Skip to the text
திருமாலை

திருமாலை

தொண்டரடிப்பொடியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அரங்கனை நோக்கிப் பாடிய நாற்பத்தைந்து பாசுரங்கள். புலன்களை அடக்கி, கலியைக் கடக்க அரங்கனின் திருநாமமே போதும் என்று தொடங்குகிறார். தன்னைத் தாழ்த்திக் கொள்வதிலும், நாமத்தின் ஆற்றலை உயர்த்திச் சொல்வதிலும் இந்நூல் தயங்குவதே இல்லை. "நான் தகுதியற்றவன்" என்பதும் "அதனால்தான் அவன் வேண்டும்" என்பதும் ஒரே சுவாசத்தில் வருகின்றன.

(திருவரங்கத்து எம்பெருமான்‌ விஷயம்‌)

872

காவலில்‌ புலனை வைத்துக்‌ கலிதன்னைக்‌ கடக்கப்‌ பாய்ந்து நாவலிட்டு உழிதருகின்றோம்‌ நமன்‌ தமர்‌ தலைகள்‌ மீதே மூவுலகுண்டூுமிழ்ந்த முதல்வ நின்‌ நாமம்‌ கற்ற ஆவலிப்புடைமை கண்டாய்‌ அரங்கமா நகருளானே

873

பச்சைமா மலைபோல்‌ மேனி பவளவாய்‌ கமலச்‌ செங்கண்‌ அச்சுதா அமரரேறே ஆயர்தம்‌ கொழுந்தே என்னும்‌ இச்சுவை தவிர யான்‌ போய்‌ இந்திர லோகம்‌ ஆளும்‌ அச்சுவை பெறினும்‌ வேண்டேன்‌ அரங்கமா நகருளானே

874

வேதநூல்‌ பிராயம்‌ நூறு மனிசர்‌ தாம்‌ புகுவரேலும்‌ பாதியும்‌ உறங்கிப்‌ போகும்‌ நின்ற இப்பதினை ஆண்டு பேதை பாலகன்‌ அதாகும்‌ பிணி பசி மூப்புத்‌ துன்பம்‌ ஆதலால்‌ பிறவி வேண்டேன்‌ அரங்கமா நகருளானே

875

மொய்த்த வல்வினையுள்‌ நின்று மூன்றெழுத்துடைய பேரால்‌ கத்திர பந்துமன்றே பராங்கதி கண்டு கொண்டான்‌ இத்தனை அடியரானார்க்கு இரங்கும்‌ நம்‌ அரங்கனாய பித்தனைப்‌ பெற்றும்‌ அந்தோ பிறவியுள்‌ பிணங்குமாறே

876

பெண்டிரால்‌ சுகங்கள்‌ உய்ப்பான்‌ பெரியதோர்‌ இடும்பை பூண்டூ உண்டுூராக்‌ கிடக்கும்‌ போது உடலுக்கே கரைந்து நைந்து தண்துழாய்‌ மாலை மார்பன்‌ தமர்களாய்ப்‌ பாடி ஆடி தொண்டு பூண்டமுதம்‌ உண்ணாத்‌ தொழும்பர்‌ சோறு உகக்குமாறே

877

மறம்‌ சுவர்‌ மதிள்‌ எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு புறம்‌ சுவர்‌ ஓட்டை மாடம்‌ புரளும்‌ போதறிய மாட்டீர்‌ அறம்‌ சுவராகி நின்ற அரங்கனார்க்கு ஆட்செய்யாதே புறம்‌ சுவர்‌ கோலம்‌ செய்து புள்‌ கெளவக்‌ கிடக்கின்றீரே

878

புலையறமாகி நின்ற புத்தொடு சமணம்‌ எல்லாம்‌ கலையறக்‌ கற்ற மாந்தர்‌ காண்பரோ கேட்பரோ தாம்‌ தலை அறுப்புண்டும்‌ சாகேன்‌ சத்தியம்‌ காண்மின்‌ ஐயா சிலையினால்‌ இலங்கை செற்ற தேவனே தேவனாவான்‌

879

வெறுப்பொடு சமணர்‌ முண்டர்‌ விதியில்‌ சாக்கியர்கள்‌ நின்பால்‌ பொறுப்பரியனகள்‌ பேசில்‌ போவதே நோயதாகி குறிப்பெனக்கடையுமாகில்‌ கூடுமேல்‌ தலையை ஆங்கே அறுப்பதே கருமம்‌ கண்டாய்‌ அரங்கமா நகருளானே

880

மற்றுமோர்‌ தெய்வம்‌ உண்டே மதியிலா மானிடங்காள்‌ உற்றபோதன்றி நீங்கள்‌ ஒருவனென்று உணர மாட்டீர்‌ அற்றமேல்‌ ஒன்றறீமீர்‌ அவனல்லால்‌ தெய்வம்‌ இல்லை கற்றினம்‌ மேய்த்த எந்தை கழலிணை பணிமினீரே

881

நாட்டினான்‌ தெய்வம்‌ எங்கும்‌ நல்லதோர்‌ அருள்‌ தன்னாலே காட்டினான்‌ திருவரங்கம்‌ உய்பவர்க்கு உய்யும்‌ வண்ணம்‌ கேட்டிரே நம்பிமீர்காள்‌ கெருட வாகனனும்‌ நிற்க சேட்டை தன்‌ மடியகத்துச்‌ செல்வம்‌ பார்த்திருக்கின்றீரே

882

ஒருவில்லால்‌ ஓங்கு முன்னீர்‌ அடைத்து உலகங்கள்‌ உய்ய செருவிலே அரக்கர்‌ கோனைச்‌ செற்ற நம்‌ சேவகனார்‌ மருவிய பெரிய கோயில்‌ மதிள்‌ திருவரங்கம்‌ என்னா கருவிலே திருவிலாதீர்‌ காலத்தைக்‌ கழிக்கின்றீரே

883

நமனும்‌ முற்கலனும்‌ பேச நரகில்‌ நின்றார்கள்‌ கேட்க நரகமே சுவர்க்கமாகும்‌ நாமங்கள்‌ உடைய நம்பி அவனதூர்‌ அரங்கம்‌ என்னாது அயர்த்து வீழ்ந்தளிய மாந்தர்‌ கவலையுள்‌ படுகின்றாரென்று அதனுக்கே கவல்கின்றேனே

884

எறியுநீர்‌ வெறிகொள்‌ வேலை மானிலத்துயிர்கள்‌ எல்லாம்‌ வெறிகொள்‌ பூந்துளவ மாலை விண்ணவர்‌ கோனை ஏத்த அறிவிலா மனிசர்‌ எல்லாம்‌ அரங்கம்‌ என்றழைப்பராகில்‌ பொறியில்‌ வாழ்‌ நரகம்‌ எல்லாம்‌ புல்லெழுந்தொழியுமன்றே

885

வண்டினம்‌ முரலும்‌ சோலை மயிலினம்‌ ஆலும்‌ சோலை கொண்டல்‌ மீதணவும்‌ சோலை குயிலினம்‌ கூவும்‌ சோலை ர்‌ அண்டர்கோன்‌ அமரும்‌ சோலை அணி திருவரங்கம்‌ என்னா மிண்டர்‌ பாய்ந்துண்ணும்‌ சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே

886

மெய்யர்க்கே மெய்யனாகும்‌ விதியிலா என்னைப்‌ போல பொய்யர்க்கே பொய்யனாகும்‌ புட்கொடு உடைய கோமான்‌ உய்யப்போம்‌ உணர்வினார்கட்கு ஒருவன்‌ என்றுணர்ந்த பின்னை ஐயப்பாடறுத்துத்‌ தோன்றும்‌ அழகனூர்‌ அரங்கமன்றே

887

சூதனாய்க்‌ கள்வனாகித்‌ தூர்த்தரோடு இசைந்த காலம்‌ மாதரார்‌ கயற்கண்‌ என்னும்‌ வலையுள்‌ பட்டழுந்துவேனை போதரே என்று சொல்லிப்‌ புந்தியுள்‌ புகுந்து தன்பால்‌ ஆதரம்‌ பெருக வைத்த அழகனூர்‌ அரங்கமன்றே

888

விரும்பி நின்றேத்த மாட்டேன்‌ விதியிலேன்‌ மதி ஒன்றில்லை இரும்புபோல்‌ வலிய நெஞ்சம்‌ இறையிறை உருகும்‌ வண்ணம்‌ சுரும்பமர்‌ சோலை சூழ்ந்த அரங்கமா கோயில்‌ கொண்ட கரும்பினைக்‌ கண்டு கொண்டு என்‌ கண்ணிணை களிக்குமாறே

889

இனிதிரைத்‌ திவலை மோத எறியும்‌ தண்‌ பரவை மீதே தனிகிடந்து அரசு செய்யும்‌ தாமரைக்‌ கண்ணன்‌ எம்மான்‌ கனி இருந்தனைய செவ்வாய்க்‌ கண்ணணைக்‌ கண்ட கண்கள்‌ பனியரும்புதிருமாலோ என்‌ செய்கேன்‌ பாவியேனே

890

குடதிசை முடியை வைத்துக்‌ குணதிசை பாதம்‌ நீட்டி வடதிசை பின்பு காட்டித்‌ தென்திசை இலங்கை நோக்கி ர கடல்நிறக்‌ கடவுள்‌ எந்தை அரவணைத்‌ துயிலுமா கண்டு உடலெனக்கு உருகுமாலோ என்‌ செய்கேன்‌ உலகத்தீரே

891

பாயுநீர்‌ அரங்கம்‌ தன்னுள்‌ பாம்பணைப்‌ பள்ளி கொண்ட மாயனார்‌ திருநன்‌ மார்பும்‌ மரகத உருவும்‌ தோளும்‌ தூய தாமரைக்‌ கண்களும்‌ துவரிதழ்ப்‌ பவளவாயும்‌ ஆயசீர்‌ முடியும்‌ தேசும்‌ அடியரோர்க்கு அகலலாமே

892

பணிவினால்‌ மனமதொன்றிப்‌ பவளவாய்‌ அரங்கனார்க்கு துணிவினால்‌ வாழ மாட்டாத்‌ தொல்லைநெஞ்சே நீ சொல்லாய்‌ அணியினார்‌ செம்பொனாய அருவரை அனைய கோயில்‌ மணியனார்‌ கிடந்தவாற்றை மனத்தினால்‌ நினைக்கலாமே

893

பேசிற்றே பேசலல்லால்‌ பெருமையொன்று உணரலாகாது ஆசற்றார்‌ தங்கட்கல்லால்‌ அறியல்‌ ஆவானும்‌ அல்லன்‌ ர மாசற்றார்‌ மனத்துளானை வணங்கி நாம்‌ இருப்பதல்லால்‌ பேசத்தான்‌ ஆவதுண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்‌

894

கங்கையிற்‌ புனிதமாய காவிரி நடூவு பாட்டு பொங்கு நீர்‌ பரந்து பாயும்‌ பூம்பொழில்‌ அரங்கம்‌ தன்னுள்‌ எங்கள்மால்‌ இறைவன்‌ ஈசன்‌ கிடந்ததோர்‌ கிடக்கை கண்டும்‌ எங்ஙனம்‌ மறந்து வாழ்கேன்‌ ஏழையேன்‌ ஏழையேனே

895

வெள்ள நீர்‌ பரந்து பாயும்‌ விரிபொழில்‌ அரங்கம்‌ தன்னுள்‌ கள்வனார்‌ கிடந்தவாறும்‌ கமல நன்முகமும்‌ கண்டு உள்ளமே வலியை போலும்‌ ஒருவன்‌ என்றுணர மாட்டாய்‌ கள்ளமே காதல்‌ செய்து உன்‌ கள்ளத்தே கழிக்கின்றாயே

896

குளித்து மூன்றனலை ஓம்பும்‌ குறிகொள்‌ அந்தணமை தன்னை ஒளித்திட்டேன்‌ என்‌ கணில்லை நின்‌ கணும்‌ பத்தன்‌ அல்லேன்‌ களிப்பதென்‌ கொண்டு நம்பீ கடல்வண்ணா கதறுகின்றேன்‌ அளித்தெனக்கருள்செய்‌ கண்டாய்‌ அரங்கமா நகருளானே

897

போதெல்லாம்‌ போது கொண்டு உன்‌ பொன்னடி புனைய மாட்டேன்‌ தீதிலா மொழிகள்‌ கொண்டு உன்‌ திருக்‌ குணம்‌ செப்ப மாட்டேன்‌ காதலால்‌ நெஞ்சம்‌ அன்பு கலந்திலேன்‌ அது தன்னாலே ஏதிலேன்‌ அரங்கர்க்கு எல்லே என்‌ செய்வான்‌ தோன்றினேனே

898

குரங்குகள்‌ மலையை நூக்கக்‌ குளித்துத்தாம்‌ புரண்டிட்டோடி தரங்கநீர்‌ அடைக்கலுற்ற சலமிலா அணிலும்‌ போலேன்‌ மரங்கள்போல்‌ வலிய நெஞ்சம்‌ வஞ்சனேன்‌ நெஞ்சு தன்னால்‌ அரங்கனார்க்காட்‌ செய்யாதே அளியத்தேன்‌ அயர்க்கின்றேனே

899

உம்பரால்‌ அறியலாகா ஒளியுளார்‌ ஆனைக்காகி செம்புலால்‌ உண்டு வாழும்‌ முதலை மேல்‌ சீறி வந்தார்‌ நம்பரமாயதுண்டே நாய்களோம்‌ சிறுமையோரா எம்பிராற்காட்‌ செய்யாதே என்‌ செய்வான்‌ தோன்றினேனே

900

ஊரிலேன்‌ காணி இல்லை உறவு மற்றொருவர்‌ இல்லை பாரில்‌ நின்‌ பாதமூலம்‌ பற்றிலேன்‌ பரம மூர்த்தி காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்‌ ஆருளர்‌ களைகண்‌ அம்மா அரங்கமா நகருளானே

901

மனத்திலோர்‌ தூய்மை இல்லை வாயிலோர்‌ இன்சொல்‌ இல்லை சினத்தினால்‌ செற்றம்‌ நோக்கித்‌ தீவிளி விளிவன்‌ வாளா புனத்துழாய்‌ மாலையானே பொன்னிசூழ்‌ திருவரங்கா எனக்கினிக்‌ கதியென்‌ சொல்லாய்‌ என்னை ஆளுடைய கோவே

902

தவத்துளார்‌ தம்மில்‌ அல்லேன்‌ தனம்‌ படைத்தாரில்‌ அல்லேன்‌ உவர்த்தநீர்‌ போல எந்தன்‌ உற்றவர்க்கு ஒன்றும்‌ அல்லேன்‌ துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத்‌ துரிசனானேன்‌ அவத்தமே பிறவி தந்தாய்‌ அரங்கமா நகருளானே

903

ஆர்த்து வண்டலம்பும்‌ சோலை அணி திருவரங்கம்‌ தன்னுள்‌ கார்த்திரள்‌ அனைய மேனிக்‌ கண்ணனே உன்னைக்‌ காணும்‌ மார்க்கம்‌ ஒன்றறியமாட்டா மனிசரில்‌ துரிசனாய மூர்க்கனேன்‌ வந்து நின்றேன்‌ மூர்க்கனேன்‌ மூர்க்கனேனே

904

மெய்யெல்லாம்‌ போக விட்டு விரிகுழலாரில்‌ பட்டு பொய்யெல்லாம்‌ பொதிந்து கொண்ட போழ்க்கனேன்‌ வந்து நின்றேன்‌ ஐயனே அரங்கனே உன்னருள்‌ என்னும்‌ ஆசை தன்னால்‌ பொய்யனேன்‌ வந்து நின்றேன்‌ பொய்யனேன்‌ பொய்யனேனே

905

உள்ளத்தே உறையும்‌ மாலை உள்ளுவான்‌ உணர்வொன்றில்லா கள்ளத்தேன்‌ நானும்‌ தொண்டாய்த்‌ தொண்டுக்கே கோலம்‌ பூண்டு உள்ளுவார்‌ உள்ளிற்றெல்லாம்‌ உடன்‌ இருந்தறிதி என்று வெள்கிப்‌ போய்‌ என்னுள்ளே நான்‌ விலவறச்‌ சிரித்திட்டேனே

906

தாவியன்றுலகம்‌ எல்லாம்‌ தலைவிளாக்‌ கொண்ட எந்தாய்‌ சேவியேன்‌ உன்னை அல்லால்‌ சிக்கெனச்‌ செங்கண்‌ மாலே ஆவியே அழுதே எந்தன்‌ ஆருயிர்‌ அனைய எந்தாய்‌ பாவியேன்‌ உன்னை அல்லால்‌ பாவியேன்‌ பாவியேனே

907

மழைக்கு அன்று வரை முனேந்தும்‌ மைந்தனே மதுரவாறே உழைக்‌ கன்றே போல நோக்கம்‌ உடையவர்‌ வலையுள்‌ பட்டு உழைக்கின்றேற்கு என்னை நோக்காதொழிவதே உன்னை அன்றே அழைக்கின்றேன்‌ ஆதி மூர்த்தி அரங்கமா நகருளானே

908

தெளிவிலாக்‌ கலங்கல்‌ நீர்‌ சூழ்‌ திருவரங்கங்கத்துள்‌ ஓங்கும்‌ ஒளியுளார்‌ தாமே அன்றே தந்தையும்‌ தாயுமாவார்‌ எளியதோர்‌ அருளுமன்றே என்திறத்து எம்பிரானார்‌ அளியன்‌ நம்‌ பையல்‌ என்னார்‌ அம்மவோ கொடியவாறே

909

மேம்பொருள்‌ போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன்‌ அகத்தடக்கி காம்பறத்‌ தலை சிரைத்து உன்‌ கடைத்தலை இருந்து வாழும்‌ சோம்பரை உகத்தி போலும்‌ சூழ்புனல்‌ அரங்கத்தானே

910

அடிமையில்‌ குடிமை இல்லா அயல்‌ சதுப்பேதிமாரில்‌ குடிமையில்‌ கடைமை பட்ட குக்கரில்‌ பிறப்பரேலும்‌ முடியினில்‌ துளபம்‌ வைத்தாய்‌ மொய்கழற்கன்பு செய்யும்‌ அடியரை உகத்தி போலும்‌ அரங்கமா நகருளானே

911

திருமறு மார்வ நின்னைச்‌ சிந்தையுள்‌ திகழ வைத்து மருவிய மனத்தராகில்‌ மானிலத்து உயிர்கள்‌ எல்லாம்‌ வெருவரக்‌ கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும்‌ அருவினைப்‌ பயனதுய்யார்‌ அரங்கமா நகருளானே

912

வானுளார்‌ அறியலாகா வானவா என்பராகில்‌ தேனுலாம்‌ துளப மாலைச்‌ சென்னியாய்‌ என்பராகில்‌ ஊனமாயினகள்‌ செய்யும்‌ ஊனகாரகர்களேலும்‌ போனகம்‌ செய்த சேடம்‌ தருவரேல்‌ புனிதமன்றே

913

பழுதிலா ஒழுகலாற்றுப்‌ பல சதுப்பேதிமார்கள்‌ இழிகுலத்தவர்களேலும்‌ எம்‌ அடியார்களாகில்‌ தொழுமினீர்‌ கொடூுமின்‌ கொள்மின்‌ என்று நின்னோடும்‌ ஒக்க வழிபட அருளினாய்‌ போல்‌ மதிள்‌ திருவரங்கத்தானே

914

அமரவோர்‌ அங்கம்‌ ஆறும்‌ வேதமோர்‌ நான்கும்‌ ஓதி தமர்களில்‌ தலைவராய சாதி அந்தணர்களேலும்‌ நுமர்களைப்‌ பழிப்பராகில்‌ நொடுப்பதோர்‌ அளவில்‌ ஆங்கே அவர்கள்‌ தாம்‌ புலையர்‌ போலும்‌ அரங்கமா நகருளானே

915

பெண்ணுலாம்‌ சடையினானும்‌ பிரமனும்‌ உன்னைக்‌ காண்பான்‌ எண்ணிலா ஊழி ஊழி தவம்‌ செய்தார்‌ வெள்கி நிற்ப விண்ணுளார்‌ வியப்ப வந்து ஆனைக்கன்றருளை ஈந்த கண்ணறா உன்னை என்னோ களைகணாக்‌ கருதுமாறே

916

வளவெழும்‌ தவள மாட மதுரைமா நகரம்‌ தன்னுள்‌ கவளமால்‌ யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை துளவத்‌ தொண்டாய தொல்சீர்த்‌ தொண்டரடிப்பொடி சொல்‌ இளைய புன்கவிதையேலும்‌ எம்பிராற்கு இனியவாறே தொண்டரடிப்பொடியாழ்வார்‌ திருவடிகளே சரணம்‌