Skip to the text
திருவாய்மொழி

1-8. ஓ௫ும்புள்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"ஓடும் புள் ஏறி, சூடும் தண்துழாய்" — பறவை மேல் ஏறி வரும், குளிர்ந்த துளசி சூடிய அம்மானைப் பாடும் பதிகம். மிகச் சிறிய அடிகளால் அமைந்த இப்பதிகம், சொற்செட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. குறைந்த சொற்களில் நிறைந்த காட்சியைத் தரும் ஆற்றல் இங்கே வெளிப்படுகிறது.

திருவாய்மொழி 1-8 ஓ௫ும்புள்‌

2752

ஓடும்‌ புள்ளேறி சூடும்‌ தண்துழாய்‌ நீடு நின்று அவை ஆடும்‌ அம்மானே

2753

அம்மானாய்ப்‌ பின்னும்‌ எம்மாண்பும்‌ ஆனான்‌ வெம்மாவாய்‌ கீண்ட செம்மா கண்ணனே

2754

கண்ணாவான்‌ என்றும்‌ மண்ணோர்‌ விண்ணோர்க்கு தண்ணார்‌ வேங்கட விண்ணோர்‌ வெற்பனே

2755

வெற்பை ஒன்றெடுத்து ஒற்கம்‌ இன்றியே நிற்கும்‌ அம்மான்‌ சீர்‌ கற்பன்‌ வைகலே

2756

வைகலும்‌ வெண்ணெய்‌ கைகலந்து உண்டான்‌ ர்‌ பொய்‌ கலவாது என்‌ மெய்‌ கலந்தானே

2757

கலந்து என்னாவி நலங்கொள்‌ நாதன்‌ புலன்கொள்‌ மாணாய்‌ நிலம்‌ கொண்டானே

2758

கொண்டான்‌ ஏழ்விடை உண்டான்‌ ஏழ்வையம்‌ தண்தாமம்‌ செய்து என்‌ எண்தான்‌ ஆனானே

2759

ஆனான்‌ ஆனாயன்‌ மீனோடு ஏனமும்‌ தானானான்‌ என்னில்‌ தானாய சங்கே

2760

சங்கு சக்கரம்‌ அங்கையில்‌ கொண்டான்‌ எங்கும்‌ தானாய நங்கள்‌ நாதனே

2761

நாதன்‌ ஞாலம்‌ கொள்‌ பாதன்‌ என்‌ அம்மான்‌ ஓதம்‌ போல்‌ கிளர்‌ வேத நீரனே

2762

நீர்புரை வண்ணன்‌ சீர்‌ சடகோபன்‌ ர்‌ நேர்தல்‌ ஆயிரத்து ஓஹரதல்‌ இவையே