ஏர்மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர் எனைப் பலருள்ள இவ்வூரில் உன் தன் மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு கூர்மழை போல் பனிக் கூதலெய்திக் கூசி நடூங்கி யமுனை ஆற்றில் வார்மணற் குன்றில் புலர நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே
6. ஏர்மலர்
குலசேகர ஆழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
தேவகியின் ஏக்கத்தை ஆழ்வார் பாடும் பதிகம். ஆயர்பாடிப் பெண்கள் அனுபவித்த குழந்தைப் பருவத்தை — தவழ்வதையும், மழலையையும், வெண்ணெய் திருடுவதையும் — பெற்ற தாயாகிய தான் ஒன்றும் காணப்பெறவில்லையே என்று அவள் வருந்துகிறாள். பெற்றவளுக்கு மறுக்கப்பட்டதை வளர்த்தவள் பெற்ற வேதனை இது. மகிழ்ச்சியை அல்ல, அது நிகழ்ந்த இடத்தில் இல்லாதிருந்ததன் வலியைப் பேசும் அரிய பதிகம்.
பெருமாள் திருமொழி - 6 ஏர்மலர் (ஆய்ச்சியர் கூடி அமலனை எள்கி உரைத்தல்)
கெர்ண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்துத் தயிர் கடையக் கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று கள்ள விழியை விழித்துப் புக்கு வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ வாள் முகம் வேர்ப்பச் செவ்வாய் துடிப்ப தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய்யறிவன் நானே
கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக்கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால் மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்குப் பொய் குறித்து புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னைப் புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை மருதிறுத்தாய் உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் உன்தன் மாயை தானே
தாய் முலைப் பாலில் அழுதிருக்கத் தவழ்ந்து தளர்நடை இட்டூச் சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை உண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் ஆய்மிகு காதலோடு யான் இருப்ப யான் விட வந்த என் தூதியோடே நீ மிகு போகத்தை நன்குகந்தாய் அதுவும் உன் கோரம்புக்கேற்குமன்றே (க)
மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு வீங்கிருள்வாய் என்தன் வீதியூடே பொன்னொத்த வாடை குக்கூடலிட்டுப் போகின்ற போது நான் கண்டு நின்றேன் கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக் கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பி நீயே
மற்பொரு தோளுடை வாசுதேவா வல்வினையேன் துயில் கொண்டவாறே இற்றை இரவிடையே மத்தென்னை இன்னணை மேலிட்டு அகன்று நீ போய் ர அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய் எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் எம்பெருமான் நீ எழுந்தருளே
பையரவின் அணைப் பள்ளியினாய் பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும் மையரி ஒண் கண்ணினாரும் அல்லோம் வைகி எம்சேரிவரவொழி நீ செய்ய உடையும் திருமுகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு பொய்யொரு நாள் பட்டதே அமையும் புள்ளுவம் பேசாதே போகு நம்பீ
என்னை வருகவெனக் குறித்திட்டு இஇனமலர் முல்லையின் பந்தர் நீழல் மன்னி அவளைப் புணரப் புக்கு மற்றென்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய் பொன்னிற ஆடையைக் கையில் தாங்கிப் பொய் அச்சம் காட்டி நீ போதியேலும் இன்னம் என் கையகத்து ஈங்கொரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே
மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க மயில் தழைப் பீலி சூடி பொங்கிளவாடை அரையில் சாத்திப் பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து கொங்கு நறுங்குழலார்களோடு குழைந்து குழல் இனிதூதி வந்தாய் எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழல் இன்னிசை போதராதே
அல்லி மலர்த் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து இளவாய்ச்சிமார்கள் எல்லிப் பொழுதினில் ஏமத்தூடி எள்கி உரைத்த உரை அதனை கொல்லி நகர்க்கிறை கூடல் கோமான் குலசேகரன் இன்னிசையில் மேவி சொல்லிய இன்தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கில்லை துன்பம் தானே