Skip to the text
இராமானுச நூற்றந்தாதி

இராமானுச நூற்றந்தாதி தனியன்கள்

திருவரங்கத்தமுதனார் · திருவாய்மொழி

வேதப்‌ பிரான்‌ பட்டர்‌ அருளிச்‌ செய்தவை

முன்னை வினை அகல மூங்கிற்‌ குடி அமுதன்‌ பொன்னங்‌ கழற்‌ கமலப்‌ போதிரண்டும்‌ - என்னுடைய சென்னிக்கணியாகச்‌ சேர்த்தினேன்‌ தென்‌ புலத்தார்க்கு என்னுக்‌ கடவுடையேன்‌ யான்‌? நயந்தரு பேரின்பம்‌ எல்லாம்‌ பழுதின்றி! நண்ணினர்‌' பால்‌ சயந்தரு கீர்த்தி இராமானுச முனி தாளிணை மேல்‌ உயர்ந்த குணத்துத்‌ திருவரங்கத்தமுது ஓங்கும்‌ அன்பால்‌ இயம்பும்‌ கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே! இனி என்‌ குறை நமக்கு? எம்பெருமானார்‌ திருநாமத்தால்‌ முனி தந்த நூற்றெட்டூச்‌ சாவித்திரி என்னு நுண்பொருளை கனி தந்த செஞ்சொல்‌ கலித்துறை அந்தாதி பாடித்‌ தந்தான்‌ புனிதன்‌ திருவரங்கத்தமுதாகிய புண்ணியனே

அபியுக்தர்‌ அருளிச்‌ செய்தது

சொல்லின்‌ தொகை கொண்டு உனதடிப்‌ போதுக்குத்‌ தொண்டு செய்யும்‌ நல்லன்பர்‌ ஏத்தும்‌ உன்‌ நாமம்‌ எல்லாம்‌ என்தன்‌ நாவின்‌ உள்ளே அல்லும்‌ பகலும்‌ அமரும்படி நல்கு அறு சமயம்‌ வெல்லும்‌ பரம! இராமானுச! இது என்‌ விண்ணப்பமே