Skip to the text
பெரிய திருமொழி

பெரிய திருமொழி தனியன்கள்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

பெரிய திருமொழி தனியன்கள்‌

திருக்கோட்டியூர்‌ நம்பி அருளிச்‌ செய்தது

கலயாமி கலித்‌ஃவம்ஸம்‌ கவிம்‌ லோகதி;வாகரம்‌ | யஸ்ய கோபி. ப்ரகாஷாபி.ராவித்‌ஷயம்‌ நிஹதம்‌ தம: ||

எம்பெருமானார்‌ அருளிச்‌ செய்தது

வாழி பரகாலன்‌ வாழி கலிகன்றி வாழி குறையலூர்‌ வாழ்‌ வேந்தன்‌ - வாழியரோ மாயோனை வாள்‌ வலியால்‌ மந்திரங்கொள்‌ மங்கையர்‌ கோன்‌ தூயோன்‌ சுடர்மான வேல்‌

கூரத்தாழ்வான்‌ அருளிச்‌ செய்தது

நெஞ்சுக்கிருள்‌ கடி தீபம்‌ அடங்கா நெடும்‌ பிறவி நஞ்சுக்கு நல்ல அமுதம்‌ தமிழநன்னூல்‌ துறைகள்‌ அஞ்சுக்கு இலக்கியம்‌ ஆரண சாரம்‌ பர சமயப்‌ பஞ்சு கனலின்‌ பொறி பரகாலன்‌ பனுவல்களே

எம்பார்‌ அருளிச்‌ செய்தது

எங்கள்‌ கதியே இராமானுச முனியே சங்கைக்‌ கெடுத்தாண்ட தவராசா! - பொங்கு புகழ்‌ மங்கையர்‌ கோன்‌ ஈந்த மறை ஆயிரம்‌ அனைத்தும்‌ தங்கு மனம்‌ நீ எனக்குத்‌ தா

சோமாசியாண்டான்‌ அல்லது மணவாள மாமுனிகள்‌ அருளிச்‌ செய்தது

மாலைத்‌ தனியே வழி பறிக்க வேணும்‌ என்று கோலிப்‌ பதி இருந்த கொற்றவனே - வேலை அணைத்தருளும்‌ கையால்‌ அடியேன்‌ வினையைத்‌ துணித்தருள வேணும்‌ துணிந்து