Skip to the text
திருவாய்மொழி

3-7. பயிலும்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"பயிலும் சுடரொளி மூர்த்தியை" — ஒளிரும் திருமேனியனை நினைத்து, அவனுக்கு அடிமையானவர்களுக்கே தான் அடிமை என்று ஆழ்வார் அறிவிக்கும் பதிகம். இறைவனிடம் நேரடியாக நிற்காமல், அவனுடையவர்களின் பின்னால் நிற்பதையே பெருமையாகக் கொள்கிறார். ஸ்ரீவைஷ்ணவ மரபின் மையக் கருத்துகளுள் ஒன்று இப்பதிகத்தில் வடிவம் பெறுகிறது.

திருவாய்மொழி 3-7 பயிலும்‌

2963

பயிலும்‌ சுடரொளி மூர்த்தியைப்‌ பங்கயக்‌ கண்ணனை பயில இனிய நம்‌ பாற்கடல்‌ சேர்ந்த பரமனை பயிலும்‌ திருவுடையார்‌ யவரேலும்‌ அவர்‌ கண்டீர்‌ பயிலும்‌ பிறப்பிடை தோறு எம்மை ஆளும்‌ பரமரே

2964

ஆளும்‌ பரமனைக்‌ கண்ணனை ஆழிப்பிரான்‌ தன்னை தோளும்‌ ஓர்‌ நான்குடைத்‌ தூமணிவண்ணன்‌ எம்மான்‌ தன்னை ர தாளும்‌ தடக்கையும்‌ கூப்பிப்‌ பணியும்‌ அவர்‌ கண்டீர்‌ நாளும்‌ பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே

2965

நாதனை ஞாலமும்‌ வானமும்‌ ஏத்தும்‌ நறுந்துழாய்ப்‌ போதனை பொன்‌ நெட௫ூஞ்சக்கரத்து எந்தை பிரான்‌ தன்னை பாதம்‌ பணிய வல்லாரைப்‌ பணியும்‌ அவர்‌ கண்டீர்‌ ஓதும்‌ பிறப்பிடை தோறு எம்மை ஆளுடையார்களே 3 பயின்மினே

2966

உடையார்ந்தவாடையன்‌ கண்டிகையன்‌ உடைநாணினன்‌ புடையார்‌ பொன்னூலினன்‌ பொன்முடியன்‌ மற்றும்‌ பல்கலன்‌ நடையாவுடைத்‌ திருநாரணன்‌ தொண்டர்‌ தொண்டர்‌ கண்டீர்‌ இடையார்‌ பிறப்பிடை தோறு எமக்கு எம்‌ பெருமக்களே

2967

பெருமக்கள்‌ உள்ளவர்‌ தம்‌ பெருமானை அமரர்கட்கு அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய அப்பனை பெருமை பிதற்ற வல்லாரைப்‌ பிதற்றும்‌ அவர்‌ கண்டீர்‌ வருமையும்‌ இம்மையும்‌ நம்மை அளிக்கும்‌ பிராக்களே

2968

அளிக்கும்‌ பரமனைக்‌ கண்ணனை ஆழிப்பிரான்‌ தன்னை துளிக்கும்‌ நறுங்கண்ணித்‌ தூமணிவண்ணன்‌ எம்மான்‌ தன்னை ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக்‌ கொள்ளும்‌ அவர்‌ கண்டீர்‌ சலிப்பின்றி யாண்டு எம்மைச்‌ சன்ம சன்மாந்தரம்‌ காப்பரே

2969

சன்ம சன்மாந்தரம்‌ காத்து அடியார்களைக்‌ கொண்டு போய்‌ தன்மை பெறுத்தித்‌ தன்‌ தாளிணைக்‌ கீழ்க்‌ கொள்ளும்‌ அப்பனை தொன்மை பிதற்ற வல்லாரைப்‌ பிதற்றும்‌ அவர்‌ கண்டீர்‌ நம்மை பெறுத்து எம்மை நாளுய்யக்‌ கொள்கின்ற நம்பரே

2970

நம்பனை ஞாலம்‌ படைத்தவனைத்‌ திருமார்பனை உம்பர்‌ உலகினில்‌ யார்க்கும்‌ உணர்வரியான்‌ தன்னைக்‌ ர்‌ கும்பி நரகர்கள்‌ ஏத்துவரேலும்‌ அவர்‌ கண்டீர்‌ எம்‌ பல்பிறப்பிடை தோறு எம்‌ தொழு குலம்‌ தாங்களே

2971

குலம்‌ தாங்கு சாதிகள்‌ நாலிலும்‌ கீழிழிந்து எத்தனை நலந்தானிலாத சண்டாள சண்டாளர்கள்‌ ஆகிலும்‌ வலந்தாங்கு சக்கரத்து அண்ணல்‌ மணிவண்ணற்கு ஆளென்று உள்‌ கலந்தார்‌ அடியார்‌ தம்‌ அடியார்‌ எம்மடிகளே

2972

அடியார்ந்த வையம்‌ உண்டு ஆலிலை அன்ன வசஞ்செய்யும்‌ படியாதுமில்‌ குழவிப்படி எந்தை பிரான்‌ தனக்கு அடியார்‌ அடியார்‌ தம்‌ அடியார்‌ அடியார்‌ தமக்கு அடியார்‌ அடியார்‌ தம்‌ அடியார்‌ அடியோங்களே

2973

அடியோங்கு நூற்றுவர்‌ வீய அன்று ஐவருக்கு அருள்‌ செய்த நெடியோனை தென்குருகூர்ச்‌ சடகோபன்‌ குற்றேவல்கள்‌ அடியார்ந்த ஆயிரத்துள்‌ இவை பத்து அவன்‌ தொண்டர்‌ மேல்‌ முடிவு ஆரக்‌ கற்கில்‌ சன்மம்‌ செய்யாமை முடியுமே