Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

1-6. மாணிக்கக் கிண்கிணி

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

"சப்பாணி" — கை கொட்டித் தாளம் போடும் பருவம். "கொட்டாய் சப்பாணி" என்று அழைக்கும் ஒவ்வொரு பாசுரமும், அந்தச் சிறு கைகள் முன்பு செய்தவற்றை நினைவுபடுத்துகின்றன: மாவலியிடம் மண் கொண்டவை, அர்ச்சுனனுக்குத் தேர் ஓட்டியவை, இரணியனைப் பிளந்தவை, கடலை அணை கட்டியவை. விளையாட்டுத்தனமான ஒரு செய்கையின் பின்னால் அவதாரங்களின் வரலாறே ஒளிந்திருக்கிறது.

பெரியாழ்வார்‌ திருமொழி 1-6 மாணிக்கக்‌ கிண்கிணி (கைகொட்டி விளையாடுதல்‌: சப்பாணிப்‌ பருவம்‌)

75

மாணிக்கக்‌ கிண்கிணி ஆர்ப்ப மருங்கின்‌ மேல்‌ ஆணிப்‌ பொன்னால்‌ செய்த ஆய்பொன்னுடைமணி பேணிப்‌ பவள வாய்‌ முத்திலங்க பண்டு காணிகொண்ட கைகளால்‌ சப்பாணி கருங்குழல்‌ குட்டனே சப்பாணி

76

பொன்னரை நாணொடு மாணிக்கக்‌ கிண்கிணி தன்னரையாடத்‌ தனிச்‌ சுட்டி தாழ்ந்தாட என்னரை மேல்‌ நின்றிழிந்து உங்களாயர்‌ தம்‌ மன்னரை மேல்‌ கொட்டாய்‌ சப்பாணி மாயவனே கொட்டாய்‌ சப்பாணி

77

பன்மணி முத்து இன்‌ பவளம்‌ பதித்தன்ன என்‌ மணிவண்ணன்‌ இலங்கு பொற்றேட்டின்‌ மேல்‌ நின்‌ மணிவாய்‌ முத்திலங்க நின்னம்மைதன்‌ அம்மணி மேல்‌ கொட்டாய்‌ சப்பாணி ஆழியங்கையனே சப்பாணி

78

தூனிலா முற்றத்தே போந்து விளையாட வானிலா அம்புலீ சந்திரா வாவென்று நீநிலா நின்‌ புகழா நின்ற ஆயர்‌ தம்‌ கோனிலாவக்‌ கொட்டாய்‌ சப்பாணி குடந்தைக்‌ கிடந்தானே சப்பாணி

79

புட்டியில்‌ சேறும்‌ புழுதியும்‌ கொண்டு வந்து அட்டி அமுக்கி அகம்‌ புக்கறியாமே சட்டித்‌ தயிரும்‌ தடாவினில்‌ வெண்ணெயும்‌ உண்‌ பட்டிக்‌ கன்றே கொட்டாய்‌ சப்பாணி பற்பநாபா கொட்டாய்‌ சப்பாணி

80

தாரித்து நூற்றுவர்‌ தந்தை சொல்‌ கொள்ளாது போருய்த்து வந்து புகுந்தவர்‌ மண்ணாள ர பாரித்த மன்னர்‌ படப்‌ பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால்‌ சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி

81

பரந்திட்டு நின்ற படுகடல்‌ தன்னை இரந்திட்ட கைம்மேல்‌ எறிதிரை மோத ர கரந்திட்டு நின்ற கடலைக்‌ கலங்க சரந்தொட்ட கைகளால்‌ சப்பாணி சார்ங்கவிற்‌ கையனே சப்பாணி

82

குரக்கினத்தாலே குரை கடல்‌ தன்னை நெருக்கி அணை கட்டி நீள்நீர்‌ இலங்கை அரக்கர்‌ அவிய அடுகணையாலே நெருக்கிய கைகளால்‌ சப்பாணி நேமியங்கையனே சப்பாணி

83

அளந்திட்ட தூணை அவன்‌ தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்‌ சிங்க உருவாய்‌ உளந்தொட்டிரணியன்‌ ஒண்மார்வகலம்‌ பிளந்திட்ட கைகளால்‌ சப்பாணி பேய்முலை உண்டானே சப்பாணி

84

அடைந்திட்டு அமரர்கள்‌ ஆழ்கடல்‌ தன்னை மிடைந்திட்டு மந்தரம்‌ மத்தாக நாட்டி வடம்‌ சுற்றி வாசுகி வன்கயிறாக கடைந்திட்ட கைகளால்‌ சப்பாணி கார்முகில்‌ வண்ணனே சப்பாணி

85

ஆட்கொள்ளத்‌ தோன்றிய ஆயர்‌ தங்கோவினை நாட்கமழ்‌ பூம்பொழில்‌ வில்லிபுத்தூர்ப்‌ பட்டன்‌ வேட்கையால்‌ சொன்ன சப்பாணி ஈரைந்தும்‌ வேட்கையினால்‌ சொல்லுவார்‌ வினை போமே