தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர் தீர திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன் வருமூர் கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மண நாறும் திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் புலவர் புகழ்க் கோலால் தூக்க - உலகு தன்னை வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே வைத்தெடுத்த பக்கம் வலிது
‹ திருச்சந்த விருத்தம்
திருச்சந்த விருத்தத் தனியன்கள்
திருமழிசைப்பிரான் · முதலாயிரம்