ஊனேறு செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன் ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால் ர கூனேறு சங்கமிடத்தான் தன் வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே
4. ஊனேறு செல்வத்து
குலசேகர ஆழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
"ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்" — நாலாயிரத்தில் மிகவும் அறியப்பட்ட பாசுரங்களில் ஒன்று. திருவேங்கடத்தில் ஒரு பறவையாகவோ, மீனாகவோ, பொற்குவளையாகவோ, ஏன் ஒரு படியாகவோ இருக்கத் தான் விரும்புவதாக ஆழ்வார் சொல்கிறார். செல்வத்துடன் கூடிய மனிதப் பிறவியை வேண்டாம் என்று மறுத்து, அவ்விடத்தில் உயிரற்ற பொருளாக இருப்பதையே பெரிதாக மதிக்கிறார். ஓரிடத்தின் மேல் கொள்ளும் காதல் எத்தனை தூரம் செல்லும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
பெருமாள் திருமொழி - 4 ஊனேறு செல்வத்து (ஆழ்வார் திருவேங்கட மலையில் ஏதேனுமாக விரும்புதல்)
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே
பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டூப் புகலரிய வைகுந்த நீள் வாசல் மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும் பொன்வட்டில் பிடித்துடனே புகப் பெறுவேன் ஆவேனே
ஒண்பவள வேலை உலவு தண் பாற்கடலுள் கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு பண்பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்து செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே
கம்பமத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல் தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே
மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம் பாடலொடும் ஆடலவை ஆதரியேன் தென்னவென வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்துள் அன்னனைய பொற்குடவராம் அருந்தவத்தன் ஆவனே
வானாளும் மாமதி போல் வெண்குடைக் கீழ் மன்னவர் தம் கோனாகி விற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன் தேனார் பூஞ்சோலைத் திருவேங்கட மலை மேல் கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே
பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும் முறையாய பெரு வேள்விக் குறை முடிப்பான் மறையானான் வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலை மேல் நெறியாய்க் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல் ர் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே
உம்பர் உலகாண்டு ஒரு குடைக் கீழ் உருப்பசி தன் அம்பொற்கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன் செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும் எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே
மன்னிய தண் சாரல் வட வேங்கடத்தான் தன் பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி கொன்னவிலும் கூர்வேல் குலசேகரன் சொன்ன பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே