Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

1-7. தொடர்சங்கிலிகை

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

"தளர்நடை நடவானோ" — முதல் அடி எடுத்து வைக்கும் பருவம். யானைக் குட்டி நடப்பது போல, கிண்கிணி ஒலிக்க, சங்கும் சக்கரமும் பொறித்த சிறு பாதங்கள் மண்ணில் பதிய, கண்ணன் தள்ளாடி நடக்கும் காட்சியை ஆழ்வார் ஆவலுடன் எதிர்பார்க்கிறார். ஒவ்வொரு பாசுரமும் "நடவானோ?" என்ற ஏக்கத்துடன் முடிகிறது. காத்திருக்கும் அந்த ஏக்கமே இப்பதிகத்தின் சுவை.

பெரியாழ்வார்‌ திருமொழி 1-7 தொடர்சங்கிலிகை (தளர்நடை நடத்தல்‌: தளர்நடைப்‌ பருவம்‌)

86

தொடர்‌ சங்கிலிகை சலார்பிலாரென்னத்‌ தூங்கு பொன்மணி ஒலிப்ப படூுமும்மதப்‌ புனல்‌ சோர வாரணம்‌ பைய நின்று ஊர்வது போல்‌ உடன்கூடிக்‌ கிண்கிணி ஆரவாரிப்ப உடைமணி பறை கறங்க தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடை நடவானோ

87

செக்கரிடை நுனிக்கொம்பில்‌ தோன்றும்‌ சிறுபிறை முளை போல நக்க செந்துவர்வாய்த்‌ திண்ணை மீதே நளிர்‌ வெண்பல்‌ முளையிலக அக்குவடமுடுத்து ஆமைத்தாலிபூண்ட அனந்த சயனன்‌ தக்கமா மணிவண்ணன்‌ வாசுதேவன்‌ தளர்நடை நடவானோ

88

மின்னுக்கொடியும்‌ ஓர்வெண்திங்களும்‌ சூழ்‌ பரிவேடமுமாய்‌ பின்னல்‌ துலங்கும்‌ அரசிலையும்‌ பீதகச்‌ சிற்றாடையொடும்‌ மின்னில்‌ பொலிந்ததோர்‌ கார்முகில்‌ போலக்‌ கழுத்திணில்‌ காறையொடும்‌ தன்னில்‌ பொலிந்த இருடீகேசன்‌ தளர்நடை நடவானோ

89

கன்னற்‌ குடம்‌ திறந்தாலொத்தூறிக்‌ கணகண சிரித்து வந்து முன்வந்து நின்று முத்தம்‌ தரும்‌ என்‌ முகில்வண்ணன்‌ திருமார்வன்‌ தன்னைப்‌ பெற்றேற்குத்‌ தன்‌ வாயமுதம்‌ தந்து என்னைத்‌ தளிர்ப்பிக்கின்றான்‌ தன்னெற்று மாற்றலர்‌ தலைகள்‌ மீதே தளர்நடை நடவானோ (க)

90

முன்னலோர்‌ வெள்ளிப்‌ பெருமலைக்‌ குட்டன்‌ மொடுமொடு விரைந்தோட பின்னைத்‌ தொடர்ந்ததோர்‌ கருமலைக்‌ குட்டன்‌ பெயர்ந்தடி இடுவது போல்‌ பன்னி உலகம்‌ பரவியோவாப்‌ புகழ்ப்‌ பலதேவன்‌ என்னும்‌ தன்‌ நம்பியோடப்‌ பின்கூடச்‌ செல்வான்‌ தளர்நடை நடவானோ

91

ஒருகாலில்‌ சங்கு ஒருகாலில்‌ சக்கரம்‌ உள்ளடி பொறித்து அமைந்த இருகாலும்‌ கொண்டு அங்கங்கு எழுதினாற்‌ போல்‌ இலச்சினை பட நடந்து பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின்‌ மேல்‌ பின்னையும்‌ பெய்து பெய்து கருகார்க்‌ கடல்வண்ணன்‌ காமர்‌ தாதை தளர்நடை நடவானோ

92

படர்‌ பங்கயமலர்‌ வாய்‌ நெகிழப்‌ பனி படு சிறு துளிபோல்‌ இடங்கொண்ட செவ்வாயூறியூறி இற்றிற்று வீழ நின்று கடூஞ்சேக்கழுத்தின்‌ மணிக்குரல்‌ போல்‌ உடைமணி கணகணென தடந்தாளினை கொண்டு சார்ங்கபாணி தளர்நடை நடவானோ

93

பக்கம்‌ கருஞ்சிறுப்பாறை மீதே அருவிகள்‌ பகர்ந்தனைய அக்குவடமிழிந்தேறித்‌ தாழ அணியல்குல்‌ புடை பெயர மக்கள்‌ உலகினில்‌ பெய்தறியா மணிக்குழவி உருவின்‌ தக்கமா மணிவண்ணன்‌ வாசுதேவன்‌ தளர்நடை நடவானோ

94

வெண்புழுதி மேல்‌ பெய்து கொண்டளைந்ததோர்‌ வேழத்தின்‌ கருங்கன்று போல்‌ தெண்புழுதி ஆடித்‌ திரிவிக்கிரமன்‌ சிறுபுகர்‌ பட வியர்த்து ஒண்போதலர்‌ கமலச்‌ சிறுக்காலுரைத்து ஒன்றும்‌ நோவாமே தண்போது கொண்ட தவிசின்‌ மீதே தளர்நடை நடவானோ

95

திரைநீர்ச்‌ சந்திர மண்டலம்‌ போல்‌ செங்கண்மால்‌ கேசவன்‌ தன்‌ திருநீர்‌ முகத்துத்‌ துலங்கு சுட்டி திகழ்ந்தெங்கும்‌ புடை பெயர பெருநீர்த்‌ திரை எழுகங்கையிலும்‌ பெரியதோர்‌ தீர்த்த பலம்‌ தருநீர்‌ சிறுச்‌ சண்ணம்‌ துள்ளம்‌ சோரத்‌ தளர்நடை நடவானோ

96

ஆயர்‌ குலத்தினில்‌ வந்து தோன்றிய அஞ்சனவண்ணன்‌ தன்னை தாயர்‌ மகிழ ஒன்னார்‌ தளரத்‌ தளர்நடை நடந்ததனை வேயர்‌ புகழ்‌ விட்டுசித்தன்‌ சீரால்‌ விரித்தன உரைக்க வல்லார்‌ மாயன்‌ மணிவண்ணன்‌ தாள்‌ பணியும்‌ மக்களைப்‌ பெறுவார்களே