ஆலைநீள் கரும்பன்னவன் தாலோ அம்புயுத் தடம் கண்ணினன் தாலோ வேலை நீர் நிறத்தன்னவன் தாலோ வேழப் போதகமன்னவன் தாலோ ஏலவார் குழல் என் மகன் தாலோ என்றென்று உன்னை என் வாயிடை நிறைய தாலொலித்திடும் திருவினையில்லாத் தாயரில் கடை ஆயின தாயே
7. ஆலைநீள் கரும்பு
குலசேகர ஆழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
தசரதன் இராமனுக்குப் பாடும் தாலாட்டு. கரும்பு போன்ற இனிய மைந்தனை "தாலோ" என்று ஆட்டி, அவனது அழகையும் விளையாட்டையும் ஒரு தந்தை வியந்து பார்க்கிறார். இறைவனை மகனாகப் பெற்ற பேற்றை அறியாமலேயே அனுபவிக்கும் ஒரு தந்தையின் மனநிலை இப்பதிகத்தில் விரிகிறது.
பெருமாள் திருமொழி - 7 ஆலைநீள் கரும்பு (கண்ணனது பால லீலைகளைக் காணப் பெறாத தேவகியின் புலம்பல்)
வடிக்கொள் அஞ்சனம் எழுது செம்மலர்க்கண் மருவி மேலினிதொன்றினை நோக்கி முடக்கிச் சேவடி மலர்ச் சிறு கருந்தாள் பொலியும் நீர் முகில் குழவியே போல அடக்கியாரச் செஞ்சிறு விரல் அனைத்தும் அங்கையோடு அணைந்து ஆனையிற் கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலேன் அந்தோ கேசவா கெடூவேன் கெடுவேனே
முந்தை நன்முறை அன்புடை மகளிர் முறை முறை தந்தம் குறங்கிடை இருத்தி எந்தையே என்தன் குலப் பெருஞ்சுடரே எழுமுகில் கணத்தெழில் கவரேறே உந்தையாவன் என்றுரைப்ப நின் செங்கேழ் விரலினும் கடைக் கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே
களி நிலா எழில் மதி புரை முகமும் கண்ணனே திண்கை மார்வும் திண்தோளும் தளிமலர்க் கருங்குழல் பிறை அதுவும் தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த இளமை இன்பத்தை இன்று என்தன் கண்ணால் பருகுவேற்கு இவள் தாய் என நினைந்த அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனதாவி நில்லாதே க
மருவும் நின் திருநெற்றியில் சுட்டி அசைதர மணி வாயிடை முத்தம் தருதலும் உன்தன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கும் அவ்வுரையும் திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
தண்ணந்தாமரைக் கண்ணனே கண்ணா தவழ்ந்தெழுந்து தளர்ந்ததோர் நடையால் மண்ணில் செம்பொடுயாடி வந்து என்தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன் என்னை என் செய்யப் பெற்றது எம்மோயே
குழகனே என்தன் கோமளப் பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி ஒழுகு பேரெழில் இளஞ்சிறு தளிர் போல் ஒரு கையால் ஒரு முலைமுகம் நெருடா மழலை மெந்நகை இடையிடை அருளா வாயிலே முலையிருக்க என் முகத்தே எழில்கொள் நின் திருக்கண்ணிணை நோக்கந் தன்னையும் இழந்தேன் இழந்தேனே
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டுண்ணும் முகிழிளஞ் சிறுத் தாமரைக் கையும் எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும் அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும் தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லை இன்பத்திறுதி கண்டாளே
குன்றினால் குடை கவித்ததும் கோலக் குரவை கோத்ததும் குடமாட்டூும் கன்றினால் விளவெறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா வென்றிசேர் பிள்ளை நல்விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள் குளிர ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டெனில் அருளே
வஞ்சமேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வரண்டு நார்நரம்பெழக்கரிந்துக்க நஞ்சமார் தரு சுழிமுலை அந்தோ சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய் கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய் கடைப்பட்டேன் வெறிதே முலை சுமந்து தஞ்சமேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன் தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே
மல்லை மாநகர்க்கிறையவன் தன்னை வான் செலுத்தி வன் தீங்கணை மாயத்து எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் கொல்லி காவலன் மாலடி முடிமேல் கோலமாம் குலசேகரன் சொன்ன நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே