உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்? தெருவெல்லாம் காவி கமழ் திருக்காட்கரை! மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே
திருக்காட்கரை
Thirukatkarai · Kerala, Malai Nadu
- Perumal
- வாமனப் பெருமாள்
- Thaayar
- வாத்சல்யதேவி
- Mangalasasanam
- 11 pasurams
Verses sung here
திருவாய்மொழி · 9-6. உருகுமால்
நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடுந்துகும் வினைகொள் சீர் பாடிலும் வேமெனது ஆருயிர் சுனைகொள் பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா! நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே
திருவாய்மொழி · 9-6. உருகுமால்
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிர் உண்டான் ர சீர்மல்கு சோலைத் தென்காட்கரை என்னப்பன் கார்முகில் வண்ணண் தன் கள்வம் அறிகிலேன்
திருவாய்மொழி · 9-6. உருகுமால்
அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் ர வெறிகமழ் சோலைத் தென்காட்கரை என்னப்பன் சிறிய என்னாருயிர் உண்ட திருவருளே
திருவாய்மொழி · 9-6. உருகுமால்
திருவருள் செய்பவன் போல என்னுள் புகுந்து உருவமும் ஆருயிரும் உடனே உண்டான் திருவளர் சோலைத் தென்காட்கரை என்னப்பன் கருவளர் மேனி என்! கண்ணன் கள்வங்களே
திருவாய்மொழி · 9-6. உருகுமால்
என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் அங்கண்ணன் உண்ட என் ஆருயிர்க்கோது இது புன்கண்மை எய்திப் புலம்பி இராப்பகல் என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே
திருவாய்மொழி · 9-6. உருகுமால்
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா! என்னும் வேட்கை நோய் கூர நினைந்து கரைந்துகும் ஆட்கொள் வானொத்து என்னுயிர் உண்ட மாயனால் கோட்குறை பட்டது என்னாருமிர் கோளுண்டே
திருவாய்மொழி · 9-6. உருகுமால்
கோளுண்டான் அன்றி வந்து என்னுயிர் தான் உண்டான் நாளுநாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான் காளநீர் மேகத் தென்காட்கரை என்னப்பற்கு ஆளன்றே பட்டது என்னாருயிர் பட்டதே
திருவாய்மொழி · 9-6. உருகுமால்
ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது? பேரிதழ்த் தாமரைக்கண் கனி வாயதோர் காரெழில் மேகத் தென்காட்கரை கோயில் கொள் சீரெழில் நால்தடந்தோள் தெய்வவாரிக்கே
திருவாய்மொழி · 9-6. உருகுமால்
வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே
திருவாய்மொழி · 9-6. உருகுமால்
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை கொடுமதிள் தென்குருகூர்ச் சடகோபன் சொல் வடிவமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம் முடிவெய்தி நாசங்கண்டீர்கள் எங்கானலே
திருவாய்மொழி · 9-6. உருகுமால்