Skip to the text
பரமபதசோபானம்

பரமபதசோபானம்

வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்

தனியன்சீரொன்று தூப்புல்‌ திருவேங்கடம்‌ உடையான்‌ பாரொன்றச்‌ சொன்ன பழமொழியுள்‌ - ஓரொன்று தானே அமையாதோ தாரணியில்‌ வாழ்வார்க்கு வானேறப்‌ போமளவும்‌ வாழ்வு
Essence of this decad

பரமபதத்திற்குச் செல்லும் படிக்கட்டு என்னும் பெயருக்கேற்ப, படிப்படியான ஏற்றத்தைச் சொல்லும் நூல். "அருவுருவானவை அனைத்தும் அறிவாரேனும், அருங்கலைகள் கற்று உரைக்க வல்லாரேனும், தரும வழி அழியாமல்" — எவ்வளவு அறிந்தாலும் அறத்தின் வழி அழியாமல் நடப்பதே முதற்படி என்கிறார். அறிவை விட ஒழுக்கத்திற்கு முதலிடம் தரும் தெளிவு இதில் உண்டு.

1

வ்யாசீக்ருத்ய விமுக்தி செளதபதவீ சோபாந சத்வர்ணநம்‌ சாரீரார்ணவ ரத்நசாதமிகய: ப்ராசீகசத்‌ சர்வச: । தச்மிந்‌ திஷ்டதி வேங்கடேச்வர கவெள ஸ்ரீ பாஷ்யகாரோபமே யம்‌ கஞ்சித்‌ புருஷம்‌ க்யுபாசிதுமயோ மாகாமந: ச்வச்தி தே।। தச்மை நமோऽச்து குரவே தாத்ருச விபவாய வேங்கடேசாய । ப்ராவர்தயச்சநாநாம்‌ பூமெள பரமபத கர்ம்யசோபாநம்‌ ।। தேனேறு தாமரையாள்‌ திருமார்பன்‌ தன்‌ திண்‌ அருளால்‌ அவனடியில்‌ விவேகம்‌ பெற்றிங்கு ஊனேறு பவக்குழியை வெறுத்ததற்பின்‌ ஊர்‌ விரத்தியுடன்‌ வினையின்‌ திரளுக்கஞ்சிக்‌ கூனேறு பிறையிறையோன்‌ சாபம்‌ தீர்த்தான்‌ குரை கழலே சரணடைந்து குரம்பை விட்டு வானேறும்‌ வழிப்படிகள்‌ அடைவே கண்ட வண்புகழ்த்‌ தூப்புல்‌ வள்ளல்‌ அருள்‌ பெற்றோமே அடல்‌ புள்‌ அரசினும்‌ அந்தணர்‌ மாட்டினும்‌ இன்னமுதக்‌ கடற்பள்ளி தன்னினும்‌ காவிரி உள்ளம்‌ உகந்த பிரான்‌ இடைப்பிள்ளை ஆகி உரைத்ததுரைக்கும்‌ எதிவரனார்‌ மடைப்பள்ளி வந்த மணம்‌ எங்கள்‌ வார்த்தையுள்‌ மன்னியதே

2

கள்ள மனத்துடன்‌ கண்டு முயன்ற கடு வினையால்‌ நள்ளிருள்‌ ஆழியில்‌ நற்சுவை ஐந்தென நாடிய ஓர்‌ அள்ளலில்‌ நாளும்‌ விழுந்தழியாவகை ஆரணநூல்‌ வள்ளல்‌ வழங்கிய வான்‌ படியான வழியிதுவே

3

அருவுருவானவை அனைத்தும்‌ அறிவாரேனும்‌ அருங்கலைகள்‌ கற்றுரைக்க வல்லாரேனும்‌ தரும வழி அழியாமல்‌ காப்பாரேனும்‌ தனி மறையின்‌ தாத்பரியம்‌ தருவாரேனும்‌ இருவினையின்‌ ஒழுக்கத்தால்‌ ஏவல்‌ ஓராது இங்கே நாம்‌ சிறையிருந்த ஈனம்‌ தீர்க்கும்‌ திருமகளார்‌ பிரியாத தேவன்‌ திண்ணம்‌ தேறாதார்‌ திண்‌ படியில்‌ ஏறாதாரே

4

மறுத்தார்‌ திருவுடன்‌ மார்பில்‌ தரித்தவன்‌ வாசகத்தை மறுத்தார்‌ மயக்கமும்‌ மற்றதனால்‌ வந்த மாநரகும்‌ நிறுத்தார்‌ பவத்தில்‌ நெடுநாள்‌ உழன்றமை கண்டதனால்‌ வெறுத்தாரணநெறியே வெள்கியோட விரைவர்களே

5

வான்பட்ட மன்னிருளில்‌ மயங்குமாறும்‌ மறித்தொருகால்‌ எனையூழி சென்றால்‌ அன்றோர்‌ ஊன்பட்ட உடலாழி வினை ஒழுக்கில்‌ ஒரு கரையும்‌ காணாதே ஒழுகு மாறும்‌ தேன்‌ பட்ட விடம்போலத்‌ தித்திக்கின்ற சிறுபயனே உறுபயன்‌ என்றருந்துமாறும்‌ தான்‌ பட்டபடி இந்நேர்‌ தானே கண்டு தளர்ந்திடுமேல்‌ வளர்ந்திடுமே தக்கவாறே

6

உலகத்துயர்ந்தவர்‌ ஒன்றும்‌ பயனில்‌ உறும்‌ துயரும்‌ அலகில்‌ படாத அப்போகம்‌ கவர்ந்தெழும்‌ அம்புயத்தோன்‌ கலகத்‌ தொழில்‌ மது கைடபரால்‌ படும்‌ கட்டம்‌ எண்ணில்‌ பலகற்ற மெய்யடியார்‌ படியார்‌ இக்கடும்‌ பவத்தே

7

தந்திரங்கள்‌ அளவிலராய்த்‌ தனத்தால்‌ மிக்க தார்வேந்தர்‌ தொழவையம்‌ ஆண்டார்‌ மாண்டார்‌ சந்திரனும்‌ சூரியனும்‌ வீயும்‌ காலம்‌ தாரகையின்‌ வடமுமற்றுத்‌ தனிவானாளும்‌ இந்திரனும்‌ ஏறுயர்த்த ஈசன்‌ தானும்‌ ஈரிரண்டு முகத்தானும்‌ இல்லா அந்நாள்‌ நம்‌ திருமால்‌ நிலை கண்டார்‌ நாகமெல்லாம்‌ நரகென்று நற்பதமே நாடு வாரே

8

துறவறமே துணிவார்‌ துணுக்கற்ற இளம்‌ துணிவோர்‌ உறவிலர்‌ ஆதலின்‌ நாம்‌ உயர்ந்தாருடன்‌ ஒன்றி நின்றோம்‌ மறவழி மாற்றி எம்‌ மையலைத்‌ தீர்த்தவர்‌ மன்னருளால்‌ கறவை உகந்த பிரான்‌ கழல்‌ சூடும்‌ கருத்தினமே

9

வந்தனபோல்‌ வருவனவும்‌ அனந்த மாகி மாளாத துயர்தரு வல்வினை நெருப்புக்கு இந்தனமாய்‌ எண்ணிறந்த காலம்‌ எல்லாம்‌ இன்னமும்‌ இப்பவக்குழிக்கே இழியா வண்ணம்‌ வெந்ததொரு குழவியை நற்குமரனாக்கும்‌ வெறித்துளவ வித்தகனார்‌ விதியே கொண்டார்‌ பந்தனமாம்‌ அவை அனைத்தும்‌ பாறுகைக்குப்‌ பழ மறையின்‌ பரமநெறி பயிலுவாரே

10

கருமாலையில்‌ வரும்‌ கட்டம்‌ கழிக்கும்‌ கருத்துடையார்‌ ஒருமால்‌ பெருகும்‌ உயோகில்‌ முயன்றும்‌ அதன்றியும்‌ நம்‌ திருமால்‌ அடியிணை திண்‌ சரணாகும்‌ என வரித்தும்‌ தருமால்‌ இனியவை தானேயெனத்‌ தகவெண்ணுவரே

11

முன்‌ செய்த வினைத்திரளில்‌ முளைத்ததன்றி முற்றுள்ள முதலரிந்து முளைத்த கூற்றில்‌ தன்செய்ய திருவருளால்‌ இசைவு பார்த்துத்‌ தழல்‌ சேர்ந்த தூலமெனத்‌ தானே தீர்த்துப்‌ பின்‌ செய்த வினையில்‌ நினைவொன்றா தொன்றும்‌ பிழை பொறுத்து வேறுளது விரகால்‌ மாற்றும்‌ என்‌ செய்ய தாமரைக்கண்‌ பெருமான்‌ எண்ணம்‌ எண்ணாதார்‌ எட்டிரண்டும்‌ எண்ணாதாரே

12

உறையிட்ட வாளென ஊனுள்‌ உறையும்‌ யோகியரை நறைமட்டொழிவற்ற நற்றுளவேந்திய நாயகன்‌ தான்‌ நிறை மட்டிலாத நெடும்பயன்‌ காட்ட நினைந்து உடலச்‌ சிறை வெட்டிவிட்டு வழிப்படுத்தும்‌ வகை செய்திடுமே

13

முன்கருவி ஈரைந்தும்‌ மனத்தில்‌ கூட்டி முக்கியமாமருத்தில்‌ அவைசேர்த்ததெல்லாம்‌ நன்குணரும்‌ உயிரினில்‌ சேர்த்தைம்பூதத்தை நண்ணுவித்துத்‌ தான்‌ தன்பால்‌ வைக்கும்‌ நாதன்‌ ஒன்பதுடன்‌ வாசல்‌ இரண்டுடைத்தாய்‌ உள்ளே ஒரு கோடி துயர்விளைக்கும்‌ உடம்பாய்‌ ஒன்றும்‌ வன்‌ சிறையின்‌ தலைவாசல்‌ திறந்து நம்மை வானேற வழிப்‌ படுத்த மனமுற்றானே

14

தெருளார்‌ பிரமபுரத்திறை சேர்ந்து இடர்‌ தீர்ந்தவர்‌ தாம்‌ மருளார்‌ பிரமபுரச்‌ சிறை தீர்ந்தபின்‌ வந்தெதிர்‌ கொண்டு அருளால்‌ அமரர்‌ நடத்த இம்மாயை கடந்ததன்‌ பின்‌ சுருளார்‌ பவநரகச்‌ சுழல்‌ ஆற்றின்‌ சுழற்சியிலே

15

விழியல்லால்‌ வேலில்லை விண்ணின்‌ மாதர்‌ மேனியல்லால்‌ வில்லில்லை மீனவற்கு மொழியல்லால்‌ அமுதில்லை என்று முன்னாள்‌ முத்திவழி முனிந்தடைந்த மோகம்‌ தீர்ந்தோம்‌ கழியல்லால்‌ கடலில்லை என்பார்‌ போலக்‌ காரியமே காரணமென்றுரைப்பார்‌ காட்டும்‌ வழியல்லா வழியெல்லாம்‌ கடந்தோம்‌ மற்றும்‌ வானேறும்‌ வழி கண்டோம்‌ மகிழ்ந்திட்டோமே

16

வன்பற்றுடன்‌ மயல்‌ பூண்டு மற்றோர்‌ கதியால்‌ இனநாள்‌ என்‌ பற்றது பெறும்‌ தானமும்‌ எத்தனை போதுளதாம்‌ துன்பற்ற தன்‌ துணிவால்‌ துயர்தீர்க்கும்‌ துழாய்‌ முடியான்‌ இன்புற்ற நல்‌ வழியால்‌ ஏற்று நற்பதம்‌ எண்ணுவமே

17

பண்டை இருவினை ஆற்றில்‌ படிந்து பாரம்‌ காணாதே ஒழுகிய நாம்‌ பாக்கியத்தால்‌ வண்டமருமலர்‌ மாதர்‌ மின்னாய்‌ மன்ன வைசயந்தி மணிவில்லாய்‌ விளங்க வான்சேர்‌ கொண்டல்‌ அருள்‌ மழை பொழிய வந்த தொப்பாம்‌ குளிர்ந்து தெளிந்தமுதாய விரசை ஆற்றைக்‌ கண்டணுகிக்‌ கருத்தாலே கடந்து மீளாக்‌ கரை கண்டோர்‌ கதி எல்லாம்‌ கதித்திட்டோமே

18

பூவளரும்‌ திருமாது புணர்ந்த நம்‌ புண்ணியனார்‌ தாவளமான தனித்திவம்‌ சேர்ந்து தமருடனே நா வளரும்‌ பெரு நான்மறை ஓதிய கீதம்‌ எல்லாம்‌ பா வளரும்‌ தமிழ்ப்‌ பல்லாண்டிசையுடன்‌ பாடுவமே

19

அடலுரகம்‌ உண்டுமிழ்ந்த அருக்கன்‌ போல அழுக்கடைந்து கழுவிய நல்‌ தரளம்‌ போலக்‌ கடலொழுகிக்‌ கரை சேர்ந்த கலமே போலக்‌ காட்டுத்தீக்கலந்தொழிந்த களிறே போல மடல்கவருமயல்கழிந்த மாதர்‌ போல வன்சிறைபோய்‌ மன்னர்பதம்‌ பெற்றார்‌ போல உடன்முதலா உயிர்மறைக்கும்‌ மாயை நீங்கி உயர்ந்த பதமேறி உணர்ந்தொன்றினோமே

20

மண்ணுலகில்‌ மயல்‌ தீர்ந்து மனம்‌ ததும்பி மன்னாத பயன்‌ இகந்து மாலேயன்றிக்‌ கண்‌ இலதென்றஞ்சி அவன்கழலே பூண்டு கடும்‌ சிறை போய்க்‌ கரையேறும்‌ கதியே சென்று விண்ணுலகில்‌ வியப்பெல்லாம்‌ விளங்கக்‌ கண்டு விண்ணவர்‌ தம்‌ குழாங்களுடன்‌ வேதம்‌ பாடிப்‌ பண்‌ உலகில்‌ படியாத இசையால்‌ பாடும்‌ பல்லாண்டே பல்லாண்டும்‌ பாடு வோமே

21

மாளாத வினை அனைத்தும்‌ மாளநாம்‌ போய்‌ வானேறி மலர்மகளார்‌ அன்பு பூணும்‌ தோளாத மாமணிக்குத்‌ தொண்டு பூண்டு தொழுதுகந்து தோத்திரங்கள்‌ பாடியாடிக்‌ கேளாத பழமறையின்‌ கீதம்‌ கேட்டுக்‌ கிடையாத பேரின்பம்‌ பெருக நாளும்‌ மீளாத பேரடிமைக்கன்பு பெற்றோம்‌ மேதினியில்‌ இருக்கின்றோம்‌ விதியினாலே