Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

4-3. உருப்பிணி நங்கை

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

உருப்பிணி நங்கையை மீட்க உருப்பனைத் தொடர்ந்து சென்று வென்றவனின் மலையைப் பாடும் பதிகம். ஒவ்வொரு பாசுரமும் அவனது ஒரு செயலைச் சொல்லி, "அந்த உறைப்பன் மலை" என்று திருமாலிருஞ்சோலையில் வந்து நிற்கிறது. கதைகள் மாறினாலும் சென்று சேரும் இடம் மாறுவதில்லை. ஆழ்வாருக்கு அம்மலையின் மேல் உள்ள ஈடுபாடு இப்பத்தில் நிறைவு பெறுகிறது.

பெரியாழ்வார்‌ திருமொழி 4-3 உருப்பிணி நங்கை (திருமாலிருஞ்சோலை மலையின்‌ சிறப்பு)

349

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான்‌ தொடர்ந்தோடிச்‌ சென்ற உருப்பனையோட்டிக்‌ கொண்டுட்டு உறைத்திட்ட உறைப்பன்‌ மலை பொருப்பிடைக்‌ கொன்றை நின்று முறியாழியும்‌ காசும்‌ கொண்டு விருப்பொடு பொன்‌ வழங்கும்‌ வியன்‌ மாலிருஞ்சோலையதே

350

கஞ்சனும்‌ காளியனும்‌ களிறும்‌ மருதும்‌ எருதும்‌ வஞ்சனையில்‌ மடிய வளர்ந்த மணிவண்ணன்‌ மலை நஞ்சுமிழ்‌ நாகம்‌ எழுந்தணவி நளிர்‌ மாமதியை செஞ்சுடர்‌ நாவளைக்கும்‌ திருமாலிருஞ்சோலையதே

351

மன்னு நரகன்‌ தன்னைச்‌ சூழ்‌ போகி வளைத்தெறிந்து கன்னி மகளிர்‌ தம்மைக்‌ கவர்ந்த கடல்வண்ணன்‌ மலை புன்னை செருந்தியொடு புனவேங்கையும்‌ கோங்கும்‌ நின்று பொன்னரி மாலைகள்‌ சூழ்‌ பொழில்‌ மாலிருஞ்சோலையதே

352

மாவலி தன்னுடைய மகன்‌ வாணன்‌ மகளிருந்த காவலைக்‌ கட்டழித்த தனிக்‌ காளை கருதும்‌ மலை கோவலர்‌ கோவிந்தனைக்‌ குற மாதர்கள்‌ பண்குறிஞ்சிப்‌ பாவொலி பாடி நடம்‌ பயில்‌ மாலிருஞ்சோலையதே க

353

பல பல நாழம்‌ சொல்லிப்‌ பழித்த சிசுபாலன்‌ தன்னை அலவலைமை தவிர்த்த அழகன்‌ அலங்காரன்‌ மலை ஈர்‌ குலமலை கோலமலை குளிர்‌ மாமலை கொற்றமலை நிலமலை நீண்டமலை திருமாலிருஞ்சோலையதே

354

பாண்டவர்‌ தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம்‌ ஆண்டு அங்கு நுற்றுவர்‌ தம்‌ பெண்டிர்‌ மேல்‌ வைத்த அப்பன்‌ மலை பாண்தகு வண்டினங்கள்‌ பண்கள்‌ பாடி மதுப்‌ பருக தோண்டலுடைய மலை தொல்லை மாலிருஞ்சோலையதே

355

கனங்குழையாள்‌ பொருட்டாக்‌ கணை பாரித்து அரக்கர்‌ தங்கள்‌ இனம்‌ கழுவேற்றுவித்த எழில்‌ தோள்‌ எம்மிராமன்‌ மலை கனம்கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல்‌ ஞாலம்‌ எல்லாம்‌ இனம்‌ குழுவாடும்‌ மலை எழில்‌ மாலிருஞ்சோலையதே

356

எரி சிதறும்‌ சரத்தால்‌ இலங்கையினை தன்னுடைய வரிசிலை வாயில்‌ பெய்து வாய்க்‌ கோட்டம்‌ தவிர்த்துகந்த அரையன்‌ அமரும்‌ மலை அமரரொடு கோனும்‌ சென்று திரிசுடர்‌ சூழும்‌ மலை திருமாலிருஞ்சோலையதே

357

கோட்டூமண்‌ கொண்டுடந்து குடங்கையில்‌ மண்‌ கொண்டளந்து மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடு விமலன்‌ மலை ஈட்டிய பல்பொருள்கள்‌ எம்பிரானுக்கு அடியுறையென்று ஓட்டரும்‌ தண்‌ சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே

358

ஆயிரம்‌ தோள்‌ பரப்பி முடியாயிரம்‌ மின்னிலக ஆயிரம்‌ பைந்தலைய அனந்த சயனன்‌ ஆளும்‌ மலை ஆயிரம்‌ ஆறுகளும்‌ சுனைகள்‌ பலவாயிரமும்‌ ஆயிரம்‌ பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே

359

மாலிருஞ்சோலை என்னும்‌ மலையை உடைய மலையை நாலிருமூர்த்தி தன்னை நால்வேதக்‌ கடல்‌ அமுதை மேலிருங்‌ கற்பகத்தை வேதாந்த விழுப்‌ பொருளில்‌ மேலிருந்த விளக்கை விட்டுசித்தன்‌ விரித்தனவே