Skip to the text
திருச்சந்த விருத்தம்

திருச்சந்த விருத்தம்

திருமழிசைப்பிரான் · முதலாயிரம்

Essence of this decad

திருமழிசை ஆழ்வார் சந்த வடிவில் அருளிய நூற்றிருபது பாசுரங்கள். ஐம்பூதங்களும், நான்கு வேதங்களும், காலமும், உயிர்களும் அவனேயாக இருக்கும் தன்மையை மீண்டும் மீண்டும் அறிவிக்கிறார். பிற தெய்வங்களை ஒப்பிட்டு ஆராய்ந்து, திருமாலே பரம்பொருள் என்று அறுதியிடுகிறார். இசைபோல் ஒலிக்கும் சந்தத்திற்குள் கூர்மையான தத்துவ வாதம் ஒளிந்திருப்பது இந்நூலின் தனித்தன்மை.

752

பூநிலாய ஐந்துமாய்ப்‌ புனற்கண்‌ நின்ற நான்குமாய்‌ தீநிலாய மூன்றுமாய்ச்‌ சிறந்தகால்‌ இரண்டூுமாய்‌ மீநிலாயதொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்‌ நீநிலாய வண்ணம்‌ நின்னை யார்‌ நினைக்க வல்லரே

753

ஆறும்‌ ஆறும்‌ ஆறுமாய்‌ ஓர்‌ ஐந்தும்‌ ஐந்தும்‌ ஐந்துமாய்‌ ஏறு சீர்‌ இரண்டு மூன்றும்‌ ஏழும்‌ ஆறும்‌ எட்டூமாய்‌ வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்‌ ஊறொடோசையாய ஐந்தும்‌ ஆய ஆய மாயனே

754

ஐந்தும்‌ ஐந்தும்‌ ஐந்துமாகி அல்லவற்றுளாயுமாய்‌ ஐந்து மூன்றும்‌ ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனே ஐந்தும்‌ ஐந்தும்‌ ஐந்துமாகி அந்தரத்தணைந்து நின்று ஐந்தும்‌ ஐந்துமாய நின்னை யாவர்‌ காண வல்லரே

755

மூன்று முப்பதாறினோடூ ஓர்‌ ஐந்தும்‌ ஐந்தும்‌ ஐந்துமாய்‌ மூன்று மூர்த்தியாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்‌ தோன்று சோதி மூன்றுமாய்த்‌ துளக்கமில்‌ விளக்கமாய்‌ ஏன்றெனாவியுள்‌ புகுந்தது என்‌ கொலோ எம்‌ ஈசனே

756

நின்றியங்கும்‌ ஒன்றலா உருக்கள்‌ தோறும்‌ ஆவியாய்‌ ஒன்றி உள்‌ கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று என்றும்‌ யார்க்கும்‌ எண்ணிறந்த ஆதியாய்‌ நின்‌ உந்தி வாய்‌ அன்று நான்முகற்‌ பயந்த ஆதி தேவன்‌ அல்லையே

757

நாகமேந்து மேருவெற்பை நாகமேந்து மண்ணினை நாகமேந்து மாகமாகம்‌ மாகமேந்து வார்புனல்‌ மாகமேந்து மங்குல்தீ ஓர்‌ வாயுவைந்தமைந்து காத்து ஏகமேந்தி நின்ற நீர்மை நின்‌ கணே இயன்றதே

758

ஒன்றிரண்டு மூர்த்தியாய்‌ உறக்கமோடு உணர்ச்சியாய்‌ ஒன்றிரண்டு காலமாகி வேலை ஞாலமாயினாய்‌ ஒன்றிரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே ஒன்றிரண்டு கண்ணினானும்‌ உன்னை ஏத்த வல்லனே

759

ஆதியான வானவர்க்கும்‌ அண்டமாய அப்புறத்து ஆதியான வானவர்க்கும்‌ ஆதியான ஆதி நீ ர்‌ ஆதியான வான வாணர்‌ அந்த காலம்‌ நீ உரைத்தி ஆதியான காலம்‌ நின்னை யாவர்‌ காண வல்லரே

760

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச்‌ சிவன்‌ நீதியால்‌ வணங்கு பாத நின்மலா நிலாய சீர்‌ வேத வாணர்‌ கீத வேள்வி நீதியான வேள்வியார்‌ நீதியால்‌ வணங்குகின்ற நீர்மை நின்‌ கண்‌ நின்றதே

761

தன்னுளே திரைத்தெழும்‌ தரங்கவெண்‌ தடங்கடல்‌ தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மை போல்‌ நின்னுளே பிறந்திறந்து நிற்பவும்‌ திரிபவும்‌ நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்‌ கண்‌ நின்றதே

762

சொல்லினால்‌ தொடர்ச்சி நீ சொலப்படும்‌ பொருளும்‌ நீ சொல்லினால்‌ சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ சொல்லினால்‌ படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்‌ சொல்லினால்‌ சுருங்க நின்‌ குணங்கள்‌ சொல்ல வல்லரே

763

உலகு தன்னை நீ படைத்தி உள்ளொடுக்கி வைத்தி மீண்டு உலகு தன்னுளே பிறத்தி ஹிடத்தை அல்லையால்‌ உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றியாதலால்‌ உலகில்‌ நின்னை உள்ள சூழல்‌ யாவர்‌ உள்ள வல்லரே

764

இன்னை என்று சொல்லல்‌ ஆவது இல்லையாதும்‌ இட்டிடை பின்னை கேள்வன்‌ என்பர்‌ உன்‌ பிணக்குணர்ந்த பெற்றியோர்‌ பின்னையாய கோலமோடு பேரும்‌ ஊரும்‌ ஆதியும்‌ நின்னை யார்‌ நினைக்க வல்லர்‌ நீர்மையால்‌ நினைக்கிலே

765

தூய்மை யோகமாயினாய்‌ துழாய்‌ அலங்கல்‌ மாலையாய்‌ ஆமையாகி ஆழ்கடல்‌ துயின்ற ஆதி தேவ நின்‌ நாமதேயம்‌ இன்னதென்ன வல்லமல்லவாகிலும்‌ சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே

766

அங்கம்‌ ஆறும்‌ வேதம்‌ நான்கும்‌ ஆகி நின்று அவற்றுளே தங்குகின்ற தன்மையாய்‌ தடங்கடல்‌ பணத்தலை செங்கண்‌ நாகணைக்‌ கிடந்த செல்வமல்கு சீரினாய்‌ சங்க வண்ணமன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே

767

தலைக்கணத்துகள்‌ குழம்பு சாதி சோதி தோற்றமாய்‌ நிலைக்‌ கணங்கள்‌ காண வந்து நிற்றியேலும்‌ நீடிரும்‌ கலைக்‌ கணங்கள்‌ சொற்‌ பொருள்‌ கருத்தினால்‌ நினைக்கொணா மலைக்‌ கணங்கள்‌ போலுணர்த்தும்‌ மாட்சி நின்தன்‌ மாட்சியே

768

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்‌ போக மூர்த்தி புண்ணியத்தின்‌ மூர்த்தி எண்ணில்‌ மூர்த்தியாய்‌ நாக மூர்த்தி சயனமாய்‌ நலங்கடல்‌ கிடந்து மேல்‌ ஆக மூர்த்தியாய வண்ணம்‌ என்கொல்‌ ஆதி தேவனே

769

விடத்த வாய்‌ ஓராயிரம்‌ இராயிரம்‌ கண்‌ வெந்தழல்‌ விடத்து வீள்விலாத போகம்‌ மிக்க சோதி தொக்க சீர்‌ தொடுத்து மேல்‌ விதானமாய பெளவநீர்‌ அராவணை படுத்த பாயல்‌ பள்ளி கொள்வது என்‌ கொல்‌ வேலை வண்ணனே

770

புள்ளாதாகி வேதம்‌ நான்கும்‌ ஓதினாய்‌ அதன்றியும்‌ புள்ளின்‌ வாய்‌ பிளந்து புட்கொடுப்‌ பிடித்த பின்னரும்‌ புள்ளை ஊர்தியாதலால்‌ அதென்‌ கொல்‌ மின்கொள்‌ நேமியாய்‌ புள்ளின்‌ மெய்ப்‌ பகைக்‌ கடல்‌ கிடத்தல்‌ காதலித்ததே

771

கூசமொன்றுமின்றி மாசுணம்‌ படுத்து வேலை நீர்‌ பேச நின்ற தேவர்‌ வந்து பாட முன்‌ கிடந்ததும்‌ பாசம்‌ நின்ற நீரில்‌ வாழும்‌ ஆமையான கேசவா ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே

772

அரங்கனே தரங்க நீர்‌ கலங்க அன்று குன்று சூழ்‌ மரங்கள்‌ தேய மாநிலம்‌ குலுங்க மாசுணம்‌ சுலாய்‌ நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர்‌ என்‌ செய்தார்‌ குரங்கையாளுகந்த எந்தை கூறு தேற வேறிதே

773

பண்டும்‌ இன்றும்‌ மேலுமாய்‌ ஓர்‌ பாலனாகி ஞாலமேழும்‌ உண்டு மண்டி ஆலிலைத்‌ துயின்ற ஆதி தேவனே வண்டு கிண்டு தண்‌ துழாய்‌ அலங்கலாய்‌ கலந்த சீர்‌ புண்டரீக பாவை சேரும்‌ மார்ப பூமி நாதனே

774

வால்நிறத்தொர்‌ சீயமாய்‌ வளைந்த வாள்‌ எயிற்றவன்‌ ஊன்‌ நிறத்து உகிர்த்தலம்‌ அழுத்தினாய்‌ உலாய சீர்‌ நால்‌ நிறத்த வேத நாவர்‌ நல்ல யோகினால்‌ வணங்கு பால்‌ நிறக்‌ கடல்‌ கிடந்த பற்பநாபன்‌ அல்லையே

775

கங்கை நீர்‌ பயந்த பாத பங்கயத்து எம்‌ அண்ணலே அங்கை ஆழி சங்கு தண்டு வில்லும்‌ வாளும்‌ ஏந்தினாய்‌ சிங்கமாய தேவ தேவ தேனுலாவு மென்மலர்‌ மங்கை மன்னி வாழு மார்ப ஆழி மேனி மாயனே

776

வரத்தினில்‌ சிரத்தை மிக்க வாள்‌ எயிற்று மற்றவன்‌ உரத்தினில்‌ கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினாய்‌ ர இரத்தி நீ இதென்ன பொய்‌ இரந்த மண்‌ வயிற்றுளே கரத்தி உன்‌ கருத்தை யாவர்‌ காண வல்லர்‌ கண்ணனே

777

ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்‌ ஊணொடோசை ஊறுமாகி ஒன்றலாத மாயையாய்‌ பூணி பேணும்‌ ஆயனாகிப்‌ பொய்யினோடு மெய்யுமாய்‌ காணி பேணும்‌ மாணியாய்க்‌ கரந்து சென்ற கள்வனே

778

விண்‌ கடந்த சோதியாய்‌ விளங்கு ஞான மூர்த்தியாய்‌ பண்‌ கடந்த தேசமேவு பாவ நாச நாதனே எண்‌ கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்‌ மண்‌ கடந்த வண்ணம்‌ நின்னை யார்‌ மதிக்க வல்லரே

779

படைத்த பார்‌ இடந்தளந்து அதுண்டுமிழ்ந்து பெளவநீர்‌ படைத்தடைத்ததில்‌ கிடந்து முன்‌ கடைந்த பெற்றியோய்‌ மிடைத்தமாலி மாலிமான்‌ விலங்கு காலனூர்‌ புக படைக்கலம்‌ விடுத்த பல்படைத்‌ தடக்கை மாயனே

780

பரத்திலும்‌ பரத்தையாதி பெளவநீர்‌ அணைக்‌ கிடந்து உரத்திலும்‌ ஒருத்தி தன்னை வைத்துகந்து அதன்றியும்‌ நரத்திலும்‌ பிறத்தி நாத ஞான மூர்த்தி ஆயினாய்‌ ஒருத்தரும்‌ நினாது தன்மை இன்னதென்ன வல்லரே

781

வானகம்மும்‌ மண்ணகம்மும்‌ வெற்பும்‌ ஏழ்கடல்களும்‌ போனகம்‌ செய்து ஆலிலைத்‌ துயின்ற புண்டரீகனே தேனகஞ்‌ செய்தண்ணறும்‌ மலர்த்‌ துழாய்‌ நன்மாலையாய்‌ கூனகம்‌ புகத்‌ தெறித்த கொற்ற வில்லி அல்லையே

782

கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய்‌ ஞாலமேழும்‌ உண்டு பண்டு ஓர்‌ பாலனாய பண்பனே வேலை வேவ வில்‌ வளைத்த வெல்‌ சினத்த வீர நின்‌ பாலராய பத்தர்‌ சித்தம்‌ முத்தி செய்யும்‌ மூர்த்தியே

783

குரக்கினப்‌ படை கொடு குரை கடலின்‌ மீது போய்‌ அரக்கர்‌ அங்கரங்க வெஞ்சரம்‌ துரந்த ஆதி நீ இரக்க மண்‌ கொடுத்தவற்கு இரக்கம்‌ ஒன்றும்‌ இன்றியே பரக்க வைத்தளந்து கொண்ட பற்ப பாதன்‌ அல்லையே

784

மின்னிறத்து எயிற்றரக்கன்‌ வீழ வெஞ்சரம்‌ துரந்து பின்னவற்கு அருள்‌ புரிந்து அரசளித்த பெற்றியோய்‌ நன்னிறத்தொரின்‌ சொல்‌ ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்‌ பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன்‌ அல்லையே

785

ஆதி ஆதி ஆதி நீ ஓர்‌ அண்டம்‌ ஆதி ஆதலால்‌ சோதியாத சோதி நீ அதுண்மையில்‌ விளங்கினாய்‌ வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்‌ ஆதியாகி ஆயனாய மாயம்‌ என்ன மாயமே

786

அம்புலாவும்‌ மீனுமாகி ஆமையாகி ஆழியார்‌ தம்பிரானுமாகி மிக்கது அன்பு மிக்கு அதன்றியும்‌ கொம்பராவு நுண்மருங்குல்‌ ஆயர்‌ மாதர்‌ பிள்ளையாய்‌ எம்பிரானும்‌ ஆய வண்ணம்‌ என்‌ கொலோ எம்‌ ஈசனே

787

ஆடகத்த பூண்முலை அசோதை ஆய்ச்சி பிள்ளையாய்‌ சாடூுதைத்தொர்‌ புள்ளதாவி கள்ளதாய பேய்‌ மகள்‌ ர்‌ வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலழுது செய்து ஆடகக்கை மாதர்‌ வாய்‌ அமுதம்‌ உண்டதென்‌ கொலோ

788

காய்த்தநீள்‌ விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்‌ சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன்‌ என்பரால்‌ ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு வெண்ணெய்‌ உண்டு பின்‌ பேய்ச்சி பாலை உண்டு பண்டொர்‌ ஏனமாய வாமனா

789

கடம்‌ கலந்த வன்‌ கரி மருப்பொசித்து ஓர்‌ பொய்கை வாய்‌ விடம்‌ கலந்த பாம்பின்‌ மேல்‌ நடம்‌ பயின்ற நாதனே குடம்‌ கலந்த கூத்தனாய கொண்டல்‌ வண்ண தண்துழாய்‌ வடம்‌ கலந்த மாலை மார்ப கால நேமி காலனே

790

வெற்பெடுத்து வேலை நீர்‌ கலக்கினாய்‌ அதன்றியும்‌ வெற்பெடுத்து வேலை நீர்‌ வரம்பு கட்டி வேலை சூழ்‌ வெற்பெடுத்த இஞ்சி சூழ்‌ இலங்கை கட்டடுத்த நீ வெற்பெடுத்து மாரி காத்த மேகவண்ணன்‌ அல்லையே

791

ஆனை காத்து ஓர்‌ ஆனை கொன்று அதன்றி ஆயர்‌ பிள்ளையாய்‌ ஆனை மேய்த்தி ஆநெயுண்டி அன்று குன்றம்‌ ஒன்றினால்‌ ஆனை காத்து மையரிக்கண்‌ மாதரார்‌ திறத்து முன்‌ ஆனை அன்று சென்றடர்த்த மாயம்‌ என்ன மாயமே

792

ஆயனாகி ஆயர்‌ மங்கை வேயதோள்‌ விரும்பினாய்‌ ஆய நின்னை யாவர்‌ வல்லர்‌ அம்பரத்தொடு இம்பராய்‌ மாய மாய மாயை கொல்‌ அதன்றி நீ வகுத்தலும்‌ மாய மாயம்‌ ஆக்கினாய்‌ உன்‌ மாய முற்றும்‌ மாயமே

793

வேறிசைந்த செக்கர்‌ மேனி நீறணிந்த புன்சடை கீறுதிங்கள்‌ வைத்தவன்‌ கைவைத்தவன்‌ கபால்மிசை ஊறு செங்குருதியால்‌ நிறைத்த காரணம்‌ தனை ஏறு சென்றடர்த்த ஈச பேசு கூசமின்றியே

794

வெஞ்சினத்த வேழ வெண்‌ மருப்பொசித்து உருத்தமா கஞ்சனைக்‌ கடிந்து மண்ணளந்து கொண்ட காலனே வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள்‌ வாங்கினாய்‌ அஞ்சனத்த வண்ணனாய ஆதி தேவன்‌ அல்லையே

795

பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின்‌ பசும்‌ புறம்‌ போலும்‌ நீர்மை பொற்புடைத்‌ தடத்து வண்டு விண்டுலாம்‌ நீல நீர்மை என்றிவை நிறைந்த காலம்‌ நான்குமாய்‌ மாலின்‌ நீர்மை வையகம்‌ மறைத்தது என்ன நீர்மையே

796

மண்ணுளாய்‌ கொல்‌ விண்ணுளாய்‌ கொல்‌ மண்ணுளே மயங்கி நின்று எண்ணும்‌ எண்ணகப்படாய்‌ கொல்‌ என்ன மாயை நின்‌ தமர்‌ ர்‌ கண்ணுளாய்‌ கொல்‌ சேயை கொல்‌ அனந்தன்‌ மேல்‌ கிடந்த எம்‌ புண்ணியா புனந்துழாய்‌ அலங்கலம்‌ புனிதனே

797

தோடு பெற்ற தண்‌ துழாய்‌ அலங்கலாடு சென்னியாய்‌ கோடு பற்றி ஆழி ஏந்தி அஞ்சிறைப்‌ புள்‌ ஊர்தியால்‌ நாடு பெற்ற நன்மை நண்ணமில்லையேனும்‌ நாயினேன்‌ வீடு பெற்று இறப்பொடும்‌ பிறப்பறுக்குமா சொலே

798

காரொடொத்த மேனி நங்கள்‌ கண்ண விண்ணின்‌ நாதனே நீரிடத்தராவணைக்‌ கிடத்தி என்பர்‌ அன்றியும்‌ ஓரிடத்தையல்லை எல்லை இல்லை என்பர்‌ ஆதலால்‌ சேர்விடத்தை நாயினேன்‌ தெரிந்திறைஞ்சுமா சொலே

799

குன்றில்‌ நின்று வான்‌ இருந்து நீள்‌ கடல்‌ கிடந்து மண்‌ ஒன்று சென்றதொன்றை உண்டு அதொன்றிடந்து பன்றியாய்‌ நன்று சென்ற நாள்‌ அவற்றுள்‌ நல்லுயிர்‌ படைத்து அவர்க்கு அன்று தேவமைத்தளித்த ஆதி தேவன்‌ அல்லையே

800

கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்‌ உண்டை கொண்டு அரங்கவோட்டி உள்‌ மகிழ்ந்த நாதன்‌ ஊர்‌ ப நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும்‌ அந்தணீர்‌ அரங்கமே

801

வெண்திரைக்‌ கருங்கடல்‌ சிவந்து வேவ முன்னொர்‌ நாள்‌ திண்திறல்‌ சிலைக்கை வாளி விட்ட வீரர்‌ சேரும்‌ ஊர்‌ எண்திசைக்‌ கணங்களும்‌ இறைஞ்சியாடு தீர்த்த நீர்‌ வண்டிரைத்த சோலை வேலி மன்னு சீர்‌ அரங்கமே

802

சரங்களைத்‌ துரந்து வில்‌ வளைத்து இலங்கை மன்னவன்‌ சிரங்கள்‌ பத்தறுத்து உதிர்த்த செல்வர்‌ மன்னு பொன்னிடம்‌ பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும்‌ வார்‌ புனல்‌ அரங்கம்‌ என்பர்‌ நான்முகத்து அயன்‌ பணிந்த கோயிலே

803

பொற்றையுற்ற முற்றல்‌ யானை போர்‌ எதிர்ந்து வந்ததை பற்றி உற்று மற்றதன்‌ மருப்பொசித்த பாகன்‌ ஊர்‌ சிற்றெயிற்று முற்றல்‌ மூங்கில்‌ மூன்று தண்டர்‌ ஒன்றினர்‌ அற்ற பற்றர்‌ சுற்றி வாழும்‌ அந்தணீர்‌ அரங்கமே

804

மோடியோடிலச்சையாய சாபம்‌ எய்தி முக்கணான்‌ கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓட வாணன்‌ ஆயிரம்‌ கரம்‌ கழித்த ஆதிமால்‌ பீடு கோயில்‌ கூடு நீர்‌ அரங்கம்‌ என்ற பேரதே

805

இலைத்‌ தலைச்‌ சரம்‌ துரந்து இலங்கை கட்டழித்தவன்‌ மலைத்‌ தலைப்‌ பிறந்திழிந்து வந்து நுந்து சந்தனம்‌ குலைத்‌ தலைத்திறுத்தெறிந்த குங்குமக்‌ குழம்பினோடூ அலைத்தொழுகு காவிரி அரங்கம்‌ மேய அண்ணலே

806

மன்னு மாமலர்க்‌ கிழத்தி வைய மங்கை மைந்தனாய்‌ பின்னும்‌ ஆயர்‌ பின்னை தோள்‌ மணம்‌ புணர்ந்ததன்றியும்‌ உன்ன பாதம்‌ என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்‌ பொன்னி சூழ்‌ அரங்கமேய புண்டரீகன்‌ அல்லையே

807

இலங்கை மன்னனைந்தொடைந்து பைந்தலை நிலத்துக கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே விலங்கு நூலர்‌ வேத நாவர்‌ நீதியான கேள்வியார்‌ வலங்கொளக்‌ குடந்தையுள்‌ கிடந்த மாலுமல்லையே

808

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல்‌ உற்றவன்‌ அங்கம்‌ மங்க அன்று சென்று அடர்த்தெறிந்த ஆழியான்‌ கொங்கு தங்குவார்‌ குழல்‌ மடந்தைமார்‌ குடைந்த நீர்‌ பொங்கு தண்‌ குடந்தையுள்‌ கிடந்த புண்டரீகனே

809

மரம்‌ கெட நடந்தடர்த்து மத்த யானை மத்தகத்து உரம்‌ கெடப்‌ புடைத்து ஓர்‌ கொம்பொசித்து உகந்த உத்தமா ர்‌ துரங்கம்‌ வாய்‌ பிளந்து மண்ணளந்த பாத வேதியர்‌ வரம்‌ கொளக்‌ குடந்தையுள்‌ கிடந்த மாலுமல்லையே

810

சாலி வேலி தண்வயல்‌ தடங்கிடங்கு பூம்பொழில்‌ கோலமாட நீடு தண்குடந்தை மேய கோவலா கால நேமி வக்கரன்‌ கரன்‌ முரன்‌ சிரம்மவை காலனோடு கூட வில்‌ குனித்த விற்கை வீரனே

811

செழுங்கொழும்‌ பெரும்‌ பனி பொழிந்திட உயர்ந்த வேய்‌ விழுந்துலர்ந்தெழுந்து விண்‌ புடைக்கும்‌ வேங்கடத்துள்‌ நின்று எழுந்திருந்து தேன்‌ பொருந்து பூம்பொழில்‌ தழைக்‌ கொழும்‌ செழுந்தடங்‌ குடந்தையுள்‌ கிடந்த மாலுமல்லையே

812

நடந்த கால்கள்‌ நொந்தவோ நடுங்க ஞாலம்‌ ஏனமாய்‌ இடந்த மெய்‌ குலுங்கவோ விலங்கு மால்வரைச்சுரம்‌ கடந்த கால்‌ பரந்த காவிரிக்‌ கரைக்‌ குடந்தையுள்‌ கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே

813

கரண்ட மாடு பொய்கையுள்‌ கரும்பனைப்‌ பெரும்‌ பழம்‌ புரண்டு வீழ வாளை பாய்‌ குறுங்குடி நெடுந்த காய்‌ திரண்ட தோள்‌ இரணியன்‌ சினங்கொள்‌ ஆகம்‌ ஒன்றையும்‌ இரண்டு கூறு செய்துகந்த சிங்கம்‌ என்பது உன்னையே

814

நன்றிருந்து யோக நீதி நண்ணுவார்கள்‌ சிந்தையுள்‌ சென்றிருந்து தீவினைகள்‌ தீர்த்த தேவ தேவனே குன்றிருந்த மாட நீடு பாடகத்தும்‌ ஊரகத்தும்‌ நின்றிருந்து வெஃகணைக்‌ கிடந்தது என்ன நீர்மையே

815

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெஃகணைக்‌ கிடந்தது என்னிலாத முன்னெலாம்‌ அன்று நான்‌ பிறந்திலேன்‌ பிறந்த பின்‌ மறந்திலேன்‌ நின்றதும்‌ இருந்ததும்‌ கிடந்ததும்‌ என்‌ நெஞ்சுளே

816

நிற்பதும்‌ ஒர்‌ வெற்பகத்து இருப்பும்‌ விண்‌ கிடப்பதும்‌ நற்பெருந்திரைக்‌ கடலுள்‌ நானிலாத முன்னெலாம்‌ அற்புதன்‌ அனந்த சயனன்‌ ஆதி பூதன்‌ மாதவன்‌ நிற்பதும்‌ இருப்பதும்‌ கிடப்பதும்‌ என்‌ நெஞ்சுளே

817

இன்று சாதல்‌ நின்று சாதல்‌ அன்றியாரும்‌ வையகத்து ஒன்றி நின்று வாழ்தலின்மை கண்டும்‌ நீசர்‌ என்‌ கொலோ அன்று பாரளந்த பாத போதையொன்றி வானின்‌ மேல்‌ சென்று சென்று தேவராய்‌ இருக்கிலாத வண்ணமே

818

சண்ட மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று மேல்‌ கண்டு வீடிலாத காதல்‌ இன்பம்‌ நாளும்‌ எய்துவீர்‌ புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும்‌ செவி மடுத்து உண்டு நும்முறு வினைத்‌ துயருள்‌ நீங்கி உய்ம்மினோ

819

முத்திறத்து வாணியத்து இரண்டில்‌ ஒன்றும்‌ நீசர்கள்‌ மத்தராய்‌ மயங்குகின்றது இட்டதிலிறந்து போந்து எத்திறத்தும்‌ உய்வது ஓர்‌ உபாயமில்லை உய்குறில்‌ தொத்துறுத்த தண்துழாய்‌ நன்மாலை வாழ்த்தி வாழ்மினோ

820

காணிலும்‌ உருப்பொலார்‌ செவிக்கினாத கீர்த்தியார்‌ பேணிலும்‌ வரம்‌ தர மிடுக்கிலாத தேவரை ஆணம்‌ என்றடைந்து வாழும்‌ ஆதர்காள்‌ எம்மாதி பால்‌ பேணி நும்‌ பிறப்பெனும்‌ பிணக்கு அறுக்க கிற்றிரே

821

குந்தமோடு சூலம்‌ வேல்கள்‌ தோமரங்கள்‌ தண்டு வாள்‌ பந்தமான தேவர்கள்‌ பரந்து வானகம்‌ உற வந்த வாணன்‌ ஈரைஞ்னூறு தோள்களைத்‌ துணித்த நாள்‌ அந்த வந்த ஆகுலம்‌ அமரரே அறிவரே

822

வண்டுலாவு கோதை மாதர்‌ காரணத்தினால்‌ வெகுண்டு இண்ட வாணன்‌ ஈரைஞ்தூறு தோள்களைத்‌ துணித்த நாள்‌ முண்டன்‌ நீறன்‌ மக்கள்‌ வெப்பு மோடி அங்கி ஓடிடக்‌ கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான்‌ எம்‌ மாயனே

823

போதில்‌ மங்கை பூதலக்‌ கிழத்தி தேவி அன்றியும்‌ போது தங்கு நான்முகன்‌ மகன்‌ அவன்‌ மகன்‌ சொலில்‌ மாது தங்கு கூறன்‌ ஏறதூர்தி என்று வேத நூல்‌ ஓதுகின்றதுண்மை அல்லதில்லை மற்றுரைக்கிலே

824

மரம்‌ பொதச்‌ சரம்‌ துரந்து வாலி வீழ முன்னொர்‌ நாள்‌ உரம்‌ பொதச்‌ சரம்‌ துரந்த உம்பராளி எம்பிரான்‌ வரம்‌ குறிப்பில்‌ வைத்தவர்க்கு அலாது வானம்‌ ஆளிலும்‌ நிரம்பு நீடு போகம்‌ எத்திறத்தும்‌ யார்க்குமில்லையே

825

அறிந்தறிந்து வாமனன்‌ அடியிணை வணங்கினால்‌ செறிந்தெழுந்த ஞானமோடு செல்வமும்‌ சிறந்திடும்‌ மறிந்தெழுந்ததெண்‌ திரையுள்‌ மன்னு மாலை வாழ்த்தினால்‌ பறிந்தெழுந்து தீவினைகள்‌ பற்றறுதல்‌ பான்மையே

826

ஒன்றி நின்று நற்றவம்‌ செய்து ஊழி ஊழி தோறெலாம்‌ நின்று நின்று அவன்‌ குணங்கள்‌ உள்ளி உள்ளம்‌ தூயராய்‌ சென்று சென்று தேவ தேவர்‌ உம்பர்‌ உம்பர்‌ உம்பராய்‌ அன்றி எங்கள்‌ செங்கண்‌ மாலை யாவர்‌ காண வல்லரே

827

புன்புல வழி அடைத்து அரக்கிலச்சினை செய்து நன்புல வழி திறந்து ஞான நற்சுடர்‌ கொளீ இ ர் என்பிலெள்கி நெஞ்சுருகி உள்‌ கனிந்தெழுந்துதது ஓர்‌ அன்பிலன்றி ஆழியானை யாவர்‌ காண வல்லரே

828

எட்டும்‌ எட்டும்‌ எட்டூமாய்‌ ஒரேழும்‌ ஏழும்‌ ஏழுமாய்‌ எட்டு மூன்றும்‌ ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனை எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்று அவன்‌ பெயர்‌ எட்டெழுத்தும்‌ ஓதுவார்கள்‌ வல்லர்‌ வானமாளவே

829

சோர்விலாத காதலால்‌ தொடக்கறா மனத்தராய்‌ நீர்‌ அராவணைக்‌ கிடந்த நின்மலன்‌ நலங்கழல்‌ ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன்‌ பெயர்‌ எட்டெழுத்தும்‌ வாரமாக ஓதுவார்கள்‌ வல்லர்‌ வானமாளவே

830

பத்தினோடு பத்துமாய்‌ ஒர்‌ ஏழினோடு ஒர்‌ ஒன்பதாய்‌ பத்தினால்‌ திசைக்‌ கண்‌ நின்ற நாடு பெற்ற நன்மையாய்‌ பத்தினாய தோற்றமோடு ஒர்‌ ஆற்றல்‌ மிக்க ஆதி பால்‌ பத்தராம்‌ அவர்க்கலாது முத்தி முற்றலாகுமே

831

வாசியாகி நேசமின்றி வந்தெதிர்ந்த தேனுகன்‌ நாசமாகி நாளுலப்ப நன்மை சேர்‌ பனங்கனிக்கு வீசி மேல்‌ நிமிர்ந்த தோலில்‌ இல்லையாக்கினாய்‌ கழற்கு ஆசையாம்‌ அவர்க்கலால்‌ அமரர்‌ ஆகலாகுமே

832

கடைந்து பாற்கடல்‌ கிடந்து கால நேமியைக்‌ கடிந்து உடைந்த வாலி தன்‌ தனக்கு உதவ வந்த இராமனாய்‌ ர மிடைந்த ஏழ்‌ மரங்களும்‌ அடங்க எய்து வேங்கடம்‌ அடைந்த மால பாதமே அடைந்து நாளும்‌ உய்ம்மினோ

833

எத்திறத்தும்‌ ஒத்து நின்று உயர்ந்துயர்ந்த பெற்றியோய்‌ முத்திறத்து மூரி நீர்‌ அராவணைத்‌ துயின்ற நின்‌ பத்துறுத்த சிந்தையோடு நின்று பாசம்‌ விட்டவர்க்கு எத்திறத்தும்‌ இன்பம்‌ இங்கும்‌ அங்கும்‌ எங்குமாகுமே

834

மட்டூலாவு தண்துழாய்‌ அலங்கலாய்‌ பொலன்‌ கழல்‌ விட்டு வீள்விலாத போகம்‌ விண்ணில்‌ நண்ணியேறினும்‌ எட்டினோடு இரண்டெனும்‌ கயிற்றினால்‌ மனம்‌ தனைக்‌ கட்டி வீடிலாது வைத்த காதல்‌ இன்பமாகுமே

835

பின்‌ பிறக்க வைத்தனன்‌ கொல்‌ அன்றி நின்று தன்‌ கழற்கு அன்புறைக்க வைத்த நாள்‌ அறிந்தனன்‌ கொல்‌ ஆழியான்‌ தன்‌ திறத்து ஒர்‌ அன்பிலா அறிவிலாத நாயினேன்‌ என்‌ திறத்தில்‌ என்‌ கொல்‌ எம்பிரான்‌ குறிப்பில்‌ வைத்ததே

836

நச்சராவணைக்‌ கிடந்த நாத பாத போதினில்‌ வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ இனம்‌ மெய்த்தன்‌ வல்லை ஆதலால்‌ அறிந்தனன்‌ நின்‌ மாயமே உய்த்து நின்‌ மயக்கினில்‌ மயக்கல்‌ என்னை மாயனே

837

சாடு சாடு பாதனே சலம்‌ கலந்த பொய்கை வாய்‌ ஆடராவின்‌ வன்பிடர்‌ நடம்‌ பயின்ற நாதனே கோடு நீடு கைய செய்ய பாதம்‌ நாளும்‌ உள்ளினால்‌ வீடனாக மெய்‌ செயாத வண்ணம்‌ என்‌ கொல்‌ கண்ணனே

838

நெற்றி பெற்ற கண்ணன்‌ விண்ணின்‌ நாதனோடு போதின்‌ மேல்‌ நற்றவத்து நாதனோடு மற்றுமுள்ள வானவர்‌ கற்ற பெற்றியால்‌ வணங்கு பாத நாத வேத நின்‌ பற்றலால்‌ ஓர்‌ பற்று மற்றதுற்றிலேன்‌ உரைக்கிலே

839

வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள்ளெயிற்றராவளாய்‌ அள்ளலாக்‌ கடைந்த அன்று அருவரைக்கு ஒர்‌ ஆமையாய்‌ உள்ள நோய்கள்‌ தீர்‌ மருந்து வானவர்க்களித்த எம்‌ வள்ளலாரை அன்றி மற்றோர்‌ தெய்வம்‌ நான்‌ மதிப்பனே

840

பார்‌ மிகுத்த பாரம்‌ முன்‌ ஒழிச்சுவான்‌ அருச்சுனன்‌ தேர்‌ மிகுத்து மாயமாக்கி நன்று கொன்று வென்றி சேர்‌ மாரதர்க்கு வான்‌ கொடுத்து வையம்‌ ஐவர்‌ பாலதாம்‌ சீர்‌ மிகுத்த நின்னலால்‌ ஓர்‌ தெய்வம்‌ நான்‌ மதிப்பனே

841

குலங்களாய ஈரிரண்டில்‌ ஒன்றிலும்‌ பிறந்திலேன்‌ நலங்களாய நற்கலைகள்‌ நாவிலும்‌ நவின்றிலேன்‌ புலன்கள்‌ ஐந்தும்‌ வென்றிலேன்‌ பொறியிலேன்‌ புனித நின்‌ இலங்கு பாதம்‌ அன்றி மற்றோர்‌ பற்றிலேன்‌ எம்‌ ஈசனே

842

பண்ணுலாவு மென்மொழிப்‌ படைத்‌ தடங்கணாள்‌ பொருட்டு எண்ணிலா அரக்கரை நெருப்பினால்‌ நெருக்கினாய்‌ கண்ணலால்‌ ஒர்‌ கண்ணிலேன்‌ கலந்த சுற்றம்‌ மற்றிலேன்‌ எண்ணிலாத மாய நின்னை என்னுள்‌ நீக்கல்‌ என்றுமே

843

விடைக்‌ குலங்கள்‌ ஏழடர்த்து வென்றி வேற்கண்‌ மாதரார்‌ கடிக்‌ கலந்த தோள்‌ புணர்ந்த காலி ஆய வேலை நீர்‌ படைத்து அடைத்து அதில்‌ கிடந்து முன்‌ கடைந்து நின்‌ தனக்கு அடைக்கலம்‌ புகுந்த என்னை அஞ்சல்‌ என்ன வேண்டுமே

844

சுரும்பரங்கு தண்துழாய்‌ துதைந்தலர்ந்த பாதமே விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே கரும்பிருந்த கட்டியே கடல்‌ கிடந்த கண்ணனே இரும்பரங்க வெஞ்சரம்‌ துரந்த வில்லி ராமனே

845

ஊனில்‌ மேய ஆவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ ஆனில்‌ மேய ஐந்தும்‌ நீ அவற்றுள்‌ நின்ற தூய்மை நீ வானினோடு மண்ணும்‌ நீ வளங்கடற்‌ பயனும்‌ நீ யானும்‌ நீ அதன்றி எம்பிரானும்‌ நீ இராமனே

846

அடக்கரும்புலன்கள்‌ ஐந்தடக்கி ஆசையாம்‌ அவை தொடக்கறுத்து வந்து நின்‌ தொழிற்கண்‌ நின்ற என்னை நீ விடக்‌ கருதி மெய்‌ செயாது மிக்கொர்‌ ஆசை ஆக்கிலும்‌ கடல்‌ கிடந்த நின்னலால்‌ ஓர்‌ கண்ணிலேன்‌ எம்‌ அண்ணலே

847

வரம்பிலாத மாயை மாய வையம்‌ ஏழும்‌ மெய்ம்மையே வரம்பில்‌ ஊழி ஏத்திலும்‌ வரம்பிலாத கீர்த்தியாய்‌ வரம்பிலாத பல்‌ பிறப்பு அறுத்து வந்து நின்‌ கழல்‌ பொருந்து மாதிருந்த நீ வரம்‌ செய்‌ புண்டரீகனே

848

வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும்‌ வாளும்‌ ஏந்து சீர்க்‌ கைய செய்ய போதில்‌ மாது சேரும்‌ மார்ப நாதனே ர ஐயிலாய ஆக்கை நோய்‌ அறுத்து வந்து நின்னடைந்து உய்வதோர்‌ உபாயம்‌ நீ எனக்கு நல்க வேண்டுமே

849

மறம்‌ துறந்து வஞ்சம்‌ மாற்றி ஐம்புலன்கள்‌ ஆசையும்‌ துறந்து நின்‌ கண்‌ ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்‌ பிறந்திறந்து பேரிடர்ச்‌ சுழிக்கணின்று நீங்குமா மறந்திடாது மற்றெனக்கு மாய நல்க வேண்டுமே

850

காட்டி நான்‌ செய்‌ வல்வினை பயன்‌ தனால்‌ மனம்‌ தனை நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார்‌ என கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்‌ பூட்டி வைத்த என்னை நின்னுள்‌ நீக்கல்‌ பூவை வண்ணனே

851

பிறப்பினோடு பேரிடர்ச்‌ சுழிக்கண்‌ நின்றும்‌ நீங்கும்‌ அஃது இறப்ப வைத்த ஞான நீசரைக்‌ கரைக்கொடேற்றுமா பெறற்கரிய நின்ன பாத பத்தியான பாசனம்‌ பெறற்கரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே

852

இரந்துரைப்பதுண்டு வாழி ஏம நீர்‌ நிறத்தமா வரம்‌ தரும்‌ திருக்குறிப்பில்‌ வைத்ததாகில்‌ மன்னு சீர்‌ பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்‌ நிரந்தரம்‌ நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே

853

விள்விலாத காதலால்‌ விளங்கு பாத போதில்‌ வைத்து உள்ளுவேனதூன நோய்‌ ஹிக்குமாதெழிக்கு நீர்‌ பள்ளி மாய பன்றியாய வென்றி வீர குன்றினால்‌ துள்ளு நீர்‌ வரம்பு செய்த தோன்றல்‌ ஒன்று சொல்லிடே

854

திருக்கலந்து சேரும்‌ மார்ப தேவ தேவ தேவனே இருக்கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா கருக்கலந்த காளமேக மேனியாய நின்‌ பெயர்‌ உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே

855

கடூங்கவந்தன்‌ வக்கரன்‌ கரன்‌ முரன்‌ சிரம்மவை இடந்து கூறு செய்த பல்படைத்‌ தடக்கை மாயனே கிடந்திருந்து நின்றியங்கு போதும்‌ நின்ன பொற்கழல்‌ தொடர்ந்து விள்விலாததோர்‌ தொடர்ச்சி நல்க வேண்டுமே

856

மண்ணையுண்டுமிழ்ந்து பின்‌ இரந்து கொண்டளந்து மண்‌ கண்ணுள்‌ அல்லதில்லை என்று வென்ற காலமாயினாய்‌ பண்ணை வென்ற இன்சொல்‌ மங்கை கொங்கை தங்கு பங்கயக்‌ கண்ண நின்ன வண்ணம்‌ அல்லதில்லை எண்ணும்‌ வண்ணமே

857

கறுத்தெதிர்ந்த கால நேமி காலனோடு கூட அன்று அறுத்த ஆழி சங்கு தண்டு வில்லும்‌ வாளும்‌ ஏந்தினாய்‌ தொறுக்கலந்த ஊனமஃது ஒழிக்க அன்று குன்றம்‌ முன்‌ பொறுத்த நின்‌ புகழ்க்கலால்‌ ஒர்‌ நேசமில்லை நெஞ்சமே

858

காய்சினத்த காசி மன்னன்‌ வக்கரன்‌ பவுண்டிரன்‌ மாசினத்த மாலி மான்‌ சுமாலிகேசி தேனுகன்‌ நாசம்‌ உற்று வீழ நாள்‌ கவர்ந்த நின்‌ கழற்கலால்‌ நேச பாசம்‌ எத்திறத்தும்‌ வைத்திடேன்‌ எம்‌ ஈசனே

859

கேடில்‌ சீர்‌ வரத்தனாய்க்‌ கெடும்‌ வரத்து அயன்‌ அரன்‌ நாடினோடு நாட்டமாயிரத்தன்‌ நாடு நண்ணினும்‌ வீடதான போகம்‌ எய்தி வீற்றிருந்த போதிலும்‌ கூடும்‌ ஆசை அல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே

860

சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய்‌ சுருங்கியும்‌ பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்‌ செருக்குவார்கள்‌ தீக்குணங்கள்‌ தீர்த்த தேவ தேவன்‌ என்று இருக்குவாய்‌ முனிக்‌ கணங்கள்‌ ஏத்த யானும்‌ ஏத்தினேன்‌

861

தூயனாயும்‌ அன்றியும்‌ சுரும்புலாவு தண்துழாய்‌ மாய நின்னை நாயினேன்‌ வணங்கி வாழ்த்தும்‌ ஈதெலாம்‌ நீயும்‌ நின்‌ குறிப்பினில்‌ பொறுத்து நல்கு வேலை நீர்‌ பாயலோடு பத்தர்‌ சித்தம்‌ மேய வேலை வண்ணனே

862

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்‌ மாறில்‌ போர்‌ செய்து நின்ன செற்ற தீயில்‌ வெந்தவர்க்கும்‌ வந்துன்னை எய்தலாகும்‌ என்பர்‌ ஆதலால்‌ எம்‌ மாய நாயினேன்‌ செய்த குற்றம்‌ நற்றமாகவே கொள்‌ ஞால நாதனே

863

வாள்களாகி நாள்கள்‌ செல்ல நோய்மை குன்றி மூப்பெய்தி மாளு நாள்‌ அதாதலால்‌ வணங்கி வாழ்த்து என்‌ நெஞ்சமே ஆளதாகும்‌ நன்மை என்று நன்குணர்ந்ததன்றியும்‌ மீள்விலாத போகம்‌ நல்க வேண்டும்‌ மால பாதமே

864

சலங்கலந்த செஞ்சடைக்‌ கறுத்த கண்டன்‌ வெண்தலை புலன்‌ கலங்க உண்ட பாதகத்தன்‌ வன்‌ துயர்‌ கெட அலங்கல்‌ மார்வில்‌ வாச நீர்‌ கொடுத்தவன்‌ அடுத்த சீர்‌ நலங்கொள்‌ மாலை நண்ணும்‌ வண்ணம்‌ எண்ணு வாழி நெஞ்சமே

865

ஈஈனமாய எட்டும்‌ நீக்கி ஏதமின்றி மீது போய்‌ வானமாள வல்லையேல்‌ வணங்கி வாழ்த்தென்‌ நெஞ்சமே ஞானமாகி ஞாயிறாகி ஞாலமுற்றும்‌ ஓர்‌ எயிற்று ஏனமாய்‌ இடந்த மூர்த்தி எந்தை பாதம்‌ எண்ணியே

866

அத்தனாகி அன்னையாகி ஆளும்‌ எம்பிரானுமாய்‌ ஒத்தொவ்வாத பல்பிறப்பொழித்து நம்மை ஆட்கொள்வான்‌ முத்தனார்‌ முகுந்தனார்‌ புகுந்து நம்முள்‌ மேவினார்‌ எத்தினால்‌ இடர்க்கடல்‌ கிடத்தி ஏழை நெஞ்சமே

867

மாறு செய்த வாளரக்கன்‌ நாளுலப்ப அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்‌ வேறு செய்து தம்முள்‌ என்னை வைத்திடாமையால்‌ நமன்‌ கூறு செய்து கொண்டிறந்த குற்றம்‌ எண்ண வல்லனே

868

அச்சம்‌ நோயொடு அல்லல்‌ பல்பிறப்பு ஆய மூப்பிவை வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில்‌ ஏற்றுவான்‌ அச்சுதன்‌ அனந்த கீர்த்தி ஆதி அந்தம்‌ இல்லவன்‌ நச்சு நாகணைக்‌ கிடந்த நாதன்‌ வேத கீதனே

869

சொல்லினும்‌ தொழிற்கணும்‌ தொடக்கறாத அன்பினும்‌ அல்லும்‌ நன்பகலினோடும்‌ ஆன மாலை காலையும்‌ வல்லி நாண்மலர்க்‌ கிழத்தி நாத பாத போதினை புல்லி உள்ளம்‌ விள்விலாது பூண்டு மீண்டதில்லையே

870

பொன்னி சூழ்‌ அரங்க மேய பூவை வண்ண மாய கேள்‌ என்னதாவி என்னும்‌ வல்வினையின்‌ உட்கொழுந்தெழுந்து உன்ன பாதமென்ன நின்ற ஒண்சுடர்க்‌ கொழுமலர்‌ மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும்‌ நின்றதே

871

இயக்கறாத பல்பிறப்பில்‌ என்னை மாற்றி இன்று வந்து உயக்கொள்‌ மேக வண்ணன்‌ நண்ணி என்னிலாய தன்னுளே மயக்கினான்‌ தன்‌ மன்னு சோதி ஆதலால்‌ என்னாவி தான்‌ இயக்கெலாம்‌ அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே திருமழிசைப்பிரான்‌ திருவடிகளே சரணம்‌