Skip to the text
திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழி தனியன்கள்

பெரியாழ்வார் · முதலாயிரம்

நாதமுனிகள்‌ அருளிச்‌ செய்தது

குருமுகம்‌ அநதீத்ய ப்ராஹ வேதாந்‌ அசேஷாந்‌ நரபதி பரிக்லுப்தம்‌ சுல்கம்‌ ஆதாதுகாம: ச்வசுரம்‌ அமரவந்த்யம்‌ ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்‌ த்விஜ குல திலகம்‌ தம்‌ விஷ்ணுசித்தம்‌ நமாமி

பாண்டியபட்டர்‌ அருளிச்‌ செய்தவை

மின்னார்‌ தடமதிள்‌ சூழ்‌ வில்லிபுத்தூர்‌ என்று ஒருகால்‌ சொன்னார்‌ கழற்கமலம்‌ சூடினோம்‌ - முன்னாள்‌ கிழி அறுத்தான்‌ என்று உரைத்தோம்‌ கீழ்மையினிற்‌ சேரும்‌ வழி அறுத்தோம்‌ நெஞ்சமே வந்து பாண்டியன்‌ கொண்டாடப்‌ பட்டர்பிரான்‌ வந்தான்‌ என்று ஈண்டிய சங்கம்‌ எடுத்து ஊத - வேண்டிய வேதங்கள்‌ ஓதி விரைந்து கிழி அறுத்தான்‌ பாதங்கள்‌ யாமுடைய பற்று