ந்த ஈசனை -

பெரிய திருமடல் · பெரிய திருமடல்