மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசை இருந்த அக்காரக்கனியை அடைந்து உய்ந்து போனேனே
‹ Divya Desams
திருக்கடிகை
Thirukkadigai (Sholinghur) · Sholinghur, Thondai Nadu
- Perumal
- யோக நரசிம்மர்
- Thaayar
- அமிர்தவல்லி
- Mangalasasanam
- 4 pasurams
Verses sung here
1731॥
பெரிய திருமொழி · 8-9. கைம்மானம்
1736॥
கண்ணார் கண்ணபுரம் கடிகை கடி கமழும் தண்ணார் தாமரை சூழ் தலைச்சங்க மேல் திசையுள் விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ?
பெரிய திருமொழி · 8-9. கைம்மானம்
2342॥
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொன்டங்கு உறைவார்க்குக் கோயில் போல் - வண்டு வளங்கிளரும் நீள்சோலை வண்பூங்கடிகை இளங்குமரன் தன் விண்ணகர்
மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி
2673.37
கணமங்கை காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம் சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர் காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்
சிறிய திருமடல் · சிறிய திருமடல்