Skip to the text
ஸ்ரீவைஷ்ணவதினசரி

ஸ்ரீவைஷ்ணவதினசரி

வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்

தனியன்சீரொன்று தூப்புல்‌ திருவேங்கடம்‌ உடையான்‌ பாரொன்றச்‌ சொன்ன பழமொழியுள்‌ - ஓரொன்று தானே அமையாதோ தாரணியில்‌ வாழ்வார்க்கு வானேறப்‌ போமளவும்‌ வாழ்வு
Essence of this decad

ஸ்ரீவைஷ்ணவன் ஒரு நாளை எப்படிக் கழிக்க வேண்டும் என்பதைச் சொல்லும் பத்துப் பாசுரங்கள். மலர், நீர், அமுது என வழிபாட்டின் நிகழ்வுகளை நாள் முழுவதும் பரப்பி வைக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் வழிபாட்டின் ஒரு பகுதியாக மாறும் வடிவமைப்பு இது. கோட்பாட்டை அன்றாட வழக்கமாக மாற்றும் நூல்.

1

வரியிருள்‌ அழிவழி மனம்‌ வரும்‌ உணர்வொடு கரிகிரி மருவிய கரியவன்‌ அடியிணை பரிவொடு பரவுநல்‌ அடியவர்‌ பழவுரை அரியரி அரியரி அரியரி அரியே

2

வினைவகை ஒழுகிய வெறிநிலை அடையவும்‌ நினைவுடை நிகழ்வெதிர்‌ நிலை நலம்‌ அணுகிட மனமுரை கிரிசைகள்‌ மகிழ்மறை நெறிகொடு தனி முதல்‌ அடியிணை அடிபவர்‌ தமரே

3

மலர்மகள்‌ மருவிய மறுவுடை இறையவன்‌ மலரடி கருதிய மனமுடை அடியவர்‌ மலர்புனல்‌ அமுதுடன்‌ வகையன அடையவும்‌ மலர்மதி எமதல என அறிபவரே

4

நிறையுடை மலர்மகள்‌ நலமுற மருவிய இறையவன்‌ இனிதுற இனியவை எணுமவர்‌ அறநெறி இலனெவன்‌ அணுகிலும்‌ அணுகிலர்‌ துறை அலதெனும்‌ ஒரு துறை படுகிலரே

5

ஒளிமதி எனவொரு திருவுடன்‌ உயர்பவன்‌ நளிமதி முகநகை நல நிலவுகவுகள்‌ தெளிபுனல்‌ அமுதெனச்‌ செழுமதி அடியவர்‌ குளிமுதல்‌ கிரிசைகள்‌ குறைகிலர்‌ வலவே

6

வருவதொருறவென வளர்‌ இளவரசென மருவுநன்‌ மகனென வனமத கரியென அருவிலை மணியென அடியவர்‌ அடைபவர்‌ அருகணை இறைவனை அரு கணையுடனே

7

விரைகமழ்‌ மலர்மகள்‌ மிகவுறும்‌ இறையவன்‌ குரைகழல்‌ குறுகிய குளிர்மதி மதியொடு வரைநிலை அடியவர்‌ மறைகளின்‌ மறையெணும்‌ உரைநிரை பரவுவர்‌ உளம்‌ அமுதுணவே

8

துதிகளும்‌ அறிவரு சுருதியின்‌ இறுதியின்‌ இதயம்‌ இதென முனி இறையவர்‌ உரைகளும்‌ மதுரமன்‌ உதவிய மறைகளும்‌ அடியவர்‌ விதிவகை பரவுவர்‌ மிகவுளம்‌ எழவே

9

அறிவிலர்‌ தலைமிசை அயனடி எழுதிய பொறிவகை எழுவதோர்‌ பொறிநலம்‌ உகவலர்‌ உறுவதும்‌ உடையதும்‌ இதுவென வருவது நறுமலர்‌ மகள்பதி நலமுறு நினைவே

10

பெருகிய நலநிலை பெருமையின்‌ மிகு மயல்‌ உருகிய நிலைமனம்‌ உயர்முகிழ்‌ எழுமுடல்‌ சொருகிய விழி திகழ்‌ சுடர்மதி புகுமிறை கருகிய வுரு திகழ்‌ கரிகிரி அரியே