Skip to the text
திருவாய்மொழி

4-8. ஏறாளும்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"ஏறாளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும் கூறாளும் தனி உடம்பன்" — சிவனும் நான்முகனும் திருமகளும் ஒரு பகுதியாகக் கொண்ட ஒற்றை உடலுடையவனைச் சொல்லும் பதிகம். பிற தெய்வங்களை மறுக்காமல், அவர்கள் அவனுள் இடம் பெறுவதாகக் காட்டும் நுட்பமான முறை இது. வேறுபாட்டை அழிக்காமல் ஒருமையை நிலைநாட்டுகிறார்.

திருவாய்மொழி 4-8 ஏறாளும்‌

3084

ஏறாளும்‌ இறையோனும்‌ திசைமுகனும்‌ திருமகளும்‌ கூறாளும்‌ தனி உடம்பன்‌ குலங்குலமா அசுரர்களை ர்‌ நீறாகும்படியாக நிருமித்துப்‌ படை தொட்ட மாறாளன்‌ கவராத மணிமாமை குறைவிலமே

3085

மணிமாமை குறைவில்லா மலர்மாதர்‌ உறை மார்பன்‌ அணிமானத்‌ தடவரைத்தோள்‌ அடலாழித்‌ தடக்கையன்‌ பணிமானம்‌ பிழையாமே அடியேனைப்‌ பணிகொண்ட மணிமாயன்‌ கவராத மடநெஞ்சால்‌ குறைவிலமே

3086

மடநெஞ்சால்‌ குறைவில்லா மகள்‌ தாய்‌ செய்தொரு பேய்ச்சி விடநஞ்ச முலை சுவைத்த மிகுஞானச்‌ சிறு குழவி படநாகத்தணைக்‌ கிடந்த பருவரைத்தோள்‌ பரம்புருடன்‌ நெடூமாயன்‌ கவராத நிறையினால்‌ குறைவிலமே

3087

நிறையினால்‌ குறைவில்லா நெடும்பணைத்தோள்‌ மடப்பின்னை பொறையினால்‌ முலையணைவான்‌ பொருவிடையேழ்‌ அடர்த்துகந்த ர்‌ கறையினார்‌ துவருடுக்கை கடையாவின்‌ கழிகோல்கை சறையினார்‌ கவராத தளிர்நிறத்தால்‌ குறைவிலமே

3088

தளிர்நிறத்தால்‌ குறைவில்லாத்‌ தனிச்சிறையில்‌ விளப்புற்ற கிளிமொழியாள்‌ காரணமாக்‌ கிளர்‌ அரக்கன்‌ நகர்‌ எரித்த களிமலர்த்‌ துழாய்‌ அலங்கல்‌ கமழ்முடியன்‌ கடல்‌ ஞாலத்து அளிமிக்கான்‌ கவராத அறிவினால்‌ குறைவிலமே

3089

அறிவினால்‌ குறைவில்லா அகல்ஞாலத்தவர்‌ அறிய நெறியெல்லம்‌ எடுத்துரைத்த நிறைஞானத்து ஒரு மூர்த்தி குறிய மாணுருவாகிக்‌ கொடுங்கோளால்‌ நிலம்‌ கொண்ட கிறியம்மான்‌ கவராத கிளரொளியால்‌ குறைவிலமே

3090

கிளரொளியால்‌ குறைவில்லா அரியுருவாய்க்‌ கிளர்ந்தெழுந்து கிளரொளிய இரணியணது அகல்மார்பம்‌ கிழித்துகந்த வளரொளிய கனலாழி வலம்புரியன்‌ மணிநீல வளரொளியான்‌ கவராத வரிவளையால்‌ குறைவிலமே

3091

வரிவளையால்‌ குறைவில்லாப்‌ பெருமுழக்கால்‌ அடங்காரை எரியழலம்‌ புகவூதி இருநிலமுன்‌ துயர்‌ தவிர்த்த தெரிவரிய சிவன்‌ பிரமன்‌ அமரர்‌ கோன்‌ பணிந்தேத்தும்‌ விரிபுகழான்‌ கவராத மேகலையால்‌ குறைவிலமே

3092

மேகலையால்‌ குறைவில்லா மெலிவுற்ற அகலல்குல்‌ போகமகள்‌ புகழ்த்‌ தந்தை விறல்‌ வாணன்‌ புயம்‌ துணித்து நாகமிசைத்‌ துயில்வான்‌ போல்‌ உலகெல்லாம்‌ நன்கொடூங்க யோகணைவான்‌ கவராத உடம்பினால்‌ குறைவிலமே

3093

உடம்பினால்‌ குறைவில்லா உயிர்‌ பிரிந்த மலைத்‌ துண்டம்‌ கிடந்தன போல்‌ துணிபலவா அசுரர்‌ குழாம்‌ துணித்துகந்த தடம்புனல சடைமுடியன்‌ தனியொரு கூறு அமர்ந்துறையும்‌ உடம்புடையான்‌ கவராத உயிரினால்‌ குறைவிலமே

3094

உயிரினால்‌ குறைவில்லா உலகேழ்‌ தன்னுள்‌ ஒடுக்கி தயிர்‌ வெண்ணெய்‌ உண்டானைத்‌ தடங்குருகூர்ச்‌ சடகோபன்‌ செயிரில்‌ சொல்லிசை மாலை ஆயிரத்துள்‌ இப்பத்தால்‌ வயிரம்‌ சேர்‌ பிறப்பறுத்து வைகுந்தம்‌ நண்ணுவரே