கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய் சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து மலை கொண்டு அலைநீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை - நெஞ்சே!
1-5. கலையும் கரியும்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
மான், யானை, குதிரை திரியும் காட்டைக் கடந்து, வில்லும் அம்பும் துணையாகச் சென்ற இராமனை நினைவுகூரும் பதிகம். வெற்றியை மட்டும் சொல்லாமல், அவன் கடந்து சென்ற வழியின் கடினத்தையும் ஆழ்வார் சொல்கிறார். எளியவனாக நடந்து சென்றவனே எல்லாம் வல்லவன் என்னும் முரணே இப்பதிகத்தின் சுவை.
பெரிய திருமொழி 1-5 - கலையும் கரியும் (திருச்சாளக்கிராமம்)
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும் உடன் சூழ்ந்தெழுந்த கடி இலங்கை பொடுயா வடிவாய்ச் சரம் துரந்தான் இடம் சூழ்ந்து எங்கும் இருவிசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே!
உலவு திரையும் குலவரையும் ஊழி முதலா எண் திக்கும் நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறலாழி வலவன் வானோர் தம் பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே!
ஊரான் குடந்தை உத்தமன் ஒருகால் இருகால் சிலை வளைய தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வருபுனல் சூழ் பேரான் பேராயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே!
அடுத்தார்த்து எழுந்தாள் பிலவாய் விட்டலற அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான் விளங்கு சுடராழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன் கடுத்தார்த்து எழுந்த பெருமழையைக் கல்லொன்று ஏந்தி இனநிரைக்காத் தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் இழுதும் உடன் உண்ட வாயான் தூய அரி உருவில் குறளாய்ச் சென்று மாவலியை ஏயான் இரப்ப மூவடி மண் இன்றே தாவென்று உலகேழும் தாயான் காயாமலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே!
ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப்பரிய இரணியனை ஊனார் அகலம் பிளவெடுத்த ஒருவன் தானே இருசுடராய் ர வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலைநீர் உலகனைத்தும் தானாய் தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே!
வெந்தாரென்பும் சுடுநீறும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு உலகேழும் திரியும் பெரியோன் தான் சென்று - என் எந்தாய்! சாபம் தீர் என்ன இலங்கு அழுது நீர் திருமார்பில் தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தொண்டாம் இனமும் இமையோரும் துணைநூல் மார்பின் அந்தணரும் அண்டா! எமக்கே அருளாய் என்று அணயும் கோயில் அருகெல்லாம் வண்டார் பொழில் இன்பழனத்து வயலின் அயலே கயல் பாய தண்தாமரைகள் முகமலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை ஆரார் உலகத்து அறிவுடையார் அமரர் நல்நாட்டரசாள ' விழுதும் பேர் ஆயிரமும் ஓதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே
அடிவரவு: கலை கடம் உலவு ஊரான் அடூத்து தாய் ஏனோர் வெந்தார் தொண்டு தாரா வாணிலா