பெண்ணாகி இன்னமுதம் வஞ்சித்தானைப் பிறை எயிற்று அன்று அடலரியாய்ப் பெருகினானை தண்ணார்ந்த வார்புனல் சூழ் மெய்யம் என்னும் தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி எண்ணானை எண்ணிறந்த புகழினானை இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன் கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே
திருமெய்யம்
Thirumeyyam · Pudukkottai, Pandya Nadu
- Perumal
- சத்யகிரிநாதன்
- Thaayar
- உய்யவந்த நாச்சியார்
- Mangalasasanam
- 10 pasurams
Verses sung here
பெரிய திருமொழி · 2-5. பாராயது
நிலையாளா! நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என் முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே? சிலையாளா! மரம் எய்த திறலாளா! திருமெய்ய மலையாளா! நீயாள வளையாள மாட்டோமே
பெரிய திருமொழி · 3-6. தூவிரிய
கலையாளா அகலல்குல் கனவளையும் கையாளா என் செய்கேன் நான்? விலையாளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ? என்னும் மெய்ய மலையாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் ஏழ் எய்த வென்றிச் சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே?
பெரிய திருமொழி · 5-5. வெருவாதாள்
கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை நட்டானை நாடி நறையூரில் கண்டேனே
பெரிய திருமொழி · 6-8. மான்கொண்ட
அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய் வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள் பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள் உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ?
பெரிய திருமொழி · 8-2. தெள்ளியீர்
சுடலையில் சுடூநீறன் அமர்ந்ததோர் நடலை தீர்த்தவனை நறையூர் கண்டு என் உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கியுண் விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துளே
பெரிய திருமொழி · 10-1. ஒருநல்சுற்றம்
மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும் கையானை கைதொழாக் கையல்ல கண்டாமே
பெரிய திருமொழி · 11-7. நீள்நாகம்
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரிதந்து உண்ணும் முண்டியான்! சாபம் தீர்த்த ஒருவன் ஊர் ர உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே?
திருக்குறுந்தாண்டகம் · திருக்குறுந்தாண்டகம்
முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டு அற்றாள் தன் நிறைவழிந்தாள்!! ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ! என்னும் பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடித் தண்குடந்தை நகரும் பாடி பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே
திருநெடுந்தாண்டகம் · திருநெடுந்தாண்டகம்
கோட்டியூர் அன்ன உருவின் அரியை திருமெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை மன்னும் மதிள் கச்சி வேளுக்கை ஆளரியை மன்னிய பாடகத்து எம் மைந்தனை -
பெரிய திருமடல் · பெரிய திருமடல்