ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார் நாடூவார் நம்பிரான் எங்குத்தான் என்பார் பாடூவார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே
திரு ஆய்ப்பாடி
Thiru Aypadi (Gokul) · Uttar Pradesh, Vada Nadu
- Perumal
- நவமோகன கிருஷ்ணன்
- Thaayar
- ருக்மிணி, சத்யபாமா
- Mangalasasanam
- 18 pasurams
Verses sung here
பெரியாழ்வார் திருமொழி · 1-1. வண்ண மாடங்கள்
உறியை முற்றத்து உருட்டி நின்றாடூவார் நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார் செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே
பெரியாழ்வார் திருமொழி · 1-1. வண்ண மாடங்கள்
தீயபுந்திக் கஞ்சன் உன்மேல் சினமுடையன் சோர்வு பார்த்து மாயன் தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா ஆயர்பாடிக்கு அணிவிளக்கே அமர்ந்து வந்து என் முலையுணாயே
பெரியாழ்வார் திருமொழி · 2-2. அரவணையாய்
முலையேதும் வேண்டேன் என்றோடி நின் காதில் கடிப்பைப் பறித்தெறிந்திட்டு மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய் ர சிலையொன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திருவாயர்பாடிப் பிரானே தலைநிலாப்போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமேயன்றே
பெரியாழ்வார் திருமொழி · 2-3. போய்ப்பாடு
தாய்மார் மோர்விற்கப் போவர் தமப்பன்மார் கற்றா நிறைப் பின்பு போவர் நீ ஆய்ப்பாடி இளங்கன்னிமார்களை நேர் படவே கொண்டு போதி காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பெரியாழ்வார் திருமொழி · 3-1. தன்னேராயிரம்
விண்ணின் மீது அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து ஆயர்பாடியில் வீதியூடே கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம் வண்டமர் பொழில் புதுவையர் கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் பண் இன்பம் வரப்பாடும் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே
பெரியாழ்வார் திருமொழி · 3-4. தழைகளும்
புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து அவையுள் நாகத்தணையான் குழல் ஊத அமர லோகத்தளவும் சென்றிசைப்ப அவியுணா மறந்து வானவரெல்லாம் ஆயர்பாடி நிறையப் புகுந்து ஈண்டி செவியுணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே
பெரியாழ்வார் திருமொழி · 3-6. நாவலம்
மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி, யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
திருப்பாவை · திருப்பாவை
நாணி இனியோர் கருமம் இல்லை நாலயலாரும் அறிந்தொழிந்தார் பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டாக்க உறுதிராகில் மாணி உருவாய் உலகளந்த மாயனைக் காணில் தலைமறியும் ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடூமின்
நாச்சியார் திருமொழி · 12. மற்றிருந்தீர்
ஆரே உலகத்து ஆற்றுவார் ஆயர்பாடி கவர்ந்துண்ணும் காரேறுழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயில் ஊறிய நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே
நாச்சியார் திருமொழி · 13. கண்ணனென்னும்
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணிவிளக்கை வில்லி புதுவை நதஅர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கையுற்று மிக விரும்பும் சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளளாரே
நாச்சியார் திருமொழி · 13. கண்ணனென்னும்
அனுங்க என்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே கணங்களோடு மின்மேகம் கலந்தாற் போல வனமாலை மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
நாச்சியார் திருமொழி · 14. பட்டி மேய்ந்து
பூண் முலை மேல் சாந்தணியாள் பொருகயல் கண் மை எழுதாள் பூவை பேணாள் ஏணறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே ? என்னும் நாண்மலராள் நாயகனாய் நாமறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி ஆண்மகனாய் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர்! அறிகிலேனே
பெரிய திருமொழி · 5-5. வெருவாதாள்
அம்பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள் கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் ர் செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப்பேருள் மேவும் எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே!
பெரிய திருமொழி · 5-9. கையிலங்கு
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ! நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான்முகற்குத் தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே!
பெரிய திருமொழி · 11-5. மானமரும்
ஆழ்கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித் தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ! தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு இவ் வேழுலகும் உண்டும் இடமுடைத்தால் சாழலே!
பெரிய திருமொழி · 11-5. மானமரும்
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உறியார் நறுவெண்ணெய் உண்டுகந்தான் காணேடீ! ர் உறியார் நறுவெண்ணெய் உண்டுகந்த பொன் வயிற்றுக்கு எறிநீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே!
பெரிய திருமொழி · 11-5. மானமரும்
ஆழி நீர் ஆரால் கடைந்திடப்பட்டது? - அவன் காண்மின் ஊராநிரை மேய்த்து உலகெல்லாம் உண்டுமிழ்ந்தும் ஆராத தன்மையனாய் ஆங்கொரு நாள் ஆய்ப்பாடி சீரார் கலை அல்குல் சீரடிச் செந்துவர் வாய் வாரார் வன முலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய் சீரார் தயிர் கடைந்து வெண்ணை திரண்டதணை வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டூ நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்ததனை போரார் வேற்கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம் ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கை நீட்டி ஆராத வெண்ணெய் விழுங்கி -
சிறிய திருமடல் · சிறிய திருமடல்