வாலி மாவலத்து ஒருவனது உடல் கெட வரிசிலை வளைவித்து - அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்த நல் இமயத்து ஆலிமாமுகில் அதிர் தர அருவரை அகடூற முகடேறி பீலி மாமயில் நடஞ் செயும் தடஞ்சுனைப் பிருதி சென்றடை - நெஞ்சே!
1-2. வாலி மாவலத்து
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
வாலியை வீழ்த்திய வில்லாற்றலைச் சொல்லித் தொடங்கும் பதிகம். இராம அவதாரத்தின் செயல்களை நினைவுகூர்ந்து, அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலத்தை ஒவ்வொரு பாசுரமும் சுட்டுகிறது. கதையும் தலமும் இணைந்து வரும் இம்முறையே பெரிய திருமொழி முழுவதற்கும் அடிப்படையாக அமைகிறது.
பெரிய திருமொழி 1-2 - வாலி மாவலத்து (திருபிருதி)
கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை அணை கட்டி இலங்கை மாநகர் பொடி செய்த அடிகள் தாம் இருந்த நல் இமயத்து விலங்கல் போல் வனவிறல் இருஞ்சினத்தன வேழங்கள் துயர் கூர பிலங்கொள் வாள் எயிற்று அரியவை திரி தரு பிருதி' சென்றடை - நெஞ்சே!
துடிகொள் நுண்ணிடைச் சுரிகுழல் துளங்கெயிற்று இளங்கொடு திறத்து - ஆயர் இடிகொள் வெங்குரல் இனவிடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து கடிகொள் வேங்கையின் நறுமலர் அமளியின் மணியறை மிசை வேழம் பிடியினோடு வண்டு இசை சொலத் துயில் கொளும் பிருத' சென்றடை - நெஞ்சே!
மறங்கொள் ஆளரி உருவென வெருவர ஒருவனது அகல்மார்வம் திறந்து வானவர் மணிமுடி பணி தர இருந்த நல் இமயத்து! இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக் கிடந்தருகெரி வீசும் பிறங்கு! மாமணி அருவி ஒடிழிதரு பிருதி' சென்றடை நெஞ்சே!
கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல் அமரர்கள் தொழுதேத்த அரைசெய் மேகலை அலர்மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து! வரைசெய் மாக்களிறு இளவெதிர் வளர் முளை அளைமிகு தேன் தோய்த்து பிரசவாரி தன் இளம் பிடிக்கு அருள் செயும் பிருதி' சென்றடை - பிரிதி " இம௰த்துள் பிரிதி இமயத்துள் பிரிதி இமயத்துள் பிரிதி !! இமயத்துள் !! பிறங்கல் 12. பிரிதி நெஞ்சே!
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளி கொள் பரமா! என்று இணங்கி வானவர் மணிமுடி பணி தர இருந்த நல் இமயத்து! ர மணங்கொள் மாதவி நெடூங்கொடு விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்றி பிணங்கு பூம்பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிருதி' சென்றடை - நெஞ்சே!
கார் கொள் வேங்கைகள் கனவரை தழுவிய கறிவளர் கொடுதுன்னி போர் கொள் வேங்கைகள் புனவரை தழுவிய பூம்பொழில் இமயத்து! ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இனமலர் எட்டும் இட்டு - இமையோர்கள் பேர்கள் ஆயிரம் பரவி நின்றடி தொழும் பிருதி' சென்றடை - நெஞ்சே!
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும்பசியது கூர அரவம் ஆவிக்கும் அகன்பொழில் தழுவிய அருவரை இமயத்து! பரமன் ஆதி எம்பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று - இமையோர்கள் பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகைப் பிருதி சென்றடை - நெஞ்சே!
ஓதி ஆயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறுதுயர் அடையாமல் ஏதமின்றி நின்றருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து! ஈ தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி பேதை வண்டுகள் எரி என வெருவரு பிருதி சென்றடை நெஞ்சே!
ர கரிய மாமுகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறென்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிருதி எம்பெருமானை வரிகொள் வண்டறை பைம்பொழில் மங்கையர் கலியனது ஒலிமாலை அரிய இன்னிசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே
அடிவரவு: வாலி கலங்க துடி மறம் கரைசெய் பணங்கள் கார் இரவு ஓதி கரிய முற்ற ! இமயத்துள் !! இமயத்துள் '' இமயத்துள் *! இமயத்துள் 22. பிரிதி