Skip to the text
திருவாய்மொழி

திருவாய்மொழி தனியன்கள்

நம்மாழ்வார் · திருவாய்மொழி

நாதமுனிகள்‌ அருளிச்‌ செய்தது

பயக்தாம்ருதம்‌ விஷ்வஜநாநுமோத;நம்‌ ஸர்வார்த்த;தஃம்‌ மரஷட;கோபவாங்க்மயம்‌ | ஸஹஸ்ரஷாகேஏாபநிவத்ஸமாக;மம்‌ நமாம்யஹம்‌ த்‌,ராவிட;வேத;ஃஸாகரரம்‌ |

ஈச்வரமுனிகள்‌ அருளிச்‌ செய்தது

திருவழுதி நாடென்றும்‌ தென்குருகூர்‌ என்றும்‌ மருவினிய வண்பொருநல்‌ என்றும்‌ - அருமறைகள்‌ அந்தாதி செய்தான்‌ அடி இணையே எப்பொழுதும்‌ சிந்தியாய்‌ நெஞ்சே தெளிந்து

சொட்டை நம்பிகள்‌ அருளிச்‌ செய்தது

மனத்தாலும்‌ வாயாலும்‌ வண்குருகூர்‌ பேணும்‌ இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்‌ - தனத்தாலும்‌ ஏதும்‌ குறைவிலேன்‌ எந்தை சடகோபன்‌ பாதங்கள்‌ யாமுடைய பற்று

அனந்தாழ்வான்‌ அருளிச்‌ செய்தது

ஏய்ந்த பெரும்‌ கீர்த்தி இராமானுச முனி தன்‌ வாய்ந்த மலர்ப்‌ பாதம்‌ வணங்குகின்றேன்‌ - ஆய்ந்த பெரும்‌ சீரார்‌ சடகோபன்‌ செந்தமிழ்‌ வேதம்‌ தரிக்கும்‌ பேராத உள்ளம்‌ பெற

பட்டர்‌ அருளிச்‌ செய்தவை

வான்‌ திகழும்‌ சோலை மதிள்‌ அரங்கர்‌ வண்புகழ்‌ மேல்‌ ஆன்ற தமிழ்‌ மறைகள்‌ ஆயிரமும்‌ - ஈன்ற முதல்‌ தாய்‌ சடகோபன்‌ மொய்ம்பால்‌ வளர்த்த இதத்‌ தாய்‌ இராமானுசன்‌ மிக்க இறை நிலையும்‌ மெய்யாம்‌ உயிர்‌ நிலையும்‌ தக்க நெறியும்‌ தடையாகித்‌ - தொக்கியலும்‌ ஊழ்‌ வினையும்‌ வாழ்‌ வினையும்‌ ஓதும்‌ குருகையர்‌ கோன்‌ யாழின்‌ இசை வேதத்தியல்‌