வண்டார் பூ மாமலர் மங்கை மண நோக்கம் உண்டானே! உன்னை உகந்து உகந்து உன்தனக்கே தொண்டானேற்கு என் செய்கின்றாய்? சொல்லு நால் வேதம் கண்டானே! கண்ணபுறத்துறை அம்மானே!
8-10. வண்டார்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"உன்னை உகந்து உகந்து உன் தனக்கே தொண்டானேன்" — உன்னை விரும்பி விரும்பி உனக்கே அடிமையானேன் என்று ஆழ்வார் சொல்லும் பதிகம். கடமையால் அல்ல, விருப்பத்தால் வந்த அடிமை என்பதை "உகந்து" என்ற சொல் இருமுறை வலியுறுத்துகிறது. எட்டாம் பத்து இந்த மகிழ்ச்சியான ஒப்படைப்புடன் நிறைவடைகிறது.
பெரிய திருமொழி 8-10 - வண்டார் (திருக்கண்ணபுரம் 10)
பெருநீரும் விண்ணும் மலையும் உலகேழும் ஒருதாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை அல்லால் வருதேவர் மற்றுளர் என்று என் மனத்து இறையும் கருதேன் நான் கண்ணபுரத்துறை அம்மானே!
மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்றெல்லம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் கண்ணபுரத்துறை அம்மானே!
பெண்ணானாள் பேரிளம் கொங்கையினார் அழல் போல் உண்ணா நஞ்சுண்டு உகந்தாயை உகந்தேன் நான் மண்ணாளா! வாள் நெடூங்கண்ணி மதுமலராள் கண்ணாளா! கண்ணபுரத்துறை அம்மானே!
பெற்றாரும் சுற்றமும் என்றிவை பேணேன் நான் மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின்னடைந்தேன் ர உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள் செய் கண்டாய் கற்றார் சேர் கண்ணபுரத்துறை அம்மானே!
ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரை பார்த்திருந்து அங்கு நமன் தமர் பற்றாது சோத்த நாம் அஞ்சுதும் என்று தொடாமை நீ காத்தி போல் கண்ணபுரத்துறை அம்மானே!
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல் துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே! வள்ளலே! உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் கண்ணபுரத்துறை அம்மானே!
மாணாகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்திருந்தேன் பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும் காணேன் நான் கண்ணபுரத்துறை அம்மானே!
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ணபுரத்துறை அம்மானே!
கண்ட சீர்க் கண்ணபுரத்துறை அம்மானை கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும் அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அதறிந்தோமே
அடிவரவு: வண்டார் பெரு மற்று பெண் பெற்றார் ஏத்தி வெள்ளை மாண் நாட்டினாய் கண்டசீர் வங்கம்