Skip to the text
சிறிய திருமடல்

சிறிய திருமடல்

திருமங்கையாழ்வார் · இயற்பா

Essence of this decad

திருமங்கையாழ்வார் அருளிய ஒற்றைத் தொடர்ப் பாடல். மடல் ஊர்தல் என்னும் பழந்தமிழ் மரபில் — காதல் நிறைவேறாதபோது தலைவன் ஊரறியத் தன் காதலை வெளிப்படுத்தும் முறையில் — அமைந்தது. இங்கே தலைவியாக நின்று ஆழ்வார் இறைவனிடம் தன் காதலை ஊரறியச் சொல்லத் துணிகிறார். தனிமையின் எல்லையில் வெட்கத்தை விட்டுவிடும் நிலை இது.

2673.1

காரார்‌ வரைக்‌ கொங்கை கண்ணார்‌ கடல்‌ உடூக்கை சீரர்‌ சுடர்‌ சுட்டி செங்கலுழிப்‌ பேராற்று பேரார மார்பின்‌ பெருமா மழைக்‌ கூந்தல்‌ நீரார வேலி நில மங்கை என்னும்‌ இப்‌ பாரோர்‌ சொலப்பட்ட மூன்றன்றே -

2673.2

அம்மூன்றும்‌ ஆராயில்‌ தானே அறம்‌ பொருள்‌ இன்பம்‌ என்று ஆரார்‌ இவற்றின்‌ இடை அதனை எய்துவார்‌ சீரார்‌ இரு கலையும்‌ எய்துவர்‌ -

2673.3

சிக்கென மற்று ஆரானும்‌ உண்டென்பார்‌ என்பது தான்‌ அதுவும்‌ ஒராமை அன்றே? உலகத்தார்‌ சொல்லும்‌ சொல்‌ ஒராமை ஆமாறு அது உரைக்கேன்‌ கேளாமே''! காரார்‌ புரவி ஏழ்‌ பூண்ட தனி ஆழி தேரார்‌ நிறை கதிரோன்‌ மண்டலத்தைக்‌ கீண்டு புக்கு ஆரா அமுதம்‌ அங்கெய்தி -

2673.4

அதில்‌ நின்றும்‌ வாரதொழிவதொன்றுண்டே? அது நிற்க ஏரார்‌ முயல்‌ விட்டுக்‌ காக்கைப்‌ பின்‌ போவதே? எரார்‌ இள முலையீர்‌ என்தனக்கு உற்றது தான்‌ காரார்‌ குழல்‌ எடுத்துக்‌ கட்டி -

2673.5

கதிர்‌ முலையை வாரார வீக்கி மணிமேகலை திருத்தி ஆரார்‌ அயில்‌ வேற்கண்‌ அஞ்சனத்தின்‌ நீறணிந்து சீரார்‌ செழும்‌ பந்து கொண்டடியா நின்றேன்‌ நான்‌ நீரார்‌ கமலம்‌ போல்‌ செங்கண்‌ மால்‌ என்றொருவன்‌ பாரோர்கள்‌ எல்லாம்‌ மகிழப்‌ பறை கறங்க சீரார்‌ குடம்‌ இரண்டேந்தி -

2673.6

செழுந்தெருவே ஆரார்‌ எனச்‌ சொல்லி ஆடூம்‌ அது கண்டு ஏரார்‌ இளமுலையார்‌ என்னையரும்‌ எல்லாரும்‌ வாராயோ என்றார்க்குச்‌ சென்றேன்‌ என்‌ வல்வினையால்‌ காரார்‌ மணி நிறமும்‌ கைவளையும்‌ காணேன்‌ நான்‌ ஆரானும்‌ சொல்லிற்றும்‌ கொள்ளேன்‌ -

2673.7

அறிவழிந்து தீரா உடம்பொடு பேதுறுவேன்‌ கண்டிரங்கி ஏரார்‌ கிளிக்‌ கிளவி எம்மனை தான்‌ வந்தென்னை சீரார்‌ செழும்‌ புழுதிக்‌ காப்பிட்டு -

2673.8

செங்குறிஞ்சித்‌ தாரார்‌ நறுமாலை சாத்தற்கு தான்‌ பின்னும்‌ நேராதன ஒன்று நேர்ந்தாள்‌ -

2673.9

அதனாலும்‌ தீராது என்‌ சிந்தை நோய்‌ தீராது என்‌ பேதுறவு வாராது மாமை அது கண்டூ மற்றாங்கே ஆரானும்‌ மூதறியும்‌ அம்மனைமார்‌ சொல்லுவார்‌ பாரோர்‌ சொலப்படூம்‌ கட்டூப்படுத்திரேல்‌ ஆரானும்‌ மெய்ப்படூவன்‌ என்றார்‌ -

2673.10

அது கேட்டூக்‌ காரார்‌ குழற்‌ கொண்டைக்‌ கட்டுவிச்சி கட்டேறி சீரார்‌ சுளகில்‌ சில நெல்‌ பிடித்தெறியா 2?! ககேளாமோ வேரா விதிர்‌ விதிரா மெய்‌ சிலிராக்‌ கை மோவா பேர்‌ ஆயிரம்‌ உடையான்‌ என்றாள்‌ -

2673.11

பேர்த்தேயும்‌ காரார்‌ திருமேனி காட்டினாள்‌ கை அதுவும்‌ சீரார்‌ வலம்புரியே என்றாள்‌ -

2673.12

திருத்துழாய்த்‌ தாரார்‌ நறுமாலை கட்டூரைத்தாள்‌ கட்டுரையா நீரேதும்‌ அஞ்சேன்மின்‌ நும்களை நோய்‌ செய்தான்‌ ஆரானும்‌ அல்லன்‌ அறிந்தேன்‌ அவனை நான்‌ கூரார்‌ வேற்கண்ணீர்‌! உமக்கறியக்‌ கூறுகேனோ? ஆரால்‌ இவ்வையம்‌ அடி அளப்புண்டது தான்‌? ஆரால்‌ இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது? - மற்று ஆராலே கன்மாரி காத்தது தான்‌? -

2673.13

ஆழி நீர்‌ ஆரால்‌ கடைந்திடப்பட்டது? - அவன்‌ காண்மின்‌ ஊராநிரை மேய்த்து உலகெல்லாம்‌ உண்டுமிழ்ந்தும்‌ ஆராத தன்மையனாய்‌ ஆங்கொரு நாள்‌ ஆய்ப்பாடி சீரார்‌ கலை அல்குல்‌ சீரடிச்‌ செந்துவர்‌ வாய்‌ வாரார்‌ வன முலையாள்‌ மத்தாரப்‌ பற்றிக்‌ கொண்டு ஏரார்‌ இடை நோவ எத்தனையோர்‌ போதுமாய்‌ சீரார்‌ தயிர்‌ கடைந்து வெண்ணை திரண்டதணை வேரார்‌ நுதல்‌ மடவாள்‌ வேறோர்‌ கலத்திட்டூ நாரார்‌ உறி ஏற்றி நன்கமைய வைத்ததனை போரார்‌ வேற்கண்‌ மடவாள்‌ போந்தனையும்‌ பொய்‌ உறக்கம்‌ ஓராதவன்‌ போல்‌ உறங்கி அறிவுற்று தாரார்‌ தடந்தோள்கள்‌ உள்ளளவும்‌ கை நீட்டி ஆராத வெண்ணெய்‌ விழுங்கி -

2673.14

அருகிருந்த மோரார்‌ குடம்‌ உருட்டி முன்‌ கிடந்த தானத்தே ஓராதவன்‌ போல்‌ கிடந்தானைக்‌ கண்டவளும்‌ வாராத்‌ தான்‌ வைத்தது காணாள்‌ -

2673.15

வயிறடித்து இங்கு ஆரார்‌ புகுதுவார்‌? ஐயர்‌ இவர்‌ அல்லால்‌ நீராம்‌ இது செய்தீர்‌ என்றோர்‌ நெடூங்கயிற்றால்‌ ஊரார்கள்‌ எல்லாரும்‌ காண உரலோடே தீரா வெகுளியளாய்ச்‌ சிக்கென வார்த்தடிப்ப ஆரா வயிற்றினோடூ ஆற்றாதான்‌ -

2673.16

அன்றியும்‌ நீரார்‌ நெடுங்கயத்தை சென்றலைக்க நின்றுரப்பி ஒராயிரம்‌ பண வெங்கோவியல்‌ நாகத்தை வாராய்‌ எனக்கென்று மற்றதன்‌ மத்தகத்து சீரார்‌ திருவடியால்‌ பாய்ந்தான்‌ -

2673.17

தன்‌ சீதைக்கு நேராவன்‌ என்றோர்‌ நிசாசரி தான்‌ வந்தாளை கூரார்ந்த வாளால்‌ கொடி மூக்கும்‌ காதிரண்டும்‌ ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை -

2673.18

வெந்நரகம்‌ சேரா வகையே சிலை குனித்தான்‌ செந்துவர்‌ வாய்‌ வாரார்‌ வன முலையாள்‌ வைதேவி காரணமா எரார்‌ தடந்தோள்‌ இராவணனை -

2673.19

ஈரைந்து சீரார்‌ சிரம்‌ அறுத்துச்‌ செற்றுகந்த செங்கண்மால்‌ போரார்‌ நெடுவேலோன்‌ பொன்பெயரோன்‌ ஆகத்தை கூரார்ந்த வள்ளுகிரால்‌ கீண்டு -

2673.20

குடல்‌ மாலை சீரார்‌ திருமார்பின்‌ மேல்‌ கட்டி செங்குருதி சோராக்‌ கிடந்தானைக்‌ குங்குமத்‌ தோள்‌ கொட்டி ஆர எழுந்தான்‌ அரி உருவாய்‌ -

2673.21

அன்றியும்‌ பேர்‌ வாமனனாகிய' காலத்து மூவடி மண்‌ தாராய்‌ எனக்கென்று வேண்டிச்‌ சலத்தினால்‌ நீரேற்று உலகெல்லாம்‌ நின்றளந்தான்‌ மாவலியை

2673.22

ஆராத போரில்‌ அசுரர்களும்‌ தானுமாய்‌ காரார்‌ வரை நட்டூ நாகம்‌ கயிறாக பேராமல்‌ தாங்கிக்‌ கடைந்தான்‌ -

2673.23

திருத்துழாய்‌ தாரார்ந்த மார்வன்‌ தட மால்‌ வரை போலும்‌ போரானை பொய்கை வாய்‌ கோட்பட்டு நின்றலறி நீரார்‌ மலர்க்‌ கமலம்‌ கொண்டோர்‌ நெடூங்கையால்‌ நாராயணா! ஓ! மணிவண்ணா! நாகணையாய்‌! வாராய்‌ என்‌ ஆரிடரை நீக்காய்‌ -

2673.24

என வெகுண்டூ தீராத சீற்றத்தால்‌ சென்றிரண்டு கூறாக ஈரா அதனை இடர்‌ கடிந்தான்‌ எம்பெருமான்‌ பேர்‌ ஆயிரம்‌ உடையான்‌ பேய்ப்‌ பெண்டீர்‌! நும்‌ மகளை தீரா நோய்‌ செய்தான்‌ என உரைத்தாள்‌ -

2673.25

சிக்கென மற்று ஆரானும்‌ அல்லாமை கேட்டெங்கள்‌ அம்மனையும்‌ போரார்‌ வேற்கண்ணீர்‌! அவனாகில்‌ பூந்துழாய்‌ தாராதொழியுமே? தன்‌ அடிச்சி அல்லளே? - மற்று ஆரானும்‌ அல்லனே என்றொழிந்தாள்‌ -

2673.26

நான்‌ அவனைக்‌ காரார்‌ திருமேனி கண்டதுவே காரணமா பேராப்‌ பிதற்றாத்‌ திரிதருவன்‌ -

2673.27

பின்னையும்‌ ஈராப்‌ புகுதலும்‌ இவ்வுடலைத்‌ தண்‌ வாடை சோரா மறுக்கும்‌ வகை அறியேன்‌ -

2673.28

சூழ்‌ குழலார்‌ ஆரானும்‌ ஏசுவர்‌ என்னுமதன்‌ பழியை வாராமல்‌ காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்‌ வாராய்‌ மட நெஞ்சே! வந்து -

2673.29

மணி வண்ணன்‌ சீரார்‌ திருத்‌ துழாய்‌ மாலை நமக்கருளி தாரான்‌ தரும்‌ என்று இரண்டத்தில்‌ ஒன்றதனை ஆரானும்‌ ஒன்னாதார்‌ கேளாமே சொன்னக்கால்‌ ஆராயுமேலும்‌ பணி கேட்டு அதன்றெனிலும்‌ போராதொழியாதே போந்திடூ நீ என்றேற்கு காரார்‌ கடல்‌ வண்ணன்‌ பின்‌ போன நெஞ்சமும்‌ வாராதே என்னை மறந்தது தான்‌ -

2673.30

வல்வினையேன்‌ ஊரார்‌ உகப்பதே ஆயினேன்‌ -

2673.31

மற்றெனக்கிங்கு ஆராய்வார்‌ இல்லை அழல்‌ வாய்‌ மெழுகு போல்‌ நீராய்‌ உருகும்‌ என்‌ ஆவி -

2673.32

நெடூங்‌ கண்கள்‌ 1? வாமனாகிய / வாமனனாய ஊரார்‌ உறங்கிலும்‌ தான்‌ உறங்கா - உத்தமன்‌ தன்‌ பேராயினவே பிதற்றுவன்‌ -

2673.33

பின்னையும்‌ காரார்‌ கடல்‌ போலும்‌ காமத்தர்‌ ஆயினார்‌ ஆரே பொல்லாமை அறிவார்‌? அது நிற்க

2673.34

ஆரானும்‌ ஆதானும்‌ அல்லள்‌ அவள்‌ காணீர்‌ வாரார்‌ வனமுலை வாசவதத்தை என்று ஆரானும்‌ சொல்லப்படுவாள்‌ -

2673.35

அவளும்‌ தன்‌ பேராயம்‌ எல்லாம்‌ ஒழியப்‌ பெருந்தெருவே தாரார்‌ தடந்தோள்‌ தளைக்‌ காலன்‌ பின்‌ போனாள்‌ ஊரார்‌ இகழ்ந்திடப்பட்டாளே? -

2673.36

மற்றெனக்கிங்கு ஆரானும்‌ கற்பிப்பார்‌ நாயகரே? - நான்‌ அவனைக்‌ காரார்‌ திருமேனி காணும்‌ அளவும்‌ போய்‌ சீரார்‌ திருவேங்கடமே திருக்கோவ லூரே - மதிட்கச்சி ஊரகமே பேரகமே பேரா மறுதிறுத்தான்‌ வெள்ளறையே வெஃகாவே பேராலி தண்கால்‌ நறையூர்‌ திருப்புலியூர்‌ ஆராமம்‌ சூழ்ந்த அரங்கம்‌ -

2673.37

கணமங்கை காரார்‌ மணி நிறக்‌ கண்ணனூர்‌ விண்ணகரம்‌ சீரார்‌ கணபுரம்‌ சேறை திருவழுந்தூர்‌ காரார்‌ குடந்தை கடிகை கடல்‌ மல்லை ஏரார்‌ பொழில்‌ சூழ்‌ இடவெந்தை நீர்மலை சீராரும்‌ மாலிருஞ்சோலை திருமோகூர்‌

2673.38

பாரோர்‌ புகழும்‌ வதரி வட மதுரை ஊராயவெல்லாம்‌ ஒழியாமே நான்‌ அவனை ஓரானை கொம்பொசித்து ஓரானை கோள்‌ விடூத்த சீரானை - செங்கண்‌ நெடியானைத்‌ தேன்‌ துழாய்த்‌ தாரானை - தாமரை போல்‌ கண்ணானை

2673.39

எண்ணருஞ்சீர்‌ பேர்‌ ஆயிரமும்‌ பிதற்றி -

2673.40

பெருந்தெருவே ஊரார்‌ இகழிலும்‌ ஊராதொழியேன்‌ நான்‌ வாரார்‌ பூம்‌ பெண்ணை மடல்‌ 'ஊராதொழியேன்‌ உலகறிய ஒண்ணுதலீர்‌! சீரார்‌ முலைத்‌ தடங்கள்‌ சேரளவும்‌ - பாரெல்லாம்‌ அன்றோங்கி நின்றளந்தான்‌ நின்ற திருநறையூர்‌ மன்றோங்க ஊர்வன்‌ மடல்‌

அடிவரவு: காரார்‌ மன்னிய திருமங்கையாழ்வார்‌ திருவடிகளே சரணம்‌