Skip to the text
‹ Divya Desams

ஸ்ரீவைகுந்தம்

Srivaikuntam · Thoothukudi, Pandya Nadu

Perumal
வைகுண்டநாதன்
Thaayar
வைகுண்டவல்லி
Mangalasasanam
2 pasurams

Verses sung here

3571

புளிங்குடிக்‌ கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள்‌ நின்று தெளிந்த என்‌ சிந்தை அகங்கழியாதே என்னை ஆள்வாய்‌! எனக்கருளி ர நளிர்ந்த சீருலகம்‌ மூன்றுடன்‌ வியப்ப நாங்கள்‌ கூத்தாடி நின்றார்ப்ப பளிங்கு நீர்முகிலின்பவளம்‌ போல்‌ கனிவாய்‌ சிவப்ப நீ காண வாராயே

திருவாய்மொழி · 9-2. பண்டைநாளாலே

3575

எங்கள்‌ கண்முகப்பே உலகர்கள்‌ எல்லாம்‌ இணையடி தொழுதெழுது இறைஞ்சி தங்கள்‌ அன்பாரத்‌ தமது சொல்‌ வலத்தால்‌ தலைத்தலைச்‌ சிறந்து பூசிப்ப திங்கள்‌ சேர்‌ மாடத்‌ திருப்புளிங்குடியாய்‌! திருவைகுந்தத்துள்ளாய்‌! தேவா! இங்கண்மா ஞாலத்து இதனுளும்‌ ஒரு நாள்‌ இருந்திடாய்‌ வீற்றிடங்கொண்டே

திருவாய்மொழி · 9-2. பண்டைநாளாலே