Skip to the text
பெரிய திருமொழி

10-4. சந்தமலர்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

கூந்தல் தாழ ஓடி வந்து, தனியாக இருந்தபோது தன்னை அணைத்தவனைப் பற்றித் தலைவி சொல்லும் பதிகம். நிகழ்ந்ததை நினைவுகூர்வதே இப்பதிகத்தின் முழு உள்ளடக்கம். நடந்ததைத் திரும்பச் சொல்வதன் மூலம் மட்டுமே பிரிவைத் தாங்க முடிகிறது.

பெரிய திருமொழி 10-4 - சந்தமலர்‌ (க்ருஷ்ணாவதாரத்தில்‌ ஈடூபாடு 1 - கண்ணனை முலையுண்ண அழைத்தல்‌)

1878

சந்தமலர்க்‌ குழல்‌ தாழத்‌ தான்‌ உகந்தோடித்‌ தனியே வந்து என்‌ முலைத்‌ தடந்தன்னை வாங்கி நின்‌ வாயில்‌ மடுத்து நந்தன்‌ பெறப்‌ பெற்ற நம்பீ! நான்‌ உகந்துண்ணும்‌ அழுதே! எந்தை பெருமனே! உண்ணாய்‌ என்‌ அம்மம்‌ சேமம்‌ உண்ணாயே

1879

வங்க மறிகடல்‌ வண்ணா! மாமுகிலே ஒக்கும்‌ நம்பீ! செங்கண்‌ நெடிய திருவே! செங்கமலம்‌ புரை வாயா! கொங்கை சுரந்திட உன்னைக்‌ கூவியும்‌ காணாதிருந்தேன்‌ எங்கிருந்து ஆயர்களோடும்‌ என்‌ விளையாடுகின்றாயே?

1880

திருவில்‌ பொலிந்த எழிலார்‌ ஆயர்‌ தம்‌ பிள்ளைகளோடு தெருவில்‌ திளைக்கின்ற நம்பீ! செய்கின்ற தீமைகள்‌ கண்டிட்டு உருகி என்‌ கொங்கையின்‌ தீம்பால்‌ ஓட்டந்து பாய்ந்திடுகின்ற மருவிக்‌ குடங்காலிருந்து வாய்‌ முலையுண்ண நீ வாராய்‌

1881

மக்கள்‌ பெறுதவம்‌ போலும்‌ வையத்து வாழும்‌ மடவார்‌ மக்கள்‌ பிறர்‌ கண்ணுக்கொக்கும்‌ முதல்வா! மதக்‌ களிறன்னாய்‌! செக்கர்‌ இளம்பிறை தன்னை வாங்கி நின்‌ கையில்‌ தருவன்‌ ஒக்கலை மேலிருந்து அம்மம்‌ உகந்து இனிதுண்ண நீ வாராய்‌

1882

மைத்த கருங்குஞ்சி மைந்தா! மாமருதூடு நடந்தாய்‌! வித்தகனே! விரையாதே! வெண்ணெய்‌ விழுங்கும்‌ விகிர்தா! இத்தனை போதன்றி என்தன்‌ கொங்கை சுரந்திருக்ககில்லா உத்தமனே! அம்மம்‌ உண்ணாய்‌ உலகளந்தாய்‌! அம்மம்‌ உண்ணாய்‌

1883

பிள்ளைகள்‌ செய்வன செய்யாய்‌ பேசின்‌ பெரிதும்‌ வலியை கள்ளம்‌ மனத்தில்‌ உடையை காணவே தீமைகள்‌ செய்தி உள்ளம்‌ உருகி என்‌ கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற பள்ளிக்‌ குறிப்புச்‌ செய்யாதே பாலமுதுண்ண நீ வாராய்‌

1884

தன்‌ மகனாக வன்பேய்ச்சி தான்‌ முலையுண்ணக்‌ கொடுக்க வன்மகனாய்‌ அவள்‌ ஆவி வாங்கி முலையுண்ட நம்பீ! நன்மகள்‌ ஆய்மகளோடு நானில மங்கை மணாளா! என்‌ மகனே! அம்மம்‌ உண்ணாய்‌ என்‌ அம்மம்‌ சேமம்‌ உண்ணாயே

1885

உந்தம்‌ அடிகள்‌ முனிவர்‌ உன்னை நான்‌ என்‌ கையில்‌ கோலால்‌ நொந்திட மோதவும்‌ கில்லேன்‌ நுங்கள்‌ தம்‌ ஆநிரை எல்லாம்‌ வந்து புகுதரும்‌ போது வானிடைத்‌ தெய்வங்கள்‌ காண அந்தியம்‌ போது அங்கு நில்லேல்‌ ஆழியங்கையனே! வாராய்‌

1886

பெற்றத்‌ தலைவன்‌ எங்கோமான்‌ பேரருளாளன்‌ மதலாய்‌! சுற்றக்‌ குழாத்திளங்கோவே! தோன்றிய தொல்புகழாளா! கற்றினம்‌ தோறும்‌ மறித்துக்‌ கானம்‌ திரிந்த களிறே! எற்றுக்கு என்‌ அம்மம்‌ உண்ணாதே எம்பெருமான்‌ இருந்தாயே?

1887

இம்மை இடர்‌ கெட வேண்டி ஏந்தெழில்‌ தோள்‌ கலிகன்றி செம்மைப்‌ பனுவல்‌ நூல்‌ கொண்டு செங்கண்‌ நெடியவன்‌ தன்னை அம்மம்‌ உண்ணென்று உரைக்கின்ற பாடலிவை ஐந்தும்‌ ஐந்தும்‌ மெய்ம்மை மனத்து வைத்தேத்த விண்ணவர்‌ ஆகலுமாமே

அடிவரவு: சந்தம்‌ வங்கம்‌ திருவில்‌ மக்கள்‌ மைத்த பிள்ளைகள்‌ தன்மகன்‌ உந்தம்‌ பெற்றம்‌ இம்மை பூங்கோதை