துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம் மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யான் உலகில் பிறப்பேனாக எண்ணேன் பிறவாமை பெற்றது நின் திறத்தேனா தன்மையால் திருவிண்ணகரானே!
6-3. துறப்பேன்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"துறப்பேன் அல்லேன், மறப்பேன் அல்லேன்" — விடமாட்டேன், மறக்கமாட்டேன் என்று மறுப்பின் வடிவில் ஆழ்வார் தன் உறுதியைச் சொல்லும் பதிகம். இன்பத்தைத் துறக்காமலே அவன் உருவத்தை மறக்காமல் இருப்பேன் என்பதில் ஒரு நேர்மை உண்டு. முழுமையான துறவை உரிமை கொண்டாடாமல், பற்றின் இடத்தை மாற்றுவதே போதும் என்கிறார்.
பெரிய திருமொழி 6-3 - துறப்பேன் (திருவிண்ணகர் 3)
துறந்தேன் ஆர்வச் செற்றச் சுற்றம் துறந்தமையால் சிறந்தேன் நின்னடிக்கே அடிமை திருமாலே! '' இடருற்று அறந்தானாய்த் திரிவாய்! உன்னை என் மனத்தகத்தே திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே!
மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும் ஊனேய் கண் வாளிக்கு உடைந்தோட்டத்து உன்னடைந்தேன் கோனே! குறுங்குடியுள் குழகா! திருநறையூர்த் தேனே! வருபுனல் சூழ் திருவிண்ணகரானே!
சாந்தேந்து மென் முலையார் தடந்தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் அருநரகத்து அழுந்தும் பயன் படைத்தேன் போந்தேன் புண்ணியனே! உன்னை எய்தி என் தீவினைகள் தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே!
மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான்! வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனைச் செற்றாய்! கொற்றவனே! திருவிண்ணகரானே!
மையொண் கருங்கடலும் நிலனும் மணிவரையும் செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர் தெய்வம் பிறிதறியேன் திருவிண்ணகரானே!
வேறே கூறுவதுண்டு அடியேன் விரித்துரைக்கு மாறே நீ பணியாது அடை நின் திருமனத்து கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம் தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே!
முளிந்தீந்த வெங்கடத்து மூரிப் பெருங்களிற்றால் விளிந்தீந்த மாமரம் போல் வீழ்ந்தாரை நினையாதே அளிந்தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்க்கு வானுலகம் தெளிந்தே என்று எய்துவது? திருவிண்ணகரானே!
சொல்லாய் திருமார்வா! உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ மல்லா!!! குடமாடீ! மதுசூதனே! உலகில் செல்லா நல்லிசையாய்! திருவிண்ணகரானே!
தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில் சீரார் நெடூமறுகில் திருவிண்ணகரானை காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை மல்லார் ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே
அடிவரவு: துறப்பேன் துறந்தேன் மானேய் சாந்து மற்றோர் மை வேறே முளிந்தீந்த சொல்லாய் தாரார் கண்ணும்