Skip to the text
இரண்டாம் திருவந்தாதி

இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் · இயற்பா

Essence of this decad

பூதத்தாழ்வார் அருளிய நூறு பாசுரங்கள். பொய்கையாழ்வார் வெளியுலகின் பொருள்களால் விளக்கேற்ற, இவர் "அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை இடுதிரியாக" என்று உள்ளத்தின் உணர்வுகளாலேயே ஏற்றுகிறார். வெளியிலிருந்து உள்ளே நகரும் இவ்வொரு அடி, முதலாழ்வார்கள் மூவரின் தொடர்ச்சியைக் காட்டுகிறது. அன்பே சாதனம் என்பதை இந்நூல் தெளிவாக நிலைநாட்டுகிறது.

2182

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடூதிரியா - நன்புருகி ஞானச்‌ சுடர்‌ விளக்கேற்றினேன்‌ நாரணற்கு ஞானத்‌ தமிழ்‌ புரிந்த நான்‌

2183

ஞானத்தால்‌ நன்குணர்ந்து நாரணன்‌ தன்‌ நாமங்கள்‌ தானத்தால்‌ மற்றவன்‌ பேர்‌ சாற்றினால்‌ - வானத்து அணியமரர்‌ ஆக்குவிக்கும்‌ அஃதன்றே நங்கள்‌ பணியமரர்‌ கோமான்‌ பரிசு

2184

பரிசு நறுமலரால்‌ பாற்கடலான்‌ பாதம்‌ புரிவார்‌ புகப்பெறுவர்‌ போலாம்‌ - புரிவார்கள்‌ தொல்லமரர்‌ கேள்வித்‌ துலங்கொளி சேர்‌ தோற்றத்து நல்லமரர்‌ கோமான்‌ நகர்‌

2185

நகரிழைத்து நித்திலத்து நாண்மலர்‌ கொண்டு ஆங்கே திகழு மணிவயிரம்‌ சேர்த்து - நிகரில்லாப்‌ பைங்கமலம்‌ ஏந்திப்‌ பணிந்தேன்‌ பனிமலராள்‌ அங்கம்‌ வலம்‌ கொண்டான்‌ அடி

2186

அடி மூன்றில்‌ இவ்வுலகம்‌ அன்று அளந்தாய்‌ போலும்‌ அடி மூன்று இரந்து அவனி கொண்டாய்‌ - படி நின்ற நீரோத மேனி நெடுமாலே! நின்‌ அடியை யாரோத வல்லார்‌ அறிந்து?

2187

அறிந்து ஐந்தும்‌ உள்ளடக்கி ஆய்மலர்‌ கொண்டூ ஆர்வம்‌ செறிந்த மனத்தராய்ச்‌ செவ்வே - அறிந்து அவன்‌ தன்‌ பேரோதி ஏத்தும்‌ பெருந்தவத்தோர்‌ காண்பரே காரோத வண்ணன்‌ கழல்‌

2188

கழல்‌ எடுத்து வாய்‌ மடித்துக்‌ கண்‌ சுழன்று மாற்றார்‌ அழல்‌ எடூத்த சிந்தையராய்‌ அஞ்ச - தழல்‌ எடூத்த போராழி ஏந்தினான்‌ பொன்மலர்ச்‌ சேவடியை ஓராழி நெஞ்சே! உகந்து

2189

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறங்கொள்‌ கொங்கை அகம்‌ குளிர உண்ணென்றாளாவி - உகந்து முலை உண்பாய்‌ போலே முனிந்துண்டாய்‌ நீயும்‌ அலை பண்பால்‌ ஆனமையால்‌ அன்று

2190

அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி நின்று முலை தந்த இந்நீர்மைக்கு - அன்று வரன்‌ முறையால்‌ நீ அளந்த மாகடல்‌ சூழ்‌ ஞாலம்‌ பெருமுறையால்‌ எய்துமோ பேர்த்து?

2191

ேேர்த்தனை மாசகடம்‌ பிள்ளையாய்‌ மண்‌ இரந்து காத்தனை பல்லுயிரும்‌ காவலனே! - ஏத்திய நாவுடையேன்‌ பூவுடையேன்‌ நின்னுள்ளி நின்றமையால்‌ காவடியேன்‌ பட்ட கடை

2192

கடை நின்று அமரர்‌ கழல்‌ தொழுது நாளும்‌ இடை நின்ற இன்பத்தராவர்‌ - புடை நின்ற நீரோத மேனி நெடுமாலே! நின்‌ அடியை யாரோத வல்லார்‌ அவர்‌?

2193

அவர்‌ இவர்‌ என்றில்லை அரவணையான்‌ பாதம்‌ எவர்‌ வணங்கி ஏத்தாதார்‌ எண்ணில்‌ - பவரும்‌ செழுங்கதிரோன்‌ ஒண்மலரோன்‌ கண்ணுதலோன்‌ அன்றே? தொழுந்தகையார்‌ நாளும்‌ தொடர்ந்து

2194

தொடரெடூத்த மால்‌ யானை சூழ்கயம்‌ புக்கஞ்சி படரெடூத்த பைங்கமலம்‌ கொண்டூ - அன்று இடரடூக்க ஆழியான்‌ பாதம்‌ பணிந்தன்றே? வானவர்‌ கோன்‌ பாழி தான்‌ எய்திற்றுப்‌ பண்டு

2195

பண்டூ இப்பெரும்‌ பதியை ஆக்கி பழி பாவம்‌ கொண்டு இங்கு வாழ்வாரைக்‌ கூறாதே - எண்திசையும்‌ பேர்த்த கரம்‌ நான்குடையான்‌ பேரோதிப்‌ பேதைகாள்‌! தீர்த்தகரராமின்‌ திரிந்து

2196

திரிந்தது வெஞ்சமத்துத்‌ தேர்‌ கடவி அன்று பிரிந்தது சீதையை மான்‌ பின்‌ போய்‌ - புரிந்ததுவும்‌ கண்‌ பள்ளி கொள்ள அழகியதே! நாகத்தின்‌ தண்‌ பள்ளி கொள்வான்‌ தனக்கு

2197

தனக்கடிமை பட்டது தான்‌ அறியானேலும்‌ மனத்தடைய வைப்பதாம்‌ மாலை - வனத்திடரை ஏரியாம்‌ வண்ணம்‌ இயற்றும்‌ இதுவல்லால்‌ மாரியார்‌ பெய்கிற்பார்‌ மற்று?

2198

மற்றார்‌ இயலாவர்‌? வானவர்‌ கோன்‌ மாமலரோன்‌ சுற்றும்‌ வணங்கும்‌ தொழிலானை - ஒற்றைப்‌ பிறை இருந்த செஞ்சடையான்‌ பின்‌ சென்று மாலைக்‌ குறை இரந்து தான்‌ முடித்தான்‌ கொண்டு

2199

கொண்டது உலகம்‌ குறள்‌ உருவாய்க்‌ கோள்‌ அரியாய்‌ ஒண்திறலோன்‌ மார்வத்து உகிர்‌ வைத்தது - உண்டதுவும்‌ தான்‌ கடந்த ஏழுலகே தாமரைக்கண்‌ மால்‌ ஒரு நாள்‌ வான்‌ கடந்தான்‌ செய்த வழக்கு

2200

வழக்கன்று கண்டாய்‌ வலி சகடம்‌ செற்றாய்‌ வழக்கென்று நீ மதிக்க வேண்டா - குழக்கன்று தீவிளவின்‌ காய்க்கெறிந்த தீமை திருமாலே! பார்‌ விளங்கச்‌ செய்தாய்‌ பழி

2201

பழி பாவம்‌ கையகற்றிப்‌ பல்காலும்‌ நின்னை வழி வாழ்வார்‌ வாழ்வராம்‌ மாதோ - வழுவின்றி நாரணன்‌ தன்‌ நாமங்கள்‌ நன்குணர்ந்து நன்கேத்தும்‌ காரணங்கள்‌ தாமுடையார்‌ தாம்‌

2202

தாம்‌ உளரே தம்‌ உள்ளம்‌ உள்ளுளதே தாமரையின்‌ பூவுளதே ஏத்தும்‌ பொழுதுண்டே - வாமன்‌ திருமருவு தாள்‌ மருவு சென்னியரே செவ்வே அருநரகம்‌ சேர்வதரிது

2203

அரியது எளிதாகும்‌ ஆற்றலால்‌ மாற்றி பெருக முயல்வாரைப்‌ பெற்றால்‌ - கரியதோர்‌ வெண்கோட்டூ மால்‌ யானை வென்றி? முடித்தன்றே தண்கோட்டூ? மாமலரால்‌ தாழ்ந்து

2204

தாழ்ந்து வரம்‌ கொண்டூ தக்க வகைகளால்‌ வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும்‌ - தாழ்ந்த விளங்கனிக்குக்‌ கன்று எறிந்து வேற்றுருவாய்‌ ஞாலம்‌ அளந்து அடிக்கீழ்க்‌ கொண்ட அவன்‌

2205

அவன்‌ கண்டாய்‌ நன்னெஞ்சே! ஆரருளும்‌ கேடும்‌ அவன்‌ கண்டாய்‌ ஐம்புலனாய்‌ நின்றான்‌ - அவன்‌ கண்டாய்‌ காற்றுத்‌ தீ நீர்‌ வான்‌ கருவரை மண்‌ காரோத சீற்றத்‌ தீயாவானும்‌ சென்று

2206

சென்றது இலங்கை மேல்‌ செவ்வே தன்‌ சீற்றத்தால்‌ கொன்றது இராவணனைக்‌ கூறுங்கால்‌ - நின்றதுவும்‌ வேயோங்கு தண்சாரல்‌ வேங்கடமே விண்ணவர்‌ தம்‌ வாயோங்கு தொல்புகழான்‌ வந்து

2207

வந்தித்தவனை வழி நின்ற ஐம்பூதம்‌ ஐந்தும்‌ அகத்தடக்கி ஆர்வமாய்‌ - உந்திப்‌ படியமரர்‌ வேலையான்‌ பண்டூ அமரர்க்கு ஈந்த படியமரர்‌ வாழும்‌ பதி

2208

பதியமைந்து நாடிப்‌ பருத்தெழுந்த சிந்தை மதியுரிஞ்சி வான்முகடூ நோக்கி - கதி! மிகுத்து அம்‌ கோல்‌ தேடி ஓடும்‌ கொழுந்ததே போன்றதே மால்‌ தேடி ஓடும்‌ மனம்‌

2209

மனத்துள்ளான்‌ வேங்கடத்தான்‌ மாகடலான்‌ மற்றும்‌ நினைப்பரிய நீள்‌ அரங்கத்து உள்ளான்‌ - எனைப்பலரும்‌ தேவாதி தேவன்‌ எனப்படுவான்‌ முன்னொரு நாள்‌ மாவாய்‌ பிளந்த மகன்‌

2210

மகனாகக்‌ கொண்டெடுத்தாள்‌ மாண்‌ பாய கொங்கை அகனார உண்பன்‌ என்றுண்டு - மகனைத்‌ தாய்‌ தேறாத வண்ணம்‌ திருத்தினாய்‌ தென்‌ இலங்கை நீறாக எய்தழித்தாய்‌! நீ

2211

நீ அன்று உலகளந்தாய்‌ நீண்ட திருமாலே! நீ அன்று உலகிடந்தாய்‌ என்பரால்‌ - நீ அன்று காரோதம்‌ முன்‌ கடைந்து பின்‌ அடைத்தாய்‌ மாகடலை பேரோத மேனிப்‌ பிரான்‌!

2212

பிரான்‌ என்று நாளும்‌ பெரும்புலரி என்றும்‌ குராநல்‌ செழும்போது கொண்டு - வராகத்து அணி உருவன்‌ பாதம்‌ பணியும்‌ அவர்‌ கண்டீர்‌ 3॥ கதிர்‌ மணி உருவம்‌ காண்பார்‌ மகிழ்ந்து

2213

மகிழ்ந்தது சிந்தை திருமாலே! மற்றும்‌ மகிழ்ந்தது உன்‌ பாதமே போற்றி - மகிழ்ந்த அழல்‌ ஆழி சங்கம்‌ அவை பாடி ஆடம்‌ தொழிலாகம்‌ சூழ்ந்து துணிந்து

2214

துணிந்தது சிந்தை துழாய்‌ அலங்கல்‌ அங்கம்‌ அணிந்தவன்‌ பேர்‌ உள்ளத்துப்‌ பல்கால்‌ - பணிந்ததுவும்‌ வேய்பிறங்கு சாரல்‌ விறல்‌ வேங்கடவனையே வாய்திறங்கள்‌ சொல்லும்‌ வகை

2215

வகையால்‌ அவனி இரந்தளந்தாய்‌ பாதம்‌ புகையால்‌ நறுமலரால்‌ முன்னே - மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப்பட்டேன்‌ உனக்கு என்‌ பாக்கியத்தால்‌ இனி

2216

இனிதென்பர்‌ காமம்‌ அதனிலும்‌ ஆற்ற இனிதென்பர்‌ தண்ணீரும்‌ எந்தாய்‌! - இனிதென்று காமநீர்‌ வேளாது நின்‌ பெருமை வேட்பரேல்‌ சேமநீராகும்‌ சிறிது

2217

சிறியார்‌ பெருமை சிறிதின்‌ கண்‌ எய்தும்‌ அறியாரும்‌ தாமறியார்‌ ஆவர்‌ - அறியாமை மண்‌ கொண்டூ மண்‌ உண்டு மண்‌ உமிழ்ந்த மாயன்‌ என்று எண்‌ கொண்டு என்‌ நெஞ்சே! இரு

2218

இருந்தண்‌ கமலத்து இருமலரின்‌ உள்ளே திருந்து திசைமுகனைத்‌ தந்தாய்‌! - பொருந்திய நின்‌ பாதங்கள்‌ ஏத்திப்‌ பணியாவேல்‌ பல்‌ பிறப்பும்‌ ஏதங்கள்‌ எல்லாம்‌ எமக்கு

2219

எமக்கென்று இருநிதியம்‌ ஏமாந்திராதே தமக்கென்றும்‌ சார்வம்‌ அறிந்து - நமக்கென்றும்‌ மாதவனே என்னும்‌ மனம்‌ படைத்து மற்றவன்‌ பேர்‌ ஓதுவதே நாவினால்‌ ஓத்து

2220

ஓத்தின்‌ பொருள்‌ முடிவும்‌ இத்தனையே உத்தமன்‌ பேர்‌ ஏத்தும்‌ திறம்‌ அறிமின்‌ ஏழைகாள்‌! - ஓத்ததனை வல்லீரேல்‌ நன்று அதனை மாட்டீரேல்‌ மாதவன்‌ பேர்‌ சொல்லுவதே ஓத்தின்‌ சுருக்கு

2221

சுருக்காக வாங்கிச்‌ சுலாவி நின்று ஐயார்‌ நெருக்கா முன்‌ நீர்‌ நினைமின்‌ கண்டீர்‌ - திருப்பொலிந்த ஆகத்தான்‌ பாதம்‌ அறிந்தும்‌ அறியாத போகத்தால்‌ இல்லை பொருள்‌

2222

பொருளால்‌ அமருலகம்‌ புக்கியலல்‌ ஆகாது அருளால்‌ அறம்‌ அருளும்‌ அன்றே? - அருளாலே மாமறையோர்க்கு ஈந்த மணிவண்ணன்‌ பாதமே நீ மறவேல்‌ நெஞ்சே! நினை

2223

நினைப்பன்‌ திருமாலை நீண்ட தோள்‌ காண நினைப்பார்‌ பிறப்பொன்றும்‌ நேரார்‌ - மனைப்பால்‌ பிறந்தார்‌ பிறந்தெய்தும்‌ பேரின்பம்‌ எல்லாம்‌ துறந்தார்‌ தொழுதாரத்‌ தோள்‌

2224

தோள்‌ இரண்டெட்டேழும்‌ மூன்றும்‌ முடி அனைத்தும்‌ தாள்‌ இரண்டும்‌ வீழச்‌ சரம்‌ துரந்தான்‌ - தாள்‌ இரண்டும்‌ ஆர்‌ தொழுவார்‌ பாதம்‌ அவை தொழுவதன்றே? என்‌ சீர்கெழு தோள்‌ செய்யும்‌ சிறப்பு

2225

சிறந்தார்க்கு எழுதுணையாம்‌ செங்கண்மால்‌ நாமம்‌ மறந்தாரை மானிடமா வையேன்‌ - அறம்‌ தாங்கும்‌ மாதவனே! என்னும்‌ மனம்‌ படைத்து மற்றவன்‌ பேர்‌ ஓதுவதே நாவினால்‌ உள்ளு

2226

உளதென்று இறுமாவார்‌ உண்டில்லை என்று தளர்தல்‌ அதன்‌ அருகும்‌ சாரார்‌ - அளவரிய வேதத்தான்‌ வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடி தோயும்‌ பாதத்தான்‌ பாதம்‌ பயின்று

2227

பயின்றது அரங்கம்‌ திருக்கோட்டி பன்னாள்‌ பயின்றதுவும்‌ வேங்கடமே பன்னாள்‌ - பயின்றது அணிதிகழும்‌ சோலை அணிநீர்மலையே மணி திகழும்‌ வண்தடக்கை மால்‌

2228

மாலை அரி உருவன்‌ பாத மலர்‌ அணிந்து காலை தொழுதெழுமின்‌ கைகோலி - ஞாலம்‌ அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்றல்லால்‌ உளங்கிடந்த ஆற்றால்‌ உணர்ந்து 47 அருளான்‌/அருளாள்‌ " பிறப்பென்றும்‌ ்‌ மற்றெல்லாம்‌

2229

உணர்ந்தாய்‌ மறை நான்கும்‌ ஓதினாய்‌ நீதி மணந்தாய்‌ மலர்மகள்‌ தோள்‌ மாலே! - மணந்தாய்‌ போய்‌ வேயிருஞ்சாரல்‌ வியலிரு ஞாலம்‌ சூழ்‌ மாயிருஞ்சோலை மலை

2230

மலை ஏழும்‌ மாநிலங்கள்‌ ஏழும்‌ அதிர குலை சூழ்‌ குரை கடல்கள்‌ ஏழும்‌ - முலை சூழ்ந்த நஞ்சுரத்துப்‌ பெண்ணை நவின்றுண்ட நாவன்‌ என்று அஞ்சாது என்‌ நெஞ்சே! அழை

2231

அழைப்பன்‌ திருமாலை ஆங்கு அவர்கள்‌ சொன்ன பிழைப்பில்‌ பெரும்‌ பெயரே பேசி - இழைப்பரிய ஆயவனே! யாதவனே! என்றவனை யார்‌ முகப்பும்‌ மாயவனே! என்று மதித்து

2232

மதிக்கண்டாய்‌ நெஞ்சே! மணிவண்ணன்‌ பாதம்‌ மதிக்கண்டாய்‌ மற்றவன்‌ பேர்‌ தன்னை - மதிக்கண்டாய்‌ பேராழி நின்று பெயர்ந்து கடல்‌ கடைந்த நீராழி வண்ணன்‌ நிறம்‌

2233

நிறம்‌ கரியன்‌ செய்ய நெடூமலராள்‌ மார்வன்‌ அறம்‌ பெரியன்‌ ஆரது அறிவார்‌? - மறம்‌ புரிந்த வாளரக்கன்‌ போல்வானை வானவர்‌ கோன்‌ தானத்து நீள்‌ இருக்கைக்கு உய்த்தான்‌ நெறி

2234

நெறியார்‌ குழற்கற்றை முன்‌ நின்று பின்‌ தாழ்ந்து அறியாது இளங்கிரி என்றெண்ணி - பிறியாது பூங்கொடிக்கள்‌ வைகும்‌ பொருபுனல்‌ குன்று என்றும்‌ வேங்கடமே யாம்‌ விரும்பும்‌ வெற்பு

2235

வெற்பென்று இருஞ்சோலை வேங்கடம்‌ என்று இவ்விரண்டும்‌ நிற்பென்று நீ மதிக்கும்‌ நீர்மை போல்‌ - நிற்பென்று உளங்கோயில்‌ உள்ளம்‌ வைத்து உள்ளினேன்‌ வெள்ளத்து இளங்கோயில்‌ கைவிடேல்‌ என்று

2236

என்றும்‌ மறந்தறியேன்‌ ஏழ்பிறப்பும்‌ எப்பொழுதும்‌ நின்று நினைப்பொழியா நீர்மையால்‌ - வென்றி அடலாழி கொண்ட அறிவனே! இன்பக்‌ கடலாழி நீ அருளிக்‌ காண்‌

2237

காணக்‌ கழிகாதல்‌ கைமிக்குக்‌ காட்டினால்‌ நாணப்படும்‌ என்றால்‌ நாணுமே? - பேணிக்‌ கருமாலைப்‌ பொன்மேனி காட்டா முன்‌ காட்டும்‌ திருமாலை நங்கள்‌ திரு

2238

திருமங்கை நின்றருளும்‌ தெய்வம்‌ நா வாழ்த்தும்‌ கருமம்‌ கடைப்பிடிமின்‌ கண்டீர்‌ - உரிமையால்‌ ஏத்தினோம்‌ பாதம்‌ இருந்தடக்கை எந்தை பேர்‌ நால்‌ திசையும்‌ கேட்டீரே? நாம்‌

2239

நாம்‌ பெற்ற நன்மையும்‌ நாமங்கை நன்னெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து - வேம்பின்‌ பொருள்‌ நீர்மை ஆயினும்‌ பொன்னாழி பாடென்று அருள்‌ நீர்மை தந்த அருள்‌

2240

அருள்‌ புரிந்த சிந்தை அடியார்‌ மேல்‌ வைத்து பொருள்‌ தெரிந்து காண்குற்ற அப்போது - இருள்‌ திரிந்து நோக்கினேன்‌ நோக்கி நினைந்தேனதொண்கமலம்‌ ஓக்கினேன்‌ என்னையும்‌ அங்கு ஓர்ந்து

2241

ஓர்‌ உருவன்‌ அல்லை ஒளி உருவம்‌ நின்‌ உருவம்‌ ஈருருவன்‌ என்பர்‌ இருநிலத்தோர்‌ - ஓர்‌ உருவம்‌ ஆதியாம்‌ வண்ணம்‌ அறிந்தார்‌ அவர்‌ கண்டீர்‌ நீதியால்‌ மண்‌ காப்பார்‌ நின்று

2242

நின்றதோர்‌ பாதம்‌ நிலம்‌ புதைப்ப நீண்ட தோள்‌ சென்று அளந்தது என்பர்‌ திசை எல்லாம்‌ - அன்று கருமாணியாய்‌ இரந்த கள்வனே! உன்னைப்‌ பிரமாணித்தார்‌ பெற்ற பேறு!

2243

பேறொன்று முன்னறியேன்‌ பெற்றறியேன்‌ பேதைமையால்‌ மாறென்று சொல்லி வணங்கினேன்‌ - ஏறின்‌ பெருத்தெருத்தம்‌ கோடொசியப்‌ பெண்ணசையின்‌ பின்‌ போய்‌ எருத்திறுத்த நல்லாயர்‌ ஏறு

2244

ஏறேழும்‌ வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து ஏறேறி பட்ட விடூ சாபம்‌ - பாறேறி உண்ட தலை வாய்‌ நிறையக்‌ கோட்டங்கை ஒண்‌ குருதி கண்ட பொருள்‌ சொல்லின்‌ கதை

2245

கதையும்‌ பெரும்‌ பொருளும்‌ கண்ணா! நின்‌ பேரே இதயம்‌ இருந்தவையே ஏத்தில்‌ - கதையும்‌ திருமொழியாய்‌ நின்ற திருமாலே! உன்னைப்‌ இரிந்து ்‌ கதையின்‌ பருமொழியால்‌ காணப்‌ பணி

2246

பணிந்தேன்‌ திருமேனி பைங்கமலம்‌ கையால்‌ அணிந்தேன்‌ உன்‌ சேவடி மேல்‌ அன்பாய்‌ - துணிந்தேன்‌ புரிந்தேத்தி உன்னைப்‌ புகலிடம்‌ பார்த்து ஆங்கே இருந்தேத்தி வாழும்‌ இது

2247

இது கண்டாய்‌ நன்னெஞ்சே! இப்பிறவி ஆவது இது கண்டாய்‌ எல்லாம்‌ நாம்‌ உற்றது - இது கண்டாய்‌ நாரணன்‌ பேர்‌ ஓதி நரகத்து அருகணையா காரணமும்‌ வல்லையேல்‌ காண்‌

2248

கண்டேன்‌ திருமேனி யான்‌ கனவில்‌ ஆங்கவன்‌ கைக்‌ கண்டேன்‌ கனலும்‌ சுடராழி - கண்டேன்‌ உறு நோய்‌ வினை இரண்டும்‌ ஓட்டூவித்து பின்னும்‌ மறு நோய்‌ செறுவான்‌ வலி

2249

வலி மிக்க வாள்‌ எயிற்று வாள்‌ அவுணர்‌ மாள வலி மிக்க வாள்‌ வரை மத்தாக - வலி மிக்க வாள்‌ நாகம்‌ சுற்றி மறுகக்‌ கடல்‌ கடைந்தான்‌ கோள்‌ நாகம்‌ கொம்பொசித்த கோ

2250

கோவாகி மாநிலம்‌ காத்து நங்கண்‌ முகப்பே மாவேகிச்‌ செல்கின்ற மன்னவரும்‌ - பூ மேவும்‌ செங்கமல நாபியான்‌ சேவடிக்கே ஏழ்‌ பிறப்பும்‌ தண்கமலமேய்ந்தார்‌ தமர்‌

2251

தமர்‌ உள்ளம்‌ தஞ்சை தலை அரங்கம்‌ தண்கால்‌ தமர்‌ உள்ளும்‌ தண்பொருப்பு வேலை - தமர்‌ உள்ளும்‌ மாமல்லை கோவல்‌ மதிள்‌ குடந்தை என்பரே ஏவல்ல எந்தைக்கு இடம்‌

2252

இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரிகான்று அடங்கார்‌ ஒடுங்குவித்தது ஆழி - விடங்காலும்‌ தீ வாய்‌ அரவணை மேல்‌ தோன்றல்‌ திசை அளப்பான்‌ பூவார்‌ அடி நிமிர்த்த போது

2253

போதறிந்து வானரங்கள்‌ பூஞ்சுனை புக்கு ஆங்கலர்ந்த போதரிந்து கொண்டு ஏத்தும்‌ போது உள்ளம்‌! - போது மணி வேங்கடவன்‌ மலர்‌ அடிக்கே செல்ல அணி வேங்கடவன்‌ பேராய்ந்து

2254

ஆய்ந்துரைப்பன்‌ ஆயிரம்‌ பேர்‌ ஆதிநடூ வந்திவாய்‌ வாய்ந்த மலர்‌ தூவி வைகலும்‌ - ஏய்ந்த பிறைக்‌ கோட்டுச்‌ செங்கண்‌ கரி விடுத்த பெம்மான்‌ இறைக்கு ஆட்படத்‌ துணிந்த யான்‌

2255

யானே தவம்‌ செய்தேன்‌ ஏழ்‌ பிறப்பும்‌ எப்பொழுதும்‌ யானே தவம்‌ உடையேன்‌ எம்பெருமான்‌! - யானே இருந்ததமிழ்‌ நன்மாலை இணை அடிக்கே சொன்னேன்‌ பெருந்தமிழன்‌ நல்லேன்‌ பெரிது

2256

பெருகு மத வேழம்‌ மாப்பிடிக்கி முன்‌ நின்று இருகண்‌ இளமூங்கில்‌ வாங்கி - அருகிருந்த தேன்‌ கலந்து நீட்டும்‌ திருவேங்கடம்‌ கண்டீர்‌ வான்‌ கலந்த வண்ணன்‌ வரை

2257

வரைச்‌ சந்தனக்‌ குழம்பும்‌ வான்கலனும்‌ பட்டும்‌ விரைப்‌ பொலிந்த வெண்மல்லிகையும்‌ - நிரைத்துக்‌ கொண்டு ஆதிக்கண்‌ நின்ற அறிவன்‌ அடி இணையே ஓதிப்‌ பணிவதுறும்‌

2258

உறுங்கண்டாய்‌ நன்னெஞ்சே! உத்தமன்‌ நற்பாதம்‌ உறுங்கண்டாய்‌ ஒண்கமலம்‌ தன்னால்‌ - உறுங்கண்டாய்‌ ஏத்திப்‌ பணிந்தவன்‌ பேர்‌ ஈரைஞ்ஜூறு எப்பொழுதும்‌ சார்த்தி உரைத்தல்‌ தவம்‌

2259

தவம்‌ செய்து நான்முகனே பெற்றான்‌ தரணி நிவந்தளப்ப நீட்டிய பொற்பாதம்‌ - சிவந்த தன்‌ கை அனைத்தும்‌ ஆரக்‌ கழுவினான்‌ கங்கை நீர்‌ பெய்தனைத்துப்‌ பேர்‌ மொழிந்து பின்‌

2260

பின்‌ நின்று தாயிரப்பக்‌ கேளான்‌ பெரும்‌ பணைத்தோள்‌ முன்‌ நின்று தானிரப்பாள்‌ மொய்ம்மலராள்‌ - சொல்‌ நின்ற தோள்‌ நலந்தான்‌ நேரில்லாத்‌ தோன்றல்‌ அவன்‌ அளந்த நீள்றிலந்தான்‌ அத்தனைக்கும்‌ நேர்‌

2261

நேர்ந்தேன்‌ அடிமை நினைந்தேனதொண்கமலம்‌ ஆர்ந்தேன்‌ உன்‌ சேவடி மேல்‌ அன்பாய்‌ - ஆர்ந்த அடிக்கோலம்‌ கண்டவர்க்கு என்‌ கொலோ? முன்னைப்‌ படிக்கோலம்‌ கண்ட பகல்‌

2262

பகல்‌ கண்டேன்‌ நாரணனைக்‌ கண்டேன்‌ கனவில்‌ சாற்றி மிகக்‌ கண்டேன்‌ மீண்டு அவனை மெய்யே - மிகக்‌ கண்டேன்‌ ஊன்‌ திகழும்‌ நேமி ஒளி திகழும்‌ சேவடியான்‌ வான்‌ திகழும்‌ சோதி வடிவு

2263

வடிக்கோல வாள்‌ நெடுங்கண்‌ மாமலராள்‌ செவ்விப்‌ படிக்கோலம்‌ கண்டு அகலாள்‌ பல்நாள்‌ - அடிக்கோலி ஞாலத்தாள்‌ பின்னும்‌ நலம்‌ புரிந்தது என்‌ கொலோ? கோலத்தால்‌ இல்லை குறை

2264

குறையாக வெஞ்சொற்கள்‌ கூறினேன்‌ கூறி மறையாங்கு என உரைத்த மாலை - இறையேனும்‌ ஈயுங்கொல்‌! என்றே இருந்தேன்‌ எனைப்பகலும்‌ மாயன்‌ கண்‌ சென்ற வரம்‌

2265

வரம்‌ கருதித்‌ தன்னை வணங்காத வன்மை உரம்‌ கருதி மூர்க்கத்தவனை - நரம்‌ கலந்த சிங்கமாய்க்‌ கீண்ட திருவன்‌ அடி இணையே அங்கண்மா ஞாலத்து அமுது

2266

அழுது என்றும்‌ தேன்‌ என்றும்‌ ஆழியான்‌ என்றும்‌ அமுது அன்று கொண்டு உகந்தான்‌ என்றும்‌ - அமுதன்ன சொல்‌ மாலை ஏத்தித்‌ தொழுதேன்‌ சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று

2267

நவின்று உரைத்த நாவலர்கள்‌ நாண்மலர்‌ கொண்டு ஆங்கே பயின்றதனால்‌ பெற்ற பயன்‌ என்‌ கொல்‌? - பயின்றார்‌ தம்‌ மெய்த்தவத்தால்‌ காண்பரிய மேக மணிவண்ணனை யான்‌ எத்தவத்தால்‌ காண்பன்‌ கொல்‌ இன்று?

2268

இன்றா அறிகின்றேன்‌ அல்லேன்‌ இருநிலத்தைச்‌ சென்று ஆங்கு அளந்த திருவடியை - அன்று கருக்கோட்டியுள்‌ கிடந்து கை தொழுதேன்‌ கண்டேன்‌ திருக்கோட்டி எந்தை திறம்‌

2269

திறம்பிற்று இனி அறிந்தேன்‌ தென்னரங்கத்து எந்தை திறம்பா வழி சென்றார்க்கு அல்லால்‌ - திறம்பாச்‌ செடி நரகை நீக்கித்‌ தாம்‌ செல்வதன்‌ முன்‌ வானோர்‌ கடி நகர வாசல்‌ கதவு

2270

கதவிக்‌ கதஞ்சிறந்த'? கஞ்சனை முன்‌ காய்ந்து அதவிப்‌ போர்‌ யானை ஒசித்து - பதவியாய்ப்‌ பாணியால்‌ நீர்‌ ஏற்றுப்‌ பண்டொருகால்‌ மாவலியை மாணியாய்க்‌ கொண்டிலையே மண்‌?

2271

மண்ணுலகம்‌ ஆளேனே? வானவர்க்கும்‌ வானவனாய்‌ விண்ணுலகம்‌ தன்னகத்து மேவேனே? - நண்ணித்‌ திருமாலைச்‌ செங்கண்‌ நெடியானை எங்கள்‌ பெருமானைக்‌ கை தொழுத பின்‌

2272

பின்னால்‌ அருநரகம்‌ சேராமல்‌ பேதுறுவீர்‌ முன்னால்‌ வணங்க முயன்மினோ - பல்நூல்‌ அளந்தானைக்‌ கார்க்கடல்‌"' சூழ்‌ ஞாலத்தை எல்லாம்‌ அளந்தான்‌ அவன்‌ சேவடி

2273

அடியால்‌ முன்‌ கஞ்சனைச்‌ செற்று அமரர்‌ ஏத்தும்‌ படியான்‌ கொடி மேல்‌ புள்‌ கொண்டான்‌ - நெடியான்‌ தன்‌ நாமமே ஏத்துமின்௧கள்‌ ஏத்தினால்‌ தாம்‌ வேண்டும்‌ காமமே காட்டும்‌ கடிது

2274

கடிது கொடூநரகம்‌ பிற்காலும்‌ செய்கை கொடிதென்று அது கூடா முன்னம்‌ - வடிசங்கம்‌ கொண்டானைக்‌ கூந்தல்வாய்‌ கீண்டானை கொங்கை நஞ்சு உண்டானை ஏத்துமினோ உற்று

2275

உற்று வணங்கித்‌ தொழுமின்‌ உலகேமும்‌ முற்றும்‌ விழுங்கும்‌ முகில்வண்ணன்‌ - பற்றிப்‌ பொருந்தாதான்‌ மார்பு இடந்து பூம்பாடகத்துள்‌ இருந்தானை ஏத்தும்‌ என்‌ நெஞ்சு

2276

என்‌ நெஞ்சம்‌ மேயான்‌ என்‌ சென்னியான்‌ தானவனை வன்னெஞ்சம்‌ கீண்ட மணிவண்ணன்‌ - முன்னம்‌ சேய்‌ ஊழியான்‌ ஊழி பெயர்த்தான்‌ உலகேத்தும்‌ ஆழியான்‌ அத்தியூரான்‌

2277

அத்தியூரான்‌ புள்ளை ஊர்வான்‌ அணிமணியின்‌ துத்தி சேர்‌ நாகத்தின்‌ மேல்‌ துயில்வான்‌ - முத்தீ மறையாவான்‌ மாகடல்‌ நஞ்சுண்டான்‌ தனக்கும்‌ இறையாவான்‌ எங்கள்‌ பிரான்‌

2278

எங்கள்‌ பெருமான்‌! இமையோர்‌ தலைமகன்‌! நீ செங்கண்‌ நெடுமால்‌! திருமார்பா! - பொங்கு படமூக்கின்‌ ஆயிரவாய்ப்‌ பாம்பணை மேல்‌ சேர்ந்தாய்‌ குடமூக்குக்‌" கோயிலாக்‌ கொண்டு

2279

கொண்டூ வளர்க்கக்‌ குழவியாய்த்‌ தான்‌ வளர்ந்தது உண்டது உலகேழும்‌ உள்ளொடுங்க - கொண்டு குடமாடிக்‌ கோவலனாய்‌ மேவி என்‌ நெஞ்சம்‌ இடமாகக்‌ கொண்ட இறை

2280

இறை எம்பெருமான்‌! அருள்‌ என்று இமையோர்‌ முறை நின்று மொய்ம்மலர்கள்‌ தூவ - அறைகழல சேவடியான்‌ செங்கண்‌ நெடியான்‌ குறள்‌ உருவாய்‌ மாவடிவில்‌' மண்‌ கொண்டான்‌ மால்‌

2281

மாலே! நெடியோனே! கண்ணனே! விண்ணவர்க்கு மேலா! வியந்துழாய்க்‌ கண்ணியனே! - மேலால்‌ விளவின்‌ காய்‌ கன்றினால்‌ வீழ்த்தவனே! என்தன்‌ அளவன்றால்‌ யானுடைய அன்பு 100 தசக அடிவரவு: அன்பு கடை தாம்‌ பிரான்‌ பொருள்‌ மதி நின்றது இடங்கை பகல்‌ பின்னால்‌ திரு பூதத்தாழ்வார்‌ திருவடிகளே ஷரணம்‌