திருவெழுகூற்றிருக்கை தனியன்கள்
‹ திருவெழுகூற்றிருக்கை
திருவெழுகூற்றிருக்கை தனியன்கள்
திருமங்கையாழ்வார் · இயற்பா
எம்பெருமானார் அருளிச் செய்தவை
வாழி பரகாலன் வாழி கலிகன்றி வாழி குறையலார் வாழ் வேந்தன் - வாழியரோ மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள் மங்கையர் கோன் தூயோன் சுடர்மான வேல் "சீரார் திருவெழுகூற்றிருக்கை என்னும் செந்தமிழால் ஆராவமுதன் குடந்தைப் பிரான் தன் அடியிணைக் கீழ் ஏரார் மறைப் பொருள் எல்லாம் எடுத்து இவ்வுலகு உய்யவே சோராமல் சொன்ன அருள்மாரி பாதம் துணை நமக்கே