Skip to the text
பெரிய திருமொழி

9-6. அக்கும்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

எலும்பு மாலையும் புலித்தோலும் அணிந்த ஒருவர் ஒரு பக்கம் நிற்க, அவருடன் நின்ற பண்பரின் ஊரைப் பாடும் பதிகம். சிவனையும் திருமாலையும் ஒருங்கே காணும் காட்சியை ஆழ்வார் மறுக்காமல் சொல்கிறார். வேறுபாட்டைப் பேசாமல், நிற்கும் இடத்தையே சுட்டுவது இப்பதிகத்தின் நளினம்.

பெரிய திருமொழி 9-6 - அக்கும்‌ (திருக்குறுங்குடி 2)

1798

அக்கும்‌ புலியின்‌ அதளும்‌ உடையார்‌ அவர்‌ ஒருவர்‌ பக்கம்‌ நிற்க நின்ற பண்பர்‌ ஊர்‌ போலும்‌ தக்க மரத்தின்‌ தாழ்‌ சினை ஏறி தாய்‌ வாயில்‌ கொக்கின்‌ பிள்ளை வெள்ளிற உண்ணும்‌ குறுங்குடியே

1799

துங்கார்‌ அரவத்‌ திரை வந்துலவத்‌ தொடுகடலுள்‌ பொங்கார்‌ அரவில்‌ துயிலும்‌ புனிதர்‌ ஊர்‌ போலும்‌ செங்கால்‌ அன்னம்‌ திகழ்‌ தண்பணையில்‌ பெடையோடும்‌ கொங்கார்‌ கமலத்து அலரில்‌ சேரும்‌ குறுங்குடியே

1800

வாழக்‌ கண்டோம்‌ வந்து காண்மின்‌ தொண்டீர்காள்‌! கேழல்‌ செங்கண்‌ மாமுகில்‌ வண்ணர்‌ மருவும்‌ ஊர்‌ ஏழைச்‌ செங்கால்‌ இன்துணை நாரைக்கு இரை தேடி கூழைப்‌ பார்வைக்‌ கார்வயல்‌ மேயும்‌ குறுங்குடியே

1801

சிர முன்‌ ஐந்தும்‌ ஐந்தும்‌ சிந்தச்‌ சென்று அரக்கன்‌ உரமும்‌ கரமும்‌ துணித்த உரவோன்‌! ஊர்‌ போலும்‌ இரவும்‌ பகலும்‌ ஈன்‌ தேன்‌ முரல! மன்றெல்லாம்‌ குரவின்‌ பூவே தான்‌ மண நாறும்‌ குறுங்குடியே

1802

கவ்வைக்‌ களிற்று மன்னர்‌ மாளக்‌ கலி மான்‌ தேர்‌! ஐவர்க்காய்‌ அன்று அமரில்‌ உய்த்தான்‌!! ஊர்‌ போலும்‌ மைவைத்திலங்கு கண்ணார்‌ தங்கள்‌ மொழியொப்பான்‌ கொவ்வைக்‌ கனி வாய்க்‌ கிள்ளை பேசும்‌ குறுங்குடியே

1803

தீநீர்‌ வண்ண மாமலர்‌ கொண்டு விரையேந்தி தூநீர்‌ பரவித்‌ தொழுமின்‌ எழுமின்‌ தொண்டீர்காள்‌! மாநீர்‌ வண்ணர்‌ மருவி உறையுமிடம்‌ வானில்‌ கூனீர்‌ மதியை மாடம்‌ தீண்டும்‌ குறுங்குடியே

1804

வல்லிச்‌ சிறு நுண்ணிடையார்‌ இடை நீர்‌ வைக்கின்ற அல்லல்‌ சிந்தை தவிர அடைமின்‌ அடியீர்காள்‌! சொல்லில்‌ திருவேயனையார்‌ கனிவாய்‌ எயிறொப்பான்‌ கொல்லை முல்லை மெல்லரும்பீனும்‌ குறுங்குடியே

1805

நாரார்‌ இண்டை நாண்மலர்‌ கொண்டு நந்தமர்காள்‌! ஆரா அன்போடு எம்பெருமான்‌ ஊர்‌ அடைமின்கள்‌ தாராவாரும்‌ வார்புனல்‌ மேய்ந்து வயல்‌ வாழும்‌ கூர்வாய்‌ நாரை பேடையொடாறும்‌ குறுங்குடியே

1806

நின்ற வினையும்‌ துயரும்‌ கெட மாமலர்‌ ஏந்தி சென்று பணிமின்‌ எழுமின்‌ தொழுமின்‌ தொண்டீர்காள்‌! என்றும்‌ இரவும்‌ பகலும்‌ வரிவண்டு இசை பாட குன்றின்‌ முல்லை மன்றிடை நாறும்‌ குறுங்குடியே

1807

சிலையால்‌ இலங்கை செற்றான்‌ மற்றோர்‌ சினவேழம்‌ கொலையார்‌ கொம்பு கொண்டான்‌ மேய குறுங்குடி மேல்‌ கலையார்‌ பனுவல்‌ வல்லான்‌ கலியனொலி மாலை நிலையார்‌ பாடல்‌ பாடப்‌ பாவம்‌ நில்லாவே 10 ஒருவன்‌ முரலும்‌ மாந்தேர்‌ உற்றான்‌

அடிவரவு: அக்கு துங்கார்‌ வாழ்‌ சிரமுன்‌ கவ்வை தீநீர்‌ வல்லி நாரார்‌ நின்ற சிலையால்‌ தந்தை