Skip to the text
பெரிய திருமொழி

10-7. மானமுடைத்து

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"உங்கள் ஆயர் குலம் மானம் உடையது; பிறர் மக்களை ஊனம் செய்யப் பெறாய்" — ஆய்ச்சியர் கண்ணனிடம் கடிந்து பேசும் பதிகம். குலப்பெருமையை நினைவுபடுத்தி அவனைத் திருத்த முயல்கிறார்கள். கடிவதற்குள் ஒளிந்திருக்கும் உரிமையும் அன்பும் இப்பதிகத்தில் தெளிவாகத் தெரிகின்றன.

பெரிய திருமொழி 10-7 - மானமுடைத்து (க்ருஷ்ணாவதாரத்தில்‌ ஈடுபாடு 4 - கண்ணன்‌ செய்தியைக்‌ குறித்து ஆய்ச்சியரும்‌ யசோதையும்‌ முறையிடுதல்‌)

1908

மானமுடைத்து உங்கள்‌ ஆயர்‌ குலம்‌ அதனால்‌ பிறர்‌ மக்கள்‌ தம்மை ஊனமுடையன செய்யப்‌ பெறாய்‌ என்று இரப்பன்‌ உரப்பகில்லேன்‌ நானும்‌ உரைத்திலேன்‌ நந்தன்‌ பணித்திலன்‌ நங்கைகாள்‌! நான்‌ என்‌ செய்கேன்‌? தானும்‌ ஓர்‌ கன்னியும்‌ கீழை அகத்துத்‌ தயிர்‌ கடைகின்றான்‌ போலும்‌

1909

காலையெழுந்து கடைந்த இம்மோர்‌ விற்கப்‌ போகின்றேன்‌ கண்டே போனேன்‌ மாலை நறுங்குஞ்சி நந்தன்‌ மகன்‌ அல்லால்‌ மற்று வந்தாரும்‌ இல்லை மேலை அகத்து நங்காய்‌! வந்து காண்மின்கள்‌ வெண்ணெயே அன்று இருந்த பாலும்‌ பதின்குடம்‌ கண்டிலேன்‌ பாவியேன்‌ என்‌ செய்கேன்‌? என்‌ செய்கேனோ?

1910

தெள்ளியவாய்ச்சிறியான்‌ நங்கைகாள்‌! உறி மேலைத்‌ தடா நிறைந்த வெள்ளி மலை இருந்தால்‌ ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கியிட்டூு கள்வன்‌ உறங்குகின்றான்‌ வந்து காண்மின்கள்‌ கையெல்லாம்‌ நெய்‌ வயிறு பிள்ளை பரமன்று இவ்வேழுலகும்‌ கொள்ளும்‌ பேதையேன்‌ என்‌ செய்கேனோ?

1911

மைந்நம்பு வேற்கணல்லாள்‌ முன்னம்‌ பெற்றவளை வண்ண நன்மாமேனி தன்னம்பி நம்பியும்‌ இங்கு வளர்ந்தது அவன்‌ இவை செய்தறியான்‌ பொய்ந்நம்பி புள்ளுவன்‌ கள்வம்‌ பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டூ இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்குய்வில்லை என்‌ செய்கேன்‌? என்‌ செய்கேனோ?

1912

தந்தை புகுந்திலன்‌ நான்‌ இங்கிருந்திலேன்‌ தோழிமார்‌ ஆருமில்லை சந்தமலர்க்‌ குழலாள்‌ தனியே விளையாடூமிடம்‌ குறுகி பந்து பறித்துத்‌ துகில்‌ பற்றிக்‌ கீறிப்‌ படிறன்‌ படிறு செய்யும்‌ நந்தன்‌ மதலைக்கு இங்கு என்‌ கடவோம்‌? நங்காய்‌! என்‌ செய்கேன்‌? என்‌ செய்கேனோ?

1913

மண்மகள்‌ கேள்வன்‌ மலர்மங்கை நாயகன்‌ நந்தன்‌ பெற்ற மதலை அண்ணல்‌ இலைக்குழலூதி நம்‌ சேரிக்கே அல்லில்‌ தான்‌! வந்த பின்னை கண்மலர்‌ சோர்ந்து முலை வந்து விம்மிக்‌ கமலச்‌ செவ்வாய்‌ வெளுப்ப என்‌ மகள்‌ வண்ணம்‌ இருக்கின்றவா நங்காய்‌! என்‌ செய்கேன்‌? என்‌ செய்கேனோ?

1914

ஆயிரம்‌ கண்ணுடை இந்திரனாருக்கு என்று! ஆயர்‌ விழவெடுப்ப பாசன நல்லன பண்டிகளால்‌ புகப்பெய்த அதனை எல்லாம்‌ !77 அல்லுத்தான்‌ அன்று போயிருந்து அங்கொரு பூத வடிவு கொண்டு உன்‌ மகன்‌ இன்று நங்காய்‌! மாயன்‌ அதனை எல்லாம்‌ முற்ற வாரி வளைத்துண்டிருந்தான்‌ போலும்‌

1915

தோய்த்த தயிரும்‌ நறுநெய்யும்‌ பாலும்‌ ஒரோ! குடம்‌ துற்றிடூம்‌ என்று ஆய்ச்சியர்‌ கூடி அழைக்கவும்‌ நான்‌ இதற்கு எள்கி இவனை நங்காய்‌! சோத்தம்பிரான்‌! இவை செய்யப்‌ பெறாய்‌ என்று இரப்பன்‌ உரப்பகில்லேன்‌ பேய்ச்சி முலையுண்ட பின்னை இப்பிள்ளையைப்‌ பேசுவது அஞ்சுவனே

1916

ஈடும்‌ வலியும்‌ உடைய இ௭ந்நம்பி பிறந்த எழுதிங்களில்‌ ஏடலர்‌ கண்ணியினானை வளர்த்தி யமுனை! நீராடப்‌ போனேன்‌ சேடன்‌ திருமறுமார்பன்‌ கிடந்து திருவடியால்‌ மலை போல்‌ ஓடும்‌ சகடத்தைச்‌ சாடிய பின்னை உரப்புவது அஞ்சுவனே

1917

அஞ்சுவன்‌ சொல்லி அழைத்திட நங்கைகாள்‌! ஆயிர நாழி நெய்யை பஞ்சிய மெல்லடிப்‌ பிள்ளைகள்‌ உண்கின்று!! பாகந்தான்‌ வையார்களே கஞ்சன்‌ கடியன்‌ கறவெட்டு நாளில்‌ என்கை வலத்தாதுமில்லை நெஞ்சத்து இருப்பன செய்து வைத்தாய்‌ நம்பீ! என்‌ செய்கேன்‌? என்‌ செய்கேனோ?

1918

அங்ஙனும்‌' தீமைகள்‌ செய்வர்களோ! நம்பீ! ஆயர்‌ மடமக்களை பங்கய நீர்‌ குடைந்தாடுகின்றார்கள்‌ பின்னே சென்று ஒளித்திருந்து அங்கவர்‌ பூந்துகில்‌ வாரிக்‌ கொண்டுட்டு ஓரோர்‌ எழுனை 8! உண்கின்ற ஓசய்வார்களோ அரவேரிடையார்‌ இரப்ப மங்கை நல்லீர்‌! வந்து கொண்மின்‌ என்று மரம்‌ ஏறி இருந்தாய்‌ போலும்‌

1919

அச்சம்‌ தினைத்தனை இல்லை இப்பிள்ளைக்கு ஆண்மையும்‌ சேவகமும்‌ உச்சியில்‌ முத்தி வளர்த்தெடுத்தேனுக்கு உரைத்திலன்‌ தான்‌ இன்று போய்‌ பச்சிலைப்‌ பூங்கடம்பேறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிரவாய்‌ நச்சழல்‌ பொய்கையில்‌ நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய்‌ போலும்‌

1920

தம்பரம்‌ அல்லன ஆண்மைகளைத்‌ தனியே நின்று தாம்‌ செய்வாரோ? எம்பெருமான்‌! உன்னைப்‌ பெற்ற வயிறுடையேன்‌ இனி யான்‌ என்‌ செய்கேன்‌? அம்பரம்‌ ஏழும்‌ அதிரும்‌ இடிகுரல்‌ அங்கனற்‌ செங்கணுடை வம்பவிழ்‌ கானத்து மால்விடையோடு பிணங்கி நீ வந்தாய்‌ போலும்‌

1921

அன்னநடை மடவாய்ச்சி வயிறடித்து அஞ்ச அருவரை போல்‌ மன்னு கருங்களிற்று ஆருயிர்‌ வவ்விய மைந்தனை மாகடல்‌ சூழ்‌ ர கன்னி நன்மாமதிள்‌ மங்கையர்‌ காவலன்‌ காமருசீர்க்‌ கலிகன்றி இன்னிசை மாலைகள்‌ ஈரேழும்‌ வல்லவர்க்கு ஏதும்‌ இடர்‌ இல்லையே

அடிவரவு: மானம்‌ காலை தெள்ளிய மை தந்தை மண்மகள்‌ ஆயிரம்‌ தோய்த்த ஈடும்‌ அஞ்சுவன்‌ அங்ஙனம்‌ அச்சம்‌ தம்பரம்‌ அன்னம்‌ காதில்‌