சீராரும் வேதாந்த தேசிகர் கோன் செழுமறையின் உட்பொருளைச் சிந்தை செய்தே ஆராய்ந்து வாழ்வுற இப்புவியோர் தங்கட்கு அன்புடனே ஆகார நியதி சொன்னான் ஏராரும் எதிராசர் அருளினாலே எதிர்ந்தவர்கள் சிங்கமென இங்கு வந்தோன் சீராரும் வேங்கடவன் தூப்புல் பிள்ளைச் செழும் திருத்தாள் இணைமலர் என் சென்னி மேலே ஆகாரத் திருவகையாம் நன்றும் தீதும் அருமறை கொண்டெதிராசர் இவை மொழிந்தார் ஆகாத வழிவிலக்கி யாக்கும் கண்ணன் அனைத்துலகும் வாழவிது சாற்றி வைத்தான் போகாது போக்குவிக்கு முனிவர் சொன்ன பொய்யாத மொழிகளையும் பொருந்தக் கேண்மின் ஆகாதென்றிவை தவிர்ந்தாமதுவே கொண்ட அசகரனும் ஆகம் காத்தருள் பெற்றானே
ஆகாரநியமம்
வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்
Search Apple MusicNo catalogue id yet — opens a searchEssence of this decad
உண்ணும் உணவைக் குறித்த ஒழுக்க நெறிகளைச் சொல்லும் இருபத்தொரு பாசுரங்கள். யார் தொட்டது, யார் மோந்தது, எவ்வாறு சமைத்தது என்பதை நுணுக்கமாக விவரிக்கிறது. உடலுக்கு உட்செல்வது மனத்தையும் பாதிக்கும் என்னும் கொள்கை இதன் அடிப்படை. மிக அன்றாடமான ஒன்றை ஆன்மிக நெறியாகக் கருதும் மரபின் வெளிப்பாடு இது.
வாயிலல்லா வாயிலினால் வந்த சோறும் வரகு முதல் ஆகாதென்றுரைத்த சோறும் வாயினின்றும் விழுமவை தாம் பட்ட சோறும் வாய்க்கொண்ட கவளத்தின் மிகுந்த சோறும் தீயவர்கண் படும் சோறும் தீதற்சோறும் சீரையுரை தும்மல் இவை பட்ட சோறும் நாய் முதலானவை பார்க்கும் தீண்டும் சோறும் நாள் தூய்தல்லாச் சோறும் நண்ணாச் சோறே
மனிசர் பசு முதலானோர் மோந்த சோறும் மனிசர் தமில் ஆகாதார் தீண்டும் சோறும் இனிமையுடன் ஆதரமில்லாதார் சோறும் ஈப் புழு நூல் மயிர் உகிர்கள் இருக்கும் சோறும் முனிவரெனும் துறவறத்தோர் ஈந்த சோறும் முனிவர் தங்கள் பாத்திரத்தில் பட்ட சோறும் மனிசர் எலி குக்குடங்கள் காகம் பூனை வாய்க்கொண்ட கறிசோறு மருவாச் சோறே
அத்திகள் பேரார்க்கிறலி வெண்கத்தாரி ஆல் அரசு நறுவிலி புங்காயில் ஆரை புத்தி கொல்லி குறிஞ்சி தான்றி குசும்பை வேளை புனமுருங்கை முருங்கை சுக முளரி உள்ளி சிற்றவரை கொம்மட்டி பண்ணை தொய்யில் சீங்காடன் தேறல் ஊவை பனை மயூரன் சுத்தியிலா நிலத்தில் இவை கடம்பு காளான் சுரை பீர்க்குச் சணம் தின்னார் சுருதி யோரே
சிறுகீரை செவ்வகத்தி முருக்கிரண்டும் சிறுபசளை பெரும்பசளை அம்மணந்தாள் பறித்தொருவர் கொடாதிருக்கத் தானே சென்று பாய்ந்தெடுத்துக் கொள்ளும் அவை பகிராக்கூறும் குறித்தாலும் தின்னவொணாக் கைப்புவர்ப்பும் கூர்க்கும் அவை யழலும் அவை கொடும் புளிப்பும் கறிக்காகா இவையென்று கண்டுரைத்தார் கார்மேனி அருளாளர் கடகத்தாரே
மால் அமுது செய்யாமல் வந்தவெல்லாம் வருவிருந்தில் வழங்காமல் வைத்தவெல்லாம் காலம் இதுவன்றென்று கழித்த வெல்லாம் கடையில் வரும் கறி முதலக் கழுவாவெல்லாம் நூல் இசையா வழிகளினால் வந்தவெல்லாம் நுகராததுடன் பாகம் செய்தவெல்லாம் சீலமில்லாச் சிறியோர் ஆக்கினவும் நல்லோர் செலமலங்கள் பட்டனவும் தின்னார் தாமே
தேவர்களுக்கிவை என்று வைத்த வெல்லாம் சிவன் முதலாம் தேவர்களுக்கிட்டவெல்லாம் ஆவிமுதலான அவற்றுக்காகாவெல்லாம் அதுவிதுவென்றறிய அரிதானவெல்லாம் நாவில் இடுவதற்கரிதாய் இருப்பவெல்லாம் நன்றென்று தம்முள்ளம் இசையாவெல்லாம் ஓவியநாள் ஓவாத பூவும் காயும் உத்தமர்கள் அட்டுப்பும் உகவார் தாமே
கிளிஞ்சில் முதல் சுட்டன சுண்ணாம்பு தானும் கிளர் புனலில் எழுங்குமிழி நுரைகள் தாமும் விளைந்ததனில் முதல் மாலுக்கீயாவெல்லாம் விளைந்த நில மறு காம்பென்றெழுந்தவெல்லாம் களைந்த மனத்தார் மற்றும் கழித்தவெல்லாம் கடியமுதின் நியமத்தார் கழித்தவெல்லாம் தெளிந்த புனல் திருவேங்கடத்து மால் தன் திருவாணை கடவாதார் தின்னார் தாமே
மோரலது சாரங்கள் வாங்கிற்றெல்லாம் முழுப்பகலில் விளங்கனியும் தானம் தானும் ஓரிரவில் எள்ளுடனே கூடிற்றெல்லாம் எள்ளதனில் எண்ணெய் தயிர் தரு பண்டங்கள் ஓர் தவத்தை மந்திரத்தை ஒழிப்பவெல்லாம் உண்ணாத நாட்களில் ஊண் அந்திப்போதூண் நாரணனார் அடிபணியும் நல்லோர் நாளும் நள்ளிரவில் ஊணுமிவை உண்ணார் தாமே
குளி முதலானவை செய்யாதுண்ணும் ஊணும் கூட்டல்லாப் பந்தியில் ஊண் பிறர் கை ஊணும் நளிமதி தீ விளக்காக உண்ணும் ஊணும் நள்ளிரவில் விளக்கின்றி உண்ணும் ஊணும் கிளிமொழியாள் உண்ணா நிற்கக் கணவன் ஊணும் கீழோரை நோக்கூணும் இடக்கை ஊணும் ஒளிமறையோர் மற்றும் உகவாத ஊணும் ஒளி அரங்கர் அடிபணிவார் உகவார் தாமே
எச்சில் தனில் வார்க்கும் நெய் இருபாகங்கள் இரும்பாலும் கையாலும் இட்டவெல்லாம் பச்சையலால் கடித்தகுறை பழைய வூசல் பிறர் அகத்துப் பாகம் செய்தெடுத்த அன்னம் நச்சினவை பழித்தவை மண்ணாற்றம் தீதும் நகத்தாலே விண்டவை தாம் காணும் உப்பும் பிச்சுளதாம் அவை காடி பின்ன பாகம் பிசின்கள் தன்னில் சிவந்ததுவும் பிழையூணாமே
தாதை நல் ஆசிரியன் முதல் தமையன் எச்சில் தரணிசுரர் சோமத்தில் அருந்தும் எச்சில் மாதர்கட்குக் கணவன் இதமான எச்சில் மயிர் புழு நூல் விழுந்தாலும் புனிதமாகும் மாதவத்துக் கூவிளங்காய் முகவாசத்து மாதுளங்காய் மரணம் வரில் கழித்தவெல்லாம் ஓதி வைத்த வுண்ணாநாள் உகந்த எட்டும் உள என்றும் கழித்தவற்றில் நன்றாம் ஊணே
மாகரும்பின் சாறு தயிர் பால் நெய் பாக்கு வளை மிளகு தேன் ஏலம் பனிநீர் ஆதி ஆகரசம் தூய்தாகும் அறியாவெல்லாம் அறியாதார்க்கறி அளவும் தூய வாகும் சாகரங்க தூயனவாம் உவாக்கள் கூடில் சலமெல்லாம் கங்கையதாம் உபராகத்தில் மாகரங்கள் பிணமுதலாம் அனைத்தும் கொண்டு வருபுனலும் தூய்தாகும் வேகத்தாலே
தீயாலே நீரொழிய வெந்தவெல்லாம் தீயிடுதல் ஒழிந்திடவே பழுத்தவெல்லாம் தீயாலும் நீராலும் வெந்தவற்றில் தேறவுலர் நெல்லுமுதலான வெல்லாம் ஊசாத மாவடகம் அப்பம் சீடை ரொட்டி முதலாம் அவற்றில் பழைய தேனும் கூசாதே கொண்டிடுமின் புதிய தேனும் கொள்ளேன்மின் தன்னிரதம் குலைந்தக் காலே
தலைப்பயனாம் விகாரங்கள் சாகடங்கள் சக்கரங்கள் தனக்கடைத்த மருந்து தானும் கலக்கமிலா நன்னீரில் வைத்த சோறும் கறிமோர்நெய் பால் தயிர்கள் கலந்த சோறும் விலக்கமிலா மாக்கன்னல் கோது மத்தால் விளைவுறவாக்கிய நல் விகாரம் தானும் இலைக்கறி போல் இவை அனைத்தும் பழைய வேனும் எந்நாளும் வைத்துண்ண இசைகின்றாரே
தயிர் தன்னில் விகாரங்கள் பூவில் காயில் பழத்தில் வரும் சாறூசல் தூய வாகும் உயிர் அழியாமைக்குண்ணா ஊசல் உண்ணில் உறக்கழுவி நெய் தேனிட்டுண்ணலாகும் பயின்மறை நூல் உரையாத பழைய ஊசல் பழிப்பிலதாம் நெய்யால் என்றுரைத்தான் சங்கன் மயிர் முதலானவை பின்னும் பட்ட தாயின் மண் ணீர் மற்றுரைத்தவற்றால் வரங்களாமே
ஒரு குளம்பி இரு கன்றி ஒட்டகப்பால் உப்புடன் பால் மோருடன் பால் மாதர் தம் பால் கருவுடைய அவற்றின் பால் கன்றிலாப் பால் மறு கன்றால் கறந்திடும் பால் திரிந்திடும் பால் திருமகளார் கணவனலாத் தெய்வத்தின் பேர் சின்னமுடை அவற்றின் பால் செம்மறிப் பால் பரிவதில் அந்தணர் விலைப் பால் செம்பினில் பால் தீதாம் பால் இவையனைத்தும் பருகாப் பாலே
கங்கை அல்லதிரண்டாநாள் வைத்த நீரும் கால் கழுவி மிகு நீரும் கலங்கல் நீரும் தெங்கின் உளதாய்த் தீயால் காய்ந்த நீரும் சிறுகுழி நீர் வழித்தண்ணீர்ப் பந்தல் நீரும் சங்கையுடை நீர் வண்ணான் துறையின் நீரும் தாரையினால் எச்சில் இதுவென்ற நீரும் சங்கு கலமாக்கொண்டு பருகு நீரும் தரையில் விழா மழைநீரும் தவிரும் நீரே
வெற்றிலை முன் தின்னாதே தின்னும் பாக்கும் வெற்றிலையில் அடி நுனியும் நடுவில் ஈர்க்கும் வெற்றிலையும் பாக்குமுடன் கூட்டித் தின்னும் விதவைக்கு முதன் முடிவாச்சிரமத்தார்க்கும் வெற்றிலையும் சுண்ணாம்பின் இலையு மற்றும் விரதம் கொண்டிடு நாள் வெற்றிலையும் பாக்கும் வெற்றிலை தின்னா நிற்கப் பருகு நீரும் விதையென வைத்தது தினலும் விலக்கினாரே
சாதிகுணம் ஆச்சிரமம் தேசம் காலம் தருமங்கள் நிமித்தங்கள் முதலாவோதும் பேதமுதலாக ஒரு திரவியந்தான் பரிந்து நலம் தீங்கினையும் பெற்று நிற்கும் பாதமிசைப் பிறந்தோர்க்குக் கபிலையின் பால் பருகிடல் ஆகாதென்று மறையோர் சொன்னார் ஆதலினால் ஓதி உணர்ந்தவர் பால் எல்லாம் அடிக்கடியும் கேட்டயர்வு தீர்மினீரே
கங்கிருளால் விடியாத உலகுக்கெல்லம் கைவிளக்காம் இவையென்று கண்ணன் காட்டும் பொங்கு புகழ் ஆகமங்கள் தெளியச் சொன்ன பொருளிவை நாம் புண்ணியர்பால் கேட்டுச் சொன்னோம் மங்குடலும் பொருளும் அல்லதறியா மாந்தர் வலையுள் அகப்பட்டு வரம் அழியாதென்றும் பங்கய மாதுற்ற அருளாளர் தம்பால் பத்திமிகு பவித்திரங்கள் பயின்மினீரே