Skip to the text
‹ Divya Desams

ஸ்ரீவில்லிபுத்தூர்

Srivilliputtur · Virudhunagar, Pandya Nadu

Perumal
வடபத்ரசாயி
Thaayar
ஆண்டாள்
Mangalasasanam
2 pasurams

Verses sung here

133

மின்னனைய நுண்ணிடையார்‌ விரிகுழல்‌ மேல்‌ நுழைந்த வண்டு இன்னிசைக்கும்‌ வில்லிபுத்தூர்‌ இனிதமர்ந்தாய்‌ உன்னைக்‌ கண்டார்‌ என்ன நோன்பு நோற்றாள்‌ கொலோ இவனைப்‌ பெற்ற வயிறுடையாள்‌ என்னும்‌ வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலையுணாயே

பெரியாழ்வார் திருமொழி · 2-2. அரவணையாய்

549॥

மென்னடை அன்னம்‌ பரந்து விளையாடும்‌ வில்லிபுத்தூர்‌ உறைவான்‌ தன்‌ பொன்னடி காண்பதோர்‌ ஆசையினால்‌ என்‌ பொருகயற்‌ கண்ணிணை துஞ்சா இன்னடிசிலொடு பாலழுதூட்டி எடுத்த என்‌ கோலக்‌ கிளியை உன்னொடு தோழமை கொள்ளுவன்‌ குயிலே உலகளந்தான்‌ வரக்‌ கூவாய்‌

நாச்சியார் திருமொழி · 5. மன்னு பெரும்புகழ்