திருவாய்மொழி 5-10 பிறந்தவாறும்
5-10. பிறந்தவாறும்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"பிறந்தவாறும், வளர்ந்தவாறும், பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியது" — பிறந்த விதமும், வளர்ந்த விதமும், பாரதப் போரை நடத்தி ஐவருக்கு வழி காட்டியதும் என அவனுடைய வாழ்க்கையை வரிசைப்படுத்தும் பதிகம். ஒரு வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் முறை இது. ஐந்தாம் பத்து இந்நினைவுகளுடன் நிறைவடைகிறது.
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டூச் செய்து போன மாயங்களும் நிறந்தனூடு புக்கு எனதாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற இச் சிறந்த வான்சுடரே! உன்னை என்று கொல் சேர்வதுவே?
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்ததும் மதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும் அதுவிதுவுது என்னலாவன வல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் முதுவைய முதல்வா! உன்னை என்று தலைப்பெய்வனே?
பெய்யும் பூங்குழல் பேய்முலை உண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தோர் சாடிறச் செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புறம் புக்கவாறும் கலந்து அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டூ உயிருண்ட உபாயங்களும் ர வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும் வண்ண மால்வரையை எடுத்து மழை காத்ததும் மண்ணை முன் படைத்து உண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள் எண்ணும் தோறும் என்னெஞ்சு எரிவாய் மெழுகொக்கும் நின்றே
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள் நின்று நின்று நினைகின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு ஒன்று நன்குரையாய் உலகம் உண்ட ஒண்சுடரே!
ஒண்சுடரோடு இருளுமாய் நின்றவாறும் உண்மையோடு இன்மையாய் வந்து என் கண்கொளா வகை நீ கரந்து என்னைச் செய்கின்றன எண்கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண்கட்குத் திண்கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திருவுருவே
திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள் விற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் பொருவில் உன் தனி நாயகமவை கேட்கும் தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே?
அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்று ஆழ்கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும் நொடியுமாறவை கேட்கும் தோறும் என் நெஞ்சம் நின்தனக்கே கரைந்துகும் கொடுய வல்வினையேன் உன்னை என்று கொல் கூடுவதே?
கூடு நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் ஊடு புக்கு எனதாவியை உருக்கி உண்டுடுகின்ற நின்தன்னை நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாள்தொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன் ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே