தொண்டீர்! உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன் திண்தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திருமார்பன் வண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மாநோக்கம்!' கண்டான் கண்டு கொண்டு உகந்த கண்ணபுரம் நாம் தொழுதுமே
8-6. தொண்டீர்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"தொண்டீர், உய்யும் வகை கண்டேன்" — அடியவர்களை விளித்து, தப்பிப் பிழைக்கும் வழியைத் தான் கண்டுகொண்டதாக ஆழ்வார் அறிவிக்கும் பதிகம். அரக்கர் நடுங்க வில் வளைத்தவனை நினைவுகூர்ந்து, அவனையே அவ்வழியாகக் காட்டுகிறார். கண்டதைத் தனக்குள் வைத்துக்கொள்ளாமல் உடனே பகிர்வதே இதன் இயல்பு.
பெரிய திருமொழி 8-6 - தொண்டீர் (திருக்கண்ணபுரம் 6)
பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற அன்று புள்ளூர்ந்து பெருந்தோள் மாலி தலை புரளப் பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கொளிப்ப கருந்தாள் சிலை கைக்கொண்டானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுந்த ஆற்றலான் வல்லாள் அரக்கர் குலப் பாவை வாட முனி தன் வேள்வியை கல்விச் சிலையால் காத்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே
மல்லை முந்நீர் அதர்பட வரிவெஞ்சிலை கால் வளைவித்து கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ கல்லால் கடலை அடைத்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே
ஆமையாகி அரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி ஊழியாகி ! உவரி! சூழ்ந்த நெடும்புணரி ் சேமமதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன் காமற்பயந்தான் கருதுமூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே 5 உலகு
வருந்தாதிரு நீ மடநெஞ்சே! நம் மேல் வினைகள் வாரா மூன் திருந்தா அரக்கர் தென்னிலங்கை செந்தீ உண்ணச் சிவந்து ஒரு நாள் பெருந்தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன் கருந்தாள் களிறொன்று ஒசித்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே
இலையார் மலர்ப் பூம்பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக்கு அருள் புரிந்தான் அலைநீர் இலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே
மாலாய் மனமே! அருந்துயரில் வருந்தாதிரு நீ வலி மிக்க காலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும் மாலார் விடையும் மதகரியும் மல்லர் உயிரும் மடிவித்து காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே
குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக வந்தாள் விடை ஏழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மாமாயன் சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகாற்சகடம் சினம் அழித்து கன்றால் விளங்கா எறிந்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே
கருமாழுகில் தோய் நெடுமாடக் கண்ணபுரத்து எம் அடிகளை திருமாமகளால் அருள் மாரி செழுநீர் ஆலி வளநாடன் மருவார் புயற்கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் இருமாநிலத்துக்கு அரசாகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே
அடிவரவு: தொண்டீர் பொருந்தா வல்லி மல்லை ஆமை வருந்தாது இலை மால் குன்றால் கருமா வியம்