Skip to the text
இராமானுச நூற்றந்தாதி

இராமானுச நூற்றந்தாதி

திருவரங்கத்தமுதனார் · திருவாய்மொழி

Essence of this decad

"பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பா மன்னு மாறன் அடி பணிந்துய்ந்தவன் ... இராமானுசன் சரணாரவிந்தம்" — திருவரங்கத்தமுதனார் இராமானுசரைப் போற்றி அருளிய நூற்றெட்டுப் பாடல் அந்தாதி இது. மாறனின் (நம்மாழ்வார்) அடி பணிந்து உய்ந்தவராய், தென்னரங்கனோடு இணைத்து, ஆசாரியனையே சரணாக முன்வைக்கிறார். இறைவனை நோக்கிய பக்தி மட்டுமல்லாது, ஆசாரிய பக்தியை முழுதுமாய்ப் பாடும் ஒரே பிரபந்தம் இது — நாலாயிரத்தின் இறுதி முத்திரை. தொடர்ச்சியான அந்தாதியாய், ஒரு பெருஞ்செய்யுளாய் அமைந்தது.

3777

பூ மன்னு மாது பொருந்திய மார்பன்‌ புகழ்‌ மலிந்த பா மன்னு மாறன்‌ அடி பணிந்துய்ந்தவன்‌ பல்கலையோர்‌ தாம்‌ மன்ன வந்த இராமானுசன்‌ சரணாரவிந்தம்‌ நாம்‌ மன்னி வாழ நெஞ்சே! சொல்லுவோம்‌ அவன்‌ நாமங்களே

3778

கள்ளார்‌ பொழில்‌ தென்னரங்கன்‌ கமலப்‌ பதங்கள்‌ நெஞ்சில்‌ கொள்ளா மனிசரை நீங்கி குறையல்‌ பிரான்‌ அடிக்‌ கீழ்‌ விள்ளாத அன்பன்‌ இராமானுசன்‌ மிக்க சீலம்‌ அல்லால்‌ உள்ளாது என்‌ நெஞ்சு ஒன்றறியேன்‌ எனக்குற்ற பேரியல்வே

3779

பேரியல்‌ நெஞ்சே! அடி பணிந்தேன்‌ உன்னை பேய்ப்‌ பிறவிப்‌ பூரியரோடூள்ள சுற்றம்‌ புலத்திப்‌' பொருவரும்‌ சீர்‌ ஆரியன்‌ செம்மை இராமானுச முனிக்கன்பு செய்யும்‌ சீரிய பேறுடையார்‌ அடிக்‌ கீழ்‌ என்னைச்‌ சேர்த்ததற்கே

3780

என்னைப்‌ புவியில்‌ ஒரு பொருளாக்கி மருள்‌ சுரந்த முன்னைப்‌ பழவினை வேரறுத்து ஊழி முதல்வனையே பன்னப்‌ பணித்த இராமானுசன்‌ பரன்‌ பாதமும்‌ என்‌ சென்னித்‌ தரிக்க வைத்தான்‌ எனக்கேதும்‌ சிதைவில்லையே

3781

எனக்குற்ற செல்வம்‌ இராமானுசன்‌ என்று இசையகில்லா மனக்குற்ற மாந்தர்‌ பழிக்கில்‌ புகழ்‌ அவன்‌ மன்னிய சீர்‌ தனக்குற்ற அன்பர்‌ அவன்‌ திருநாமங்கள்‌ சாற்றும்‌ என்பா இனக்குற்றம்‌ காணகில்லார்‌ பத்தி ஏய்ந்த இயல்விதென்றே'

3782

இயலும்‌ பொருளும்‌ இசையத்‌ தொடுத்து ஈன்கவிகள்‌ அன்பால்‌ மயல்‌ கொண்டு வாழ்த்தும்‌ இராமானுசனை மதி இன்மையால்‌ பயிலும்‌ கவிகளில்‌ பத்தியில்லாத என்‌ பாவி நெஞ்சால்‌ முயல்கின்றனன்‌ அவன்‌ தன்‌ பெருங்‌ கீர்த்தி மொழிந்திடவே

3783

மொழியைக்‌ கடக்கும்‌ பெரும்‌ புகழான்‌ வஞ்ச முக்குறும்பாம்‌ குழியைக்‌ கடக்கும்‌ நம்‌! கூரத்தாழ்வான்‌ சரண்‌ கூடிய பின்‌ பழியைக்‌ கடத்தும்‌ இராமானுசன்‌ புகழ்‌ பாடி அல்லா வழியைக்‌ கடத்தல்‌ எனக்கினியாதும்‌ வருத்தமன்றே

3784

வருத்தும்‌ புறவிருள்‌ மாற்ற எம்‌ பொய்கைப்‌ பிரான்‌ மறையின்‌ குருத்தின்‌ பொருளையும்‌ செந்தமிழ்‌ தன்னையும்‌ கூட்டி ஒன்றத்‌ திரித்தன்றெரித்த திருவிளக்கைத்‌ தன்‌ திரு உள்ளத்தே இருத்தும்‌ பரமன்‌ இராமானுசன்‌ எம்‌ இறையவனே

3785

இறைவனைக்‌ காணும்‌ இதயத்திருள்‌ கெட ஞானம்‌ என்னும்‌ நிறை விளக்கேற்றிய பூதத்‌ திருவடி தாள்கள்‌ நெஞ்சத்‌ துறைய வைத்தாளும்‌ இராமானுசன்‌ புகழ்‌ ஓதும்‌ நல்லோர்‌ மறையினைக்‌ காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே

3786

மன்னிய பேரிருள்‌ மாண்ட பின்‌ கோவலுள்‌ மாமலராள்‌ தன்னொடு மாயனைக்‌ கண்டமை காட்டும்‌ தமிழ்த்‌ தலைவன்‌ பொன்னடி போற்றும்‌ இராமானுசற்கு அன்பு பூண்டவர்‌ தாள்‌ சென்னியில்‌ சூடும்‌ திரு உடையார்‌ என்றும்‌ சீரியரே

3787

சீரிய நான்மறைச்‌ செம்பொருள்‌ செந்தமிழால்‌ அளித்த பாரியலும்‌ புகழ்ப்‌ பாண்‌ பெருமாள்‌ சரணாம்‌ பதுமத்‌ தாரியல்‌ சென்னி இராமானுசன்‌ தன்னைச்‌ சார்ந்தவர்‌ தம்‌ காரிய! வண்மை என்னால்‌ சொல்லொணாது இக்கடலிடத்தே

3788

இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கிறைவன்‌ இணையடிப்‌ போது அடங்கும்‌ இதயத்து இராமானுசன்‌ அம்பொற்‌ பாதம்‌ என்றும்‌ கடங்கொண்டிறைஞ்சும்‌ திருமுனிவர்க்கன்றிக்‌ காதல்‌ செய்யாத்‌ திடங்கொண்ட ஞானியர்க்கே அடியேன்‌ அன்பு செய்வதுவே

3789

செய்யும்‌ பசுந்துளவத்‌ தொழில்‌ மாலையும்‌ செந்தமிழில்‌ பெய்யும்‌ மறைத்‌ தமிழ்‌ மாலையும்‌ பேராத சீர்‌ அரங்கத்து ஐயன்‌ கழற்கணியும்‌ பரன்‌ தாள்‌ அன்றி ஆதரியா மெய்யன்‌ இராமானுசன்‌ சரணே கதி வேறெனக்கே

3790

கதிக்குப்‌ பதறி வெங்கானமும்‌ கல்லும்‌ கடலும்‌ எல்லாம்‌ கொதிக்கத்‌ தவம்‌ செய்யும்‌ கொள்கை அற்றேன்‌ கொல்லி காவலன்‌ சொல்‌ பதிக்கும்‌ கலைக்‌ கவி பாடும்‌ பெரியவர்‌ பாதங்களே துதிக்கும்‌ பரமன்‌ இராமானுசன்‌ என்னைச்‌ சோர்விலனே

3791

சோராத காதல்‌ பெருஞ்‌ சுழிப்பால்‌ தொல்லை மாலை ஒன்றும்‌ பாராது அவனைப்‌ பல்லாண்டென்று காப்பிடூும்‌ பான்மையன்‌ தாள்‌ பேராத உள்ளத்து இராமானுசன்‌ தன்‌ பிறங்கிய சீர்‌ சாரா மனிசரைச்‌ சேரேன்‌ எனக்கு என்ன தாழ்வினியே?

3792

தாழ்வொன்றில்லா மறை தாழ்ந்து தலமுழுதும்‌ கலியே ஆள்கின்ற நாள்‌ வந்து அளித்தவன்‌ காண்மின்‌ அரங்கர்‌ மெளலி சூழ்கின்ற மாலையைச்‌ சூடிக்‌ கொடுத்தவள்‌ தொல்லருளால்‌ வாழ்கின்ற வள்ளல்‌ இராமானுசன்‌ என்னும்‌ மாமுனியே

3793

முனியார்‌ துயரங்கள்‌ முந்திலும்‌ இன்பங்கள்‌ மொய்த்திடினும்‌ கனியார்‌ மனம்‌ கண்ண மங்கை நின்றானை கலை பரவும்‌ தனி யானையைத்‌ தண்‌ தமிழ்‌ செய்த நீலன்‌ தனக்கு உலகில்‌ இஇனியானை எங்கள்‌ இராமானுசனை வந்தெய்தினரே

3794

எய்தற்கரிய மறைகளை ஆயிரம்‌ இன்தமிழால்‌ செய்தற்கு உலகில்‌ வரும்‌ சடகோபனை சிந்தை உள்ளே பெய்தற்கு இசையும்‌ பெரியவர்‌ சீரை உயிர்கள்‌ எல்லாம்‌ உய்தற்கு உதவும்‌ இராமானுசன்‌ எம்‌ உறுதுணையே

3795

உறுபெரும்‌ செல்வமும்‌ தந்தையும்‌ தாயும்‌ உயர்‌ குருவும்‌ வெறி தரு பூமகள்‌ நாதனும்‌ மாறன்‌ விளங்கிய சீர்‌ நெறி தரும்‌ செந்தமிழ்‌ ஆரணமே என்று இந்நீணிலத்தோர்‌ அறிதர நின்ற இராமானுசன்‌ எனக்கு ஆரமுதே

3796

ஆரப்‌ பொழில்‌ தென்‌ குருகைப்‌ பிரான்‌ அமுதத்‌ திருவாய்‌ ஈரத்‌ தமிழின்‌ இசை உணர்ந்தோர்கட்கு இனியவர்‌ தம்‌ சீரைப்‌ பயின்றுய்யும்‌ சீலங்கொள்‌ நாதமுனியை நெஞ்சால்‌ வாரிப்‌ பருகும்‌ இராமானுசன்‌ என்தன்‌ மாநிதியே

3797

நிதியைப்‌ பொழியும்‌ முகில்‌ என்று நீசர்‌ தம்‌ வாசல்‌ பற்றித்‌ துதிகற்று உலகில்‌ துவள்கின்றிலேன்‌ இனி தூய்‌ நெறி சேர்‌ எதிகட்கிறைவன்‌ யமுனைத்‌ துறைவன்‌ இணை அடியாம்‌ கதி பெற்றுடைய இராமானுசன்‌ என்னைக்‌ காத்தனனே

3798

கார்த்திகையானும்‌ கரி முகத்தானும்‌ கனலும்‌ முக்கண்‌ மூர்த்தியும்‌ மோடியும்‌ வெப்பும்‌ முதுகிட்டூ மூவுலகும்‌ பூத்தவனே! என்று போற்றிட வாணன்‌ பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும்‌ இராமானுசன்‌ என்தன்‌ சேம வைப்பே

3799

வைப்பாய வான்பொருள்‌ என்று நல்லன்பர்‌ மனத்தகத்தே எப்போதும்‌ வைக்கும்‌ இராமானுசனை இரு நிலத்தில்‌ ஒப்பார்‌ இலாத உறுவினையேன்‌!! வஞ்ச நெஞ்சில்‌ வைத்து முப்போதும்‌ வாழ்த்துவன்‌ என்னாம்‌ இது அவன்‌ மொய்‌ புகழ்க்கே?

3800

மொய்த்த என்‌!! தீவினையால்‌! பல்லுடல்‌ தொறும்‌ மூத்து அதனால்‌ எய்த்தொழிந்தேன்‌ முன நாள்கள்‌ எல்லாம்‌ இன்று கண்டுயர்ந்தேன்‌ பொய்த்தவம்‌ போற்றும்‌ புலைச்‌ சமயங்கள்‌ நிலத்தவியக்‌ கைத்த மெய்ஞ்‌ ஞானத்து இராமானுசன்‌ என்னும்‌ கார்‌ தன்னையே

3801

காரேய்‌ கருணை இராமானுச! இக்கடலிடத்தில்‌ ஆரே அறிபவர்‌ நின்‌ அருளின்‌ தன்மை அல்லலுக்கு நேரே உறைவிடம்‌ நான்‌ வந்து நீ என்னை உய்த்த பின்‌ உன்‌ சீரே உயிர்க்குயிராய்‌ அடியேற்கு இன்று தித்திக்குமே

3802

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என்‌ செய்‌ வினையாம்‌ மெய்க்‌ குற்றம்‌ நீக்கி விளங்கிய மேகத்தை மேவு நல்லோர்‌ எக்குற்றவாளர்‌ எது பிறப்பு ஏதியல்வாக நின்றோர்‌ அக்குற்றம்‌ அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே

3803

கொள்ளக்‌ குறைவற்றிலங்கி கொழுந்து விட்டோங்கிய உன்‌ வள்ளல்‌ தனத்தினால்‌ வல்வினையேன்‌ மனம்‌ நீ புகுந்தாய்‌ வெள்ளைச்‌ சுடர்‌ விடும்‌ உன்‌ பெரு மேன்மைக்கு இழுக்கிதென்று தள்ளுற்றிரங்கும்‌ இராமானுச! என்‌ தனி நெஞ்சமே

3804

நெஞ்சில்‌ கறை கொண்ட கஞ்சனைக்‌ காய்ந்த நிமலன்‌ நங்கள்‌ [6 அருவினையேன்‌ பஞ்சித்‌ திருவடிப்‌ பின்னை தன்‌ காதலன்‌ பாதம்‌ நண்ணா வஞ்சர்க்கரிய இராமானுசன்‌ புகழ்‌ அன்றி என்‌ வாய்‌ கொஞ்சிப்‌ பரவகில்லாது என்ன வாழ்வு இன்று கூடியதே!

3805

கூட்டும்‌ விதி என்று! கூடும்‌ கொலோ? தென்‌ குருகைப்‌ பிரான்‌ பாட்டென்னும்‌ வேதப்‌ பசுந்தமிழ்‌ தன்னைத்‌ தன்‌ பத்தி என்னும்‌ வீட்டின்‌ கண்‌ வைத்த இராமானுசன்‌ புகழ்‌ மெய்‌ உணர்ந்தோர்‌ ஈட்டங்கள்‌ தன்னை என்‌ நாட்டங்கள்‌ கண்டு இன்பம்‌ எய்திடவே

3806

இன்பம்‌ தரு பெரு வீடு வந்தெய்திலென்‌? எண்ணிறந்த துன்பம்‌ தரு நிரயம்‌ பல சூழிலென்‌? தொல்லுலகில்‌ மன்பல்லுயிர்கட்கு இறையவன்‌ மாயன்‌ என மொழிந்த அன்பன்‌ அனகன்‌ இராமானுசன்‌ என்னை ஆண்டனனே

3807

ஆண்டுகள்‌ நாள்‌ திங்களாய்‌ நிகழ்‌ காலம்‌ எல்லாம்‌ மனமே! ஈண்டு பல்‌ யோனிகள்‌ தோறுழல்வோம்‌ இன்றோரெண்ணின்றியே காண்தகு தோள்‌ அண்ணல்‌ தென்னத்தியூரர்‌ கழலிணைக்‌ கீழ்ப்‌ பூண்ட அன்பாளன்‌ இராமானுசனைப்‌ பொருந்தினமே

3808

பொருந்திய தேசும்‌ பொறையும்‌ திறலும்‌ புகழும்‌ நல்ல திருந்திய ஞானமும்‌ செல்வமும்‌ சேரும்‌ செறு கலியால்‌ வருந்திய ஞாலத்தை வண்மையினால்‌ வந்தெடுத்தளித்த அருந்தவன்‌ எங்கள்‌ இராமானுசனை அடைபவர்க்கே

3809

அடையார்‌ கமலத்து அலர்மகள்‌ கேள்வன்‌ கை ஆழி என்னும்‌ படையோடு நாந்தகமும்‌ படர்‌ தண்டும்‌ ஒண்‌ சார்ங்க வில்லும்‌ புடையார்‌ புரிசங்கமும்‌ இந்தப்‌ பூதலம்‌ காப்பதற்கு என்று இடையே இராமானுச முனி ஆயின இந்நிலத்தே

3810

நிலத்தைச்‌ செறுத்துண்ணும்‌ நீசக்‌ கலியை நினைப்பரிய பலத்தைச்‌ செறுத்தும்‌ பிறங்கியதில்லை என்‌ பெய்வினை தென்‌ புலத்தில்‌ பொறித்த அப்புத்தகச்‌ சும்மை பொறுக்கிய பின்‌ நலத்தைப்‌ பொறுத்தது இராமானுசன்‌ தன்‌ நயப்‌ புகழே

3811

நயவேன்‌ ஒரு தெய்வம்‌ நானிலத்தே சில மானிடத்தைப்‌ புயலே எனக்‌ கவி போற்றி செய்யேன்‌ பொன்னரங்கம்‌ என்னில்‌ மயலே பெருகும்‌ இராமானுசன்‌ மன்னு மாமலர்த்‌ தாள்‌ அயரேன்‌ அருவினை என்னை எவ்வாறு இன்றடர்ப்பதுவே?

3812

அடல்‌ கொண்ட நேமியன்‌ ஆருயிர்‌ நாதன்‌! அன்றாரணச்‌ சொல்‌ கடல்‌ கொண்ட ஒண்பொருள்‌ கண்டளிப்ப பின்னும்‌ காசினியோர்‌ இடரின்‌ கண்‌ வீழ்ந்திடத்‌ தானும்‌ அவ்வொண்பொருள்‌ கொண்டு அவர்‌ பின்‌ படரும்‌ குணன்‌ எம்‌ இராமானுசன்‌ தன்‌ படி இதுவே

3813

படி கொண்ட கீர்த்தி இராமாயணம்‌ என்னும்‌ பத்தி வெள்ளம்‌ குடு கொண்ட கோயில்‌ இராமானுசன்‌ குணம்‌ கூறும்‌ அன்பர்‌ கடிகொண்ட மாமலர்த்‌ தாள்‌ கலந்துள்ளம்‌ கனியும்‌ நல்லோர்‌ அடி கண்டு கொண்டுகந்து என்னையும்‌ ஆளவர்க்கு ஆக்கினரே

3814

ஆக்கி அடிமை நிலைப்‌ பித்தனை என்னை இன்று அவமே போக்கிப்‌ புறத்திட்டது என்பொருளா முன்பு புண்ணியர்‌ தம்‌ வாக்கில்‌ பிரியா இராமானுச! நின்‌ அருளின்‌ வண்ணம்‌ நோக்கில்‌ தெரிவரிதால்‌ உரையாய்‌ இந்த நுண்பொருளே

3815

பொருளும்‌ புதல்வரும்‌ பூமியும்‌ பூங்குழலாரும்‌ என்றே மருள்‌ கொண்டிளைக்கும்‌ நமக்கு நெஞ்சே! ர்‌ மற்றுளார்‌ தரமோ இருள்‌ கொண்ட வெந்துயர்‌ மாற்றித்‌ தன்னீறில்‌ பெரும்‌ புகழே தெருளும்‌ தெருள்‌ தந்து இராமானுசன்‌ செய்யும்‌ சேமங்களே

3816

சேம நல்‌ வீடும்‌ பொருளும்‌ தருமமும்‌ சீரிய நற்‌ காமமும்‌ என்றிவை நான்கென்பர்‌ நான்கினும்‌ கண்ணனுக்கே ஆமது காமம்‌ அறம்‌ பொருள்‌ வீடிதற்கென்றுரைத்தான்‌ வாமனன்‌ சீலன்‌! இராமானுசன்‌ இந்த மண்‌ மிசையே

3817

மண்மிசை யோனிகள்‌ தோறும்‌ பிறந்து எங்கள்‌ மாதவனே கண்ணுற நிற்கிலும்‌ காணகில்லா உலகோர்கள்‌ எல்லாம்‌ அண்ணல்‌ இராமானுசன்‌ வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம்‌ தலைக்‌ கொண்டு நாரணற்காயினரே

3818

ஆயிழையார்‌ கொங்கை தங்கும்‌ அக்காதல்‌ அளற்றழுந்தி மாயும்‌ என்‌ ஆவியை வந்தெடுத்தான்‌ இன்று மாமலராள்‌ நாயகன்‌ எல்லா உயிர்கட்கும்‌ நாதன்‌ அரங்கன்‌ என்னும்‌ தூயவன்‌ தீதில்‌ இராமானுசன்‌ தொல்லருள்‌ சுரந்தே

3819

சுரக்கும்‌ திருவும்‌ உணர்வும்‌ சொலப்புகில்‌ வாயமுதம்‌ பரக்கும்‌ இருவினை பற்றறவோடும்‌ படியில்‌ உள்ளீர்‌! உரைக்கின்றனன்‌ உமக்கு யான்‌ அறம்‌ சீறும்‌ உறுகலியைத்‌ துரக்கும்‌ பெருமை இராமானுசன்‌ என்று சொல்லுமினே

3820

சொல்லார்‌ தமிழ்‌ ஒரு மூன்றும்‌ சுருதிகள்‌ நான்கும்‌ எல்லை இல்லா அற நெறி யாவும்‌ தெரிந்தவன்‌ எண்ணரும்‌ சீர்‌ நல்லார்‌ பரவும்‌ இராமானுசன்‌ திருநாமம்‌ நம்பிக்‌ கல்லார்‌ அகலிடத்தோர்‌ எது பேறென்று காமிப்பரே

3821

பேறொன்று மற்றில்லை நின்‌ சரண்‌ அன்றி அப்பேறு அளித்தற்கு ஆறொன்றும்‌ இல்லை மற்றச்சரண்‌ அன்றி என்று இப்பொருளைத்‌ தேறும்‌ அவர்க்கும்‌ எனக்கும்‌ உனைத்‌ தந்த செம்மை சொல்லால்‌ கூறும்‌ பரமன்று இராமானுச! மெய்ம்மை கூறிடிலே

3822

கூறும்‌ சமயங்கள்‌ ஆறும்‌ குலைய குவலயத்தே மாறன்‌ பணித்த மறை உணர்ந்தோனை மதியிலியேன்‌ தேறும்படி என்‌ மனம்‌ புகுந்தானைத்‌ திசை அனைத்தும்‌ ஏறும்‌ குணனை இராமானுசனை இறைஞ்சினமே

3823

இறைஞ்சப்படூும்‌ பரன்‌ ஈசன்‌ அரங்கன்‌ என்று இவ்வுலகத்து அறம்‌ செப்பும்‌ அண்ணல்‌ இராமானுசன்‌ என்‌ அருவினையின்‌ திறம்‌ செற்று இரவும்‌ பகலும்‌ விடாது என்தன்‌ சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான்‌ எனக்கு ஆரும்‌ நிகரில்லையே

3824

நிகரின்றி நின்ற என்‌ நீசதைக்கு நின்‌' அருளின்‌ கணன்றிப்‌ புகல்‌ ஒன்றும்‌ இல்லை அருட்கும்‌ அஃதே புகல்‌ புன்மையிலோர்‌ பகரும்‌ பெருமை இராமானுச! இனி நாம்‌ பழுதே அகலும்‌ பொருள்‌ என்‌? பயன்‌ இருவோமழுக்குமான பின்னே

3825

ஆனது செம்மை அற நெறி பொய்ம்மை அறுசமயம்‌ போனது பொன்றி இறந்தது வெங்கலி பூங்கமலத்‌ தேனதி பாய்‌ வயல்‌ தென்னரங்கன்‌ கழல்‌ சென்னி வைத்துத்‌ தான்‌ அதில்‌ மன்னும்‌ இராமானுசன்‌ இத்தலத்துதித்தே

3826

உதிப்பன உத்தமர்‌ சிந்தையுள்‌ ஒன்னலர்‌ நெஞ்சம்‌ அஞ்சிக்‌ கொதித்திட மாறி நடப்பன ்‌ கொள்ளை வன்‌ குற்றம்‌ எல்லாம்‌ பதித்த என்‌ புன்கவிப்‌ பாவினம்‌ பூண்டன பாவுதொல்‌ சீர்‌ எதித்தலை நாதன்‌ இராமானுசன்‌ தன்‌ இணை அடியே

3827

அடியைத்‌ தொடர்ந்தெழும்‌ ஐவர்கட்காய்‌ அன்று பாரதப்‌ போர்‌ முடியப்‌ பரிநெடுந்தேர்‌ விடும்‌ கோனை முழுதுணர்ந்த அடியர்க்கமுதம்‌ இராமானுசன்‌ என்னை ஆள வந்து இப்‌ படியில்‌ பிறந்தது மற்றில்லை காரணம்‌ பார்த்திடிலே

3828

பார்த்தான்‌ அறுசமயங்கள்‌ பதைப்ப இப்பார்‌ முழுதும்‌ போர்த்தான்‌ புகழ்‌ கொண்டு புன்மையினேன்‌ இடைத்‌ தான்‌ புகுந்து தீர்த்தான்‌ இருவினை தீர்த்து அரங்கன்‌ செய்ய தாளிணையோடு ஆர்த்தான்‌ இவை எம்‌ இராமானுசன்‌ செய்யும்‌ அற்புதமே

3829

அற்புதன்‌ செம்மை இராமானுசன்‌ என்னை ஆள வந்த கற்பகம்‌ கற்றவர்‌ காமுறு சீலன்‌ கருதரிய பற்பல்லுயிர்களும்‌ பல்லுலகு யாவும்‌ பரனதென்னும்‌ நற்பொருள்‌ தன்னை இந்நானிலத்தே வந்து நாட்டுனனே

3830

நாட்டிய நீசச்‌ சமயங்கள்‌ மாண்டன நாரணனைக்‌ காட்டிய வேதம்‌ களிப்புற்றது தென்‌ குருகை வள்ளல்‌ வாட்டமிலா வண்‌ தமிழ்‌ மறை வாழ்ந்தது மண்ணுலகில்‌ ஈட்டிய சீலத்து இராமானுசன்‌ தன்‌ இயல்வு கண்டே

3831

கண்டவர்‌ சிந்தை கவரும்‌ கடிபொழில்‌ தென்னரங்கன்‌ தொண்டர்‌ குலாவும்‌ இராமானுசனைத்‌ தொகையிறந்த பண்தரு வேதங்கள்‌ பார்மேல்‌ நிலவிடப்‌ பார்த்தருளும்‌ கொண்டலை மேவித்‌ தொழும்‌ குடியாம்‌ எங்கள்‌ கோக்குலமே!?

3832

கோக்குல மன்னரை மூவெழுகால்‌ ஒரு கூர்‌ மழுவால்‌ போக்கிய தேவனைப்‌ போற்றும்‌ புனிதன்‌ புவனம்‌ எங்கும்‌ ஆக்கிய கீர்த்தி இராமானுசனை அடைந்த பின்‌ என்‌ வாக்குரையாது என்‌ மனம்‌ நினையாது இனி மற்றொன்றையே

3833

மற்றொரு பேறு மதியாது அரங்கன்‌ மலரடிக்கு ஆள்‌ உற்றவரே தனக்குற்றவராய்க்‌ கொள்ளும்‌ உத்தமனை நற்றவர்‌ போற்றும்‌ இராமானுசனை இந்நானிலத்தே பெற்றனன்‌ பெற்ற பின்‌ மற்றறியேன்‌ ஒரு பேதைமையே

3834

பேதையர்‌ வேதப்‌ பொருள்‌ இதென்று உன்னிப்‌ பிரமம்‌ நன்றென்று ஓதி மற்றெல்லா உயிரும்‌ அஃதென்றே உயிர்கள்‌ மெய்‌ விட்டு ஆதிப்‌ பரனோடு ஒன்றாம்‌ என்று சொல்லும்‌ அவ்வல்லல்‌ எல்லாம்‌ வாதில்‌ வென்றான்‌ எம்‌ இராமானுசன்‌ மெய்ம்மதிக்‌ கடலே

3835

கடல்‌ அளவாய திசை எட்டினுள்ளும்‌ கலி இருளே மிடை தரு காலத்து இராமானுசன்‌ மிக்க நான்மறையின்‌ சுடர்‌ ஒளியால்‌ அவ்விருளைத்‌ துரந்திலனேல்‌ உயிரை உடையவன்‌ நாரணன்‌ என்று அறிவார்‌ இல்லை உற்றுணர்ந்தே

3836

உணர்ந்த மெய்ஞ்‌ ஞானியர்‌ யோகந்தொறும்‌ திருவாய்மொழியின்‌ மணம்‌ தரும்‌ இன்னிசை மன்னும்‌ இடந்தொறும்‌ மாமலராள்‌ புணர்ந்த பொன்மார்பன்‌ பொருந்தும்‌ பதி தொறும்‌ புக்கு நிற்கும்‌ குணம்‌ திகழ்‌ கொண்டல்‌ இராமானுசன்‌ எம்‌ குலக்‌ கொழுந்தே

3837

கொழுந்து விட்டோடுப்‌ படரும்‌ வெங்கோள்வினையால்‌ நிரயத்து அழுந்தியிட்டேனை வந்தாட்‌ கொண்ட பின்னும்‌ அருமுனிவர்‌ தொழும்‌ தவத்தோன்‌ எம்‌ இராமானுசன்‌ தொல்‌ புகழ்‌! சுடர்‌ மிக்‌ கெழுந்தது அத்தால்‌ நல்லதிசயம்‌ கண்டது இருநிலமே

3838

இருந்தேன்‌ இருவினைப்‌ பாசம்‌ கழற்றி இன்று யான்‌ இறையும்‌ வருந்தேன்‌ இனி எம்‌ இராமானுசன்‌ மன்னு மாமலர்த்‌ தாள்‌ பொருந்தா நிலையுடைப்‌ புன்மையினோர்க்கு ஒன்றும்‌ நன்மை செய்யாப்‌ பெருந்தேவரைப்‌! பரவும்‌ பெரியோர்‌ தம்‌ கழல்‌ பிடித்தே

3839

பிடியைத்‌ தொடரும்‌ களிறென்ன யான்‌ உன்‌ பிறங்கிய சீர்‌ அடியைத்‌ தொடரும்படி நல்க வேண்டும்‌ அறுசமயச்‌ செடியைத்‌ தொடரும்‌ மருள்‌ செறிந்தோர்‌ சிதைந்தோட வந்து இப்‌ படியைத்‌ தொடரும்‌ இராமானுச! மிக்க பண்டிதனே!

3840

பண்தரு மாறன்‌ பசுந்தமிழ்‌ ஆனந்தம்‌ பாய்‌ மதமாய்‌ விண்டிட எங்கள்‌ இராமானுச முனி வேழம்‌ மெய்ம்மை கொண்ட நல்‌ வேதக்‌ கொழுந்தண்டம்‌ ஏந்திக்‌ குவலயத்தே மண்டி வந்தேன்றது வாதியர்காள்‌! உங்கள்‌ வாழ்வற்றதே

3841

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும்‌ மறையவர்‌ தம்‌ தாழ்வற்றது தவம்‌ தாரணி பெற்றது தத்துவ நூல்‌ கூழற்றது குற்றம்‌ எல்லாம்‌ பதித்த குணத்தினர்க்கு அந்‌ நாழற்றது நம்‌ இராமானுசன்‌ தந்த ஞானத்திலே

3842

ஞானம்‌ கனிந்த நலம்‌ கொண்டு நாள்‌ தொறும்‌ நைபவர்க்கு வானம்‌ கொடுப்பது மாதவன்‌ வல்வினையேன்‌ மனத்தில்‌ ஈனம்‌ கடிந்த இராமானுசன்‌ தன்னை எய்தினர்க்கு அத்‌ தானம்‌ கொடுப்பது தன்‌ தகவென்னும்‌ சரண்‌ கொடுத்தே

3843

சரணம்‌ அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம்‌ அடைவித்த மாயவன்‌ தன்னை வணங்க வைத்த கரணம்‌ இவை உமக்கன்றென்று இராமானுசன்‌ உயிர்கட்கு அரண்‌ அங்கமைத்திலனேல்‌ அரணார்‌ மற்று இவ்வாருயிர்க்கே?

3844

ஆர்‌ எனக்கின்று நிகர்‌ சொல்லில்‌? மாயன்‌ அன்று ஐவர்‌ தெய்வத்‌ தேரினில்‌ செப்பிய கீதையின்‌ செம்மைப்‌ பொருள்‌ தெரியப்‌ பாரினில்‌ சொன்ன இராமானுசனைப்‌ பணியும்‌ நல்லோர்‌ சீரினில்‌ சென்று பணிந்தது என்‌ ஆவியும்‌ சிந்தையுமே

3845

' தன்‌ புகழ்‌ [8 பெருந்தேவனைப்‌ சிந்தையினோடு கரணங்கள்‌ யாவும்‌ சிதைந்து முன்னாள்‌ அந்தழுற்றாழ்ந்தது கண்டு இவை என்தனக்கு அன்றருளால்‌ தந்த அரங்கனும்‌ தன்‌ சரண்‌ தந்திலன்‌ தானது தந்து எந்தை இராமானுசன்‌ வந்தெடுத்தனன்‌ இன்றென்னையே

3846

என்னையும்‌ பார்த்து என்‌ இயல்வையும்‌ பார்த்து எண்ணில்‌ பல்குணத்த உன்னையும்‌ பார்க்கில்‌ அருள்‌ செய்வதே நலம்‌ அன்றி என்பால்‌ பின்னையும்‌ பார்க்கில்‌ நலம்‌ உளதே? உன்‌ பெருங்‌ கருணை தன்னை என்‌ பார்ப்பர்‌? இராமானுச! உன்னைச்‌ சார்ந்தவரே

3847

சார்ந்ததென்‌ சிந்தை உன்‌ தாளிணைக்‌ கீழ்‌ அன்பு தான்‌ மிகவும்‌ கூர்ந்தது அத்தாமரைத்‌ தாள்களுக்கு உன்தன்‌ குணங்களுக்கே தீர்ந்தது என்‌ செய்கை முன்‌ செய்வினை நீ செய்வினை! அதனால்‌ பேர்ந்தது வண்மை இராமானுச! எம்‌ பெருந்தகையே!

3848

கைத்தனன்‌ தீய சமயக்‌ கலகரைக்‌ காசினிக்கே உய்த்தனன்‌ தூய மறை நெறி தன்னை என்றுன்னி உள்ளம்‌ நெய்த்தவன்‌ போடுருந்தேத்தும்‌ நிறை புகழோருடனே வைத்தனன்‌ என்னை இராமானுசன்‌ மிக்க வண்மை செய்தே

3849

வண்மையினாலும்‌ தன்‌ மாதகவாலும்‌ மதி புரையும்‌ தண்மையினாலும்‌ இத்தாரணியோர்கட்கு தான்‌ சரணாய்‌ உண்மை நல்‌ ஞானம்‌ உரைத்த இராமானுசனை உன்னும்‌ திண்மை அல்லால்‌ எனக்கில்லை மற்றோர்‌ நிலை தேர்ந்திடிலே

3850

தேரார்‌ மறையின்‌ திறம்‌ என்று மாயவன்‌ தீயவரைக்‌ கூராழி கொண்டு குறைப்பது கொண்டல்‌ அனைய வண்மை ஏரார்‌ குணத்து எம்‌ இராமானுசன்‌ அவ்வெழில்‌ மறையில்‌ சேராதவரைச்‌ சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே

3851

செய்த்தலைச்‌ சங்கம்‌ செழுமுத்தமீனும்‌ திருவரங்கர்‌ கைத்தலத்தாழியும்‌ சங்கமும்‌ ஏந்தி நங்கண்‌ முகப்பே மொய்த்தலைத்து!'! உன்னை விடேன்‌ என்றிருக்கிலும்‌ நின்‌ புகழே மொய்த்தலைக்கும்‌ வந்து இராமானுச! என்னை முற்றும்‌ நின்றே

3852

நின்றவண்‌ கீர்த்தியும்‌ நீள்‌ புனலும்‌ நிறை வேங்கடப்‌ பொற்‌ குன்றமும்‌ வைகுந்த நாடும்‌ குலவிய பாற்கடலும்‌ உன்தனக்கு எத்தனை இன்பம்‌ தரும்‌ உன்‌ இணை மலர்த்‌ தாள்‌ என்தனக்கும்‌ அது இராமானுச! இவை ஈந்தருளே

3853

!!! மய்த்தலத்து ஈந்தனன்‌ ஈயாத இன்னருள்‌ எண்ணில்‌ மறைக்‌ குறும்பைப்‌ பாய்ந்தனன்‌ அம்மறைப்‌ பல்பொருளால்‌ இப்படி அனைத்தும்‌ ஏய்ந்தனன்‌! ' கீர்த்தியினால்‌ என்‌ வினைகளை வேர்‌ பறியக்‌ காய்ந்தனன்‌ வண்மை இராமானுசற்கு என்‌ கருத்தினியே?

3854

கருத்தில்‌ புகுந்து உள்ளில்‌ கள்ளம்‌ கழற்றி கருதரிய வருத்தத்தினால்‌ மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே திருத்தித்‌ திருமகள்‌ கேள்வனுக்காக்கிய பின்‌ என்‌ நெஞ்சில்‌ பொருத்தப்‌ படாது எம்‌ இராமானுச! மற்றோர்‌ பொய்ப்‌ பொருளே

3855

பொய்யைச்‌ சுரக்கும்‌ பொருளைத்‌ துறந்து இந்தப்‌ பூதலத்தே மெய்யைப்‌ புரக்கும்‌ இராமானுசன்‌ நிற்க வேறு நம்மை உய்யக்‌ கொள்ள வல்ல தெய்வம்‌ இங்கு யாதென்று உலர்ந்தவமே ஐயப்படா நிற்பர்‌ வையத்துள்ளோர்‌ நல்லறிவிழந்தே

3856

நல்லார்‌ பரவும்‌ இராமானுசன்‌ திரு நாமம்‌ நம்ப வல்லார்‌ திறத்தை மறவாதவர்கள்‌!' எவர்‌ ்‌ அவர்க்கே எல்லா இடத்திலும்‌ என்றும்‌ எப்போதிலும்‌ எத்தெழும்பும்‌ சொல்லால்‌ மனத்தால்‌ கருமத்தினால்‌ செய்வன்‌ சோர்வின்றியே

3857

சோர்வின்றி உன்தன்‌ துணை அடிக்‌ கீழ்‌ தொண்டு பட்டவர்‌ பால்‌ சார்வின்றி நின்ற எனக்கு அரங்கன்‌ செய்ய தாளிணைகள்‌ பேர்வின்றி இன்று பெறுத்தும்‌ இராமானுச! இனி உன்‌ சீர்‌ ஒன்றிய கருணைக்கு இல்லை மாறு தெரிவுறிலே

3858

தெரிவுற்ற ஞாலம்‌ செறியப்‌ பெறாது வெந்த வினையால்‌ உருவற்ற ஞானத்து! உழல்கின்ற என்னை ஒரு பொழுதில்‌ பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான்‌ என்ன புண்ணியனோ? தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன்‌ என்னும்‌ சீர்‌ முகிலே

3859

சீர்‌ கொண்டு பேரறம்‌ செய்து நல்வீடு செறிதும்‌!' என்னும்‌ பார்‌ கொண்ட மேன்மையர்‌ கூட்டன்‌ அல்லேன்‌ உன்‌ பத யுகமாம்‌ ஏர்‌ கொண்ட வீட்டை! எளிதினில்‌ எய்துவன்‌ உன்னுடைய கார்‌ கொண்ட வண்மை இராமானுச! இது கண்டு கொள்ளே

3860

கண்டு கொண்டேன்‌ எம்‌ இராமானுசன்‌ தன்னை காண்டலுமே தொண்டு கொண்டேன்‌ அவன்‌ தொண்டர்‌ பொற்றாளில்‌ என்‌ ! மதியாதவர்கள்‌ தொல்லை வெந்நோய்‌ விண்டு கொண்டேன்‌ அவன்‌ சீர்‌ வெள்ளவாரியை வாய்மடுத்து இன்று உண்டு கொண்டேன்‌ இன்னம்‌ உற்றனவோதில்‌ உலப்பில்லையே

3861

ஓதிய வேதத்தின்‌ உட்பொருளாய்‌ அதன்‌ உச்சி மிக்க சோதியை நாதன்‌ என அறியாது உழல்கின்ற தொண்டர்‌ பேதைமை தீர்த்த! இராமானுசனைத்‌ தொழும்‌ பெரியோர்‌ பாதம்‌ அல்லால்‌ என்தன்‌ ஆருயிர்க்கு யாதொன்றும்‌ பற்றில்லையே

3862

பற்றா மனிசரைப்‌ பற்றி அப்பற்று விடாதவரே உற்றார்‌ என உழன்று ஓடு நையேன்‌ இனி ஒள்ளிய நூல்‌ கற்றார்‌ பரவும்‌ இராமானுசனைக்‌ கருதும்‌ உள்ளம்‌ பெற்றார்‌ யவர்‌ அவர்‌ எம்மை நின்றாளும்‌ பெரியவரே

3863

பெரியவர்‌ பேசிலும்‌ பேதையர்‌ பேசிலும்‌ தன்‌ குணங்கட்கு உரிய சொல்‌ என்றும்‌ உடையவன்‌ என்றென்று உணர்வின்‌ மிக்கோர்‌ தெரியும்‌ வண்கீர்த்தி இராமானுசன்‌ மறை தேர்ந்துலகில்‌ புரியு நல்‌ ஞானம்‌ பொருந்தாதவரைப்‌ பொரும்‌ கலியே

3864

கலி மிக்க செந்நெல்‌ கழனிக்‌ குறையல்‌ கலைப்‌ பெருமான்‌ ஒலி மிக்க பாடலை உண்டு தன்‌ உள்ளம்‌ தடித்து அதனால்‌ வலி மிக்க சீயம்‌ இராமானுசன்‌ மறை வாதியராம்‌ புலிமிக்கதென்று இப்புவனத்தில்‌ வந்தமை போற்றுவனே

3865

போற்றரும்‌ சீலத்து இராமானுச! நின்‌ புகழ்‌ தெரிந்து சாற்றுவனேல்‌ அது தாழ்வு அது தீரில்‌ உன்‌ சீர்‌ தனக்கோர்‌ ஏற்றமென்றே கொண்டிருக்கிலும்‌ என்‌ மனம்‌ ஏத்தி அன்றி ஆற்றகில்லாது இதற்கென்‌ நினைவாய்‌ என்றிட்டஞ்சுவனே

3866

நினையார்‌! பிறவியை நீக்கும்‌ பிரானை இந்நீள்‌ நிலத்தே எனையாள வந்த இராமானுசனை இருங்கவிகள்‌ புனையார்‌ புனையும்‌ பெரியவர்‌ தாள்களில்‌ பூந்தொடையல்‌ வனையார்‌ பிறப்பில்‌ வருந்துவர்‌ மாந்தர்‌ மருள்‌ சுரந்தே

3867

மருள்‌ சுரந்து ஆகம வாதியர்‌ கூறும்‌ அவப்‌! பொருளாம்‌ இருள்‌ சுரந்து! எய்த்த உலகிருள்‌ நீங்க தன்‌ ஈண்டிய சீர்‌ அருள்‌ சுரந்து எல்லா உயிர்கட்கும்‌ நாதன்‌ அரங்கன்‌ என்னும்‌ பொருள்‌ சுரந்தான்‌ எம்‌ இராமானுசன்‌ மிக்க! புண்ணியனே

3868

19 நினைவார்‌ புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்‌ அடி போற்றி செய்யும்‌ நுண்ணரும்‌ கேள்வி நுவன்றுமிலேன்‌ செம்மை நூற்புலவர்க்கு எண்ணரும்‌ கீர்த்தி இராமானுச! இன்று நீ புகுந்து என்‌ கண்ணுள்ளும்‌ நெஞ்சுள்ளும்‌ நின்ற இக்காரணம்‌ கட்டூரையே

3869

கட்டப்‌ பொருளை மறைப்‌ பொருள்‌ என்று கயவர்‌ சொல்லும்‌ பெட்டைக்‌ கெடுக்கும்‌ பிரான்‌ அல்லனே? என்‌ பெரு வினையைக்‌ கிட்டிக்‌ கிழங்கொடு தன்‌ அருள்‌ என்னும்‌ ஒள்வாள்‌ உருவி வெட்டிக்‌ களைந்த இராமானுசன்‌ என்னும்‌ மெய்த்தவனே

3870

தவம்‌ தரும்‌ செல்வம்‌! தகவும்‌ தரும்‌ சலியாப்‌! பிறவிப்‌ பவம்‌ தரும்‌ தீவினை பாற்றித்‌ தரும்‌ பரந்தாமம்‌ என்னும்‌ திவம்‌ தரும்‌ தீதில்‌ இராமானுசன்‌ தன்னைச்‌ சார்ந்தவர்கட்கு உவந்தருந்தேன்‌ அவன்‌ சீர்‌ அன்றி யான்‌ ஒன்றும்‌ உள்மகிழ்ந்தே

3871

உண்ணின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே பண்ணும்‌ பரனும்‌ பரிவிலனாம்படி பல்லுயிர்க்கும்‌ விண்ணின்‌ தலை நின்று வீடளிப்பான்‌ எம்‌ இராமானுசன்‌ மண்ணின்‌ தலத்துதித்து மறை! நாலும்‌ வளர்த்தனனே

3872

வளரும்‌ பிணி கொண்ட வல்வினையால்‌ மிக்க நல்வினையில்‌ கிளரும்‌ துணிவு கிடைத்தறியாது முடைத்தலையூன்‌ தளரும்‌ அளவும்‌ தரித்தும்‌ விழுந்தும்‌ தனி திரிவேற்கு உளர்‌ எம்‌ இறைவர்‌ இராமானுசன்‌ தன்னை உற்றவரே

3873

தன்னை உற்றாட்‌ செய்யும்‌ தன்மையினோர்‌ மன்னு தாமரைத்‌ தாள்‌ தன்னை உற்றாட்‌ செய்ய என்னை உற்றான்‌ இன்று தன்‌ தகவால்‌ தன்னை உற்றார்‌ அன்றித்‌ தன்மை உற்றார்‌ இல்லை என்றறிந்து தன்னை உற்றாரை இராமானுசன்‌ குணம்‌ சாற்றிடூுமே

3874

இடுமே இனிய சுவர்க்கத்தில்‌ இன்னும்‌ நரகில்‌ இட்டூச்‌ சுடுமே? அவற்றைத்‌ தொடர்‌ தரு தொல்லை சுழல்‌ பிறப்பில்‌ நடுமே? இனி நம்‌ இராமானுசன்‌ நம்மை நம்‌ வசத்தே விடுமே? சரணம்‌ என்றால்‌ மனமே! நையல்‌ மேவுதற்கே

3875

தற்கச்‌ சமணரும்‌ சாக்கியப்‌ பேய்களும்‌ தாழ்‌ சடையோன்‌ சொற்கற்ற சோம்பரும்‌ சூனிய வாதரும்‌ ்‌ நான்மறையும்‌ நிற்கக்‌ குறும்பு செய்‌ நீசரும்‌ மாண்டனர்‌ நீள்நிலத்தே பொற்‌ கற்பகம்‌ எம்‌ இராமானுச முனி போந்த பின்னே

3876

போந்ததென்‌ நெஞ்சென்னும்‌ பொன்‌ வண்டு உனதடிப்‌ போதில்‌ ஒண்சீ ராம்‌ தெளி தேன்‌ உண்டு அமர்ந்திட வேண்டி நின்‌ பால்‌ அதுவே ஈந்திட வேண்டும்‌ இராமானுச! இது அன்றி ஒன்றும்‌ மாந்தகில்லாது இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே

3877

மயக்கும்‌ இருவினை வல்லியில்‌!' பூண்டு மதி மயங்கித்‌ துயக்கும்‌ பிறவியில்‌ தோன்றிய என்னைத்‌ துயர்‌ அகற்றி உயக்‌ கொண்டு நல்கும்‌ இராமானுச! என்றதுன்னை உன்னி நயக்கும்‌ அவர்க்கு இது இழுக்கென்பர்‌ நல்லவர்‌ என்றும்‌ நைந்தே

3878

நையும்‌ மனம்‌ உன்‌ குணங்களை உன்னி என்‌ நா இருந்து எம்‌ ஐயன்‌ இராமானுசன்‌ என்றழைக்கும்‌ அருவினையேன்‌ கையும்‌ தொழும்‌ கண்‌ கருதிடும்‌ காணக்‌ கடல்‌ புடை சூழ்‌ வையம்‌ இதனில்‌ உன்‌ வண்மை என்‌ பால்‌ என்‌ வளர்ந்ததுவே?

3879

வளர்ந்த வெங்கோப மடங்கலொன்றாய்‌ அன்று வாள்‌ அவுணன்‌ கிளர்ந்த பொன்‌ ஆகம்‌ கிழித்தவன்‌ கீர்த்திப்‌ பயிர்‌ எழுந்து விளைந்திடும்‌ சிந்தை இராமானுசன்‌ என்தன்‌ மெய்வினை நோய்‌ களைந்து நன்‌ ஞானம்‌ அளித்தனன்‌ கையில்‌ கனி என்னலே

3880

கையில்‌ கனி என்னக்‌ கண்ணனைக்‌ காட்டித்‌ தரிலும்‌ உன்தன்‌ மெய்யில்‌ பிறங்கிய சீர்‌ அன்றி வேண்டிலன்‌ யான்‌ நிரயத்‌ தொய்யில்‌ கிடக்கிலும்‌' சோதி விண்‌ சேரிலும்‌!'' இவ்வருள்‌ நீ செய்யில்‌ தரிப்பன்‌ இராமானுச! என்‌ செழுங்‌ கொண்டலே!

3881

செழுந்திரைப்‌ பாற்கடல்‌ கண்துயில்‌ மாயன்‌ திருவடிக்‌ கீழ்‌ விழுந்திருப்பார்‌ நெஞ்சில்‌ மேவு நன்‌ ஞானி நல்‌ வேதியர்கள்‌ தொழும்‌ திருப்பாதன்‌ இராமானுசனைத்‌ தொழும்‌ பெரியோர்‌ எழுந்திரைத்தாடூும்‌ இடம்‌ அடியேனுக்கு இருப்பிடமே

3882

இருப்பிடம்‌ வைகுந்தம்‌ வேங்கடம்‌ மாலிருஞ்சோலை என்னும்‌ பொருப்பிடம்‌ மாயனுக்கென்பர்‌ நல்லோர்‌ ர்‌ அவை தம்மொடும்‌! வந்து இருப்பிடம்‌ மாயன்‌ இராமானுசன்‌ மனத்து இன்றவன்‌ வந்து இருப்பிடம்‌ என்தன்‌ இதயத்துள்ளே தனக்கின்புறவே

3883

இன்புற்ற சீலத்து இராமானுச! என்றும்‌ எவ்விடத்தும்‌ என்புற்ற நோய்‌ உடல்‌ தோறும்‌ பிறந்திறந்து எண்ணரிய துன்புற்று வீயினும்‌ சொல்லுவதொன்றுண்டு உன்‌ தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி என்னை ஆக்கி அங்காட்படுத்தே

3884

அங்கயல்‌ பாய்‌ வயல்‌ தென்னரங்கன்‌ அணியாக மன்னும்‌ பங்கய மாமலர்ப்‌ பாவையைப்‌ போற்றுதும்‌ பத்தி எல்லாம்‌ தங்கியதென்னத்தழைத்து நெஞ்சே! நம்‌ தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன்‌ அடிப்‌ பூ மன்னவே