Skip to the text
பெரிய திருமொழி

7-3. சினவில்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

சினம் கொண்ட செங்கண் அரக்கரின் உயிர் மாளச் செய்த வில்லாளனை, கற்றவர்கள் தம் மனத்துள் கொண்டு போற்றுவதைச் சொல்லும் பதிகம். அறிவுடையோரின் நினைவில் அவன் இடம் பெறுவதே அவனுக்குச் சிறப்பு என்று ஆழ்வார் கருதுகிறார். கல்வியின் பயன் இதுவே என்பது நுட்பமாகச் சுட்டப்படுகிறது.

பெரிய திருமொழி 7-3 - சினவில்‌ (திருநறையூர்‌ 10)

1568

சினவில்‌ செங்கண்‌ அரக்கர்‌ உயிர்‌ மாளச்‌ செற்ற வில்லி என்று கற்றவர்‌ தந்தம்‌ மனமுள்‌!! கொண்டு என்றும்‌ எப்போதும்‌ நின்றேத்தும்‌ மாமுனியை மரம்‌ ஏழ்‌ எய்த மைந்தனை நனவில்‌ சென்றார்க்கும்‌ நண்ணற்கரியானை நான்‌ அடியேன்‌ நறையூர்‌ நின்ற நம்பியை கனவில்‌ கண்டேன்‌ இன்று கண்டமையால்‌ என்‌ கண்ணிணைகள்‌ களிப்பக்‌ களித்தேனே 1 !30 மனமுள்வுள்‌

1569

தாய்‌ நினைந்த கன்றே ஒக்க என்னையும்‌ தன்னையே நினைக்கச்‌ செய்து தான்‌ எனக்‌ காய்‌ நினைந்து அருள்‌ செய்யும்‌ அப்பனை அன்று இவ்வையகம்‌ உண்டு உமிழ்ந்திட்ட வாயனை மகரக்‌ குழைக்‌ காதனை மைந்தனை மதிள்‌ கோவல்‌ இடைகழி ஆயனை அமரர்க்கு அரியேற்றை என்‌ அன்பனை அன்றி ஆதரியேனே

1570

வந்த நாள்‌ வந்து என்‌ நெஞ்சிடம்‌ கொண்டான்‌ மற்றோர்‌ நெஞ்சறியான்‌ அடியேனுடைச்‌ சிந்தையாய்‌ வந்து தென்புலர்க்கு என்னைச்‌ சேர்‌ கொடான்‌ இது சிக்கெனப்‌ பெற்றேன்‌ கொந்துலாம்‌ பொழில்‌ சூழ்‌ குடந்தைத்‌ தலைக்‌ கோவினைக்‌ குடமாடிய கூத்தனை எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால்‌ மறக்கேனே?

1571

உரங்களால்‌ இயன்ற மன்னர்‌ மாளப்‌ பாரதத்து ஒரு தேர்‌ ஐவர்க்காய்ச்‌ சென்று இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன்னருள்‌ செய்யும்‌ எம்பிரானை வம்பார்‌ புனல்‌ காவிரி அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ்‌ இலங்கை மலங்கச்‌ சென்று சரங்கள்‌ ஆண்ட தண்தாமரைக்‌ கண்ணனுக்கு அன்றி என்‌ மனம்‌ தாழ்ந்து நில்லாதே

1572

ஆங்கு வெந்நரகத்து அழுந்தும்‌ போது அஞ்சேல்‌ என்று அடியேனை அங்கே வந்து தாங்கு தாமரை அன்ன பொன்னார்‌ அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய்‌ நின்ற வேங்கடத்து அரியைப்‌ பரிகீறியை வெண்ணெய்‌ உண்டு உரலினிடை ஆப்புண்ட தீங்கரும்பினை தேனை நன்பாலினை அன்றி என்‌ மனம்‌ சிந்தை செய்யாதே

1573

எட்டனைப்‌ பொழுதாகிலும்‌ என்றும்‌ என்‌ மனத்து அகலாதிருக்கும்‌ புகழ்‌ தட்டலர்த்த பொன்னே அலர்கோங்கின்‌ தாழ்‌ பொழில்‌ திருமாலிருஞ்சோலை அங்‌ கட்டியை கரும்பீன்ற இன்சாற்றைக்‌ காதலால்‌ மறை நான்கும்‌ முன்னோதிய பட்டனை பரவைத்‌ துயிலேற்றை என்‌ பண்பனை அன்றிப்‌ பாடல்‌ செய்யேனே

1574

பண்ணின்‌ இன்மொழி யாழ்‌ நரம்பில்‌ பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்‌ கண்ணும்‌ நெஞ்சும்‌ வாயும்‌ இடங்கொண்டான்‌ கொண்ட பின்‌ மறையோர்‌ மனம்‌ தன்னுள்‌ விண்ணுளார்‌ பெருமானை எம்மானை வீங்கு நீர்‌ மகரம்‌ திளைக்கும்‌ கடல்‌ வண்ணன்‌ மாமணி வண்ணன்‌ எம்‌ அண்ணல்‌ வண்ணமே அன்றி வாய்‌ உரையாதே

1575

இனி எப்பாவம்‌ வந்தெய்தும்‌? சொல்லீர்‌ எமக்கு இம்மையே அருள்‌ பெற்றமையால்‌ அடும்‌ துனியைத்‌ தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்‌ தோற்றத்‌ தொன்னெறியை ்‌ வையம்‌ தொழப்படும்‌ முனியை வானவரால்‌ வணங்கப்படும்‌ முத்தினைப்‌ பத்தர்‌ தாம்‌ நுகர்கின்றது ஓர்‌ கனியை காதல்‌ செய்து என்‌ உள்ளம்‌ கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே

1576

என்‌ செய்கேன்‌ அடியேன்‌? உரையீர்‌ இதற்கு என்றும்‌ என்‌ மனத்தே இருக்கும்‌ புகழ்‌ தஞ்சையாளியைப்‌ பொன்பெயரோன்‌ நெஞ்சம்‌ அன்று இடந்தவனைத்‌ தழலே புரை மின்செய்‌ வாளரக்கன்‌ நகர்‌ பாழ்‌ படச்‌ சூழ்கடல்‌ சிறை வைத்து இமையோர்‌ தொழும்‌ பொன்செய்‌ மால்‌ வரையை மணிக்‌ குன்றினை அன்றி என்‌ மனம்‌ போற்றியென்னாதே

1577

தோடு விண்டலர்‌ பூம்பொழில்‌ மங்கையர்‌ தோன்றல்‌ வாள்கலியன்‌ திருவாலி நாடன்‌ நன்னறையூர்‌ நின்ற நம்பி தன்‌ நல்ல மாமலர்ச்‌ சேவடி சென்னியில்‌ சூடியும்‌ தொழுதும்‌ எழுந்தாடியும்‌ தொண்டர்கட்கு அவன்‌ சொன்ன சொல்‌ மாலை பாடல்‌ பத்திவை பாடுமின்‌ தொண்டீர்‌! பாட நும்மிடைப்‌ பாவம்‌ நில்லாவே

அடிவரவு: சினவில்‌ தாய்‌ உரங்கள்‌ ஆங்கு எட்டனை பண்ணின்‌ இனி என்செய்கேன்‌ தோடு கண்‌