அல்லிநாள் தாமரை மேல் ஆரணங்கினின் துணைவி மல்லி நாடாண்ட மடமயில் - மெல்லியலாள் ஆயர்குல வேந்தனாகத்தாள் தென் புதுவை வேயர் பயந்த விளக்கு
‹ நாச்சியார் திருமொழி
நாச்சியார் திருமொழித் தனியன்கள்
ஆண்டாள் · முதலாயிரம்
திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச் செய்தது
முதலாவது வானமாமலை ஸ்வாமி அருளிச் செய்தது
கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும் சீலத்தனள் தென் திருமல்லி நாடி செழுங்குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கருக்கீயும் மதிப்புடைய சோலைக் கிளி அவள் தூய நற்பாதம் துணை நமக்கே