Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

1-5. உய்ய உலகு

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

"ஆடுக செங்கீரை" — தவழும் குழந்தையை உடலை அசைத்து ஆடச் சொல்லும் பதிகம். ஒவ்வொரு பாசுரத்திலும் ஆழ்வார் முதலில் இறைவனின் பெருஞ்செயலைச் சொல்லி — ஆலிலையில் துயின்றது, நரசிங்கமாய்ப் பிளந்தது, கோவர்த்தனத்தைக் குடையாக ஏந்தியது — பின்பு "எனக்காக ஒரு முறை ஆடுக" என்று வேண்டுகிறார். பிரபஞ்சத்தை ஆள்பவனிடம் ஒரு தாய் கேட்பது இவ்வளவுதான் என்பதில் ஒரு நெகிழ்ச்சி உண்டு.

பெரியாழ்வார்‌ திருமொழி 1-5 உய்ய உலகு (தலையை நிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல்‌: செங்கீரைப்‌ பருவம்‌)

64

உய்ய உலகு படைத்துண்ட மணி வயிறா ஊழிதோறூழி பல ஆலினிலை அதன்மேல்‌ பைய உயோகு துயில்‌ கொண்ட பரம்பரனே பங்கய நீள்நயனத்து அஞ்சன மேனியனே செய்யவள்‌ நின்னகலம்‌ சேமமெனக்‌ கருதிச்‌ செல்வுபொலி மகரக்‌ காது திகழ்ந்திலக ஐய எனக்கு ஒருகால்‌ ஆடுக செங்கீரை ஆயர்கள்‌ போரேறே ஆடுக ஆடுகவே

65

கோளரியின்‌ உருவம்‌ கொண்டு அவுணனுடலம்‌ குருதி குழம்பியெழக்‌ கூருகிரால்‌ குடைவாய்‌ மீள அவன்‌ மகனை மெய்ம்மை கொளக்‌ கருதி மேலை அமரர்‌ பதிமிக்கு வெகுண்டூவர ர்‌ காள நன்மேகமவை கல்லொடுகால்‌ பொழியக்‌ கருதிவரைக்‌ குடையாக்‌ காலிகள்‌ காப்பவனே ஆள எனக்கு ஒருகால்‌ ஆடுக செங்கீரை ஆயர்கள்‌ போரேறே ஆடுக ஆடுகவே

66

நம்முடை நாயகனே நான்மறையின்‌ பொருளே நாவியுள்‌ நற்கமல நான்முகனுக்கொருகால்‌ தம்மனை ஆனவனே தரணி தல முழுதும்‌ தாரகை இன்னுலகும்‌ தடவி அதன்‌ புறமும்‌ விம்ம வளர்ந்தவனே வேழமும்‌ ஏழ்விடையும்‌ விரவிய வேலைதனுள்‌ வென்று வருமவனே அம்ம எனக்கு ஒருகால்‌ ஆடுக செங்கீரை ஆயர்கள்‌ போரேறே ஆடுக ஆடுகவே

67

வானவர்‌ தாம்‌ மகிழ வன்சகடம்‌ உருள வஞ்ச முலைப்‌ பேயின்‌ நஞ்சமது உண்டவனே கானக வல்விளவின்‌ காயுதிரக்‌ கருதிக்‌ கன்றது கொண்டெறியும்‌ கருநிற என்‌ கன்றே தேனுகனும்‌ முரனும்‌ திண்திறல்‌ வெந்நரகன்‌ என்பவர்‌ தாம்‌ மடியச்‌ செருவதிரச்‌ செல்லும்‌ ஆனை எனக்கு ஒருகால்‌ ஆடுக செங்கீரை ஆயர்கள்‌ போரேறே ஆடுக ஆடுகவே (க)

68

மத்தளவும்‌ தயிரும்‌ வார்குழல்‌ நன்மடவார்‌ வைத்தன நெய்களவால்‌ வாரிவிழுங்கி ஒருங்கு ஒத்த இணை மருதம்‌ உன்னிய வந்தவரை ஊருகரத்தினொடும்‌ உந்திய வெந்திறலோய்‌ முத்தின்‌ இளமுறுவல்‌ முற்ற வருவதன்‌ முன்‌ முன்ன முகத்தணியார்‌ மொய்குழல்கள்‌ அலைய அத்த எனக்கு ஒருகால்‌ ஆடுக செங்கீரை ஆயர்கள்‌ போரேறே ஆடுக ஆடுகவே

69

காயமலர்‌ நிறவா கருமுகில்‌ போலுருவா கானக மாமடுவில்‌ காளியன்‌ உச்சியிலே தூயநடம்‌ பயிலும்‌ சுந்தர என்‌ சிறுவா துங்க மதக்‌ கரியின்‌ கொம்பு பறித்தவனே ஆயமறிந்து பொருவான்‌ எதிர்வந்த மல்லை அந்தரமின்றி அழித்தாடிய தாளிணையாய்‌ ஆய எனக்கு ஒருகால்‌ ஆடுக செங்கீரை ஆயர்கள்‌ போரேறே ஆடுக ஆடுகவே

70

துப்புடை ஆயர்கள்‌ தம்சொல்‌ வழுவாது ஒருகால்‌ தூய கருங்குழல்‌ நல்தோகை மயில்‌ அனைய நப்பினை தன்திறமா நல்விடை ஏழவிய நல்ல திறலுடைய நாதனும்‌ ஆனவனே தப்பின பிள்ளைகளைத்‌ தனமிகு சோதிபுகத்‌ தனியொரு தேர்‌ கடவித்‌ தாயொடு கூட்டிய என்‌ அப்ப எனக்கு ஒருகால்‌ ஆடுகசெங்கீரை ஆயர்கள்‌ போரேறே ஆடுக ஆடுகவே

71

உன்னையும்‌ ஒக்கலையில்‌ கொண்டு தமில்மருவி உன்னொடு தங்கள்‌ கருத்தாயின செய்து வரும்‌ கன்னியரும்‌ மகிழக்‌ கண்டவர்‌ கண்‌ குளிரக்‌ கற்றவர்‌ தெற்றிவரப்‌ பெற்ற எனக்கு அருளி மன்னு குறுங்குடியாய்‌ வெள்ளறையாய்‌ மதிள்சூழ்‌ சோலைமலைக்கரசே கண்ணபுரத்தமுதே என்‌ அவலம்‌ களைவாய்‌ ஆடுக செங்கீரைர்‌ ஏழுலகும்‌ உடையாய்‌ ஆடுக ஆடுகவே

72

பாலொடு நெய்தயிர்‌ ஒண்‌ சாந்தொடு சண்பகமும்‌ பங்கயம்‌ நல்ல கருப்பூரமும்‌ நாறிவர கோல நறும்பவளச்‌ செந்துவர்‌ வாயினிடைக்‌ கோமள வெள்ளி முளைப்போல்‌ சில பல்லிலக நீல நிறத்தழகார்‌ ஐம்படையின்‌ நடூவே நின்‌ கனி வாயமுதம்‌ இற்று முறிந்து விழ ஏலுமறைப்‌ பொருளே ஆடுக செங்கீரை ஏழுலகும்‌ உடையாய்‌ ஆடுக ஆடுகவே

73

செங்கமலக்‌ கழலில்‌ சிற்றிதழ்‌ போல்‌ விரலில்‌ சேர்திகழ்‌ ஆழிகளும்‌ கிண்கிணியும்‌ அரையில்‌ தங்கிய பொன்வடமும்‌ தாள நன்மாதுளையின்‌ பூவொடு பொன்மணியும்‌ மோதிரமும்‌ கிறியும்‌ மங்கல ஐம்படையும்‌ தோல்வளையும்‌ குழையும்‌ மகரமும்‌ வாளிகளும்‌ சுட்டியும்‌ ஒத்திலக எங்கள்‌ குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுலகும்‌ உடையாய்‌ ஆடுக ஆடுகவே

74

அன்னமும்‌ மீனுருவும்‌ ஆளரியும்‌ குறளும்‌ ஆமையும்‌ ஆனவனே ஆயர்கள்‌ நாயகனே என்‌ அவலம்‌ களைவாய்‌ ஆடுக செங்கீரை ஏழுலகும்‌ உடையாய்‌ ஆடுக ஆடுகவென்று அன்னநடை மடவாள்‌ அசோதை உகந்த பரிசு ஆனபுகழ்ப்‌ புதுவைப்‌ பட்டன்‌ உரைத்த தமிழ்‌ இன்னிசை மாலைகள்‌ இப்பத்தும்‌ வல்லார்‌ உலகில்‌ எண்திசையும்‌ புகழ்‌ மிக்கு இன்பமதெய்துவரே