Skip to the text
திருவாய்மொழி

8-5. மாயக்கூத்தா

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"மாயக் கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா!" — கண், கை, கால் அனைத்தும் தூய செந்தாமரை மலர்களாக விளங்குபவனை விளிக்கும் பதிகம். ஒவ்வொரு அங்கத்தையும் மலராகக் காணும் பார்வை இது. உடலை உருவகமாக்குவதன் மூலம் அதன் மென்மையை ஆழ்வார் சொல்கிறார்.

திருவாய்மொழி 8-5 மாயக்கூத்தா

3491

மாயக்கூத்தா! வாமனா! வினையேன்‌ கண்ணா! கண்‌ கை கால்‌ தூய செய்ய மலர்களாச்‌ சோதிச்‌ செவ்வாய்‌ முகிழதா சாயல்‌ சாமத்‌ திருமேனி தண்பாசடையா தாமரை நீள்‌ வாசத்‌ தடம்‌ போல்‌ வருவானே! ஒருநாள்‌ காண வாராயே

3492

காண வாராய்‌ என்றென்று கண்ணும்‌ வாயும்‌ துவர்ந்து அடியேன்‌ நாணி நன்னாட்டு அலமந்தால்‌ இரங்கி ஒருநாள்‌ நீ அந்தோ! காண வாராய்‌ கருநாயிறுதிக்கும்‌ கருமா மாணிக்க!!! நாள்‌ நல்மலை போல்‌ சுடர்ச்‌ சோதி முடிசேர்‌ சென்னி அம்மானே!

3493

முடிசேர்‌ சென்னியம்மா! நின்‌ மொய்பூந்தாமத்‌ தண்துழாய்‌ கடிசேர்‌ கண்ணிப்‌ பெருமானே! என்றென்று ஏங்கி அழுதக்கால்‌ ர படிசேர்‌ மகரக்‌ குழைகளும்‌ பவளவாயும்‌ நால்தோளும்‌ துடிசேர்‌ இடையும்‌ அமைந்ததோர்‌ தூநீர்‌ முகில்‌ போல்‌ தோன்றாயே 3 !! மாணிக்கம்‌

3494

தூநீர்‌ முகில்‌ போல்‌ தோன்றும்‌ நின்‌ சுடர்கொள்‌ வடிவும்‌ கனிவாயும்‌ தேநீர்க்‌ கமலக்‌ கண்களும்‌ வந்து என்‌ சிந்தை நிறைந்தவா! ர மாநீர்‌ வெள்ளீமலை தன்மேல்‌ வண்கார்‌ நீலமுகில்‌ போல தூநீர்க்‌ கடலுள்‌ துயில்வானே! எந்தாய்‌! சொல்ல மாட்டேனே

3495

சொல்ல மாட்டேன்‌ அடியேன்‌ உன்‌ துளங்கு சோதித்‌ திருப்பாதம்‌ எல்லையில்‌ சீர்‌ இளஞாயிறு இரண்டு போல்‌ என்னுள்ளவா! அல்லல்‌ என்னும்‌ இருள்‌ சேர்தற்கு உபாயம்‌ என்னே? ஆழி சூழ்‌ மல்லை! ஞாலம்‌ முழுதுண்ட மாநீர்க்‌ கொண்டல்‌ வண்ணனே!

3496

கொண்டல்‌ வண்ணா! குடக்கூத்தா! வினையேன்‌ கண்ணா! கண்ணா என்‌ அண்டவாணா! என்று என்னை ஆளக்‌ கூப்பிட்டு அழைத்தக்கால்‌ விண்‌ தன்மேல்‌ தான்‌ மண்மேல்‌ தான்‌ விரிநீர்க்‌ கடல்‌ தான்‌ மற்றுத்‌ தான்‌ தொண்டனேன்‌ உன்‌ கழல்‌ காண ஒருநாள்‌ வந்து தோன்றாயே

3497

வந்து தோன்றாய்‌ அன்றேல்‌ உன்‌ வையம்‌ தாய மலரடிக்‌ கீழ்‌ முந்தி வந்து யான்‌ நிற்ப முகப்பே கூவிப்‌ பணி கொள்ளாய்‌ செந்தண்கமலக்‌ கண்‌ கை கால்‌ சிவந்த வாயோர்‌ கருநாயிறு அந்தமில்லாக்‌ கதிர்‌ பரப்பி அலர்ந்ததொக்கும்‌ அம்மானே!

3498

ஒக்கும்‌ அம்மான்‌ உருவம்‌ என்று உள்ளம்‌ குழைந்து நாணாளும்‌ தொக்கமே கப்பல்‌ குழாங்கள்‌ காணும்‌ தோறும்‌ தொலைவன்‌ நான்‌ தக்க ஐவர்‌ தமக்காய்‌ அன்று ஈரைம்பதின்மர்‌ தாள்‌ சாய புக்க நல்தேர்த்‌ தனிப்‌ பாகா! வாராய்‌ இதுவோ பொருத்தமே?

3499

இதுவோ பொருத்தம்‌? மின்னாழிப்‌ படையாய்‌! ஏறும்‌ இருஞ்சிறைப்புள்‌ அதுவே கொடுயா உயர்த்தானே! என்றென்று ஏங்கி அழுதக்கால்‌ ர எதுவேயாகக்‌ கருதுங்கொல்‌? இம்மாஞாலம்‌ பொறை தீர்ப்பான்‌ மதுவார்‌ சோலை உத்தர மதுரைப்‌ பிறந்த மாயனே

3500

பிறந்த மாயா! பாரதம்‌ பொருத மாயா! நீ இன்னே சிறந்த கால்‌ தீ நீர்‌ வான்‌ மண்‌ பிறவுமாய பெருமானே! கறந்த பாலுள்‌ நெய்யே போல்‌ இவற்றுள்‌ எங்கும்‌ கண்டுகொள்‌! இறந்து நின்ற பெருமாயா! உன்னை எங்கே காண்கேனே?

3501

எங்கே காண்கேன்‌! ஈன்துழாய்‌ அம்மான்‌ தன்னை யான்‌? என்றென்று அங்கே தாழ்ந்த சொற்களால்‌ அந்தண்குருகூர்ச்‌ சடகோபன்‌ செங்கேழ்‌ சொன்ன ஆயிரத்துள்‌ இவையும்‌ பத்தும்‌ வல்லார்கள்‌ இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர்‌ எல்லியும்‌ காலையே