Skip to the text
பெரிய திருமொழி

1-1. வாடினேன்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"வாடினேன் வாடி வருந்தினேன்" — திருமங்கையாழ்வார் தம் வாழ்க்கையை நினைத்து வருந்தித் தொடங்கும் முதற்பதிகம். இளமையில் இன்பம் தேடி அலைந்ததையும், அதனால் அடைந்த துயரையும் ஒளிக்காமல் சொல்கிறார். இறுதியில் "நாராயணா என்னும் நாமம்" ஒன்றே தன்னைக் காத்ததென அறிவிக்கிறார். திருமந்திரத்தின் பெருமையை முன்வைத்து இப்பெரிய நூல் தொடங்குகிறது.

பெரிய திருமொழி 1-1 - வாடினேன்‌' (பெரிய திருமந்திரத்தின்‌ பெருமை)

948

வாடினேன்‌ வாடி வருந்தினேன்‌ மனத்தால்‌ பெருந்துயர்‌ இடும்பையில்‌ - பிறந்து கூடினேன்‌ கூடி இளையவர்‌ தம்மோடு அவர்‌ தரும்‌ கலவியே கருதி ஓடினேன்‌ ஓடு உய்வதோர்‌ பொருளால்‌ உணர்வெனும்‌ பெரும்‌ பதம்‌ - தெரிந்து நாடினேன்‌ நாடி நான்‌ கண்டு கொண்டேன்‌ நாராயணா என்னும்‌ நாமம்‌

949

ஆவியே! அமுதே! என நினைந்துருகி அவரவர்‌ பணைமுலை துணையா பாவியேன்‌ உணராது எத்தனை பகலும்‌ பழுது போய்‌ ஒழிந்தன நாள்கள்‌ தூவிசேர்‌ அன்னம்‌ துணையொடும்‌ புணரும்‌ சூழ்புனற்‌ குடந்தையே - தொழுது என்‌ நாவினால்‌ உய்ய நான்‌ கண்டு கொண்டேன்‌ நாராயணா என்னும்‌ நாமம்‌

950

சேமமே வேண்டித்‌ தீவினை பெருக்கித்‌ தெரிவைமாருருவமே மருவி ஊமனார்‌ கண்ட கனவிலும்‌ பழுதாய்‌ ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்‌ காமனார்‌ தாதை நம்முடை அடிகள்‌ தம்மடைந்தார்‌ மனத்திருப்பார்‌ நாமம்‌ நான்‌ உய்ய நான்‌ கண்டு கொண்டேன்‌ நாராயணா என்னும்‌ - நாமம்‌

951

வென்றியே வேண்டி வீழ்‌ பொருட்கிரங்கி வேற்கணார்‌ கலவியே கருதி நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்‌ என்‌ செய்கேன்‌? நெடு - விசும்பணவும்‌ பன்றியாய்‌ அன்று பாரகங்கீண்ட பாழியான்‌ ஆழியான்‌ அருளே நன்று நான்‌ உய்ய நான்‌ கண்டு கொண்டேன்‌ நாராயணா என்னும்‌ - நாமம்‌

952

கள்வனேனானேன்‌ படிறு செய்திருப்பேன்‌ கண்டவா திரிதந்தேனேலும்‌ தெள்ளியேனானேன்‌ செல்கதிக்கமைந்தேன்‌ சிக்கெனத்‌ திருவருள்‌ - பெற்றேன்‌ உள்ளெலாம்‌ உருகிக்‌ குரல்‌ தழுத்தொழிந்தேன்‌ உடம்பெலாம்‌ கண்ண - நீர்‌ சோர நள்ளிருள்‌ அளவும்‌ பகலும்‌ நான்‌ அழைப்பன்‌ நாராயணா என்னும்‌ - நாமம்‌ 5 ! இது கோவில்‌ திருமொழி திரிந்து

953

எம்பிரான்‌ எந்தை என்னுடைச்‌ சுற்றம்‌ எனக்கரசு என்னுடை வாணாள்‌ அம்பினால்‌ அரக்கர்‌ வெருக்கொள நெருக்கி அவர்‌ உயிர்‌ செகுத்த எம்‌ - அண்ணல்‌ வம்புலாம்‌ சோலை மாமதிள்‌ தஞ்சை மாமணிக்கோயிலே வணங்கி நம்பிகாள்‌! உய்ய நான்‌ கண்டு கொண்டேன்‌ நாராயணா என்னும்‌ நாமம்‌

954

இற்பிறப்பறியீர்‌ இவர்‌ அவர்‌ என்னீர்‌ இன்னதோர்‌ தன்மை என்று உணரீர்‌ கற்பகம்‌ புலவர்களை கணென்று உலகில்‌ கண்டவா தொண்டரைப்‌ பாடும்‌ சொற்பொருளாளீர்‌ சொல்லுகேன்‌ வம்மின்‌ சூழ்புனற்‌ குடந்தையே - தொழுமின்‌ நற்பொருள்‌ காண்மின்‌ பாடி நீர்‌ உய்ம்மின்‌ நாராயணா என்னும்‌ - நாமம்‌

955

கற்றிலேன்‌ கலைகள்‌ ஐம்புலன்‌ கருதும்‌ கருத்துளே திருத்தினேன்‌ மனத்தை பெற்றிலேன்‌ அதனால்‌ பேதையேன்‌ நன்மை பெருநிலத்து - ஆருயிர்க்கெல்லாம்‌ செற்றமே வேண்டித்‌ திரிதர்வேன்‌ தவிர்ந்தேன்‌ செல்கதிக்கு - உய்யுமாறெண்ணி நல்துணையாகப்‌ பற்றினேன்‌ அடியேன்‌ நாராயணா என்னும்‌ நாமம்‌

956

ர குலம்‌ தரும்‌ செல்வம்‌ தந்திடும்‌ அடியார்‌ படு துயர்‌ ஆயினவெல்லாம்‌ நிலந்தரஞ்செய்யும்‌ நீள்‌ விசும்பருளும்‌ அருளொடு பெருநிலம்‌ அளிக்கும்‌ வலந்தரும்‌ மற்றும்‌ தந்திடூம்‌ பெற்ற தாயினும்‌ ஆயின செய்யும்‌ நலந்தருஞ்சொல்லை நான்‌ கண்டு கொண்டேன்‌ நாராயணா என்னும்‌ - நாமம்‌

957

மஞ்சுலாஞ்சோலை வண்டறை மாநீர்‌ மங்கையார்‌ வாள்‌ கலி கன்றி செஞ்சொலால்‌ எடுத்த தெய்வ நல்மாலை இவை கொண்டு சிக்கெனத்‌ - தொண்டீர்‌! துஞ்சும்‌ போது அழைமின்‌ துயர்‌ வரில்‌ நினைமின்‌ துயரிலீர்‌ சொல்லிலும்‌ நன்றாம்‌ நஞ்சு தான்‌ கண்டீர்‌ நம்முடை வினைக்கு நாராயணா என்னும்‌ நாமம்‌

அடிவரவு: வாடினேன்‌ ஆவியே சேமம்‌ வென்றி கள்வனேன்‌ எம்பிரான்‌ இற்பிறப்பு கற்றிலேன்‌ குலம்‌ மஞ்சு வாலி