அமலனவியாத சுடர் அளவில்லா ஆரமுதம் அமலவுருக் குணங்கள் அணி ஆயுதங்கள் அடியவர்கள் அமலவழியாத நகர் அழிந்தெழும் காவுடன் எல்லாம் கமலையுடன் அரசாளும் கரிகிரிமேல் காவலனே
அர்த்தபஞ்சகம்
வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்
Essence of this decad
"பூத உடல், புலன்கள், மனம், புல்லாவி, புந்தி எனும் யாதும் அலனாய்" — உடலும் புலன்களும் மனமும் அல்லாத ஆன்மாவின் இயல்பை விளக்கும் நூல். சம்பிரதாயத்தின் ஐந்து பொருள்களை — உயிர், இறைவன், உபாயம், பயன், தடை — சுருக்கமாகச் சொல்கிறது. தான் யார் என்ற வினாவிற்கு வரையறையான விடை தரும் நூல் இது.
உள்ளபொருள் அனைத்துக்கும் உருவநிலை கருமங்கள் தெள்ளிசைவின் வசமாக்கித் திகழ்ந்துயிராய் உறைகின்றான் நள்ளிருள் தீர்த்தடியவர்க்கு நலங்கொடுக்கும் திருவுடனே வள்ளலருளாளர் எனும் வாரண வெற்பிறையவனே
பூதவுடல் புலன்கள் மனம் புல்லாவி புந்தியெனும் யாதும் அலனாய் இலகி யானெனும் இன்னுண்ணறிவாய்ச் சேதனனாய் அடிமையுமாய் உயிர்க்கெல்லாம் திண்ணுயிராய்த் தீதலின்றித் திகழும் சீர் அத்திகிரித் திருமாலே
தானடைத்த குணம் கருவி தன் கிரிசைவழி ஒழுக்கி ஊன் எடுத்துண்டு-மிழ்ந்துழலும் உயிர்க்கெல்லாம் உயிராகிக் கான் நடத்திக் கமலையுடன் கண்டுகந்து விளையாடும் தேனெடுத்த சோலைகள் சூழ் திருவத்தியூரானே
உய்யும் உறவிசையாதே ஒத்தவர்க்கே அடிமையுமாய்ப் பொய்யுருவைத் தமக்கேற்றிப் புலன்கொண்ட பயனே கொண்டு ஐயுறவும் ஆரிருளும் அல்வழியும் அடைந்தவர்க்கு மெய்யருள் செய்திடும் திருமால் வேழமலை மேயவனே
விதைமுளையின் நியாயத்தால் அடியில்லா வினையடைவே சதையுடல நால்வகைக்கும் சரணளிப்பான் எனத் திகழ்ந்து பதவியறியாது பழம் பாழில் உழல்கின்றார்க்கும் சிதைவில் அருள்தரும் திருமால் திருவத்தி நகரானே
எம நியம ஆசனங்கள் இயலாவி புலனடக்கம் தமதறியுந் தாரணைகள் தாரையறா நினைவொழுக்கம் சமமுடைய சமாதி நலம் சாதிப்பார்க் கிலக்காகும் அமரர் தொழுமத்திகிரி அம்புயத்தாள் ஆரமுதே
புகல் உலகில்லாது பொன்னருள் கண்டுற்றவர்க்கும் அகலகிலா அன்பர்க்கும் அன்றே தன்னருள் கொடுத்துப் பகலதனால் பழம் கங்குல் விடிவிக்கும் பங்கயத்தாள் அகலகில்லேன் என்றுறையும் அத்திகிரி அருள்முகிலே
இருவிலங்கு விடுத்து இருந்த சிறைவிடுத்தோர் நாடியினால் கருநிலங்கள் கடக்கும் வழி காவலரால் கடத்துவித்துப் பெருநிலம் கண்டுயிருணர்ந்து பிரியாமல் அருள் செய்யும் உருநலம் கொண்டுறும் திருவோடு உயர் அத்திகிரியானே
தம் திருமாதுடனே தாம் தனியரசாய் உறைகின்ற அந்தமில் பேரின்பத்தில் அடியவரோடெமைச் சேர்த்து முந்தி யிழந்தன எல்லாம் முகிழ்க்கத் தந்தாட்கொள்ளும் அந்தமிலா அருளாழி அத்திகிரித் திருமாலே
அயன் பணியும் அத்திகிரி அருளாளர் அடியிணைமேல் நயங்கள்செறி கச்சிநகர் நான்மறையோர் நல்லருளால் பயன்கள் இவையனைத்தும் எனப் பண்டுரைத்தார் படியுரைத்த வியன்கலைகள் ஈரைந்தும் வேதியர்கட்கினியனவே