Skip to the text
பெருமாள் திருமொழி

பெருமாள் திருமொழித் தனியன்கள்

குலசேகர ஆழ்வார் · முதலாயிரம்

உடையவர்‌ அருளிச்‌ செய்தது

இன்னமுதம்‌ ஊட்டுகேன்‌ இங்கே வா பைங்கிளியே தென்னரங்கம்‌ பாட வல்ல சீர்ப்‌ பெருமாள்‌ - பொன்னஞ்‌ சிலை சேர்‌ நுதலியர்‌ வேள்‌ சேரலர்‌ கோன்‌ எங்கள்‌ குலசேகரன்‌ என்றே கூறு

மணக்கால்‌ நம்பி அருளிச்‌ செய்தது

ஆரம்‌ கெடப்‌ பரன்‌ அன்பர்‌ கொள்ளார்‌ என்று அவர்களுக்கே வாரம்‌ கொடு குடப்‌ பாம்பிற்‌ கை இட்டவன்‌ மாற்றலரை வீரம்‌ கெடுத்த செங்கோல்‌ கொல்லி காவலன்‌ வில்லவர்‌ கோன்‌ சேரன்‌ குலசேகரன்‌ முடி வேந்தர்‌ சிகாமணியே