காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும் ஏவாயினூடு இயங்கும் எஃகில் கொடுதாலோ! ர் பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன் பாவாய்! இது நமக்கோர் பான்மையே ஆகாதே
9-4. காவார்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
பனை மடலில் அன்றில் பறவையின் கூரிய குரல் கேட்க, அது ஈட்டிபோல் தன்னைத் துளைப்பதாக ஆழ்வார் சொல்லும் பதிகம். பிரிந்திருப்பவருக்கு இரவின் ஒவ்வொரு ஒலியும் ஆயுதமாக மாறுகிறது. இயற்கையின் இயல்பான ஒலிகளே தாங்க முடியாதவையாகும் அந்நிலை இங்கே துல்லியமாகச் சொல்லப்படுகிறது.
பெரிய திருமொழி 9-4 - காவார் (திருப்புல்லாணி 2 - பிரிவாற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும், பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறிய பாசுரம்)
முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் பொன்னம் கழிக்கானல் புள்ளினங்காள்! புல்லாணி அன்னமாய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனைச் செப்புமினே
வவ்வித் துழாய் அதன் மேல் சென்ற தனி நெஞ்சம் செவ்வி அறியாது நிற்குங்கொல்? நித்திலங்கள் பவ்வத் திரை உலவு புல்லாணி கை தொழுதேன் தெய்வச் சிலையாற்கு என் சிந்தை நோய் செப்புமினே
பரிய இரணியனது ஆகம் அணியுகிரால் அரி உருவாய்க் கீண்டான் அருள் தந்தவா! நமக்கு பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கை தொழுதேன் அரிமலர்க்கண் நீர் ததும்ப அந்துகிலும் நில்லாவே
வில்லால் இலங்கை மலங்கச் சரம் துரந்த வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும் எல்லாரும் என்தன்னை ஏசிலும் பேசிடினும் புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே
சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான் அழன்று கொடுதாகி அஞ்சுடரில் தானடூமால் ர் செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன் இழந்திருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே
கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல் தினையேனும் நில்லாது தீயில் கொடிதாலோ புனையார் மணிமாடப் புல்லாணி கை தொழுதேன் வினையேன் மேல் வேலையும் வெந்தழலே வீசுமே
தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த பாம்பினணையான் அருள் தந்தவா! நமக்கு பூஞ்செருந்தி பொன் சொரியும் புல்லாணி கை தொழுதேன் தேம்பல் இளம்பிறையும் என்தனக்கோர் வெந்தழலே
வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும் ஆதியும் ஆனான் அருள் தந்தவா! நமக்கு போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன் ஓதழமும் நானும் உறங்காதிருந்தேனே
பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை மின்னிடையார் வேட்கை நோய் கூர இருந்ததனை கல்நவிலும் திண்தோள் கலியனொலி வல்லார் மன்னவராய் மண்ணாண்டு வானாடு' முன்னுவரே
அடிவரவு: காவார் முன்னம் வவ்வி பரிய வில் சுழன்று கனை தூம்புடை வேதம் பொன்னலரும் தவளம்